Friday 12 December 2014

நானும் நானும்: கடவுள்: மதம்: இஸ்லாம்

"எல்லா புகழும் இறைவனுக்கே"

இஸ்லாமின் இந்த வாசகங்கள் மிகவும் பிடிக்கும்.
இஸ்லாம் பற்றிய முழு அறிவு எனக்கு இல்லை. அதனால் சொல்லப்பட்டதில் பிழை இருக்கலாம். இவை இஸ்லாம் மதத்தை நோக்கி வைக்கப்படும் கேள்விகள் அல்ல. இஸ்லாமில் சில விருப்ப பகுதிகளையும், சில சிந்தனைகளை மட்டும் இங்கே சிந்திப்போம். அனைத்தும் சொந்த கருத்துகள் மட்டுமே.


ஒரே இறைவன்
இஸ்லாம் சமயத்தில் எனக்கு பிடித்த ஒரு கொள்கை "ஒரே இறைவன்" கொள்கை.
ஒரே இறைவன், ஒரே பெயர்.
ஆனால் "அவனே அனைத்துமாக இருக்கிறான்" என்று சொல்ல முடியாது. அந்த கோட்பாடு இங்கே செல்லுபடியாகாது. ஏனென்றால் இறைவன் மட்டுமே வணங்க தகுதியானவர். மற்ற மனிதர்களையோ, ஏன் தாயைக்கூட நாம் வணங்க இஸ்லாம் அனுமதிப்பதில்லை. அவ்வாறு இறைவனே அனைத்துமாக இருந்தால் மட்டுமே மற்றவர்களிடமும் மற்ற பொருட்களிடமும் நாம் இறைவனை காண முடியும்.
வணங்குதல் என்பது பலவகைப்படும். இறைவனை வணங்குதல், ஆசிரியரை வணங்குதல், பெரியோர்களை வணங்குதல், பெற்றோர்களை வணங்குதல், சமாதிகளை துதித்தல், ஒருவனை பயந்து தாழ்வுடன் பணிதல் இப்படி பல. ஆனால் இவை அனைத்துக்கும் ஒரே பொருள் அல்ல. இடத்திற்கு இடம் வேறு படுகிறது.
அதற்கேற்ப வணங்குதல் என்பதன் பொருளும் மாறுபடுகிறது. இறைவனை வணங்கும் அதே நோக்கத்துடனோ வகையிலோ நாம் பெற்றோரையோ ஆசிரியரையோ வணங்குவதில்லை. இறைவனுக்கான வணக்கம் இறைவனுக்கு மட்டுமே.
தமிழில் வணங்குதல் என்பது இடத்திற்கு இடம் பொருள் வேறுபடுகிறது. அதனால் ஐய்யா வணக்கம், தாயை வணங்க வேண்டும், ஆசிரியருக்கு வணக்கம் சொல்ல வேண்டும் என்றெல்லாம் சொல்ல பார்க்கும் போது இஸ்லாமியர்கள் குழப்பிக்கொள்கிறார்கள்.
"அவனே அனைத்துமாக இருக்கிறான்" என்பது இல்லாமல் இருப்பதால் இறைவனை தவிர நாம் உட்பட காணும் அனைத்தும் இறைவனுக்கு கட்டுப்பட்ட ஆனால் இறைவனை தவிர மற்றொரு சக்தி என்று பொருளும் வருகிறது.

மதத்தை பொறுத்தவரை இஸ்லாமும் கிருத்துவமும் ஒரே மூலகாரங்கணங்களையும், மூல கதைகளையும் கொண்டது. ஆனால் இஸ்லாம் ஒரே இறைவன் கொள்கையில் அப்படியே இருக்கிறது. கிருத்துவமோ இறைவனின் மகன் என்று அழைக்கப்படும் இயேசு, அவரின் தாய் மேரி, தோமையார், சவேரியார் போன்ற மனிதராக பிறந்தவர்களையும் இறைவனாகவே ஏற்று வழிபட ஆரம்பித்துவிட்டது. அனைத்துக்கும் காரணமான இறைவன் பரிசுத்த ஆவி என்ற நிலையில் மட்டும் இருக்கிறார். இஸ்லாமியத்திலோ நபிகள் முக்கிய நபராக இருந்தாலும் அவரை "இறைவன் மட்டுமே வணங்க தகுதியானவர்" என்ற இஸ்லாம் கொள்கை படி வணங்க இயலாது.

ஆனால் கொள்கையளவில் இப்படி இருந்தாலும் இஸ்லாமிற்கு சில புனித வடிவங்கள், புனித மனிதர்கள், புனித பொருட்கள் என்பவை இருக்கவே செய்கிறது. அவைகளில் முக்கியமானது மெக்கா, மெக்காவில் இருக்கும் சிவலிங்க வடிவிலான புனித கறுப்பு கல், நபிகள், சந்திரன் (பிறை), குரான், அரபு மொழி இவைகளாகும்.

(இவைகளில் பன்றியை சேர்க்க முடியாது. பன்றி இறைச்சியை இஸ்லாமியர்கள் உண்ணக்கூடாது என்று சொல்வது பன்றியை புனிதமாக நினைப்பதால் அல்ல. பன்றி மாமிசம் மனிதனுக்கு கெடுதல் என்பதாலேயே ஆகும்.)

ஆட்டம் பாட்டம் இசை இறைவனுக்கு எதிரானதா?
ஆட்டம் பாட்டம் இசை கூட இஸ்லாம் சமயத்திற்கு எதிரானது என்ற கருத்து தான் எனக்கு ஆச்சரியமாக பட்டது. இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறிய திலீப்குமார் என்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தற்போது ஒரு இஸ்லாம் தான். இதே போல இறக்கும் முன் மதம் மாறிய மைக்கல் சாக்சன் கூட ஆட்டம் பாட்டம் இசையில் பிரபலமானவர் என்று சொல்ல வேண்டியதில்லை.

இந்து மதத்தின் அடிப்படை ஓங்காரமே நாதமாக தான் இசைக்கிறது. இறைவன் இசைவடிவானவன் என்றும் கூறுகிறோம்.
ஆனால்,
இசையில் இறைவனுக்கு எதிராக அப்படி என்ன இருக்கிறது?
இசை ஏன் இஸ்லாம் மதத்தில் தடுக்கப்பட்டிருக்கிறது?
இவை என்னுள் எழுந்த கேள்விகள்.
பாகிஸ்தானில் ஆட்டம் பாட்டம் எல்லாம் தடுக்கப்பட்டிருக்கிறது. பொது இடங்களிலோ ஆண் பெண் சேர்ந்து இருக்கும் இடங்களிலோ ஆட்டம் பாட்டு நிகழ்ச்சிகளை நடத்திவிட முடியாது. முன் அனுமதி பெற வேண்டும்.
ஆனால் அதே பாகிஸ்தானில் ஐம்பது வருடங்களாக பரதநாட்டியம் கற்றுகொடுத்து வருகிறார் இந்துமிதா என்ற எண்பது வயது ஆன பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு எப்படி சாத்தியமானது? இவர் சொல்கிறார். தொடக்க காலத்தில் "மிகவும் பிரச்சனையாகவே இருந்தது. ஆனால் நாங்கள் பொது இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தவில்லை. ஒரு அறைக்குள் நான் கற்றுக்கொடுப்பதால் சட்டம் எதுவும் செய்யவில்லை."
பொது இடங்களில் இவ்வாறான நிகழ்ச்சிகளை "க்ளப்களின் ஆட்டம் பாட்டம்" போல இஸ்லாம் பார்த்திருந்தால் அதை தடை செய்வதற்கு "இது சமுதாய சீர்கேடு" என்பது போன்ற நியாயங்களையாவது சொல்ல முடியும்.
இசை மட்டுமல்ல, மனதை இளகச்செய்யும் பலவற்றை இஸ்லாமிற்கு எதிரானதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மனம் வலிமையாகவும், ஆசாபாசங்களுக்கு ஆட்படாததாகவும் வைத்திருக்க இஸ்லாம் கற்று கொடுக்கிறது. இசை மனதை உருக செய்வது, கற்பனையிலேயே மிதக்க வைப்பது, மனதையும் தன்னோடு இழுத்துகொண்டோடுவது, உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அதனுடன் ஒன்ற வைப்பது.
இசையை இறைவனுக்கு எதிராக சித்தரிக்க இதுவே உண்மை காரணமாக இருக்க முடியும் என்பது என் எண்ணம்.

வழிபாட்டு முறை:
இஸ்லாமில் எனக்கு மிகவும் பிடித்த மற்ற ஒரு விஷயம் தினம் ஐந்து முறை தொழுகை செய்ய சொல்வது தான். இங்கே வெறுமனே தொழுகை செய்யுங்கள் என்றில்லாமல் அதை செய்யும் முறை சிறப்பானது.
இந்த தொழுகை முறை ஒரு மிகச்சிறந்த யோகாசன முறை ஆகும். இந்த யோகா செய்வதால் என்னென்ன பலன் விழையும்?
மன ஒருமைப்பாடு, மன தைரியம் அதிகமாகும்
விந்து சக்தி அதிகரிக்கும்
வயிறு சம்பந்த கோளாறுகள் நீங்கும்
இந்த தொழுகையை தினம் காலையிலோ மாலையிலோ ஒருமுறை சில விநாடிகள் செய்தாலே மிகப்பெரும் பலன்கள் கிடைக்கும் என்றால் தினம் ஐந்து முறை செய்யும் போது கிடைக்கும் பலன்களை கற்பனை செய்து பாருங்கள். இத்தொழுகை முறைய மதம் பாராமல் அனைவரும் செய்ய வேண்டும். ஏனென்றால் மக்கள் நலன் மதத்தை விட முக்கியம்.

சுன்னத் செய்வது ஏன்?
இஸ்லாமின் மற்றொரு பழக்கமுறை சுன்னத் எனப்படும் ஆண்களின் பிறப்புறுப்பின் மேல் பாகத்தை வெட்டிவிடுதல்.
இதை ஆராயும் முன் மற்றொரு பழக்கத்தையும் ஆராய வேண்டியிருக்கிறது. அது பெண்களுக்கானது.
பெண்களில் மன்மதமொட்டு எனப்படம் பிறப்புறுப்புன் மேல்பாகத்தை வெட்டும் பழக்கம் இதே போல உலகின் பல்வேறு இடங்களிலும் பலதரப்பட்ட மக்களாலும் எப்போதோ தொடங்கி மறைமுகமாகவும் சில நேரம் நேரடியாகவும் நடைபெற்று வருகிறது. இது பெண்கள் ருது ஆனவுடன் பலரும் இன்றும் கிராமப்புறங்களில் மதம் சாராமல் சில தாய்மார்கள் செய்கிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவல்.
ஒரு சாரார் சொல்வது போல இப்படி வெட்டிவிடுவதால் உடலுறவே கொள்ள முடியாது என்பதெல்லாம் வெற்றுபேச்சு. முறையற்று செய்துவிட்டால் வலி இருக்கும். ஆனால் உடலில் வெட்டுபட்டால் மற்ற இடங்களை விட வேகமாக குணமாகும் பிறப்புறுப்பு பகுதியில் இவை சீக்கிரமாகவே குணமாகிவிடுகிறது என்கிறார்கள் ஒரு சாரார்.
இது செய்யப்படும் முறையை விட ஏன் செய்யப்படுகிறது என்ற காரணமே கூர்ந்து நோக்கத்தக்கது. ஏன் இப்படி? ஏன் என்று ஆராயும் போது, மன்மதமொட்டு என்பதே உடலில் காம உணர்ச்சியை அதிகமாக்கும் இடம். காமத்தை தூண்டிவிடும் இடமாகவும், தறிகெட்டு காமத்தை அனுபவிக்க வைக்கும் இடமாகவும் உள்ளது.
பல தாய்மார்கள் தங்கள் மகள் காமத்தால் சமூகத்தில் நெறிகெட்டுவிடக்கூடாது என்பதற்காக இதை செய்கிறார்கள் என்பது பரிதாபப்படக்கூடிய விஷயம்.
ஏனென்றால் பெண்களின் காமத்திற்கு உணர்ச்சி எல்லை கிடையாது. தூண்டத்தூண்ட எரிந்துகொண்டிருக்கும். ஆண்களின் காமம் அவ்வாறு பட்டதல்ல. விந்து கழிதலுடன் மனம் தற்காலிக வெறுப்பை அடைந்துவிடும் அல்லது தளர்ந்துவிடும்.
இப்போது சுன்னத் விஷயத்திற்கு வருவோம். மறுபடியும் யோசிப்போம். ஏன் ஆண்களுக்கு சுன்னத் செய்வதை இஸ்லாம் கட்டாயமாக்குகிறது?
ஒன்றை கவனிக்க வேண்டும். உடல் ரீதியாக பெண்களின் மன்மதமொட்டு பகுதியே ஆண்கள் பிறப்புறுப்பின் மேல் பகுதி. பெண்களுக்கு ஏற்படும் அதே உணர்ச்சி ஆண்களுக்கும் இப்பகுதியில் ஏற்படும். பெண்களுக்கு முன்பு கூறியது போல எல்லை இல்லாததால் உடல் சீக்கிரம் தளர்வதில்லை. சீக்கிரமே காமம் தலைக்கேறிவிடும். ஆண்களுக்கோ சீக்கிரம் காம எல்லை வந்து விடும்.
இப்பகுதியில் அதிக காம வயப்பட்டால் ஆண்களுக்கே உரிதான மூர்க்க குணம் அல்லது வீரம் இதனால் பாதிக்கப்படும். நாளாக நாளாக பேடித்தன்மை வந்துவிடும்.
இஸ்லாம் ஒரு ஆண் தைரியமில்லாமல் பேடியாக இருப்பதை அனுமதிப்பதில்லை. சுன்னத் செய்வதற்கு இதுவே முதன்மை காரணமாகமும், சுன்னத் செய்வதாக மாறியிருக்கும் என நினைக்கிறேன்.
பெண்களுக்கு செய்வதை பெண்கள் சமூகம் எதிர்த்து "இயற்கையை மீறாதீர்கள்" என்று குரல் கொடுக்கும் போது ஆதே போல ஆண்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார்களா என்பது சந்தேகம். ஏனென்றால் இங்கே மதத்தையே எதிர்க்க வேண்டிய நிலை.

இஸ்லாத்தில் தாடி வளர்க்க வேண்டுமா?:
நான் சிந்தித்ததில் தாடி வளர்க்கும் பண்பு இஸ்லாம் மக்களால் தவறாக பொருள் கொள்ளப்பட்ட ஒரு பழக்க முறை என்பதை உணர முடிகிறது. இதுவும் என் தனிப்பட்ட கருத்தே.
மேல் கொண்டு பார்ப்போம்.
குரானில் தாடி வளர்க்க வேண்டும் என்று கூறப்பட்ட வரிகளின் தமிழாக்கம் கீழே உள்ளது போல இருக்கிறது.
"இரு கால்களுக்கு நடுவே இருப்பதையும், இரு தாடைக்கு நடுவே உள்ளதையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்" அல்லது 'யார் தமது தாடைகளுக்கு இடையே உள்ளதை (நாவை)யும் தமது கால்களுக்கிடையே உள்ளதையும் (சரி வரப் பயன்படுத்துவதாக) பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்காக சொர்க்கத்துக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று நபி(ஸல்) கூறினார்கள்.";
முடி வளரும் இடங்களை கருத்தில் கொண்டு முடியை பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்று தவறான பொருள் கொண்டுவிட்டதாக நான் நிச்சயமாக கருதுகிறேன்.
அவ்வாறு முடியை மட்டும் இவ்வாக்கியங்கள் குறிப்பிடுவாக கொண்டால் உடலில் தலை, கைக்குழி போன்றவற்றில் கூட முடி வளர்கிறது. ஆனால் அவற்றை குறிப்பிடாமல், பிறப்புறுப்பையும் நெஞ்சையும் கூற வேண்டிய கட்டாயம் ஏன் என்றால், இஸ்லாம கூறுவதன் உள்நோக்கம் "கற்பை பாதுகாத்துக்கொள்ளுங்கள்" என்பதாகும்.
காமத்தை கட்டுப்பாட்டுடன் கடைபிடியுங்கள் என்று தான் இஸ்லாம் கூறுவதாக கொள்ள முடியும். வேறுவிதமாக முடிவளருங்கள் என்று பொருள் கொள்ள இயலவில்லை.
ஒரு சித்தர் பழமொழி உண்டு. "விந்து விட்டவன் நொந்து கெட்டான்". இதன் பொருள் வெளிப்படை. நம் நவீன மருத்துவர்களுக்கு நோயாளிகள் தான் தேவை. அதனால் விந்து அதிகம் வெளியானாலோ காமத்தை எவ்வளவு அனுபவித்தாலும் தப்பில்லை என்று கூறுவார்கள். ஆனால் விந்து சக்தியே உடலின் முக்கிய சக்தி. இதை அதிகம் செலவழிப்பவர்கள் சீக்கிரம் நோய்வாய்ப்பட்டும் வயதான தோற்றம் கொண்டும் கெட்டழிந்து போவார்கள் என்பது அவரவர் வாழ்வில் காணும் நடைமுறை சாட்சி.
இங்கே பிரம்மச்சரியம் என்பது இல்லறத்திற்கு எதிரானது அல்ல. ஆனால் காமத்தை சரியான வழியில் அளவுடன் வைத்திருக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது.
மற்றபடி கீழுள்ள சில நேரடி வாக்கியங்களும் இருக்கின்றன.
“மீசையைக் கத்தரியுங்கள்! தாடியை விடுங்கள்!”
“இணை வைப்பவர்களுக்கு மாறு செய்யுங்கள்! தாடியை விடுங்கள்!”
“நெருப்பை வணங்குவோருக்கு மாறு செய்யுங்கள்! தாடியை விடுங்கள்!”
இவைகள் நபிமொழி கூறுவது. குரான் அல்ல என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
இவை மட்டுமல்லாது, சொர்க்கத்தில் இருக்கும் பெண்கள் ஆண்கள் வளர்க்கும் தாடியை ஆசையுடன் பிடித்து தொங்குவார்கள் என குரானில் உள்ளதாகவும் அதனாலேயே தாடி வளர்க்கிறார்கள் எனவும் ஒரு இஸ்லாமிய நண்பி கூறினார்.

தீவிரவாதம்:
(இந்த தலைப்பை எழுதும் போது மிகவும் கவனமாக எழுத வேண்டியிருக்கிறது. சொல்வது முக்கியமல்ல. வாய் இருக்கிறது அதனால் எதையும் கூறலாம் என்று கூறித்திரியும் முட்டாள்கள் போல கூறித்திரிய நான் விரும்பவில்லை.)
இஸ்லாம் என்றால் பலருக்கும் தீவிரவாதம் நினைவுக்கு வருவது மிக கொடுமையான விஷயம்.
முஸ்லீம்கள் தீவிரவாதிகள் அல்ல, மற்றவர்கள் போல இந்நாட்டின் சகோதரர்கள் தான். ஆனால் பல்லாண்டுகளாக அவர்கள் மேல் தீவிரவாத சாயம் பூசப்படுகிறது.
உடன் படிக்கும்/பழகும் இஸ்லாம் நண்பர்களாக இருந்தாலும் சில நேரங்களில் சின்னச்சின்ன கேள்விகளுக்கு அடிக்கடி பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகிவிடுவது தான் மிக வேதனை.
சமீபத்தில் நான் ஆச்சரியப்பட்ட ஒரு விஷயம், ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட போது அவருக்காக இஸ்லாம் பள்ளிகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நிகழ்த்தப்பட்டது தான்.
பல இஸ்லாம் நண்பர்களும் இவ்வாறு சிறப்பு பிரார்த்தனை நடந்ததை வெளிப்படையாகவே ஆதரித்தார்கள். அவர்கள் கூறிய கருத்துகள், பின்லேடன் ஒரு இஸ்லாமிய தலைவன். ஆகவே அவரது இறப்பிற்கு பிரார்த்தனை நடந்தால் தப்பில்லை. இன்னொன்று, நாங்கள் பள்ளிக்குள்ளேயே தானே நடத்துகிறோம், மற்றவர்களை தொந்தரவு செய்யவில்லை.
பின்லேடன் நல்லவராகவோ, நியாயம் என்னவாகவும் இருக்கட்டும். ஆனால் இதை பார்க்கும் மற்ற சமய நண்பர்கள் என்ன நினைப்பார்கள்?
மற்றவர்கள் பார்வையில் "ஒசாமா பின்லேடன்" ஒரு பயங்கரவாதி, அந்த எண்ணம் பல்லாண்டுகளாக பின்லேடன் பற்றி வரும் செய்திகளால் ஊறிவிட்டது. எனவே இங்கே இஸ்லாம் பள்ளிகள் வெளிப்படையாக தீவிரவாதத்தை ஆதரிக்கிறது என்ற எண்ணமே மற்ற சமய மக்கள் பார்வையில் உருவாகிறது.
விடுதலை புலி தலைவர் பிரபாகரனுக்கு இவ்வாறு பிரார்த்தனை நிகழ்ந்தால் சமூக பார்வை எப்படி இருக்கும்? நாம் விடுதலை புலிகளை ஆதரிக்கிறோம் என்பது தான் பொருள். மகாத்மா காந்திக்காக பிரார்த்தனை செய்தால் நாம் காந்தி வழியை ஆதரிக்கிறோம் என்பது தான் பொருள். இங்கே காந்தி எப்படிப்பட்டவர் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே.
இஸ்லாம் அமைப்பிடமிருந்து தீவிரவாத பூச்சை போக்க எனக்குத்தெரிந்து ஒரே வழிதான் இருக்கிறது.
இந்துக்கள் பலரும் இந்து அமைப்புகளை சார்ந்து நடப்பதில்லை. ஒரு சிலரே அமைப்புகளை ஆதரிக்கிறார்கள். உதாரணமாக RSS அமைப்பை பல இந்துக்களுக்கு பிடிப்பதில்லை. மற்றவர்களுக்கு சிவசேனாவை பிடிப்பதில்லை. எல்லா மனிதச்சாமியாரையும் வெளிப்படையாக திட்டும் இந்துக்களே பலர்.
அதே போல முஸ்லீம் அமைப்புகள் நிஜமாக தீவிரவாதம் செய்யும் எதிரி நாடுகளுக்கு வெளிப்படையாக கடும் கண்டனம் தெரிவிப்பதுதான் இஸ்லாம் மதத்தின் மீதான தீவிரவாத பூச்சை அழிக்க ஒரே வழி. நம் மீது தவறு இல்லை எனில் நமக்கு பாதகமாக மற்றவர்கள் செய்யும் தவறுக்கு நாம் கண்டனம் தெரிவித்தாக வேண்டும். மொனமாக இருந்தால் "மௌனம் சம்மதம்" என்பது போல தவறுகளுக்கு நாமும் உடந்தை என்பது போல ஆகிவிடும்.
அதே போல முஸ்லீம் அமைப்புகள் மற்ற நிஜ தீவிரவாதிகளுக்கு வெளிப்படையாக எதிர்ப்பை தெரிவித்தால் எல்லோரையும் தீவிரவாதியாக பார்க்கும் நிலைமை சீக்கிரமாகவே மாறிவிடும்.
பன்னெடுங்காலமாக ஊறிப்போன எண்ணங்கள் ஒரே நாளில் மாறப்போவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக மாறவேண்டும் எனில் முஸ்லீம்களின் நடுநிலை கருத்துகளை அடிக்கடி மற்றவர்கள் படிக்க வேண்டும்.
என்னைப்பற்றி அவதூறு கூறினால் அது பொய் என எனக்குத்தெரிந்தாலும் மற்றவர்கள் அறியவேண்டும் எனில் அது என் செயலிலோ அல்லது பேச்சிலோ வெளிப்பட வேண்டும். எனக்குநானே பேசிக்கொண்டிருப்பது என்னுடைய முக்கிய நண்பர்களுக்கு மட்டுமே தெரியும், அது எல்லோருக்கும் தெரியவேண்டும் என்றால் சில எதிர்ப்புகளையாவது நாமோ நம்முடன் உள்ளவர்களோ செய்தாக வேண்டும்.
அது பத்திரிகைகளிலோ அல்லது தொலைக்காட்சிகளிலோ வரவேண்டும் எனில் நடுநிலை கட்சிகளின் தீவிரவாதத்திற்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிட வேண்டும், அல்லது சமூக நிகழ்வு நடக்க வேண்டும்.
ஒருவன் தவறு செய்தால் அந்த சமூகத்தையே குற்றம் கூறும் முட்டாள்கள் நாம் என நினைக்கும் போது கேவலமாக உள்ளது. யார் தவறு செய்தார்களோ அவன் தான் குற்றவாளி. ஒரு தொழிலதிபர் தவறிழைத்தால் அவன் தான் குற்றவாளி. ஒரு அரசியல்வாதி தவறிழைத்தால் அவன் தான் குற்றவாளி. இதற்காக இவர்கள் சார்ந்திருக்கும் தொழிலை குற்றம் சொல்வது மதி கெட்டவர்கள் செய்யும் செயல்.
ஒருவர் என்னிடம் கேட்டார், "இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை சரி. ஆனால் பிடிபடும் அனைவரும் இஸ்லாமியர்களாக இருக்கிறார்களே?" என்று,
"ஒரு பாப்பனன் கோவிலுக்குள் அசிங்கம் பண்ணினால் அந்த பார்ப்பனன் மட்டுமே குற்றவாளி. அப்படி அல்லாமல் பாப்பன வர்க்கத்தையே குறை சொல்லித்திரியும் முட்டாளுக்கும், இஸ்லாமில் ஏதோ ஒருவன் தீவிரவாதியாக இருந்தால் இஸ்லாம் சமூகத்தையே தீவிரவாத சமூகமாக பார்க்கும் முட்டாளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?" நான் மறு கேள்வி கேட்டேன்.
எல்லா முஸ்லீம்களும் தீவிரவாதிகள் இல்லை என்ற கருத்தாக்கம் முஸ்லீம் ஊடகங்களில் மட்டும் வந்தால் அது எல்லோருக்கும் எட்டாது. பொதுநிகழ்வு எதிர்ப்பு, அறிக்கை, போராட்டம் என்றால் அது அனைத்து பத்திரிகை, ஊடகங்களிலும வரவேண்டும், அப்போது தான் எல்லோரும் படிப்பார்கள், சமூக பார்வைகள் மாறும். மாற வேண்டும்.

நாட்டுப்பற்று:
தான் வாழும் நாட்டிற்கு ஆதரவாக செயல்படாவிட்டாலும் எதிராக செயல்பட்டால் அந்நாட்டில் வாழ அவனுக்கு தகுதி இல்லை என்பதை ஒருவன் யோசிக்க வேண்டும்.
இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் இந்தியாவை விட பாகிஸ்தானை நேசிக்கிறார்களோ என்ற கருத்தை அடிக்கடி கேட்க முடிகிறது. ஆனால் உண்மை அதுவல்ல.
"முஸ்லீம்கள் 'வேண்டும்' என்று எதிர்பார்த்த பின்லேடன் கூட பாகிஸ்தானில் பாதுகாப்பாக இருக்க முடியவில்லை. ஆனால் இந்தியா 'வேண்டாம்' என நினைக்கும் தீவிரவாதி கசாப் கூட இங்கே பாதுகாப்பாகவே உள்ளான்". இது வேடிக்கையாக சொல்லப்படும் கருத்தாக இருந்தாலும் இதில் இருக்கும் உண்மை ஆழ்ந்து யோசிக்க வேண்டியது.
தன் இனத்திற்கு எதிராக செயல்பட்டால் யாருமே அரசை எதிர்ப்பார்கள். அதற்காக இஸ்லாமியர்கள் இந்தியாவிற்கு எதிர் என்று கருத வேண்டாம்.
ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் ஒருவனை எதிரியாக அடிக்கடி கூறிக்கொண்டிருந்தால் அவன் நிஜமாகவே உங்களுக்கு எதிரியாக துணிந்துவிடுவான். நட்பாக இருந்தாலும் அங்கே நல்லவர் தீயவர் என்பதை பார்க்கலாமே தவிர மதம் பார்க்கப்படாமல் இருக்க வேண்டும்.
இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் அனைவரும் சகோதரர்களே. இஸ்லாமியர்கள் மட்டுமல்ல மற்ற சமயத்தவரும் காலச்சூழ்ந்நிலையால் மதம் மாறியவர்களே அல்லது மதம் மாறியவர்களின் வழித்தோன்றல்களே. ஏனென்றால் இஸ்லாம், கிருத்துவம் இந்தியாவில் நுழைந்த காலத்தில் தான் இந்திய வரலாற்றின் முக்கிய கட்டம் ஆரம்பிக்கிறது.
மேலுள்ள எண்ணங்களில் தவறு இருப்பின் மன்னிக்கவும்.
"எல்லா புகழும் இறைவனுக்கே"
நானும் நானும் எண்ணங்கள் தொடரும்...

7 comments:

  1. நல்ல பதிவு ..! வாழ்த்துக்கள் ..! சொல்ல கையாண்ட விதம் அழகு..!

    ReplyDelete
  2. ஆனால், நாம் மனிதர்கள் - நமக்கு குறிப்பிட்ட அறிவுதான்..
    உ-ம் இந்த உலகத்திலிருந்து மேலே செல்ல செல்ல நம் பயணம் ஒரு முடிவிலியாக இருக்குமாம், பிரபஞ்சம் விரிவடயக் கூடியதாம்...! அது எப்படி சாத்தியம் ? விரிவடைவது பிரபஞசமல்ல! மனிதனின் ஆய்வின் சிந்தனை. அது எது வரைக்கும் விரியும் என்றால்.. இந்த பரந்த வானில் முடிவொன்று கானும் வரை! ஆனால் இறைவன் இதே போல ஏழு உண்டென்கிறான்.

    ReplyDelete
  3. இந்த சொற்ப அறிவை வைத்துக் கொண்டுதான்..! மனிதன் கடவுளைப் படைக்க ஆரம்பித்தான்..! அனால் அவன் முயற்சி தோல்வி கண்டது! மனிதன் கடவுள் என்பதை தன் அறிக்குள் சுறுக்கி விட முயன்றான்..! அவன் கண்கள் எவைகள்ளாம் கண்டதோ அதைக் கொண்டு அதற்கு உருவம் கொடுத்தான்..!
    உ-ம் மனிதன்,மிருகங்கள்,பறவைகள் இதி்ல் சிறந்தது மனிதன் இதைத்தாண்டி ஒரு முழுமையான உருவம் அவன் கற்பனைக்கு எட்டாது..! அடுத்தது ஆரம்பம் முடிவு ..!

    ReplyDelete
  4. கடவுளுக்கு பிறப்பு உண்டு இறப்பு உண்டு ..! இதில் எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் ..? புராணங்கள் பிறக்கும் போது கடவுள்களுக்கு பிறந்த குழந்தைகள்தான் இன்று வரைக்கும்..! ஒருவேளை! நேற்று ஒன்று பிறந்திருந்தால்! இல்லை நாளைக்கொன்று பிறந்து வந்தால்..? அவர்களுக்கும் கடவளுரிமை உண்டள்ளவா! கடவுளின் வரலாற்றாசிரியர்கள் இதையல்லாம் மறந்து விட்டனர்.

    ReplyDelete
  5. சகோதரா! இது நீண்டு கொண்டே போகும் ...! நான் இந்த பக்கமாக வந்தேன்..! கடவுளை நீங்கள் தேடுவதைக் கண்டேன். ஆகவேதான் இந்த பதிவகள் ...! நான் தந்த வாதம் இந்து இஸ்லாம் என்பதல்ல ..! ”இறைவன் என்றால்?” என்பது..!

    ReplyDelete
  6. இறப்பு - பிறப்பு , ஆரம்பம் - முடிவு இதுவில்லாத ஒன்றை மனித அறிவால் நினைத்துக் கூட பார்க்கவே முடியாது..! நீங்கள் கடவுளைப்பற்றி ஆராய விரும்பினால்? நான் ஒரு க்ளு தாறன்..! காலத்தைப் பற்றி ஆராயுங்கள் ?

    ReplyDelete
  7. "நானே! காலமாக இருக்கிறேன்.. சகல அதிகாரங்களும் என்னிடமே உள்ளன" - அல்லாஹ்.

    ReplyDelete