Tuesday 17 March 2015

உடலின் வலுவை அதிகரிக்க சிறப்பான 11 வழிகள்!

மனிதர்களாகிய நமக்கு தேவையான அடிப்படை விஷயங்களில் ஒன்று தான் ஆற்றல் திறன். ஆற்றல் திறனால் தான் நம்மால் நம்முடைய அன்றாட நடவடிக்கைகளை ஒழுங்காக செய்ய முடிகிறது. ஆற்றல் திறனை இழக்கையில் நாம் சோர்வடைந்து வலுவிழந்து போகிறோம். நாள் முடிவடையும் நேரத்தில் நாம் சோர்வாக உணர்வது வாடிக்கையான ஒன்று தான். உடலில் எனர்ஜி இல்லாதது போல் உணர்வதற்கான 10 காரணங்கள்!... களைப்பு ஏற்படுவதால் உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நீங்கள் உடைந்து போவீர்கள். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பையும் பாதிக்கும்.


களைப்பின் அளவு அதிகரிக்கும் போது உடல் சுகவீனம், மன அழுத்தம் மற்றும் இதய நோய்கள் உண்டாகும். நேர்மறை ஆற்றல் திறன் உங்கள் படைப்பாற்றலையும் ஆக்க வளத்தையும் மேம்படுத்தும். உடலின் சக்தியை அதிகரிக்கும் சூப்பர் பழங்கள்!!! இந்த பிரச்சனைகள் அனைத்தையும் எதிர்த்து போராட ஒரே வழி, உங்கள் ஆற்றல் திறனை எப்படி அதிகரிப்பது என்பதை புரிந்து கொள்வதில் தான் அடங்கியுள்ளது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை தான் இதற்கான தேர்வு. சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், உடற்பயிற்சிகள் மற்றும் ஓய்வை உங்கள் வாழ்க்கை முறை கொண்டிருக்க வேண்டும். இது உங்கள் உடலுக்கு போதிய ஆற்றல் திறனை அளிக்கும். அதனால் நாள் முழுவதும் சோர்வடையாமால் இருப்பீர்கள். நல்ல ஆரோக்கியத்திற்கு கீழ்கூறிய சில ஆற்றல் திறன் டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.
அதிக கார்ப் மற்றும் நார்ச்சத்து அடங்கிய காலை உணவு
ஆற்றல் திறனை எப்படி அதிகரிப்பது என்பது உங்களுக்கு வியப்பாக இருந்தால், உங்கள் காலை உணவின் முக்கியத்துவத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதிக கார்ப் மற்றும் நார்ச்சத்து கொண்ட காலை உணவு, குறுகிய நேர மற்றும் நீண்ட நேர ஆற்றல் திறன் அதிகரிப்பை மேம்படுத்தும்.
போதிய ஒய்வு
உங்களுக்கு அதிக வேலைகள் உள்ளதா?
அப்படியானால் அவை அனைத்தையும் இழுத்து போட்டு கொண்டு பார்ப்பீர்கள். அது நல்லது தான் என்றாலும் கூட, உங்களை சீக்கிரத்திலேயே சோர்வடையச் செய்யும். நல்ல ஆரோக்கியத்திற்கான ஆற்றல் திறன் டிப்ஸ்களில் ஒன்று - அதிக வேலை இருக்கும் சமயத்தில் சின்ன சின்ன இடைவேளைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நடை கொடுத்தல்
வேகமாக நடை கொடுத்தாலும் கூட, உங்கள் ஆற்றல் திறனை அதிகரிக்கலாம். சர்க்கரை உங்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு ஆற்றல் திறனை அளிக்கும். ஆனால் 10 நிமிடம் நடை கொடுத்தால், 2 மணிநேரத்திற்கு ஆற்றல் திறனை அளிக்கும். அதனால் இதனை தினசரி நடவடிக்கையாக மாற்றிக் கொள்ளுங்கள்.
தியானம்
இதனை குறிப்பாக காலை வேளைகளில் தான் செய்ய வேண்டும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், சோர்வாக இருக்கும் போது, கண்களை மூடிக் கொண்டு ஆழமாக சுவாசிக்கவும். நல்ல ஆரோக்கியத்திற்கான மற்றொரு ஆற்றல் திறன் டிப்ஸ் இது.
நேர்மறையான மக்கள்
ஆற்றல் திறனை அதிகரிக்க சிறந்த வழியை தேர்ந்தெடுக்க வேண்டுமா? அப்படியானால் எதிர்மறை ஆற்றல் திறனை கொண்டவர்களுடன் இருப்பதை தவிர்க்கவும். நேர்மறை ஆற்றல் திறன் கொண்டவர்களுடன் இருந்தால், உங்கல் ஆற்றல் திறனும் அதிகரிக்கும்.
மெக்னீசியம் உட்கொள்ளுதல்
நம் உடலில் மெக்னீசியத்தின் அளவு குறையத் தொடங்கினால், நம் ஆற்றல் திறன் குறைவதையும் நம்மால் உணர முடியும். உடலுக்கு போதிய அளவிலான மெக்னீசியத்தை அளிப்பதும் கூட நல்ல ஆரோக்கியத்திற்கான ஆற்றல் திறன் டிப்ஸாகும்.
குட்டித் தூக்கம்
உங்கள் மூளை அதிகளவில் அழுத்தம் அடைந்திருந்தால், நீங்கள் சோர்வடைவீர்கள். உங்கள் ஆற்றல் திறனை அதிகரிப்பதற்கு குட்டித் தூக்கமும் கூட உதவி புரியும். அதிக அளவிலான தகவல்களை தக்க வைத்துக் கொள்ளவும் இது உதவும் என பல ஆய்வுகள் கூறுகிறது.
மன அழுத்தத்தை குறைக்கவும்
மன அழுத்தம் ஏற்படும் போது உங்கள் ஆற்றல் திறன் முழுமையாக குறையத் தொடங்கும். ஆற்றல் திறனை அதிகரிக்கும் வழிகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அமைதியாக ஓய்வெடுங்கள் அல்லது மன அழுத்தத்தை போக்கும் வழிகளை கொண்டு அதனை குறைத்திடுங்கள்.
கோபத்தை கையாளுவது
உங்கள் உடலில் உள்ள ஆற்றல் திறன் குறைவதற்கு மற்றொரு காரணமாக விளங்குவது உங்களின் கோபமாகும். நல்ல ஆரோக்கியத்திற்கான மற்றொரு ஆற்றல் திறன் டிப்ஸ் தான் கோபத்தை கையாளுவது. கோபமடைவதால் உங்கள் உடலுக்கும் மனதுக்கும் தேவையற்ற சுமையே.
அதிகமாக தண்ணீர் குடியுங்கள்
ஆற்றல் திறனை அதிகரிக்க அதிகளவில் தண்ணீர் குடியுங்கள். நீர்ச்சத்து இல்லாமல் போனாலும் கூட நீங்கள் சோர்வடைவீர்கள். நல்ல உடற்பயிற்சிக்கு பிறகு குறிப்பாக அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment