எப்படி நமது அரசியலமைப்பு சட்டம் களவாடப்பட்டது? எதனால் சமயம் சார்புடைய சர்ச்சைகளில் முஸ்லிம் அல்லாதவரும் ஷரியா நீதிமன்றம் செல்ல நேர்ந்தது? இதற்கு ஓர் இணக்கமான முடிவை எப்படிக் காண்பது? விடை கான, விருவிருப்பாகவும் தெளிவாகவும் மூத்த வழக்கறிஞர் கி. சீலதாஸ் செம்பருத்திக்காக ‘சமயம் சட்டமானது! சட்டம் சமயமானது! ‘ என்ற தலைப்பில் எழுதி வரும் தொடர், சிறப்பு கட்டுரை பகுதியில் வெளியிடப்பட்டு வருகிறது. படிக்கத் தவறாதீர்!
(கட்டுரைத் தொடர்ச்சி பகுதி 5)
இரண்டு மனைவிகளுக்கு இரண்டு பிள்ளைகள்
121(1) ஷரத்து அமலாக்கப்பட்டபின் ஏற்பட்ட சட்ட சிக்கல்களையும், அதனால் விளைந்த சங்கடமான நிலைமைகளையும் கவனிப்போம்.

பிள்ளைகளைக் கடத்திய சந்தானம்
1993-ஆம் ஆண்டு சந்தானம் இரு பிள்ளைகளையும் எடுத்துக் கொண்டு போய்விட்டார். கங்கா சட்ட உதவி இலாகாவின் துணையோடு தன் மகனுக்காக பாதுகாப்பு உரிமை ஆணையை உயர் நீதிமன்றத்திடமிருந்து பெற்றார். கங்கா தொடுத்த வழக்கைப் பற்றி தெரிந்திருந்தும் சந்தானம் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
1995-ஆம் ஆண்டில் கங்கா தன் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். சந்தானம் அலோர்ஸ்டார் ஷரியா நீதிமன்றத்திடமிருந்து இரு பிள்ளைகளுக்கான பாதுகாப்பு உரிமையைப் பெற்றார். அவர் இஸ்லாத்தை தழுவிக் கொண்டுவிட்டார்.
இஸ்லாத்தைத் தழுவிய சந்தானம்

2000-ஆம் ஆண்டு கங்கா உயர் நீதிமன்றத்தில் தன் மகனின் பாதுகாப்பு உரிமையைக் கோரினார். ஆனால், நீதிமன்றமோ இந்த விவகாரம் 121(1A) ஷரத்தின்படி ஷரியா நீதிமன்றம் மட்டும்தான் விசாரிக்க முடியும் என்று கூறி கங்காவின் மனுவை நிராகரித்தது.
பொது நீதிமன்றம் கை கழுவியது

அது ஒரு புறமிருக்க, சட்டப்படி ஒருவரின் திருமணம் நிலைத்திருக்கும்போது மற்றுமொரு திருமணத்தைச் செய்து கொண்டு அதன் வழி குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தை மீது சட்டப்படி தந்தையால் உரிமை கொண்டாட முடியாது என்கிறது பொது சட்டம் (Civil Law). அந்தக் குழந்தைக்கான எல்லா பொறுப்புக்களையும் தாயே ஏற்றுக் கொள்ள வேண்டும். பிள்ளையின் பாதுகாப்பு உரிமையும் அவருக்கே உரியதாகும். அந்தப் பிள்ளையை முறையிலா மணப்பிறப்பு (lllegitimate) என்று சட்டம் சொல்கிறது.
குற்றவாளி தப்பிக்க இஸ்லாம் ஒரு வழிமுறையா?

இது சட்டச் சிக்கல் என்பதைவிட ஒரு பகிரங்கமான சட்ட துஷ்பிரயோக நடவடிக்கை என்றால் மிகையாகாது.
குழந்தைகளை கைப்பற்ற குறுக்கு வழி
ஷியாமளாவுக்கும் டாக்டர் ஜெயகணேஷூக்கும் நடந்த 2002-ஆம் ஆண்டு வழக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 121(1A) ஷரத்து இழைக்கும் சங்கடத்தை வெளிப்படுத்துகிறது.

31.12.2002-இல் தம் இரு பிள்ளைகளுக்கான பாதுகாப்பு உரிமையைக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்தார். இந்த வழக்கு 16.1.2003-இல் விசாரணைக்கு வந்தபோது கணேஷ் முன்னிலையாகி தமக்கு வழக்குரைஞரை நியமிக்க அவகாசம் தேவை என்று விண்ணப்பித்ததை நீதிமன்றம் அனுமதித்து விசாரணையை 25.2.2003-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
- தொடரும்.
பகுதி 1 - குழப்பத்திற்கு யார் காரணம்
பகுதி 2 – உரிமையை பறிக்க அரசியல் சட்ட மாற்றம்
பகுதி 3 - வினையால் விளையப்போகும் கொடுமைகள்
பகுதி 4 – சுன்னத்து செய்யாத குருதேவ் சிங் ..
யார் இந்து விலிருந்து மாறினாலும்.. ,இந்து சங்கத்திற்கும் அவர்களுடைய பேற்றோர்களுகும் ஒரு கடிதம் அனுப்ப வேண்டும் ….இது நடை முறைக்கு கொண்டு வர வேண்டும் …