Friday 20 March 2015

சிந்தனைகள்

1. மதமும் மனிதனும்
இவ்வுலத்திலுள்ள உயிரினங்களுள் ஒரு இனம் மனித இனம். மனிதனுடைய அறிவு, காலத்திற்கேற்ப மாறும் ஆற்றலை உடையது. அவனுடைய அறிவின் ஆற்றல் ஒவ்வொரு நாளும் தன்னுடைய நலத்தை பெருக்கிக்கொள்ளவும்,தன்னை வளர்த்துக் கொள்ளவும், தனக்கு வேண்டிய வசதிகளைச்செய்து கொள்ளவும் வல்லது. இவ்வாறு தன் பகுத்தறிவைக்கொண்டு சிந்தித்தது, ஒரு முடிவுக்கு வந்து செயலாற்றுபவனே மனிதனாவான்.

மதம் என்பது பலவகையான உள்ளது. ஆயினும் மதம் என்பது மனித வாழ்விற்காக, மனித நடைமுறைக்காக, மனிதனுடைய முடிவான குறிக்கோளை அடைவதற்காக ஏற்படுத்தப்பட்ட ‘விதிகள்’ அல்லது ‘முறைகள்’ என்று கூறலாம்.
2. பின்னுக்குத்தள்ளும் புலவர்கள்
மேலை நாடுகளிலுள்ள புலவர்களெல்லாம் அந்தந்த நாட்டு இலக்கிய வளர்ச்சிக்காக நூல்கள் இயற்றி, அந்தந்த நாட்டு மக்களை முன்னேற்றப் பாதைக்ககு அழைத்துச் செல்கின்றனர். ஆனால், நம் நாட்டுப்புலவர்களோ அப்படி அல்லர். நம்மக்களை எவ்வளவு தூரம் பின்னுக்கு இழுத்துச் சென்று – நம் மக்களை சிந்திக்கச் செய்யாமல் காட்டுமிராண்டிகளாக ஆக்கமுடியுமோ, அந்த வேலையைச் செய்பவர்களாகவே இருக்கிறார்கள்.
3. இராசாசி ஒரு ஆபத்பாந்தவர்
உண்மையில் நான் ஆச்சாரியாருக்கு விரோதியல்லேன், அவரிடம் எனக்கு விரோதமோ, குரோதமோ கிடையாது. அவருக்கும் இருக்காது. இருக்க நியாயமில்லை என்றுதான் கருதுகிறேன்.
அவர் பார்ப்பனர் எனும் விஷயத்தில் தவிர, மற்ற காரியங்களிலும், நிர்வாகத்திலுர் ஏனைய காங்கிரஸ்காரர்களைவிட நாணயத்தில் எவ்வளவோ மேலானவர்தான். ஆனால், தேவர்களுக்கு மகாவிஷ்ணு எப்படியோ அப்படி அவர் பார்ப்பன சமுதாயத்திற்கு, ஆபத்பாந்தவர் ஆவார்.
4. மந்திர சக்தியா? இயந்திர சக்தியா?
இராமயணத்திலும், மாகபாரதத்திலும் ஆகாய விமானம் இருக்கிறது. இது ‘மந்திர சக்தி’யால் ஓடியிருக்கிறது. ஆங்கில இலக்கியத்தில் ஆகாய விமானம் பற்றிய விளக்கம் இருக்கிறது. இது ‘இயந்திர சக்தியால் ஓடுகிறது. நமக்கு எது வேண்டும்? மந்திர சக்தியா? இயந்திர சக்தியா?
5. வேதங்கள்
வேதங்களெல்லாம் கடவுளாலேயே கூறப்பட்டன என்று மனப்பூர்வமாக அறிந்த எவனும் – சந்தேகத்துக்காவது ஆளான எவனும் வேதங்கள் கடவுள் வாக்கல்ல என்று மறுக்கவும் துணியமாட்டான். வேதங்கள் எல்லாம் தெய்வ்வாக்கு என்று கூறுவதற்கு வெறும் குருட்டு நம்பிக்கையும், நிர்பந்தமுமே ஆதாரமாக இருக்கின்றனவே ஒழிய, எவ்வித ருசுவோ, பிரத்தியட்சப் பிரமாணமோ ஒன்றும் இல்லை.
6. தொழில் பழகு
நமது கல்விமுறை மாறவேண்டும். படிக்கும்போதே அத்துடன் தொழிலும் பயிலவேண்டும். எந்த வகுப்பில் ஒருவன் படிப்பை நிறுத்தினாலும், அவன் தொழில் செய்து பிழைக்ககூடியவனாக இருக்கவேண்டும். மக்கள் அத்தனைபேரும் தொழில் பழகியவர்களாக இருக்க வேண்டும்.
7. மதச்சார்பற்ற சர்க்கார்
பெண்கள் ஒரு மாநாடு நடத்துகிறார்கள். அந்த மாநாட்டில் உள்ள பெண்கள் அத்தனை பேரும், பெண்கள் பதிவிரதைகளாக நடந்துகொள்ள வேண்டும் என்று தீர்மானித்துவிட்டு – பதிவிரதை என்றால் எல்லா ஆண்களையும் தங்கள் கணவனைப்போல் கருதி நடந்துகொள்ள வேண்டும் . அதுதான் பதிவிரதத்தன்மை என்று அர்த்தம் கொள்வது எவ்வளவு அயோக்கியத்தனமானதோ, அதைவிட அயோக்கியத்தனமாகும் ‘மதசார்பற்ற’ என்பதற்கு எல்லா மதங்களையும் ஒன்று போலக்கருத வேண்டும் என்பது! எனவே, ‘மதசார்பற்ற’ என்றால் எந்த மதத்தையும் சாராத என்பதுதான் பொருள். இந்த சர்க்கார் மதச்சார்பற்ற சர்க்காரானதால், அரசியலில் மதச்சார்புள்ள சாதனங்களான கடவுள் முதலிய படங்களை நீக்க வேண்டுமென்கிறது.
8. தியாகமும், சத்யாக்கிரகமும்
அநீதியும், அக்கிரமும் தொலைய வேண்டுமானால், வெறும் சட்டங்களாலும் , எழுத்தாலும், பேச்சாலும் முடியாதென்றும், சத்யாக்கிரகமும், தியாகமுமே உற்ற சாதனமாகுமென்று பலமுறை வற்புறுத்தியிருக்கிறோம். நமது நாட்டில் சாதிக்கொடுமையும், பிறவியினால் உயர்வு – தாழ்வு என்னும் அகங்காரமும் உடனே தொலையவேண்டியது அவசியமாகும். இக்கொடுமைகளை ஒரு பக்கத்தில் வைத்துக்கொண்டே ஜம்பமாகத் தென் ஆப்பிரிக்கா இந்தியருக்காகப் பரிந்து பேசுவதும், எழுவதும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களின் நன்மையையே பெரிதும் கவனிப்பதுபோல் நடித்து நீலிக்கண்ணீர் விடுவதும், தன் மனசாட்சி அறிய செய்யும் அக்கிரம்மேயன்றி வேறல்ல.
9. கற்கால எண்ணங்கள்
மனித சமுதாயம் மடமையானது கடவுளினால்தான். மனித சமுதாயம் இழிதன்மை அடைந்ததும் கடவுளினால்தான். இந்த கடவுளும் , மதமும் சாஸ்திரங்களும் 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்பாக மனிதன் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில் ஏற்பட்டவையாகும்.
10. யதார்த்த நாடகம் தேவை!
மக்களின் நன்மைக்காக ஆடப்படும் ஒரு நாடகத்தைப் பார்த்துவிட்டுச் செல்லும்போது நல்ல புத்தியோடு போவார்கள். நல்ல அறிவுரைகள் நாடகத்தில் இருந்தால், பார்த்துச் சென்ற மக்கள் மனதில் அது ஓரளவு நிலைத்து நிற்கும, எனவே, அது போன்ற நடிகவேள் ராதாவின் நாடகம் போன்றவைகளுக்கு சர்க்கார் முதலிடம் அளிக்க வேண்டும். மனித சமுதாயத்தின் நல்வாழ்வுக்கும், முன்னேற்றத்திற்கும், நல்லறிவு பெறுவதற்கும் நம் நாட்டில் இலக்கியம், நாடகம் முதலியவை தேவை!
11. வாழ்வின் அடையாளம் எது?
ஒவ்வொரு மனிதனும் செத்துப்போவது உண்மைதான் என்றாலும் அவனோடு அவனுடைய முயற்சிகளும் – அவன் துவக்கிய காரியமும் செத்துப் போய்விடுவதில்லை. அதுவும், அவனுடைய எண்ணத்தை அவனால் கூடுமான அளவுக்கு, அவனைச் சூழ்ந்துள்ள மக்களிடையே பரப்பிவிட்டால் – அந்த எண்ணம் ஒருபோதும் அழியாது, அடக்கிவிட முடியாது. என்னுடைய முயற்சியெல்லாம் மக்கள் எதையும் சிந்திக்கவேண்டும் என்பதுதான். அவர்கள் எதையும் கண்மூடித்தனமாக நம்பிவிடக்கூடாது என்பதுதான். இது போதுமான அளவுக்கு மக்களிடையே வேரூன்றிவிட்டது. இனியும் தொடர்ந்து எனது உயிருள்ளவரையில் நான் இதைத்தான் கூறிவருவேன்.
12. முதலாளி -தொழிலாளி
தொழிலாளிகளை மோசம் செய்யும் முதலாளிகளின் செயல்கள் யாவும் தொழில் திறமையாகவும், நிர்வாகத் திறமையாகவும் கருதப்படுகிறது; முதலாளியைத் தொழிலாளி ஏமாற்றுவது நாணயக் குறைவானது, நம்பிக்கைத் துரோகமானது, திருட்டுக்குற்றத்தில் சேர்ந்தது என்பதாக ஆகிவிடுகிறது. இதற்குக்க் காரணம் எல்லாவித முதலாளிமார்களின் ஆட்சி வலுத்திருப்பதுதான்.
13. பதவி சொகசு
நம் உத்தியோகஸ்தர்கள் பணி கிடைக்கும் வரை ‘நான் தமிழன்’, ‘தமிழன்’ என்று உரிமை கொண்டாடி, வேலை கிடைத்ததும் பதவி சொகுசில் தனைனை வேறு சாதியனாக்க் காட்டிக்கொண்டு, தான் இன்னும் மேலே போவதற்காக உண்மையில் வேறு சாதியாளாகவே ஆகிவிடுகிறார்கள்.
14. நியாயம் எங்கே?
ஜீவன் என்றால் பிறத்தல், தன் நலனுக்காக வாழ்தல், இனத்தைப் பெருக்குதலை, இறத்தல் ஆகியவைகளைக் கொண்டதேயாகும். இந்தத் தத்துவங்களைப் பார்த்தால் செத்த மனிதர்களும், இருக்கும் மனிதர்களும், ‘முக்காலே மூன்று வீதம் முக்காணி அரைக்காணி’ பேரும் அதற்கு மேற்பட்ட எண்ணிக்கை உடையவர்களும், மேற்கண்ட குணங்களையுடைய ஜீவப்பிராணி என்பதில் சேர்ந்தவர்களாகாமல், அவைகளினின்றும் உயர்ந்தவர்களாகக் கருதப்பட வேண்டிய மனிதத் தன்மை உடையவ்ர்களாக இருக்க நியாயம் எங்கே இருக்கிறது?
15. துக்கமயமாக்கும் மதம்
மதமானது இன்று உலகில் மனித சமுதாயத்தின் வாழ்வைத் துக்கமயமாக்கி, ஜீவராசிகளில் மனிதனுக்கென்றுள்ள பகுத்தறிவை அடிமையாக்கி, ஒற்றுமையைக் குலைத்து மனிதனுக்கு மனிதன் வெவ்வேறு இனம் என்று எண்ணும்படி செய்து வருகின்றது.
16. மனத்திருப்தியும் ஆறாவது அறிவும்
வாழ்க்கையில் பேத நிலையும், போதவில்லை என்கின்ற மனக்குறையும், தனிப்பட்ட சுயநலப் போட்டித் தொல்லையும் எந்த நாட்டிலாவது இருக்குமானால், அந்த நாட்டு மக்களுக்கு முழுப்பகுத்தறிவு இல்லை என்றும், எந்ந நாட்டிலாவது அவை இல்லாமல் வாழ்வில் மக்கள் மனத்திருப்தியுடன் இருப்பார்களானால் – அந்த நாட்டில் ‘பகுத்தறிவு’ ஆட்சிப்புரிகிறது என்றுதான் அர்த்தம்.
17. நம்பிக்கைக்காரர்கள்
ஒரு தேவதாசியை விபச்சாரி என்று சொன்னதற்காக அவள் கோபித்துக்கொள்வது போலும், ஒரு ‘வக்கீலை’ அவர் காசுக்குப் பேசுகிறவரேயொழிய, நேர்மைக்காகப் பேசுகிறவல்லர் என்று சொன்னால் அவர் கோபித்துக் கொள்வது போலும், ஒரு வியாபாரியை பொய்பேசுகிறவர் என்று சொன்னால் அவர் கோபித்துக்கொள்வது போலும் -கடவுள் நம்பிக்கைகார்ர்களை ‘முட்டாள், அயோக்கியன், காட்டு மிராண்டி’ என்று சொன்னால் அவர்கள் கோபித்துக கொள்கிறார்கள்.
18. புத்தனின் முதல் கருத்து
புத்தர் பிரான், வருணாசிரம தர்மத்தையோ இந்த வருணாசிரம தேவர்களையோ ஏற்றுக்கொண்டவர் அல்லர்; அவற்றை ஒழிப்பதே புத்தமதத்தின் உட்கருத்து; முதல் கருத்து!
19. சமுதாய நலன்
மூடநம்பிக்கை, முட்டாள்தனம், இழித்தன்மை என்பவை எந்த முறையிலும் பார்ப்பனரல்லாதாருக்கு ஏற்றது என்றால் – பார்ப்பனரல்லாதார் சமுதாயம் ஒழிந்து போவதே மேல்; அல்லது பார்ப்பனரலாதார் அடிமையாக இருப்பதே மேல். இப்படிப்பட்ட பார்ப்பனரல்லாதார் சமயம், சமுதாயம் நமக்ககு வேண்டாம். இவையெல்லாம் ஆரியர் நலனுக்காக வேண்டி ஏற்ப்ட்டவைகளும், ஏற்பாடு செய்யப்பட்டவைகளுமாகும். இவற்றாலே பார்ப்பனர் நிலை இவ்வளவு கெட்டியாய் இருக்கிறது. இந்த சமயத்தை விட்டு நீங்கிய தமிழர்கள் வாழமுடியவில்லையானால், மானமுள்ளவர்கள் வேறு சமயத்தைத் தழுவிக்கொள்வதே மேலாகும். இராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் நீக்கிவிட்டு, அதில் காணும் கடவுள்களையும் இகழ்ந்து ஒதுக்கிவிட்ட நம் திராவிட மக்களில் ஒரு சார்பான இசுலாமியர்கள் மான வாழ்வும், ஒற்றுமை வாழ்வும் வாழாமல் போய்விடவில்லை.
20. உலகச் சிற்பிகள் உருவாக!
பாமரனின் ஞானசூனியம், சுயநலக்காரனின் எதிர்ப்பு என்னும் இரண்டு பெரிய விரோதிகளைக் கண்டு கலங்காமல் வேலை செய்வோரே இனி வரும் உலகச் சிற்பிகளாக ஆகமுடியும்.
21. கடவுள் – பொதுப் பித்தலாட்டமான சொல்
எஜமான்ன் – சம்பளக்காரன், முதலாளி – தொழிலாளி, பண்ணையார் – கூலிக்காரன் என்கிற முறை அமுலில் இருக்கும் நாட்டில் சுதந்திரம், சமத்துவம் என்று பேசுவதேல்லாம் புரட்டும் மோசடியும் அல்லாமல் அதில் உண்மை இருக்க முடியுமா? அதுபோல்தானே ஜனநாயகமும் நடந்துவருகிறது.
‘கடவுள்’ என்பது ஒரு பொதுப் பித்தலாட்டமான சொல்; இந்தப்பித்தலாட்டத்தில் எல்லோருக்கும் பங்கு வரும். ‘ஜனநாயகம்’ என்கிற பித்தலாட்டச் சொல் அப்படி அல்ல; தந்திரகாரனுக்கு – அயோக்கியனுக்கு – இவர்களைச் சேர்ந்த கோஷ்டிக்குந்தான் பங்கும், பயனும் உண்டு. போக்கற்ற ஆளுக்கெல்லாம், பித்தலாட்ட வாழ்வு கோஷ்டிக்கெல்லாம் பிழைக்கும் வழி – ஜனநாயகம்தான்.
22. புத்தனின் கேள்வி
சரித்திர சம்பந்தமாக எவராவது மனிதனில் கீழ்சாதி, மேல்சாதி என்பது பற்றி கேட்டாரா என்றால், புத்தர் ஒருவர்தான் கேட்டார். அவர் ஒரு ராஜாவின் மகன்; அவர் பலவற்றைப்பற்றிக் கேட்டார். ”அவன் ஏன் கிழவனாக உள்ளான்? இவன் ஏன் வேலைக்காரனாக உள்ளான்? இவனுக்கு ஏன் கண்கள் குருடு?” என்று கேட்டார். அதே புத்தர்தான் கேட்டார் ” இவன் ஏன் கீழ் சாதி” என்று அழைக்கப்படுகிறான? ”அது கடவுளால் பிறப்பிக்கப்பட்டது” என்றனர். அப்படிக் கீழ்சாதியாய் பிறப்பித்த கடவுள் எங்கேயடா? என்றார். ஆத்மா பற்றிக் கூறினார்கள். அது என்ன? அப்படி ஒன்று இருப்பதாகக் காணோமே என்றார். அப்படி கேள்விகள் கேட்டவரையேஇந்நாட்டைவிட்டுத் துரத்தினார்களே!
23. விஞ்ஞான வளர்ச்சி எப்போது வரும்?
இந்த நாடு முன்னேற வேண்டுமானால், எந்த மொழியினாலும் சரி, விஞ்ஞான அறிவு, விஞ்ஞான வாழ்வு இவற்றால் முடியும்.
24. பொதுச்சொத்து
செல்வம் என்பது உலகின் பொதுச்சொத்து. அதாவது மக்கள் அனைவரும் அனுபவிக்க உரிமையுள்ள சொந்தமான சொத்தாகும். அதை யார் உண்டாக்கியிருந்தாலும், உலக்த்தில் உள்ளவரை எவருக்கும் அது பொதுச்சொத்தாக்மு. அனுபவிக்கும் உரிமைபோல அதை அழியாமல் பாதுகாக்கவும் உரிமை உண்டு.
25. வெறுக்கப்படும் நாத்திகம்
உலகத்திலேயே ”நாத்திகம்” என்று சொல்லப்படும் வார்த்தையானது அனேகமாய் பெரும்பான்மையான மக்களால் வெறுக்கப்படக்கூடியதாக இருந்து வருகின்றது. காரணம் என்னவென்று பார்ப்போமானால், அவ்வார்த்தையில் ‘கடவுள் என்பது இல்லை’ என்கின்ற பொருள் அடங்கி இருப்பதாகக் கொள்வதேயாகும்.
26. மனிதப்பிறப்பு
மனிதனுக்கு மிக அருமையான அறிவும், பகுத்தறிவும், ஆழ்ந்து சிந்திக்கும் தன்மையும், அனுபவத்திற்கு ஏற்ப நடக்கும் உரிமையும் இருக்கும்போது கடவுள் எதற்கு?
இந்தக்கடவுள், மத உணர்ச்சி இல்லாமல் இருந்தால்தான் மனிதப்பண்பு, மக்கள் யாவரையும் ஒன்றுபோல் கருதும் உணர்ச்சி, நேர்மை, நல்லதைப் போற்றவும், தீயதைக் கண்டிக்கவுமான துணிவு, யாவரையும் ஒன்றுபோல் கருதிச்செய்தும் பொதுத்தொண்டு உணர்ச்சியும் ஏற்பட முடியும். இன்று இவை சுத்தமாய் இல்லாததற்குக் காரணம் – இந்தக்கடவுள், மதம், மனித்த்தன்மைக்கு மேற்பட்ட தன்மையுள்ள மனிதப்பிறப்பு என்கின்ற உணர்ச்சிதான் என்பது எனது தாழ்மையான் முடிவு!
27. புரட்சி தேவை!
சகல முதலாளி வர்க்கமும் சர்வ சமயங்களும் அடியோடு அழிந்து, மக்கள் யாவரும் சுயமரியாதையுடன் ஆண், பெண்அடங்கலும் சர்வ சமத்துவமாய் வாழச் செய்யவேண்டும் என்பதற்காகப் புரட்சி செய்யவே ‘புரட்சி’ தோன்றியிருக்கிறது. அது உயிருள்ளவரையும் தன் கடமையை செய்துக் கொண்டிருக்கும். ஆதலால் புரட்சியில் ஆர்வம் உள்ளவர்கள் புரட்சியை ஆதரிக்க வேண்டுகிறோம்.
28. பொருளாதாரப போட்டி
செல்வம் (பணம்) தேட வேண்டும் என்று கருதி அதில் இறங்கியனுடைய வேலை, அவனது வாழ்நாள் முழுவதையும் கொள்ளை கொண்டுவிடுகிறது. பணம் சம்பாதிப்பதில் போட்டி, பணக்காரன் என்று காட்டிக்கொள்வதில் போட்டி, அதற்கேற்ப புகழ் சம்பாதிப்பதில் போட்டி, இத்யாதி போட்டிகள் அவனது ஊக்கத்தையெல்லாம் கொள்ளை கொண்டுவிடுகின்றன.
29. சோம்பேறி எண்ணம்
ஒரு தகப்பன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு எப்படி சம அந்தஸ்தும் சம உரிமையும் உள்ளதோ, அப்படியே ஒரு தேசத்தில் பிறந்தவர்களுக்கும் இருக்கவேண்டியது அவசியமாகும். அப்போதுதான் மக்கள் சுலபமாக வாழமுடியும். ஏதோ தான் பிறந்த வேளையின் பலன் கஷ்டத்தை அனுப்பவிக்க வேண்டிதுதான்; மற்றொருவன் சுகத்தை அனுபவிக்க பாத்தியதை உடையவன்தான் என்னும் சோம்பேறி எண்ணமே மக்களை அழித்து வருவதற்கு முக்கிய கருவியாய் இருக்கிறது. இந்த எண்ணம் மாறுபடவேண்டியது அவசியமாகும். இதற்காக எவ்வளவு தியாகம் செய்தாலும் அது வீணாகாது. மக்களின் மனோபாவமும் வாழ்க்கையை நடத்தும் முறையும் மாறினாலொழிய வேறு ஒரு முறையானாலும் நன்மை உண்டாகாது என்பது திண்ணம்.
30. பித்தலாட்டம்
ஜோசியன், மந்திரவாதி, சாமியாடி, அர்ச்சகன், வைத்தியன் ஆகிய அய்வரும் ‘பித்தலாட்ட வாழ்வு’ என்னும் ஒரு மரத்தின் வெவ்வேறு கிளையில் காய்த்த காய்கள், என்று பெரியவர்கள் சொல்வது வழக்கம். இப்படியாக ஏற்பட்ட கற்பனைகளுக்கு ஏற்பத்தான் கோயில், குளம், மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் முதலியவைகள் உண்டாக்கப்பட்டும் இருக்கின்றன.
உலகின் அர்ச்சகன், மாந்திரிகன், ஜோதிடன் இவர்களைவிட பித்தலாட்டத்தில் கைதேர்ந்தவர்கள் கிடையாது.
31. கலைஞர்கள்
சுயமரியாதைக்கார்ர்கள் காரியம் போதிய வெற்றிப்பெறாமல் தடைப்படுவதற்குக் காரணமே இந்தக் கலைவாணர்கள்தான்! மணிக்கு இவ்வளவு ரூபாய் என்று ரேட்டு வாங்கிக்கொண்டு ‘முருகா! இராமா! கிருஷ்ணா!’ என்று பாடுவதும், இந்தக் கடவுள்கள் தங்கள் மனைவி, வைப்பாட்டிமார்களுடன் நடத்திய லீலைகளை வர்ணிப்பதும்தான் இக்கலைகளின் பயன்! இவ்வளவு பணச்செவுகளுக்கும் இதுதானா பிரயோஜம்!
32. சட்டச் சிக்கல்
நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசியல் சட்டத்தில் சாதிக்கும், அதை உண்டாக்கிய மத்ததுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவில்லை. அச்சட்டத்தைத் திருத்தக்கூடய வசதி தமழர்களுக்கு இல்லை.
33. திருவள்ளுவர் கூறியது சரியே!
பிச்சைக்கரன் இருப்பதும் அவர்கள் பிச்சை எடுப்பதும் ஜனசமுகத்துக்கு ஒரு பெரும் தொல்லையும், இழிவுமாகும் என்பதோடு, ஒரு கடவுள் இருந்தால் – அக்கடவுளுக்கு மிகுந்த அவமானமும், அயோக்கியத்தனமான காரியமுமாகும்.
இந்தக் கருத்தை வைத்தே திருவள்ளுவரும் ‘பிச்சை எடுத்து வாழவேண்டிய மனுதனைக் கடவுள் சிருஷ்டிருப்பாரேயானால் அக்கடவுள் இல்லை என்றுதான் அர்த்தம். அவன் இருந்தாலும் ஒழிய வேண்டியது அவசியம்’ என்று சொல்லியிருக்கிறார்.
திருவள்ளுவர் நூலில், முன்னுக்குப்பின் முரண்கள் பல இருந்தாலும், அவர் ஒரு தனிமையுடமைக்காரரேயானாலும் இந்த ஒரு விஷயத்தில் தைரியமாகச் சொல்லியிருக்கிறார்.
34. பெண் விடுதலை
பெண்கள் தங்கள் ஜீவ சுபாவத்துக்காக தாங்களே, முயற்சியெடுத்து கட்டுப்பாடுகள் என்ற விலங்குகளைத் தகர்தெறிய முற்பட்டாலொழிய, தங்களை வாசனைத்திரவியங்கள் போலவும், உடையணிகள் போலவும் மதித்து அனுபவித்துக் கொண்டுவரும் ஆண்களாலும், எப்படிப்பட்ட சமதர்ம ஆட்சியாலும் பொதுவுடமைக்காரருடைய ஆட்சியாலும் விடுதலை ஏற்படாது.
35. கோடி கோடியாக சாப்பிடும் கடவுள் தேவையா?
ஆற்றிவுடைய மக்கள் உள்ள நாட்டில், மனித சமுதாயத்தில் ஒரு கடவுள், அதற்கு வீடு, சோறு, பெண்டாட்டி, பிள்ளை, சேலை, நகை, வைப்பாட்டி, விபச்சாரம் செய்தல், கோபம்-தாபம் , பழிவாங்குதல், கொல்லுதல்,போரில் அடிபடுதல், மூர்ச்சையாதல் மற்றுமெத்தனையோ கீழ்த்தர மக்களது தன்மைகளையெல்லாம் பொருத்தி – அந்தப்படி பொருத்தப்பட்ட கடவுளக்கு தேசப்பொருளை செல்வத்தை கோடி கோடியாகச் செலவழித்துப் பாழாக்குதென்றா, கடுகளவு சிந்தனை அறிவுள்ள யார்தான் இதை யோக்கியமான காரியம் என்றோ, உண்மையான நம்பிக்கையுடைய காரயமன்றோ கருதமுடியும்?
36. சுயமரியாதை பெறச்செய்யும் குறள்
திருவள்ளுவர் கூறியுள்ள கருத்துக்களுள் ஒன்றேனும் ஒழுக்கக் குறைபாடுள்ளதாக்க் காணப்படாது. அறிவுள்ளவர் யாரும் மறுக்க முடியாத – வெறுக்க முடியாத கருத்துக்களை அமைத்துத்தான் அவர் குறளை இயற்றியுள்ளார். குறளை படிப்பவர்கள் எல்லோரும் நிச்சயம் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள். அரசியல் ஞானம், சமூக ஞானம், பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் அதில் அடங்கிவிடுகிறது.
37. பக்தி எது?
சமுதாயத்தில் பெரும் கேடு விளையக் காரணமாக இருப்பவர்களுள், பெரும் லஞ்சப்பேர்வழிகளும்தான் பூசை, பக்தி என்று பெரிதாக ஆர்ப்பாட்டம் செய்வார்கள். கடவுள் பக்தி இருப்பதெல்லாம், ஒருவித ஆசையைப் பூர்த்தி செய்து கொள்வதன் காரணமாக உண்டானதுதானேயொழிய மனிதர்களை ஒழுக்கம் உடையவர்களாக ஆக்கவோ, மற்றவர்களுக்குப் பயன்படும்படிச் செய்யவோ அல்ல!
38. தமிழ்க்கடவுள் எங்கே?
வழக்கத்திலுள்ள கடவுள்களில் எதுவும் தமழனுக்குச் சொந்தமானது கிடையாது. எல்லாம் வெளிநாட்டிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்ட கடவுளகேயாகும், சரஸ்வதி, இலட்சுமி, சிவன், விஷ்ணு, பிரம்மா, பிள்ளையார், அரங்கன், நடராசன், கந்தன், சுப்பிரமணியன், இராமன், கிருஷ்ணன், எல்லாம் வடமொழிச் சொற்களே தவிர, தமிழ்மொழி பெயருள்ள கடவுளகள் எதுவுமே கிடையாது. கருப்பண்ணன், காட்டேரி வேண்டுமானால் தமழ்ப் பெயருள்ளவைகளாக இருக்கலாம். அதுதான் தொலைகிறது. இந்தக்கடவுள்களின் கதையாவது நாணயம், நேர்மை, ஒழுக்கமுடையவைகளாக இருக்கின்றனவா?
39. பொதுவுடமை கருத்து
மனிதனுக்கு கவலைகள் நீங்கி, திருப்தி எண்ணம் ஏற்பட வேண்டுமானால், பொது உடைமைதான் அதற்கு மருந்து என்று கூறப்படுகிறது. ஏனென்றால், பொது உடைமைத் திட்டத்தில் மனிதர்களுக்குள் பேதம் இல்லாமல் செய்யமுடிகிறது.
40. மனித தர்ம நூல் குறள்
குறள், இந்து மதக் கண்டனப்புத்தகம் என்பதையும், இது சர்வ மதத்திலுள்ள கருத்துக்களையெல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள ‘மனித தர்ம நூல்’ என்பதையும் எல்லோரும் உணரவேண்டும்.
41. வளர்ச்சி வந்த விதம்
இரண்டாயிரம் ஆண்டு இடைக்காலத்தில் மக்கள், தங்கள் சொந்த புத்தியை உபயோகிக்கும் உரிமையை முற்றிலும் இழந்திருந்தார்கள். ஏன், எதற்கு, என்ற கேள்விகளைக் கேட்கவே உரிமையில்லாதவராய், எழுதியதைப் படிப்பவர் சொல்லியபடி கேட்டனர். சிந்தித்தால், தர்க்கித்தால், சந்தேகித்தால் பாவம் என்று கூறி அமுக்கி வைக்கப்பட்டிருந்தார்கள், எனவேதான் அறிவு வளரவில்லை: சமுதாயம் மேலோங்கவில்லை.
42. எது சுயநலம்?
இன்பமடைவது, மனத்திருப்பியடைவது, இயற்கை உணர்ச்சிகள் சக்கி அடைவது, பழிவாங்குவது, எதிரியைத் தண்டிப்பது மூலம் திருப்தி அடைவது முதலியவை எல்லாம் சுயநலமேயாகும்.
43. கூட்டுறவு
சர்க்கார்தான் ஜனங்கள், ஜனங்கள்தான் சர்க்கார் என்பதை உணருங்கள். நமது சரீரத்தில் கஷ்டமேற்பட்டால் நமக்கென்னவென்று இருப்போமா? அதுபோல் நமது உணர்ச்சிகள் இருக்க வேண்டும். சிப்பியானது திறந்திருக்கும்போது மழைத்துளி விழும்போதுதான் முத்தாகிறது. அதுபோலத்தான் நமது உணர்ச்சிகளைப் பக்குவப்படுத்தி, சரிப்படுத்தி வைத்துக்கொண்டு தயாராகவே இருக்கவேண்டும். அப்பொழுது கண்டிப்பாக பலன் ஏற்பட்டுவிடும். நம்முடைய அபிப்பாரயந்தான் ஜனசமூக அபிப்ராயம் என்று தன்னம்பிக்கையுடன் நாம் வேலை செய்யவேண்டும். நமது உடலிலுள்ள பழைய ‘தனித்தனித் த்த்துவ’ ரத்தத்தை எடுத்துவிட்டு கூட்டுறவுத் தன்மை என்ற இரத்தத்தைப் பாய்ச்சச்(Inject) செய்ய வேண்டும். இது நம்மால் முடியுமா என்றிருக்க்கூடாது. கண்டிப்பாய் இது முடியாமல் போய்விடாது.
44. தொழிலாளித்தன்மை
நான் கூறுகிறேன், தொழிலாளர்கள் மோதிக் கொள்ளவேண்டிய இடம், முதலாளிகள் அல்ல; முதலாளிகளிடம் முறையிடுவதற்குப் பதிலாக மந்திரிகளிடம் முறையிடுங்கள். அவர்கள் வீட்டைக் கொள்ளையடிப்பதற்குப் பதிலாக, கஜானாக்களை கொள்ளையிடுங்கள். உங்களுக்கு பலாத்தகாரத்தில் நம்பிக்கை இருந்தால் அதை யோக்கியமான முறையில், வீரமான முறையில் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தொழிலாளியின் கூலி உயர்ந்துவிட்டால் மட்டும் அவன் நிலை, அந்தஸ்து உயர்ந்துவிடாது; தொழிலாளித் தன்மை அடியோடு மாறிவிடாது.
45. ஒரே கட்சிக்காரர்கள்!
நாமும் இத்தன் நாட்களாகப் பார்க்கிறோமே! பார்பனர்களில் எத்தனையோ கொள்கை பேசுபவர்கள், புரட்சிக்காரர்கள், பெரிய பெரிய தலைவர்கள் என்பவர்களையெல்லாம் பார்த்திருக்கிறோமே! இவர்களில் எந்த பார்ப்பனராவது, எந்தப் பார்ப்பானையாவது எதிர்த்து இருக்கிறானா? எந்தக் கட்சியில் பார்ப்பான் இருந்தாலும், பார்ப்பான் சமுதாய விஷயத்தில் எல்லாப் பார்ப்பனர்களும் ஒரே கட்சிகாரர்கள்தானே!
46. சர்வதிகாரம்
சிலருக்கு, நான் ஏதோ சர்வாதிகாரம் நடத்த முற்படுகிறேன் என்று தோன்றலாம். அது ஓரளவுக்குச் சர்வாதிகாரம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் தோழர்களே! சிந்திக்கவேண்டும், இந்த சர்வாதிகாரம் எதற்குப் பயன்படுகிறது என்று. என்னுடைய சர்வாதிகாரத்தைக் கழக இலட்சியத்தின் வெற்றிக்காக, பொது நன்மைக்காக பயன்படுத்திகிறேனே தவிர, எந்தச் சிறு அளவுக்கும் எனது சொந்தப் பெருமைக்காகவோ, ஒரு சிறு கடுகளவாவது சொந்த நனைமைக்காகவோ, பயன்படுத்திக்கொள்ளவில்லை என்படை நீங்கள் ஆராய்ந்து பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டுகிறேன்.
47. விளங்கிக்கொள்ளுங்கள்.
மனித ஜீவ வர்க்கத்திடமுள்ள சில குணங்கள் எப்படி மற்ற ஜீவராசிகளுக்கு இல்லையோ, அதுபோன்றே – மற்ற ஜீவராசிகளுக்கு உள்ள சில குணங்கள் மனித ஜீவ்வர்கத்திற்கு இல்லாமல் இருப்பதை நாம் பார்க்கிறோம். ஒரு கழுதைக்கும், ஒரு குரங்குக்கும் உள்ள வித்தியசத்தைக் கணக்குப் பார்த்து, ஒரு குரங்கும், ஒரு மனுதனுக்கும் உள்ள வித்தியாசத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், பின்கண்ட வித்தியாசத்தின் அளவு அதிகமாய்க் காணமுடியாது. ஆகவே, மனித ஜீவன், ஜீவப்பிராணிகளிலெல்லாம் மேலானதென்றும், தனிப்பட்டதென்றும், அதற்கு மாத்திரமே சில தனித்துவங்களுண்டு என்றும், கருமம், மதம், மேலுலக வாழ்வு, கடவுள், கடவுள் தண்டனை, மன்னிப்பு, சன்மானம் ஆகியவை சொந்தமென்றும், மனிதனுக்கே சில தத்துவங்கள், கடமைகள், பிரார்த்தனைகள் முதலியவை உண்டென்றும் சொல்லுவதில் ஏதாவது அர்த்தமிருக்க இடமுண்டா என்று பார்த்தால் இவை வெறும் கற்பனைகளென்றே விளங்கும். மற்றும் கடவுளுக்கும், மனிதனுக்கும் இருக்கும் சம்பந்தமும், பொறுப்பும் மற்ற ஜீவராசிகளுக்கு இல்லை என்று சொல்லமுடியுமா என்பது விளங்கும். அது போலவே பாவமும், புண்ணியமும், சொர்க்கமும், கடவுள் பாதத்தை அடையக்கூடிய தன்மையும் மற்ற ஜீவராசிகளுக்கு இல்லையென்று சொல்லமுடியுமா? என்பதும் விளங்கும்.
48. அனுபவம்
அரசியலில் உழல்வதென்பது என்றைக்கிருந்தாலும் ஒரு நாளைக்காவது மனிதன் தன்னை அயோக்கியனாக்கிக் கொள்ளாமலும், தேசத்தையும், சமூகத்தையும் காட்டிக்கொடுக்காமலும் வாழும்படி செய்யவே முடியாது. இது நமது அனுபவத்திற்குச் சந்தேகமறத் தோன்றிவிட்டது.
சமுகத்தொண்டில் ஈடுபட விருப்பமுள்ளவர்களிடம் அரசியலில் அதைக் க்ண்டிப்பதைத் தவிர, மற்றபடி தான் நேரில் கலப்பதில்லை என்பதாக உறுதிபெற்றே அவர்களைச் சேர்த்துக்கொள்ளும் நிபந்தனை ஏற்படுத்தினால்தான் சமுகத்தொண்டு இயக்கம் நடைபெறவும், வெற்றிபெறவும் முடியுமென்றே இப்போது நினைக்க வேண்டியிருக்கிறது.
49. கிளர்ச்சியின் தத்துவம்
நீக்ரோக்களும், வெள்ளையருக்கும் உள்ள அளவு பிறவிபேதம், நிறபேதம், நாகரிகபேத்மு, நமக்கும், பார்ப்பனருக்கும், பூசாரிகளுக்கும் கிடையாது. அவ்வளவு பேதமுள்ள (மைனாரிட்டி) நீக்ரோக்கள் மெஜாரிட்டியான, ஆளும் சாதியாரான, பிரபுக்களான வெள்ளையர்களோடு – எல்லாத்துறைகளிலும் சரிசம்மாக்க் கலந்து, உண்பன, உறங்குவனு, பெண் கொடுத்தல், பெறுதல் உட்படக்கலந்து, புழங்குகிறார்கள். ஆனால், நம் நாட்டில் 100க்கு மூன்று பேரே உள்ள கூட்டம் பிச்சை எடுப்பதையும், உழைக்காத்தையும், கூலிக்குப் புரோகிதம் செய்வதையும் உரிமையாக்கிக்கொண்ட, பிழைப்பாய்க் கொண்ட கூட்டம் மற்றும் வாழ்வில் யோக்கியமாக, நேர்மையாக, நாணயமாக இருக்கவேண்டும் என்கின்ற தர்ம்ம் இல்லாத்தும், தாங்கள் எது வேண்டுமானாலும் செய்து பிழைக்கலாம், எப்படிவேண்டுமானாலும் நடக்கலாம் என்கின்ற அனுபவத்தில் இருக்கிற கூட்டம் – தங்களை ‘மேல்பிறவி’ என்றும் நம்மை ‘கீழ்பிறவி’ என்றும் -இழிபிறவி_ பொது இதமாகிய கடவுள் என்கின்ற கல் சிலையிருக்கும் இடத்தில் பிரவேசிக்கக்கூடாத மிகமிக இழி தன்மையானவர்கள் என்பதான நிபந்தனையை நம் பேரில் ஏற்றிக் கொண்டு – கட்டடத்திற்கு, அறைக்கு வெளியில் நின்று வணங்க வேண்டும் என்பதை – நிலைக்கவிடலாமா என்பதுதான் கிளர்ச்சியின் தத்துவமாகும்.
50. மாறுதல் வேண்டும்
நாமும், நமது நாடும் முன்னேற வேண்டுமானால், சமுதாயத்துறையிலே பெரும் மாறுதலை உண்டாக்கவேண்டுவது அவசியமாகும். அதன் பின்னரே, நல்ல ஆட்சியும் ஏற்படுத்த முடியும் என்பது திண்ணம். அவ்வாறு இல்லாது, இனைறைய சமுதாய அமைப்பைக்கொண்டே, யார் ஆட்சி செய்தாலும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தொல்லைகள் ஒரு சிறிதும் நீங்குவதற்கு வழிஇல்லை; வழிவகையும் இருக்கமுடியாது.
51. மானமுள்ள மக்களாக
சூத்திர்ர் என்கிற இழிவை நீக்கக் கிளர்ச்சி செய்வது என்பது சமுதாய சம்பந்தமான (சோஷியலிச) காரியமே தவிர, இதில் அரசியல் ஏதுமில்லை; மற்றும் இதில் பலாத்காரம் என்பதுமில்லை.
அதிலும், இந்த இழிவுநீக்கக் கிளர்ச்சி என்பது, உலகில் எங்குமே இல்லாத அக்கிரமக்கொடுமையிலிருந்து மனிதன் விடுதலை, மானம் பெறவேண்டும் என்பதற்காக நடத்தப்படும் கிளர்ச்சியேயாகும். இதில் எவ்வித வகுப்புத் துவேஷமோ, வகுப்பு வெறுப்போ இல்லை. நம் நாட்டில் (இந்துக்கள் என்னும்) சமுதாயத்தில் 100 க்கு 97 பேர்களாக உள்ள மக்கள் – அதிலும் படித்தவர்கள், செல்வவான்கள், அய்க்கோர்ட் நீதிபதிகள், கலெக்டர்கள், உப அத்தியட்சகர்கள், மடாதிபதிகள், சமீப காலம்வரை மகாராஜாக்கள், அரசர்கள், ஜமீன்தார்கள், பல கோடி ரூபாய்க்குச் சொந்தக்கார்ர்கள் பிரபுக்களுட்பட இவர்கள் சமுதாயத்தில் கீழ்ப்பிறவியாக, கீழ்மக்களாக கடவுள் என்கிற (அதுவும் அவர்களுடைய கடவுள்) சிலையிடம் நெருங்க்கூடாதவர்களாக, அறைக்கு வெளியே நிற்க வேண்டியவர்களாகத் தலைமுறை தலைமுறையாகத் தடுக்கப்பட்டு, நிரந்தர கீழ்மக்களாக ஆக்கப்பட்டிருக்கும் கொடுமைக்கு, இழிவுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதிலிருந்து விலக்கி, மானமுள்ள மக்களாக ஆக்கப்பட வேண்டுமென்பதற்குக் கிளர்ச்சி செய்வதென்றால் – இது இதுவரை செய்யாமலிருந்ததுதான் மானங்கெட்ட தன்மையும், இமாலயத் தவறுமாகுமேயொழிய, இப்போது கிளர்ச்சி செய்வதென்பது ஒரு நாளும் ஒருவிதத்திலும் தவறாகவோ, கூடாததாகவோ ஆகாது; ஆகவே ஆகாது.
52. ஆசையின் உருவம்
உதாரணமாக, கால்கள் இருக்க, கட்டை வண்டிகள் இருக்க இயந்திரத்தின் மூலமாய்த்தான் – அதாவது இரயில் மூலம் பிரயாணம் செய்தோம்; மோட்டாரில் பிரயாணம் செய்தோம்; ஆகாயக் கப்பலிலும் பிரயாணம் செய்தோம்; அவைகளையே எல்லா மக்களும் போக வரப்போக்குவரத்து சாதனமாக்கவும் ஆசைப்படுகிறோம்; மற்றவர்களும் ஆசைப்படுகிறார்கள். ஆகவே, இதை மனித்த் தன்மையுடன் கூடிய குற்றமற்ற இயற்கை உணர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, இது எவ்விதக் குற்றமுள்ளதும், அநியாயமானதும் என்று சொல்லி இதற்காக யாரையும் கண்டிக்கவும் முடியாது. ஜீவ சுபாவமே ஆசையின் உருவமாகும்.
53. தன்னலமற்ற மனிதர்கள் அதிகரிக்கவேண்டும்
தன்னலமற்ற பொதுத்தொண்டு செய்பவர்கள் – பிரதிபலன் கருதாது உழைக்கக்கூடியவர்கள் எண்ணிக்கை, நாட்டில் மேன்மேலும் பெருகவேண்டும். அவர்களின் சீரிய குணங்கள் பொதுமக்களுக்கு வழிகாட்டியாக அமையவேண்டும். மனிதனாகப் பிறந்தவன் பொது வாழ்வில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பதற்கு அவர்களின் வாழ்க்கையே எடுத்துக்காட்டாக இருக்கும்.
54. விட்டொழிக்க வேண்டியவைகள்
உங்களுக்கு ஒழுக்கம் ஏற்படவேண்டுமானால் – நீங்கள் மனித்த்தன்மை பெற வேண்டுமானால், சாஸ்திர, புராண சம்பிரதாயங்களிலும், மதங்களிலும் உங்களுக்குள்ள பற்றுதலை, பக்தியை நீங்கள் உடனே விட்டொழியுங்கள். இன்று நடைமுறையிலிருந்து வரும் கடவுளும், மதமும், சாஸ்திரமும், சட்டமும், வற்றின் வழிவந்த சம்பிரதாயமும், உங்களை இழிவுபடுத்தவும், அடிமைப்படுத்தவும், ஆரியர்களால் உண்டாக்கப்பட்டவை.
55. சாதிபேதங்கள் எப்போது ஒழியும்?
சாதப்பேதங்கள் ஒழிவது சட்டத்தினால்தான் முடிய வேண்டுமே ஒழிய, பொதுஜன சம்மதத்தில் என்றால் ஒரு நாளும் முடியவே முடியாது. ஏனெனில், சாதிகாரணமாகப் பாடுபடாமல் – கடவுளையும், மோட்சத்தையும் காட்டி, ஊரார் உழைப்பில் வயிறு வளர்க்கும்படியான சவுகரியம் இருக்கும்போது, பலாத்காரத்துக்கோ, தண்டனைக்கோ அல்லாமல் – எவனாவது சாதி ஒழிய சம்மதிப்பானா என்று கேட்கிறேன்.
56. பேதநிலை இல்லாத ஆட்சி எது?
மனித சமுதாயத்தை அடக்கி ஆளும் ஆட்சி பகுத்தறிவு ஆட்சியாய் இருக்குமானால், அது கண்டிப்பாய் வாழ்வில் பேதநிலை அற்ற ஆட்சியாகத்தான் இருக்கும்.
57. இசுலாத்தின் சிறப்பு
இசுலாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டத்தகாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக்கூடாதவன், குளத்தில் இறங்கக்கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.
58. வேத நூல் இல்லாத திராவிடர்கள்
திராவிடர்களுக்கு வேதம் கிடையாது. இருப்பதாகச் சொல்லப்படுமானால் அது, திராவிடர்களுக்குச் சம்பந்தப்பட்டதில்லை என்றும், திராவிடர்கள் பார்க்கவோ – தெரிந்து கொள்ளவோ கூடியது அல்லவென்றும்தான் சொல்லப்ப்டுமேயொழிய, திராவிடர்களுக்குரிய வேதம் கிடையாது. ‘திராவிடவேதம்’ என்று ஏதாவது சொல்லப்படுமானால், அது திராவிடர்கள் பின்பற்றுகின்ற, நடத்தப்படுகிற தன்மைக்கும், நடப்புக்கும் கட்டுப்பட்டதுமல்ல, பின்பற்றச் செய்வதுமல்ல.
59. சிருஷ்டிதான்…!
சாதிமுறைகள் என்பவை யாவும் இந்து மத்தினுடைய சிருஷ்டியேயாகும். இந்துக்கடவுள்கள் பேராலும், சாஸ்திரங்கள் பேராலுமேதான் அவை நிலைநிறுத்தப்படுகின்றன.
60. மூடத்தன்மை குணம் என்ன?
தனக்குத் தெரியாத்தையும், புரியாத்தையும்பற்றி நம்புதல், பேசுதல், நம்பச்செய்தல் முதலிய மூடத்தன்மை குணம் மனித ஜீவனிடத்தில்தான் அதிகமாய் இருந்துவருகின்றது.
61. சாதி உணர்ச்சி
அறிவுக்கு ஏற்ற சொல் இல்லை; மொழி இல்லை; நூல் இல்லை; சமயமில்லை. இப்போது இருப்பவை எல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்டவை. இவைகளில் எதையும் மாற்றக்கூடாது என்பது குரங்குப் பிடிவாதமேயாகும். மக்களுக்குள் அன்பு செலுத்துவதிலும், மூடநம்பிக்கையோடும் ‘கற்புக்கு’ இருக்கிற நிபந்தனையோடுமே செலுத்தப்பட்டு வருகிறது! இவற்றுள் சாதி உணர்ச்சி வேறு, மக்களுக்குள் புகுந்து வக்கீலுக்கு எப்படிப் புரட்டு, பித்தலாட்டம் அவசியமோ, அதுபோல சாதி உணர்ச்சிக்கும், புரட்டு, பித்தலாட்டம் அவசியமாகி அவைகள் மூலமே காப்பாற்றப்படவேண்டியது ஆகிவிடுகிறது.
62. வீரம்
இசுலாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம் இருக்கின்றது. வீரம் என்றால்இலட்சியத்துக்கு உயிரைவிடத்துணிவது என்பதுதான்.
63.ரிஷிகள்
இந்த ரிஷிகள் சுத்த அனாமதேயங்களாகவே இருக்கிறார்களே; இவர்களைப்பற்றி ஆதாரங்கள் உண்டா என்று தேடினால், அவை அறிவிற்கொவ்வாத ஆபாசக்களஞ்சியங்களாகவே இருக்கின்றன.
‘வச்சிர சூசிப் பிரமாணம்’ என்ற நூலிலுள்ளபடி – கலைக்கோட்டு முனி மான் வயிற்றிலும் கவுசிகர் காதி ராஜாவுக்கும், ஜம்புகர் நரி வயிற்றிலும், கவுதமர் பசு வயிற்றிலும், வால்மீகி வேடனிடத்திலும், அகஸ்தியர் குடத்தினிடத்திலும், வியாசர் செம்படச்சி வயிற்றிலும், வசிஷ்டர் ஊர்வசி என்ற தாசி வயிற்றிலும், கவுடில்யர் விதவை வயிற்றிலும் , நாரதர் வண்ணாத்தி வயிற்றிலும், மதங்கர் சக்கிலிச்சி வயிற்றிலும், மாண்டவியர் தவளை வயிற்றிலும், சசங்கியர் பறைச்சி வயிற்றிலும், காங்கேயர் கழுதை வயிற்றிலும், சவுனகர் நாயின் வயிற்றிலும் பிறந்திருக்கிறார்கள்.
64. சகோதரத் தன்மையுள்ள இசுலாம்
இசுலாம் என்பது ‘சாந்தி, பணிவு, பக்தி’ என்ற பொருள்படும் அரபுச் சொல்; இசுலாம் என்பது, சகோதரத்தன்மை என்பது.100,200 வருடங்களுக்கு முற்பட்ட அகராதிகளைப் பாருங்கள் அரபு வார்த்தையில் சொல்லாமல் தமிழில் – ஒரு கடவுள, உருவமற்ற கடவுள் வழிபாடு, சாந்தி, ஒற்றுமை, பரஸ்பர பணிவு, பக்தி, உடன்பிறப்பு என்ற தன்மைகள் கொண்ட மதம் என்றால் போதும். கடவுள் என்பது திராவிடமொழி; காட்(God) என்பது ஆங்கிலமொழி; அல்லா என்பது அரபுமொழி என்பதல்லாமல், திராவிடர்களுக்கு மாறுபட்ட கடவுள் அல்ல-கொள்கை அல்ல என்பேன். மதங்களை விபூதிப்பூச்சு, நாம்ம், உச்சிக்குடுமிகளைக் க்கொண்டு நிர்ணயிப்பதுபோல், இசுலாத்தை தலைமொட்டை, தாடி, லுங்கி முதலியவைகளைக் கொண்டு நிர்ணயிக்காதீர்கள். இசுலாத்துக்கு எஜமானர்கள் இந்த நாட்டு முஸ்லிம்கள் அல்லர்; இவர்கள் இசுலாத்தின் ஒரு பகுதியினர்; மலையாள மாப்பிள்ளையார் மற்றொரு பகுதியினர்; ஈஜிப்ட்டார் மற்றொரு பகுதியினர்; ஜப்பான், ஜெர்மன், இசுலாமியர்கள் மற்றொரு பகுதியினர்; ஆப்பிர்க்கர், நீக்ரோவர், அபிசீனியர் ஆகிய இசுலாமியர் மற்றொரு பகுதியினர்.
65. இரணியன்
இரணியன ஒரு சுயமரியாதை வீரனேயாவான். இரணியன் கதை ஒரு சுயமரியாதைக் கதையேயாகும்.
மகாபாரத்தை எடுத்துக்கொண்டால் இரணியன் எவ்வளவுதூரம் சாதியை ஒழிக்கப் பாட்பட்டிருக்கிறான் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அவன் தீவிரமாகவே வேலை செய்திருக்கிறான். ‘பார்ப்பனர் எங்கெங்கு இருக்கிறார்களோ அவர்களூடைய வீடுகளை இடித்துத் தள்ளங்கள். கையிலே மண்வெட்டி, பிக்காசுகளுடன் போங்கள். மூக்கைப் பிடித்துக்கொண்டே உட்கார்ந்திருக்கின்றவர்களைக் கண்டால் மண்டையிலேயே அடியுங்கள். செய்கின்ற ஓமங்களை கலைத்துவிடுங்கள்’ என்று கூறி தனது ஆட்களை அனுப்பினான் இரணியன் என்பதாக மகாபாரதம் கூறுகிறது.
66. நன்றியுள்ளவன்
நன்றி விசுவாசமுடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப்பூச்சி முதலிய விலங்குகள ஆவர். அதாவது, மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ்சியும் வாழும் பிராணிகளேயாவர்.
67. காரணம் எதற்காக?
‘எதற்காக கடவுள்’, ‘ஏன் கடவுள்’, ‘எது கடவுள்’ என்கின்ற விளக்கம் அவசியம் ஒவ்வொரு த்ததுவ விசாரணைக்காரனுக்கும் விளங்கியாக வேண்டும். மனிதனுக்கு பகுத்தறிவு இருக்கிறது. அது ஆராய்ச்சிக்காக ஏற்பட்டதே தவிர கண்மூடித்தனமான மிருகத்தன்மைக்கு ஏற்பட்டதல்ல. பகுத்தறிவை மனிதன் தப்பாகப்பயன்படுத்தி, அதிகமான தொல்லையில் மாட்டிக்கொண்டிருக்கிறான். இந்தத்தொல்லைக்குப் பிரகாரமாக்க் கடவுளைச் சிருஷ்டித்துக் கொண்டான். அரசன் ஏன்? குடிகள் ஏன்? ஏழை, பணக்காரன் ஏன்? மேல்சாதி, கீழ்சாதி ஏன்? உழைப்பாளி அடிமையும், சோம்பேறி எஜமான்னும் ஏன்? பிச்சைக்காரன், பிரபு ஏன்?
68. புத்தர் பேசுகிறார்
அன்றைய தினம் சாதியை ஒழிக்கப் பாடுபட்ட புத்தர் தான் ‘கடவுள் இல்லை’ என்று தைரியமகாச் சொன்னார். அவர் அப்படிச் சொன்னாரா, இல்லையா என்று சிலர் வாதம் பேசுவதானாலும் அதை உறுதிப்படுத்தும் தன்மையில் அவர் எதற்கும் அஞ்சாமல் அடுத்தப்படியாக – ஆத்மா என்பதாக ஒன்று கிடையவே கிடையாது. ஆத்மா என்று ஒன்று இல்லவே இல்லை என்று கூறியிருக்கிறார். அதனால் அவருக்கு ‘அனாத்மன்’ என்றும் பெயர். ஆத்மா இல்லை என்படை இலகுவில் யாரும் ஆதரிப்பவர்கள் இருக்கமுடியாது. ஒரு கால் திராவிடர் கழகமும், கம்யூனிஸ்ட் கட்சியும் வேண்டுமானால் ஆதரிப்பதாய் இருந்தாலும்கூட மற்றவர்கள் ஆதரிக்கமாட்டார்கள்.
69. அறிவுள்ள கருத்து
வகுப்புவாரிப் பிரிதிநிதித்துவம் என்பது வகுப்பு நீதி வழங்குதல் என்ற கருத்தைக கொண்டதே தவிர, தேசியத்துக்கு விரோதமானதோ, சுதந்திரத்துக்கு எதிரானதொ, விடுதலையைக் கெடுப்பதோ அல்ல என்பதே அறிவுள்ளவர் கருத்தாகும்.
70. இளைஞர்கள்
இளைஞர்களைப் போற்றுகிறேன் – விசுவாசிக்கிறேன். வாலிபர்களுக்கு வெறும் உற்சாகம், துணிவு, தியாகப்பற்று இருந்தால் மட்டும் போதாது. நன்மை – தீமை, சாத்தியம் – அசாத்தியம் இவற்றை ஆழ்ந்து பார்க்கும் தன்மை வேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் பொதுவாகப் பயன்படுவார்கள், இல்லாவிட்டால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட சுயநல சூழ்ச்சிக்கு இரையாகிவிடுவார்கள்.
71. பூச்சாண்டி காட்டும் மதம்
கடவுள் என்பது ஒரு விளையாட்டுச் சாமான். சுவர்க்கம், மோட்சம் என்பவை தின்பாண்டங்கள், நரகம் என்பது பூச்சாண்டி. இம்மாதிரிக் கற்பனைகள் எல்ல மதத்திலும் உண்டு.
72. கோழைத்தனத்திற்கு மற்றொரு பெயர் அகிம்சை
அகிம்சை என்பதைப்பற்றிக் கேட்டால் அது கோழைத்தனம் என்பேன். பழங்காலத்தில் அது பொருத்தமாக இருந்திருக்கலாம். அதை இப்போது ஏற்று அதன்படி நடப்பதென்பது சாத்தியம் இல்லை. அகிம்சை பிரயோசனப்படாது. இப்போது ஏதோ மற்றவர்களைக கோழையாக்கி அடக்கித் தாங்கள் வாழ – தந்திரக்கார்ர்கள் அகிம்சை என்று பேசுகிறார்கள்.
73. புராணம் என்றால்!
‘புராணம்’ என்ற சொல்லுக்குப் பழங்கதை என்பது பொருள். ‘புரானா’ என்றால் பழையது என்பதுதான் அகராதிப்பொருள். இந்தி மொழியிலும், வடமொழியிலும் நூதனம் – நூததமானது என்றசொற்களுக்கு புதியது, புதியவை என்பதுதான் பொருள். அதுபோலவே புராதனம் – புராதனமானது என்ற சொற்களுக்குப் பழையது, பழமையானது என்பதுதான் பொருளாகும். இந்த கருத்தில்தான் நமது புராணங்களெல்லாம் ஆக்கப்பட்டிருக்கின்றன. நமது புராணங்கள் எல்லாமுமே சுமார் 2000 அல்லது 3000 ஆண்டுகளுக்கு உள்ளாகக் கற்பிக்கப்பட்டவைகளேயாகும். அவை பெரிதும் ந்மது கடவுள்களைப்பற்றியவையாகும்.
74. கூட்டுறவு
எனது முடிவான லட்சியம் உச்சஸ்தானம் பெற்ற உயர் கூட்டுறவு வாழ்வு முனைறயாகத் தானிருக்கும். கூட்டுறவு என்கிற கொள்கையானது உயரிய சரியான முறையில் நம் நாட்டில் ஏற்பட்டுவிட்டால் ஜனசமுகமானது கவலையற்று – சஞ்சலமற்று நாளைக்கு என்ன செய்வது என்று ஏங்கித் தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலைமையற்று, நிம்மதியாக – சாந்தியாக திருப்தியுடன் – குதூகலமாக வாழ வழி ஏற்படும்.
75. சத்து இல்லாத செடிகள்
நாம் செத்த பிறகு ஒன்றுமில்லை. நாம் வைத்த பெயர் செத்துப் போய்விட்டது என்பதேயாகும். மரம், செடி, கொடி செத்துப்போயிற்று என்கிறோம். அதாவது, இவைகளுக்கு சத்து போய்விட்டது என்பதாகும்.
76. பிரித்தாளும் சூழல்
எப்போது ஒருவனுக்கு, அவனுக்கென்று ஒரு மதம், ஒரு சாதி, தனி வகுப்பு எனபதாகப் பிரிக்கப்பட்டதோ, பின்பு அவன் தனது மதம, சாதி, வகுப்புக்கு என்று உரிமை கேட்பதில் என்ன தப்பிதம், அயோக்கியத்தனம் இருக்கமுடியும்?
77. பழமையை விட்டொழி
தமிழில் ஆரியம் புகுந்ததால்தான், மற்ற மக்களெல்லாம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் கப்பலோட்டி வாணிபம் நடத்திய தமிழர் மரபில் – இன்று ஒரு நியூட்டன் தோன்ற முடியவில்லை, ஒரு எடிசன் தோன்ற முடியவில்லை, ஒரு மார்க்கோனி தோன்ற முடியவில்லை என்பதை அறிந்துகொள்ள வேண்டும். பழமையிலுள்ள மோகத்தை முதலில் விட்டொழிக்கவேண்டும். தமிழைப் புதுமொழியாக்க சகல முயற்சிகளும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
78.சமுதாயக் கொள்கை
‘மதம்’ இல்லாமல் மக்கள் வாழ முடியாது. அதாவது நான் சொல்லும் மதம், கடவுளுக்கும், மக்களுக்கும் சம்பந்தமும் மோட்சமும் விதியும், மன்னிப்பும் சமதானமும் மேலுலகத்தில் அளிப்பது என்கிற மதம் அல்ல. மற்றெதுவென்றால், மனிதனுக்கு மரியாதையாய் (பணிவாய்) அன்பாய், பக்தியாய், சாந்தியாய், சகோதரத்தன்மையாய், ஒற்றுமையாய், ஒழுக்கமாய், உதவியாய் வாழும் கொள்கையை – உங்களுக்குப் புரிவதற்காக மதம் என்ற பழக்கமான வார்த்தையில் கூறுகிறேன். இதை சமுதாயக்கொள்கை என்று எனக்கு இஷ்டம். இதை நீங்கள் மதம் என்று சொல்லவேண்டும் என்றாலும் ஆட்சேபிக்கவில்லை. இப்படிப்பட்ட ‘மதம்’ இல்லாமல் மனித சமுதாயத்தில் வாழ்வது சங்கடப்படும்.
79. கீழ்மைப்படுத்தும் பகுத்தறிவு
பகுத்தறிவில்லாத எந்த ஜீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தை கீழ்மைப்படுத்துவதில்லை. தன் இனத்தின் உழைப்பாலே வாழ்வதில்லை. தன் இனத்தின் மீது சவாரி செய்வதில்லை.
பகுத்தறிவுள்ள மனிதன் தன் இனத்தை கீழ்மைப்படுத்துகிறான். வாகனாமாய் உபயோகப்படுத்துகிறான். சோம்பேறியாயிருந்து தன் குலத்தின் உழைப்பிலேயே வாழ்கிறான். பாடுபட ஒரு கூட்டமாகவும், பயன் அனுபவிக்க இன்னொரு கூட்டமாகும் பிரித்துக் கொள்கிறான்.
உதாரணமாக நாய், கழுதை, பன்றி என்கிற இழிவான மிருக்க்கூட்டத்தில், பார்ப்பன சாதி, பறைசாதி, நாயுடு சாதி, முதலிய சாதிகள் என்கிற பிரிவுகள் கிடையாது. ஆனால் மனித வர்க்கத்தில் தன் இனத்தையே பிரித்து இழிவுபடுத்தப்படுகின்றது.
80. சுற்றுப்புற சார்பு
எத்தனை நாளைக்கு இருப்பது, வாழ்வது என்பன சுற்றுப்பறச சார்புப்படிதான். மனதனும் அப்படித்தான், வயிற்றிலே இறப்பதுமுண்டு; பிறந்ததும் இறப்பதுமுண்டு, பள்ளியில் படிக்கும்போதும் இறப்பான். திருமணமான பிறகும் இறப்பான். இப்படி எந்தச் சமயத்திலும் மனிதன் சாகிறான். சுற்றுப்புறச் சார்ப்புப்படி சிற்சில சிகிச்சைகள் செய்வதை முன்னிட்டு விபத்துக்களைத் தவிர்ப்பதுமுண்டு. வளப்பான முறையோடிருந்ததால் இந்தக் குறைகள் அதிகமில்லை.
81. சிந்திக்கும் தன்மை
‘பகுத்தறிவு’ என்றால் என்ன? ஜீவப்பிராணிகளின் சிந்தனா சக்தியும், சிந்திப்பின் உணர்ச்சியுந்தான் ‘அறிவு’ என்று சொல்லப்படுகிறது. அச்சிந்திக்கும் தன்மையின் கூர்மையைப் பகுத்தறிவு என்று சொல்ல்லாம்.
ஆனால் அப்பகுத்தறிவைப் பெரிதும் மனிதனுடைய சிந்திக்கும் தன்மைக்கும், சிந்திப்பின் கூர்மைக்குமே குறிப்பிட்டுச் சொல்லப்படுகின்றது.
அறிவின் மேலான தன்மைக்குப் பகுத்தறிவு என்று பெயர் கொடுத்து அது மனிதனுக்கே உரித்தானது என்றும், அதனாலேயே மனிதன் ஜீவப் பிராணிகளிலெல்லாம் உயர்ந்தவன் என்றும் சொல்லுகிறார்கள்.
82. ஆசைக்கு அடிமையாகாதே!
செல்வம் எவ்வளவுதான் கோடிக்கணக்காக இருந்தாலும் எண்ணிக்கைக்கு எப்படி ஒரு அளவு கிடையாதோ அது போல், எவ்வளவு பெருகினாலும், மேலும் சொத்து சேரவேண்டும் என்கின்ற ஆசையிலிருந்து விலக முடியாதவனாகி, போதவில்லையே, போதவில்லையே என்கின்ற தரித்திரத்ததிற்கு அடிமையாகிறான். இந்தக் குணங்களை பகுத்தறிவில்லாத ஜீவராசிகள் என்பவைகளிடம் காண முடியாது.
83. உயர்ந்தவன்
ஓட்டல்காரன்- அன்னதானப் பிரபு ஆவானா? சம்பள உபாத்தியார் – குருநாதனாவானா? தாசி – காதலியாவாளா? என்பது போலத்தான் தனது நலனுக்கு தனது பொறுப்புக்காக் காரியம் செய்யும் எவனுடைய காரியம் எப்படிப்பட்டதாயினும் அது சாதாரண ஜீவ-சுபாவமே ஒழிய போற்றக்கூடயதாகாது. அப்படியில்லாத தன்மை, செய்கை, வாழ்க்கை கொண்ட மனிதர்கள் – அதாவது தன்னைப்பற்றிய கவலையில்லாமல், பிறருக்கு என்று தன்னை ஒப்படைத்துக்கொண்டு தொண்டாற்றுகிறவன் மதிக்கப்பபட்டே தீருவான். அத்தொண்டால் பாதகமடையும் தனிப்பட்ட வகுப்புகள், கும்பல்கள் அவனை மதிக்காமல் இருக்கலாம்; அவமதிக்கலாம், அது பொதுவாக மதிக்காததாகாது.
84. இதுவா ஜனநாயக நாடு?
எல்லாத்துறையிலும், எல்லாத்தர மக்களிடத்திலும் பொய், புரட்டு, நாணயக்குறைவு, ஒழுக்கக் குறைவு, பலாத்காரம், நாசவேலை, கொள்ளை, மான வெட்கத்தைச் சிறிதுகூட லட்சியம் செய்யாமல் எல்லாவித அயோக்கியத்தனத்திற்கும் மக்கள் துணிவது ஆகிய காரியங்கள் நாளுக்கு நாள வளர்ந்தவண்ணமாகத்தானே இருந்து வருகின்றன. இந்த நிலையில் நமது நாட்டை நாமே நாம் ‘ஜனநாயக நாடு’ என்று சொல்லிக் கொள்ள (த்த்துவத்தில்) வெட்கப்பட வேண்டியதாகத்தானே இருக்கிறது?
85. ஒப்பரவு
வாழ்க்கை நடத்துவதும், வியாபாரம் நடத்துவது போன்ற ஒரு செயல்தான். வியாபாரத்திற்கு முதலும், உழைப்பும் எப்படித் தேவையோ அதேபோன்று வாழ்க்கைக்கு ஒரு ஆணும், பெண்ணும் அவர்களது இரண்டறக் கலந்த ஒப்புரவும் தேவையாய் இருக்கிறது.
86. இழிவுக்கு மருத்துவம்
தோழர்களே! நமது வியாதி – நோய் (சூத்திர்ர்கள், வேசிமக்கள் – என்ற நோய்) பெரிது, மிக மிகப்பெரிது, இது (Cancer) புற்று, தொழுநோய் போன்றது; வெகு நாளாய் வாட்டி வதைக்கும் வெகுநாளைய நோய். இதற்கு ஒரே ஒரு மருந்துதான் – அது இசுலாம்தான். இதைத்தவிர வேறு மருந்து இல்லை. இது இல்லாவிட்டால் வேதனை படவேண்டியதுதான். தூக்கமருந்தும், போதை மருந்தும் கொண்டு, நோய் இம்சை தெரியாமல் நாமும் பிணம் போல் கிடக்க வேண்டியதுதான். நோய் தீர்ந்து எழுந்து நடக்க, இன்றைய நிலையில் இசுலாம் (இந்து மதத்தை விடுவது என்னும்) மருந்துதான். இதுதான் நாடு கொடுக்கும், வீரம் கொடுக்கும், நிமிர்ந்து நடக்கச் செய்யும் மருந்தாகும்.
87. சுயநலமில்லாத உதவி
தியாகம் என்றால் தமிழ் அகராதியில் கொடுப்பது, கொடை, (உரிமையை)விடுதல், விட்டுக்கொடுத்தல், உபகாரம் என்பன போன்ற பொருள்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன.
ஆங்கில அகராதிகளில் ‘சாக்ரிஃபைஸ்’ (Sacrifice) என்ற சொல்லுக்கு பலி, தியாகம், பரித்தியாகம் என்ற விளக்கங்க்ள் காணப்படுகின்றன. இவை எப்படி இருந்தாலும் தியாகம் என்பதற்குச் சுயநலம் இல்லாமல் தொண்டாற்றுதல், கஷ்டநஷ்டம் அடைதலோடு தானே பெரிய காரியங்களைச் சாதித்தல், பரிகரிக்க முடியாத துன்பம், தொல்லையை மனப்பூர்வமாக ஏற்றல் என்பதைத்தான் பொருளாக்க் கொண்டு மக்கள் அச்சொல்லைப் பயன்படுத்துகிறார்கள் என்று கருதிக்கொண்டு அந்தப் பொருள்களைப்பற்றி சிந்திப்போம்.
88. ஆரியர்களின் ஆதாரமே கோயில்
நம் அரசர்கள் எல்லோரும் ஆரியர்களுக்கு அடிமைகளாக இருந்து, அவர்கள் ஆதிக்கத்துக்கு வேண்டிய காரியங்களை நிரந்திரமாகச் செய்து, அவர்களுக்கு உதவி செய்து வந்திருக்கிறார்கள். இந்த காஞ்சிநாட்டை எடுத்துக்கொண்டாலும் சரி, – இந்த நாட்டிலே இருக்கின்ற கோயில்கள், குளங்கள், ஸ்தல புராணங்கள் முதலியவைகளை எல்லாம் நீங்கள் பார்த்தால் சகலமும் ஆரியர்களுக்கு ஆதரவாக இருக்குமே தவிர திராவிடர்களுடைய மனித்த்தன்மைக்கு, மான உணர்ச்சிக்கு, பகுத்தறிவுக்கு ஏற்றதாக இருக்காது. அப்படிக் காண்பது அருமையாக இருக்கும்.
89. மனத்திருப்தி
எவ்வளவு இம்சையும், மிடிமையையும் அனுபவித்துக கொண்டாவது வேறு ஒரு காரியத்தைச் செய்ய முன்வருகிறான் என்றால், அப்போது வேறு ஏதோ ஒரு சுயநல உணர்ச்சி இருக்கிறது; அதற்காகத்தான் இந்தக்காரியத்தில் ஈடுபட்டிருக்கிறான் என்றுதானே அறியக்கிடக்கிறது?
சுயநலம் இல்லாவிட்டால் மனிதன் ஒரு ஜீவனாகவே இருக்கமுடியாது. ஆகவே, இங்கு சுயநலம் என்றால் என்ன என்பது தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டியதாகும்.
இது ‘தத்துவ’ ஆராய்ச்சி அல்ல – அறிவு ஆராய்ச்சி; மக்களை மயக்கத்திலிருந்து, ஏமாற்றத்திலிருந்து தெளிவிக்கும் ஆராய்ச்சியே ஆகும். இதை ஒரு வரியில் ஆச்சாரியார் சொல்லிவிட்டார் என்றாலும், விளக்கினால் மக்களுக்கு இருக்கும் அகம்பாவமான தியாக்கருத்து மாற்றமடையலாம். அதாவது, மனிதனுக்குச் சுயநலம் என்பது அவன் மனதுக்கு திருப்தி ஏற்படுவதும், இன்பமளிப்பதுமேயாகும். சுயநல காரியம் என்பது ‘தியாகமானாலும், பாக்கியமானாலும்’ செய்பவனுக்கு மனத்திருப்தி ஏற்படுவதுதான். அதுதான் தூக்குக் கயிற்றைக் கழுத்தில் தானாக மாட்டிக்கொள்ளுவதானாலும், அவனுக்கு இன்பம் பயப்பதாம். மனித வாழ்வில் வெற்றி என்னவென்றால் அவனவன் மனத்திருப்தியோடு வாழ்வதுதான்.
90.பிரார்த்தனை நேரம்
பிரார்த்தனையில் செலவாகும் நேரத்தைப்போல் மனிதன் வீணாய்க் கழிக்கும் நேரம் வேறு இல்லை என்றே சொல்லுவோம். சில சோம்பேறிகள் பிழைப்பதற்காக மக்கள் புத்தி எவ்வளவு கெடுகிறது? மக்களுக்கு அயோக்கியத்தனமானவைகளைச் செய்ய எவ்வளவு தைரியம் ஏற்பட்டுவிடுகிறது? பொருள்கள் எவ்வளவு நாசமாகின்றுன என்பவைகளை எல்லாம் சிந்தித்துப் பார்த்தால் பிரார்த்தனை என்பது ஒரு புரட்டான காரியம் என்றோ, பயன்றற காரியம் என்றோ, அறிவீனமான காரியம் என்றோ விளங்காமல் போகாது.
91. தஞ்சம்
நான் ஒரு புரட்சிகரமான சமுதாய சீர்திருத்தவாதி, அதற்கே என் உடல், பொருள்களை ஒப்படைத்துவிட்து, ஆவியையும் ஒப்படைக்க வாய்ப்புக்காக்க் காத்திருக்கிறேன். அதோடு, கூடவே என் தொண்டுக்கு அறவையும், ஆராய்ச்சியையுமே அட்ப்படையாக்க் கொண்டு இருக்கிறேனேயல்லாமல் மதவாதிகள், மத்தலைவர்கள் போல் வெறும் நம்பிக்கையையும், மூடமக்கள் மரியாதையையும், சர்க்காரிடம் தஞ்சமடைவதையும் அல்ல.
92. அரிதாரம் -அதிகாரம்
நெற்றிக்குறி என்பது, அதிகாரத்தாலும், செல்வாக்காலும் ஏற்பட்டதேயொழிய, அதற்குச் சட்டமோ, சாஸ்திரமோ, நிர்பந்தமோ கிடையாது.
93. திராவிடம்
மதம் சம்பந்தமான புராண இதிகாசங்கள் சம்பந்தப்பட்டவரை தமிழ்நாடு(திராவிடநாடு) தவிர்த்த இந்திய நாடு, திராவிட நாட்டிறகு எதிரி நாடாகவும், அந்த இந்திய மக்கள் (ஆரியவர்த்தம், ஆரிய மக்கள்) திராவிட மக்களுக்கு எதிரிகளாகவும் இருந்து வந்ததாகவே அறியக் கிடக்கின்றது.
94. இலக்கு உள்ள இலக்கியம்
இலக்கியம் எதற்காக? இலக்கியம் எப்படி இருக்க வேண்டும்? எப்படிப்பட்டதை இலக்கியம் என்று சொல்லலாம்? அவை எதற்காக இருக்க வேண்டும்? என்பது பற்றிச் சிந்தித்தால், மனிதனின் உயிர் வாழ்க்கைக்கு மட்டும் அல்லாமல் மனித சமுதாய வளர்ச்சிக்கும் ஏற்றதாக இருக்கவேண்டும் என்பது எனது கருத்து.
95. நாமா தமிழர்கள்?
நம் கடவுள் – சாதி காப்பாற்றும் கடவுள
நம் மதம் – சாதி காப்பாற்றும் மதம்
நம் அரசாங்கம் – சாதி காப்பாற்றும் அரசாங்கம்
நம் இலக்கியம் – சாதி காப்பாற்றும் இலக்கியம்
நம் மொழி – சாதி காப்பாற்றும் மொழி
96. திராவிடர்கள் மதம்
இசுலாம் என்றால் முகம்மது நபிகள் மதம் என்றோ, இங்கு ‘லுங்கி’ கட்டுக்கொண்டு, அளந்து தாடி வைத்துகொண்டிருக்கும் சாயபு, ராவுத்தர், மரைக்காயர், மாப்பிள்ளை என்கின்றவர்கள் மதம் என்றோ கருதிவிடாதீர்கள். திராவிடர்கள் மதம் – முகமதி நபிக்கு முன்பு, கிறிஸ்துநாதருக்கு முன்பு, புத்தமகானுக்கு முன்பு, ஆரியர்களுக்கு, கிருஷ்ணன், இராமன், சிவன், விஷ்ணுக்களுக்கு முன்பு திராவிடர்களுக்கு இருந்த மதமாகும்.
97. தலித்
பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானர், குலாபிமானம் என்பவைகளின் உட்கருத்தை ஊன்றிக் கவனித்தால் தாழ்த்தப்பட்ட மக்களின் ஈடேறும் வழி தானாகவே தோன்றும். எப்படியெனில் குறிப்பிட்ட எந்தவிதமான அபிமானத்தை எடுத்துக்கொண்ட போதிலும், அனேகமாக அந்த அபிமானத்தின் பேரால் ஏமாற்றுகறே நடைபெறுகின்றன. தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவராக உள்ளவுர்கள் அவைகளை ஊன்றி கவனித்து, அலசிப்பபார்த்து, உரைகல்லில் வைத்து உரசிப்பார்க்க வேண்டும். அவ்வாறு அவர்கள் பார்ப்பார்களேயானால், வாஸ்தவத்திலே தாழ்த்தப்பட்டவர்கள் ஈடேறும் வழியை எளிதில் கண்டுகொள்வதற்கு ஏதுகரமாகவிருக்கும. மக்களதுமுன்னேற்றத்திற்குகத் தடைக்கல்லாகவிர்க்கும் காரியங்கள் எதுவுண்டோ அவைகளைத் தகர்த்தெறிய வேண்டும். வீணாக – ஆடம்பரமாக நாங்களும் தலைர்ள்தான் என்று வீரம் பேசிக்கொள்வதில் பயனில்லை. நமக்குப் பகுத்தறிவு இருக்கிறது. அப்பகுத்தறிவின் பயனால், இடையூறாக இருக்கும் காரியங்களை மனோதிடத்துடன் தகர்த்தெறிய முன் வரவேண்டும். அன்றே முன்னேற ஈடேற வழியேற்படுமென்பதில் சிறிதும் அய்யமில்லை.
98. சீர்திருத்தம் தேவை
ஒரு பாஷையோ, ஒரு வடிவமோ அல்லது வேறு பல விஷயமோ எவ்வளவு பழையது, தெய்வீகத்த தன்மை கொண்டது என்று சொல்லிக் கொள்ளுகின்றோமோ, அவ்வளவுக்கவ்வளவு அவற்றில் சீர்திருத்த வேண்டிய அவசியமிருக்கின்றது என்பது அதன் உண்மைத் தத்துவமாகும்.
99. பொதுவாழ்வில் நாணயம்
நான் – எனக்கு ஞாபகமிருக்கிறவரையில் என்னுடைய 10 – வது வயதிலிருந்தே நாத்திகன். சாதி, சமயச்சடங்கு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில்கூட மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத் தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்புக்கொடுத்தவனும் அல்லேன். பணம், காசு, பண்டம் முதலியவைகளில் என்க்கப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தையாவது காட்டியிருப்பேனே யொழிய, நாணயக்குறைவையோ, நம்பிக்கத் துரோகத்தையோ, காட்டியிருக்கமாட்டேன். யாரையாவது ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத்துறையில் பொய் பேசி இருந்தாலும், பொதுவாழ்வுத் துறையில் பொய்யையோ, மனதறிந்து மாற்றக்கருத்தையோ வெளியிட்டிருக்க மாட்டேன்.
100. சுயராஜ்யம் எங்கே?
சுதந்திரம் பெற்றுள்ள எந்த நாட்டிலாவது – பார்ப்பான், பறையன் என்று இருக்க பார்க்கிறீர்களா? வரலாற்று ஏடுகளிலாவது கண்டிருக்கிறீர்களா? மேல்சாதி முறையும், கீழ்சாதி முறையும் மடையர்களும், முட்டாள்களும், மான – ஈனமற்றவர்களும், காட்டுமிராண்டி கால மக்களும், மிருகப்பிராய மக்களும் வாழும் நாடுகளிலன்றோ இவை இருக்கக் கடமைப்பட்டவை! அப்படியிருக்க, இந்த ஞானபூமியில், பாரதமாதாவின் கைவிலங்கும், கால்விலங்கும், அறுக்கப்பட்டு அவள் ஆனந்த கூத்தாடும் இந்தக் காலத்தில் என்னத்துக்காகப் பறையன் இன்னும் இருக்கின்றான்? என்னத்துக்காகப் பார்ப்பான் இருக்கின்றான்?
101. காலித்தனம் அடங்கிவிடும்
இப்போது எல்லா சாதிக்கும் படிப்பு ஏற்படுத்தப்பட்டபடியால், இனி எல்லாச்சாதி, பெரு வகுப்புகள, எல்லா மதங்க்ளுக்கும் பிரிவினை விகிதம் ஏற்படுத்தி விட்டுவிட்டால், காலித்தனங்கள் கண்டிப்பாய் அடங்கிவிடும்.
102. ஆதாரம் இல்லாத புராணம்
சரித்திரத்தை – புராணத்தை எடுத்துக்கொண்டால் பார்ப்பனர்கள் எவனையும் வாழவைத்ததாக ஆதாரமே இல்லை. மனிதனுக்கு எவ்வளவுதான் பேராசை இருந்தாலும் ஆசை, நிராசையானால் பின்விளைவு என்ன என்பதைப் பற்றிய கவலை இருக்கவேண்டும்.
103. உள்ளதை மூடும் சூரியன்
சூத்திரனுக்கு நாகம் செய்யும் உரிமை கிடையாது. யாகத்தை வெறுப்பவன் சூத்திரன். ஆகவே, யாகத்தை வெறுக்கும் திராவிடராகிய நாம் சூரிய சாஸ்திரப்படி சூத்திரர்தான். ஆரியன் ஏது? சூத்திரன் ஏது? என்று நம்மைக்கேட்கிறார்கள் சில அப்பாவிமக்கள். சட்டம் கூறுமா சூத்திரன் இல்லை என்று? சூத்திரன், பிராமணன் இல்லையென்றால், கோயிலில் மணி அடிக்கும் தொழில் ஒரே சாதிக்காரன் கையில் வசம் இருக்கக் காரணம் என்ன? கோயில் அர்ச்சகர்கள் யார்? அவர்கள் ஏன் சமஸ்கிருதம் ஓதுகிறார்கள்? சமஸ்கிருதம்தான் தேவபாஷை என்று ஆரிய சாஸ்திரம் கூறி இருப்பதை நீ அறிவாயா? திடுதிடு என்று நான்கு சாதியாரும் கோவிலுக்கள் போவோம்.’சற்று இருங்கள்’ என்று கூறி பிராமணத் தோழன் உங்களைத் தாண்டிக்கொண்டு மூலஸ்தானத்திற்கு போய்விடுகிறானா, இல்லையா என்று பாருங்களேன்! இதைப்பார்த்த பிறகும் எந்தத்தோழனாவது பிராமணன், சூத்திரன் இல்லை என்று கூறுவானாயின் – அவன் அறிவு மலையேறிவிட்டது என்றுதானே கூறவேண்டும்? ஏன் இந்த உயர்வு – தாழ்வு கொடுமையை இன்னும் மூடிவைக்கப் பார்க்கிறீர்கள். உள்ளதை மூடிவைத்தால் அது புரை ஓட ஆரம்பித்துவிடும் என்பதை நீங்கள் அறியீரோ?
104. ‘கலவி’ சொல்லும் உறவு
மக்கள் சமுகத்தில் சொந்தம் பாராட்டவும், சொத்துகள் அனுபவிக்கவும், கலவிகள் செய்யவும் உறவுமுறை என்பதாக ஒரு நியதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இவைகளையெல்லாம் யோசிக்கும்போது கலவிமுறை என்பதும் சொத்துமுறை என்பதும் பெரும்பாலும் தேசாச்சாரம், மதாச்சாரம் அல்லது சாதியாச்சாரம், பழக்க வழக்கம் முதலியவற்றைப் பொறுத்து இருக்கின்றனவே தவிர, வேறு நியாயமான -நிர்ப்பந்தமான உலகமெங்கும் ஒரே வழி முறையான, காரண காரியமான முறை கிடையவே கிடையாது என்றுதான் யூகிக்க வேண்டியதாக இருக்கிறது. இது விஷயத்தில் மற்ற உயிர்களின் இயற்கைச் சுபாவங்களும் எவ்வித வரையறைக்கத் கட்டுப்பட்டதாகவும் காணமுடியவில்லை. நமது பழங்காலப் புராணங்களைப் பார்த்தால், தான் பெற்ற மக்களையும், தன்னை ஈன்ற தாயையும் புணர்ந்த கதைகள் பல இருக்கின்றன. குருவின் மனைவி, சகோதரன் மனைவி ஆகியவர்களை கலவி செய்வது குற்றமாக்க கருதப்படவில்லை. சில இடங்களில் பிராமணர்களுடன் கலவி செய்வதைப் பிசகென்று கருதுவதில்லை. கடவுள்கள் ‘பக்தப்’ பெண்களிடம் கலவி செய்த கதைகள் அனந்தம்.
ஆகவே, இவ்விஷயங்களில் இன்னதுதான் சரி, இன்னதுதான் தவறு என்று குறிப்பிடுவதற்கு இல்லாமல் இருந்து வருகிறது. ஆனாலும் கலவிக்கான வைத்திய முறைப்படியம், தேக த்த்துவ முறைப்படியும் சில முறைகள் கற்பிக்கப்படிருப்பதைக் குற்றமென்று சொல்ல இதுவரை எவரும் முறபடவில்லை. ஆதலால், இதை பகுத்தறிவுள்ள மனிதன் ஒப்புக்கொண்டாகவே வேண்டும் என்றும் சொல்லலாம்.
என்றாலும், கலவியைப் பற்றிய காரியங்களுக்குப் பாவம், புண்ணியம், கடவுள் தண்டனை, மானம என்பவைகள் பொருத்தம் ஆகும்படியாக எவ்வித – குறிப்பிட்ட ஒரே மாதிரியான முறையும் கண்டுபிடிக்க முடயாமலிருந்து வருகிறதென்பது மேற்கண்ட விஷயங்களால் கருதவேண்டியிருக்கிறது.
இந்த உறவுமுறை சம்பந்தம், கலவி சம்பந்தம் மாத்திரமில்லாமல் மற்றும் மனித ஒழுக்க சம்பந்தமான பல காரியங்களிலும், பாவ புண்ணியம் நிர்ணயிக்கவோ, நன்மை-தீமை நிர்ணயிக்கவோ முடியாமல் – இதுபோலவே தேசத்துக்கு ஒரு முறை, மதத்துக்கு ஒரு தினுசு, வகுப்புக்கு ஒரு மார்க்கம், சாதிக்கு ஒரு மார்க்கம் என்பதாகத்தான் இருந்து வருகிறது.
105. நெற்றிக்குறியின் பொருள்
ஒரு மனிதன்- முதலாவதாகத் தனது நெற்றியை சுத்தமாக வைத்துகொள்ளும்படியான அறிவில்லாத மனிதன் -எப்படிச் சமதர்மத்திற்கேற்ற அறிவுடையவனாக்க் கருதப்படமுடியும்? அறிவின்மை என்பதைக் காட்டுவதுதானே நெற்றிக்குறி! நெற்றிக்குறி என்றால் மூளைக்குறி என்றுதானே பொருள்?
நான் நெற்றிக்குறி என்று சொல்லுவதில் குறி மாத்திரமல்ல; அவற்றுள் அடங்கியிருக்கும் த்த்துவங்களையே குறிகொண்டு சொல்லுகிறேன். அதாவது மத சம்பந்தமான முட்டாள்தனம் மூடநம்பிக்கைகள் யாவற்றையும் கசக்கிப் பிழிந்து, காய்ச்சிச்சுண்ட வைத்து இறக்கிய சத்துக்கள்தான் நெற்றிக்குறி! அதற்கு வேறு பொருள் என்ன சொல்லமுடியும்?
106. அறிவை விற்று…
நமக்கு அறிவு, மானம் இல்லை; அவைகளை விற்று வயிறு வளர்க்கிறோம்.; அதற்கேற்ற சந்தர்ப்பங்களை உண்டாக்குகிறோம். இவையெல்லாம் – இருக்கிறவரையில் சாதி போகும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
107. பொருளாதார சமதர்மம்
மதத்துக்கும், சாதிக்கும் பெயர்போன இந்நாட்டு மக்களுக்கு – கல்வி அறிவற்று, மூட நம்பிக்கையில் ஆழ்த்தி வைக்கப்படிருக்கும் இந்த நாட்டுப் பாமர மக்களுக்கு – பிறவிப்பேதம் நீக்கப்படாதவரை எப்படிப்பட்ட பொருளாதார சமதர்ம்மும் கடுகளவு மாற்றத்தையும் உண்டாக்கிவிடாது.
108. நம் நாடு
மற்ற நாட்டிலெல்லாம் அறிவுக்குத்தான் மதிப்பு. அறிவைத்தான் நம்புவான். அறிவைத்தான் ஆதாரமாக்க் கொள்வான். இந்த நாட்டிலோ குப்பைக்கூளங்கள், சாத்திர சம்பிரதாயங்கள், கடவுள், மதம் இலைகளைத்தான் நம்புகிறான்.
109. சோஷியல் சர்விஸ் எது?
சாதாரணமாக நமக்கு ஒருவன் ஒரு பொருளைக்கொடுத்தால் பேசாமல் வாங்கிக்கொள்கிறோம். ஆனால், மேல்நாட்டுக்காரன் அப்படியல்ல. ஒருவன் ஒருவனுக்கு ஒன்று கொடுத்தாலோ, சிறு உதவி செய்தாலோ, ‘நன்றி’ என்று சொல்வான். இப்போதுதான் நாம் வெள்ளைக்காரனைப் பார்த்துப் பழகி இருக்கின்றோம். சமுதாயத்தொண்டு, ‘சோஷியல்’ சர்விஸ் என்பது மேல்நாட்டில்தான் உண்மையாகவே நடக்கின்றது
110. தன்னல மறுப்பே தியாகம்.
தமிழ்நாடும், தமிழனும் தப்பிப் பிழைத்து விடுதலை பெறவேண்டுமானால் இந்தியக் கூட்டாட்சி என்கின்ற பார்ப்பன ஏகபோக சர்வாதிகார ஆட்சியலிருந்து விலகி, தமிழ்நாட்டைச் சுதந்திரத் தமிழ்நாடாக ஆக்கிக்கொண்டாலன்றி, வேறு எக்காரணத்தாலும் எக்கிளர்ச்சியாலும் முடியவே முடியாது என்பதைத் தமிழ் மக்கள் உணர வேண்டுமாய் வேண்டிக்கொள்கிறேன். தியாகம் என்பது சிறைத்தண்டனை அனுபவிப்பதுதான் என்று பலர் கருதிக்கொண்டிருக்கிறார்கள். தியாகம் என்பது தன்னலமறுப்பு என்ற பொருளைக் கொண்டதாகும்.
தன்னல மறுப்பு என்பது, தனது உயிரைப் பலிகொடுப்பது என்பதை இறுதியாகக் கொண்டதாகும்.
இப்படிப்பட்ட தன்னல மறுப்புகொண்ட ஒரு ஆயிரம் வீர்ர்கள் முன்வந்தால்தான் தமிழ்நாடு சுதந்திரத் தமிழ்நாடு ஆகமுடியும்.
இளைஞர்கள் இதை நல்லபடி சிந்தித்து முடிவு செய்துகொண்டு செயலில் ஈடுபட வேண்டிக்கொள்கிறேன். சிந்திக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது என்பதற்காகத்தான் இந்த அபாயச் சங்கை ஊதுகிறேன்.
111. நிர்மாணித்தல்
நீங்கள் எந்த முறையில் கடவுளை நிர்ணயித்தாலும், எந்த முறையில் எவ்வளவு நல்ல கருத்தில் மதத்தை நிர்மாணித்தாலும் பலன்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்குமே தவிர, மூடநம்பிக்கைக் கடவுளைவிட, குருட்டுப் பழக்க மதத்தை விட, சீர்திருத்தக்கடவுளும், பகுத்தறிவு மதமும் ஒன்றும் அதிகமாக சாதித்துவிடப்போவதில்லை.
112. முதல் தத்துவ ஞானி
உலகத்திலேயே முதன் முதலாகத் தோன்றிய த்துவ ஞானி என்று ஒருவரைக் கூறவேண்டுமானால் சரித்திர ஆதாரப்படி புத்தரைத்தான் சொல்ல வேண்டும். அடுத்து மேல் நாடுகளில் தோன்றிய சாக்ரடீஸ். இவர் புத்தருக்குப்பின் தோன்றியவரே.
இவர்களுடைய மெய்யான போதனைகள் சிந்திப்பாரற்று சீந்துவாற்றுக் கிடக்கின்றன. பொய்க்கற்பனையையும், தனமயையும் போதித்தவர்களை உலகம் போற்றுகிறது; பின்பற்றுகிறது.!
113. பொதுவுடமைதான் என்ன?
பொதுவுடைமை என்கின்ற வார்த்தையானது மக்களின் காதுகளில் கேட்கும்பொழுதே அது பயங்கர சப்தம் போல் கருதப்படுகின்றது. கொஞ்ச காலத்திற்கு முன் நாத்திகம் என்ற வார்த்தையும், இப்படித்தான் மக்கள் காதுகளுக்கு ஒரு பெரிய அதிருப்தியானதும், வெறுப்பானதுமான சப்தமாக்க் கருதப்பட்டு வ்ந்தது என்றாலும், இப்போது அது ஒரு தர்க்கவாதத்துக்கு ஏற்றதாகவும், சிலர் அதை ஒரு யாகரிகமாக்க கருதவும், சிலர் அவ்வார்த்தையின் கருத்தை சாதாரண நோக்கத்தோடு கவனித்து ‘அது அவரவர்கள் அபிப்பிராயம்’ என்பதாகவும், சிலர் ஜன சமூக வாழ்க்கைக் கட்டுப்பாட்டிற்கு அந்தப்படி(கடவுள் என்பதான) ஒரு அபிப்பிராயம் இருந்தால் நல்லது என்றும் கருதும்படியாகவும் இருந்து வருகின்றது.
114. மொழி ஒரு போர்க்கருவி
மொழி என்பது உலகப்போட்டிப் போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். போர்க்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும். அவ்வப்போது கண்டுபிடித்து கைக்கொள்ளவேண்டும். நூல், மொழி – எழுத்து ஆகியவயும்.
115. மனிதனும் மாறுதலும்
காலத்துக்கு ஏற்ப மாறுதலுக்கு ஒத்துவராதவன் மானமுடன் வாழமுடியாது; மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாக இருக்கவேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதன் உலகப்போட்டிக்குத் தகுதி உடையவன் ஆவான்.
116. பேதம் அகற்று
பேத உணர்ச்சிகள் மக்களிடையே இருந்துவரும் வரையில் மனித சமுதாயம் குமுறிக்கொண்டுதான் இருக்கும் என்பதை உணர்ந்து நடவுங்கள். நிரந்தரமான சாந்தி வேண்டுமேன்றால் பேதங்கள் அகற்ற முற்படுங்கள். அதற்கு ஆவன செய்யுங்கள்.
117. காதல்
அன்று ஆசை, நட்பு என்பவற்றின் பொருளைத்தவிர வேறு ஒரு பொருளைக்கொண்டதென்று சொல்லும்படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மை ஆண், பெண் சம்பந்தத்தில் இல்லை என்பதாக விவரிக்கவே இவ்வியாசம் எழுதப்படுவதாகும். ஏனெனில், உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி அதனுள் ஏதோ பிரமாதமான ஆண் – பெண கூட்டு வாழ்க்கையின் பயனை மயங்கச்செய்து, காதலுக்காக என்று இன்பமில்லாமல் – திருப்பித இல்லானல் – தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படுகனிறதை ஒழிக்க வேண்டுமென்பற்காகவேயாகும்.
ஆனால், காதல் என்றால் என்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எதுவரையில் இருக்கின்றது? அது எந்தச் சமயத்தில் உண்டாவது? அது எவ்வப்போது மறைந்துவிடுகிறது? அப்படி மறையக் காரணம் என்ன?
ஆழ்ந்து யோசித்தால், காதல் என்பதின் சத்தற்ற தன்மை, பொருளற்ற தன்மை, உண்மையற்ற தன்மை, நித்தியமற்ற தன்மை, அதை பிரமாதப்படுத்துவதன் அசட்டுத்தன்மை ஆகியவை எளிதில் விளங்கிவிடும்.
118. பொருத்தம்
அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும், தேவைக்கும் பொருத்தமில்லாத காரியங்கள் பழக்கத்தின் பேராலோ, வழக்கத்தின் பேராலோ, சாதிவகுப்பின் பேராலோ மற்றதன் பேராலோ நடத்தப்படக்கூடாது.
119. நல்ல நேரம், கெட்ட நேரம்
எமகண்டத்திலே இரயிலும், பஸ்ஸூம் புறப்படுகிறது. கொஞ்சம் இரு; இப்பொழுது இராகு காலம் என்று கூறினால் அது நிற்குமா? அதில்தானே ஏறிச் செல்கிறான்? இதையெல்லாம் நன்றாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.
120. சட்ட மறுப்பு
சட்ட மறுப்புச் செய்வதென்பது முட்டாள்தனம்; சண்டித்தனம். அதனால்தான் சட்ட மறுப்பு, சட்ட மறுப்பு என்று பஜனை செய்தவர்கள் இன்று சட்டம் செய்ய முடியாமல் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள்.
121. விஞ்ஞானமும் அஞ்ஞானமும்
ஒரே தகப்பனுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒன்றை இந்நாட்டிலும், ஒன்றை இங்கிலாந்திலும் வளர்த்துப் பாருங்கள். இங்கிலாந்தில் வளர்ந்தவன் எதையும் விஞ்ஞானக் கண்கொண்டு பார்ப்பான். இவன் எதையும் மதக்கண் கொண்டு பார்ப்பான்.
122. எங்கிருக்கிறது இந்துமதம்?
இந்து மதம் என்கிற பெயரே பூர்வ சரித்திரங்கள், சங்க இலக்கியங்கள், புராணங்கள், இதிகாசங்கள், ஆகமங்கள், தர்மசாஸ்திரங்கள்,ஸ்மிருதிகள், வேதங்கள் முதாலன எந்தப் புத்தகங்களிலும் இருப்பதாகத் தெரியவில்லை. நான்தான் முன்னமேயே அதிகம் படிக்கவில்லை என்று சொல்லிவிட்டேன். ஆனாலும், படித்தவர்கள் என்று சொல்லக்கூடிய அநேகரையும் கேட்டால், ஒருவராவது இந்து மதம் என்ற பெயர் இந்த ஆதாரத்தில் இருக்கிறுது என்பதாகச் சொல்லவே இல்லை, இங்கு யாராவது சொன்னாலும் சரி என்றே சொல்லுகிறேன்.
123. பித்தலாட்டக்காரர்களின் கற்பனை
கீதை எழுதியதும், இராமாயணம் எழுதியதும், புத்தருக்குப் பின்னால்தான். புத்தர் அறிவம், ஒழுக்கமும் வளரவேண்டுமென்றார். அவை வளர்ந்துவிட்டால் இவர்கள் கதி என்னாவது? அதற்காகத்தான் புத்தர் பிரச்சாரத்தால் எவை எவை மழுங்கிப் போய்விட்டனவோ அவைகளை, மீண்டும், மீண்டும் பலப்படுத்தவே இவைகளை எழுதினார்கள். முன்ஷி எழுதியிருக்கிறார் இராமனையும், கிரஷ்ணனையும் பற்றி -இவர்களால் ஆரியத்திற்கு அதிகமான பிரச்சாரம் ஏற்பட்டதாலேயே அவர்களை அவதாரமாக்கிவிட்டார்கள் என்று. இது பாரத இதிகாச சமிதிக்காரர்களே எடுத்துப்போட்டு உட்கார்ந்து பேச ஆரம்பித்தால் இவை கறபனைகள், வடிகட்டின மடமை என்பது புரியும்.
124. மனுதர்மம் என்ன சொல்லுகிறது?
கம்யூனிஸ்ட் கட்சியார் ‘மில்’லிலும், எஞ்சினிலும் வேலை செய்யும் தொழிலாளர்களையே தொழிலாளர்களாகக் கருதுகின்றார்கள். சரீரத்தினால் பாடுபடும் சூத்திரப்பட்டம் தாங்கிய 4 கோடி மக்களும் தொழிலாளர்களல்லவா? பார்ப்பான் சூத்திரனைக் கூலி இல்லாமல் வேலை வாங்கலாம் என்று மனுதர்ம சாஸ்திரம் சொல்லுகின்றதே! இது கடவுளின் கட்டளையாம்!
125. யாரை நம்புவது?
சமதர்மம் என்ற கொள்கையைக் காட்டிப் பேசும் வெறும் பேச்சைக்கேட்டு ஏமாந்துவிடாதீர்கள். ஒருவன் பேதவாதியாய் இருந்தாலும் அவன் பகுத்தறிவாடி – நாத்திகவாதியாய் இருந்தாலும் அவன் பகுத்தறிவாடி – நாத்திகவாதியாய் இருந்தால் நம்புங்கள். கண்டிப்பாநய் நாம்ம், விபூதிக்காரனை நம்பாதீர்கள். பகுத்தறவுவாதிகளுக்குத்தான் இடம் உண்டு என்று சொல்லப்படுகின்ற ஸ்தாபனங்களை, குழுக்களை நம்புங்கள். லாபம் இல்லாவிட்டாலும், நட்டம் இருக்கக்கூடாது!
126. தொழாதே!
முதலாவது தீர்மானமாக, ‘ஆரியக்கடவுள்கள்’ 100க்கு 99.5க்கு மேற்பட்டவைகளை, ஆரியர்கள், திராவிடர்களை (சூத்திரர்கள் என்பவர்களை) கொல்லுவதற்காகவும், தலையெடுக்காமல் இருக்கச் சூழ்ச்சிகள் செய்வதற்காகவும், விபச்சாரம் முதலிய கூடா ஒழுக்கங்களில் ஈடுபடுவதற்காகவுமே கற்பிக்கப்பட்டவைகளாக இருப்பதாலும், அக்கடவுள்களை வழிபடுகிறவர்கள் ஒழுக்கச்சீலர்களாக இருக்க முடிவதில்லை என்பதோடு, உள்ள ஒழுக்கத்தையும் இழக்க வேண்டிருப்பதாலும் அக்கடவுள்களை திராவிடர்கள் வழிபடக்கூடாது என்று இம்மாநாடு திர்மானிக்கிறது என்பதாக தீர்மானித்திருக்கிறோம்.
127. கிள்ளி எறிய வேண்டுயவை
ஒருவன் சமதர்மத்துக்கு உழைப்பதனால், அவன் முதலில் ஒரு உண்மையை அடிப்படையாகக் கொள்ளவேண்டும். உழைப்பதற்கே பிறந்திருக்கும் வகுப்பு ஒன்று, இவர்களது உழைப்பின் பயனை அனுபவித்துக்கொண்டு சுகபோகியாய் வாழ்வதற்கென்றே பிறந்திருக்கும் வகுப்பு ஒன்று இருப்பதை ஒழிக்கவேண்டும் -கிள்ளி எறியவேண்டும் என்பதே அந்த அடிப்படை நிலை. இதைச் செய்யாதவரையில் எந்தவிதப் பொருளாதார சமதர்மத் திட்டமும் இந்த நாட்டில் அரைவினாடி நேரமும் நிலைத்து நிற்காது என்பதைச் சமதர்மம் பற்றிப் பேசுவோர், நினைப்போர், ஆசைப்படுவோர் மனதில் கொள்ளவேண்டும்.
128. நால்வர் மொழி
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்பவை தமிழேயாகும். மலையாள பாகத்தில் பேசும் தமிழ், மலையாளம் என்று சொல்லப்படுகிறது. கர்னாடகத்தில் பேசும் தமிழ், கன்னடமாக ஆகிவிட்டது. ஆந்திராவில் பேசும் தமிழ், தெலுங்காகிவிட்டது. நால்வரும் பேசுவது தமிழ்மொழிதான்.
129. ஒழிக்கப்படவேண்டியவைகள் எவை?
மக்களிடம் உணர்ச்சி, ஒழுக்கம் ஏற்படவேண்டுமானால், சினிமா ஒழிக்கப்படவேண்டும். நீதி, நேர்மை ஏற்படவேண்டுமானால் வக்கீல் முறை ஒழிக்கப்படவேண்டும். நாட்டில் காலிகள், அயோக்கியர்கள் ஒழிக்கப்படவேண்டுமானால் பத்திரிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும். அரசியலில் நல்ல ஆட்சியும், நாணயமும் ஏற்பட வேண்டுமானால் தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும். வியாபாரத்தில் நாணயக்குறைவும், கள்ள வியாபாரமும் ஒழிக்கப்பட வேண்டுமானால், லைசன்ஸ், பெர்மிட், கட்டுப்பாடு முறை ஒழிக்கப்படவேண்டும்.
130. தலைகீழ் தத்துவம்
சமுதாயம் வேறு; அரசியல் வேறு என்று கூறுவது தவறாகும். சமுதாய அமைப்பைச் சரிவர நடத்துவதுதானே – அரசாங்கத்தின் கடமையாகும்? சமுதாய அமைப்பு முன்னேற வழிவகை அமைப்பதே மதத்தின் தத்துவமாகும். முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தங்களது மதங்களை அவ்விதமே கையாண்டு வருகின்றனர். ஆனால், நமது மதம் இருக்கிறதே, அது நமது சமுதாய அமைப்பின் முன்னேற்றத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாய் இருக்கிறது. நம் அரசாங்கம் என்பதோ மக்களுக்காக அல்லாமல், அரசாங்கத்தாருக்காக மக்கள் வாழவேண்டிய தலைகீழ்த் தத்துவத்தில் நாம் உழன்று வருகிறோம்.
131. சமதர்ம அறிவிப்பு
சமதர்மவாதிகள் தங்களுடைய வேலைத்திட்டங்களைக் காலதேசவர்த்தமானத்திற்குத் தகுந்தபடி மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும் என்பது சரியானாலும், சமதர்மக்கொள்கை என்பதில் எந்தக்காலத்திற்கும், எந்த தேசத்திற்கும் இந்த அறிக்கையிலிருந்து சிறிதுகூட மாறுபடவேண்டிய அவசியம் ஏற்படாதபடி அமைந்திருக்கின்றது.
132. நூலகப்பயன்
நாட்டில் பள்ளிக்கூடங்கள், உயர்தரக் கலாசாலைகள் எவ்வளவு இருந்தாலும் ஓரளவுக்குத்தான் அவைகள் மூலம் அறிவு வளரும். யார் அவைகளை நடத்தினாலும் ஒரு கட்டுப்பாட்டுக்கு ஒரு வரம்புக்கு அடங்கியதே.
இத்தகைய நிறுவனங்களால் படிப்பின் பயன் முழுமையாகக் கிடைத்துவிடாது. இந்தக் குறைபாட்டை நிறைவுபடுத்துவதற்கு பயன்படுவன படிப்பகங்களேயாகும்.
133.தேசாபிமானம் ஒரு பொய்யே!
துருக்கி தேச்த்திற்கும் , இந்திய தேசத்திற்கும் சண்டை வந்தால் இந்திய இசுலாமியர்களுக்குத் தேசாபிமானம் இந்தியாவுக்கா? துருக்கிக்கா? அய்தராபாத்துக்கும், மைசூருக்கும் யுத்தம் தொடங்கினால் அய்தராபாத் இந்தியர்கள் தேசாபிமானம் மைசூருக்கா? அய்தராபாத்துக்கா? ஆகவே தேசம், தேசேபிமானம் என்கிற வார்த்தைகளும் – கடவுள் , மதம் என்பது போன்றதே – ஒரு வகுப்பாருடைய சுயநலத்திற்கேற்ற ஒரு சூழ்ச்சி வார்த்தை என்று சொல்லவேண்டியிருப்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை!
134. உண்மைத்தொண்டன்
ஒருவருடைய யோக்கியதையைப் பார்க்க வேண்டுமானால் ‘அவனுடைய விரோதியைப் பாருங்கள்’ என்று சொல்லுகிறேன். ஏனெனில், நல்லவர்களுடன் சிநேகமாக இருப்பது சுலபமான காரியம். அதனால் எவனும் வீரனாக மாட்டான். கெட்டவர்களுடன் விரோதமாய் இருந்து, கேட்டை ஒழிக்க முற்படுபவனே, அதிக வீரனும் உண்மையான தொண்டனுமாவான்.
135. இனமானம்!
இனமானம், தன்மானத்திலும் பெரிது, உண்மையிலும் பெரிது அது. பட்டம பெற்ற கல்வியிலும் பெரிது. பணம் ஊற்றுள்ள உத்தியோகத்தரத்திலும் பெரிது. பரம்பரை மகாராஜா பட்டத்திலும், ‘சர்’ ரிலும் பெரிது. மணிக்கு ஒரு லட்ச ரூபாய் வருவாய் குவியலுக்கும் பெரிது.
136. பாமர மக்களை ஏமாற்றாதே!
நாட்டில் எந்தச் சீர்திருத்தமோ, இயக்கமோ ஏற்பட்டலும், பார்ப்பனர்ள் அதை நாஸ்திகம் என்றும், தெய்வ நிந்தனை என்றும், புண்ணிய ஸ்தல நிந்தனை என்றும், சாஸ்திர நிந்தனை என்றும், தேசத்துரோகம் என்றும், மதத்துவேஷம் என்றும், சாதித்துவேஷம் என்றும் பழிகளைச் சுமத்தி பாமர மக்களை ஏய்த்தே இதுவரை தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகின்றார்கள்.
137. சிந்திப்பதில் நன்மையிருக்கிறது!
உங்கள் கவனத்தை – முயற்சியை ஆட்சியாளர்கள் பக்கம் திருப்புங்கள்! உங்களுக்கு எது நன்மையானது? எது தீமையனது? என்று முதலில் சிந்தித்து தெளிவு அடையுங்கள். உங்கள் எதிரி யார்? என்று கண்டுபிடியுங்கள். எப்படி முயற்சித்தால் நல்ல பயன் ஏற்படும் என்பதையும் நீங்களே சிந்தித்துப் பாருங்கள். சிந்திப்பதில் கெடுதியில்லை!
138. இயற்கையை மாசுப்படுத்தும் மதம்
கடவுளும் மதமும்தான் இயற்கையை அறியும் தன்மையைக் கெடுத்துவிட்டன. அவை மக்கள் அறிவு வளர்ச்சிக்கே முட்டுக் கட்டையாகிவிட்டன.
139. பேராசையை ஒழி
பேராசையில்லாவிட்டால் எந்த மனிதனும் தனது புத்திக்கும்,அனுபவத்திற்கும் ஒவ்வாத்தை ஒரு காலமும் நம்ப மாட்டான்; பின்பற்ற மாட்டான்.
140. மதமும் சட்டமும்
கற்புக்காகப் புருஷனின் மிருகச்செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டுமென்கிற கொடுமையான மதங்கள், சட்டங்கள் மறையவேண்டும்.
141. உலகம் சீர்திரத்தத்துக்கு அடிமைப்பட்டது!
நான் இசுலாம் மதக்கொள்கைகள் முழுவதையும் ஒப்புக்கொண்டதாகவோ, அவை எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்பதாகவோ யாரும் தீர்மானித்து விடாதீர்கள். அதிலும் பல விரோதமான கொள்கைகளைக் பார்த்திருக்கிறேன். இந்து மதத்தில் எதை எதைக் குருட்டு நம்பிக்கை, மூடப்பழக்கம், பாமரத்தன்மை என்கிறோமோ அவை போன்ற சில நடவடிக்கைகள் இசுலாம் மதத்திலும் சிலர் செய்கிறார்கள். சமாதி வணக்கம், பூசை, நைவேத்தியம் முதலியவை இசுலாம் சமூகத்திலும் இருக்கின்றன. மாரியம்மன் கொண்டாட்டம் போல், இசுலாம் சமூகத்திலும் ‘அல்லா சாமி பண்டிகை’ நடக்கின்றது. மற்றும் நாகூர் முதலிய ‘ஸ்தல’ விசேஷங்களும், சந்தனக்கூடு, தீ மிதி முதலிய உற்சவங்களும் நடைபெறுகின்றன. இவை குர் ஆனில் இருக்கின்றதா, இல்லையா என்பது கேள்வியல்ல. ஆனால் இவை ஒழிக்கப்பட்ட பின்புதான் எந்தச் சமுகமும்- தங்களிடம் மூடநம்பிக்கை இல்லை என்று சொல்லிக் கொள்ள முடியும். உலகமெங்கும் ஒரு கொள்கையின் கீழ் வரவேண்டுமானால் இசுலாம் கொள்கையும் இணங்கவேண்டும். உலகம் சீர்திருத்தத்துக்கு அடிமைப்பட்டது என்பதை மறவாதீர்கள்.
142. தீர்க்கதரிசனம்
இனிவரும் உலகில் கம்பியில்லாத்த தந்திச் சாதனம் ஒவ்வொருவர் சட்டைப்பையிலும் இருக்கும்.
143. மான உணர்வும் நாடும்
மானம், இன உணர்ச்சி, நாட்து உணர்ச்சி, நம் சமுதாய இழிவைக்கண்டு வெட்கப்படும் தன்மை, பொதுநலத்துக்காக சிறிதாவது தன்னலம் விட்டுப் பாடுபடவேண்டும் என்கின்ற மனித்த்தன்மை ஆகியவை நம் மக்களிடையே இல்லை என்பதுதான் நமக்குப் பெருங்குறையாக இருக்கிறது.
144. சுதேசிப்பற்று!
கைத்தொழில்கள் என்பதே வர்ணாசிரமத்தின் அடிப்படையாகும். தொழிலாளி தொழிலாளியாகவும்,முதலாளி முதலாளியாகவும் ஏற்பட்டதே இந்தக்கதர், கைத்தொழில் மனித உடல் உழைப்புகுறைக்கப்பட்டு எந்திரங்களைப் பயன்படுத்தவேண்டும். எதற்காக ஒருவனுக்குச் சதா தொழில், உழைப்பு, அது இயற்கை விரோதமல்லவா? எனவே சுதேசிப்பற்று என்பது முட்டாள்தனம் என்று கூறவேன்.
145. அரசியல்வாதி
உண்மைச் சீர்திருத்தவாதி எவனும் இன்றைய அரசியல் அரங்கை ஆதரிக்கமாட்டான்!
146. ஒருமைப்பாடு
எதற்காக ‘இந்து’? எதற்காக ‘கிறிஸ்தவம்’? எதற்காக ‘முஸ்லிம்’ மதங்கள் வேண்டும்? இவர்களுக்குத் தனிதனி பேதம், வேஷம், செய்க்கைகள் முதலியன தேவையாயிருக்கிறது. இவைகளால் பிரிவினை உணர்ச்சியில்லாமல், சமுதாய்திதற்கு நலன் என்ன என்று கேட்கிறேன். கடவுளாலும், இந்த வேதங்களாலும் பிரிவினை உணர்ச்சி தவிர வேறு என்ன பயன் என்று கேட்கிறேன்.
147. தீர்க்கதரிசிகள் சொல்வதைக் கேள்!
இந்துக்கள் தேர் இழுப்பதைப் பார்த்து , முஸ்லிம்கள் பரிகாசம் செய்துவிட்டு, முஸ்லிம்கள் கூண்டுகட்டிச் சுமந்துகொண்டு கொம்பு, தப்பட்டை, மேளம், பாண்டு வாணவேடிக்கை செய்து கொண்டு தெருவில் போய்க்கொண்டிருந்தால் உலகம் திருப்பிச் சிரிக்காதா? இந்துக்கள் காசிக்கும், இராமேஸ்வரத்திற்கும் போய்ப் பணம் செலவழித்துவிட்டு, ‘பாவம் தொலைந்துவிட்டது’ என்று திரும்பி வருவதைப்பார்த்து முஸ்லிம்கள் சிரித்துவிட்டு, முஸ்லிம்கள் நாகூருக்கும், மக்காவுக்கும், முத்துப்பேட்டைக்கும் போய்விட்டு வந்து தங்கள் பாவமெல்லாம் தொலைந்துவிட்டது என்றால் மற்றவர்கள் சிரிக்கமாட்டார்களா? மக்கள் மார்க்த்தைக் காப்பாற்றுவதென்றால்-கொள்கைகளைப் பகுத்தறிவிற்கு இணங்கி இருக்கும்பட ஜாக்கிரதையாக பார்த்துப் பயன்படுத்தவேண்டும். ‘தீர்க்கதரிசிகள் பகுத்தறிவுக்கு விரோதமாய்ச்சொல்லி இருக்கமாட்டார்கள்’ என்று கருதி அவற்றைத்தன் இஷ்டப்படி அர்த்தம் செய்துகொண்டு, பிடிவாதமாய் இருப்பது மூடநம்பிக்கையைவிட மோசமானதாகும். அம்மாதிரி மூடநம்பிக்கைகளின் பயனாய்த் தீர்க்கதரிசிகள் என்பவர்கள் சொன்னதன் கருத்தையும், உண்மையையும் அறிந்து கொள்ள முடியாமலும் போகும்.
148. அடிமைப்பட்ட பகுத்தறிவு
மனித சமுக நன்மைக்காக, மக்கள் சரீர உழைப்பினின்றும் காலதாமத்திலிருந்தும் காப்பாற்றப்படவும், அதிகப்பயன் அடையவும் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் எப்படி முதலாளிமார்கள் ஆதிக்கத்திற்கு உள்ளாகி, உழைப்பாளியும, பாட்டாளியும் பட்டினியாக இருக்கப் பயன்படுகின்றனவோ அதுபோலவே, மனிதனுக்கு மேன்மையும் திருப்தியையும் கவலையற்ற தன்மையையும் உண்டாக்கித் தரவேண்டிய பகுத்தறிவானது, சிலருடைய ஆதிக்கத்திற்கு அடிமையாகி, மக்களுக்குத் துக்கத்தையும், கவலையையும், தரித்திரத்தையும் கொடுக்கப் பயன்பட்டு வருகிறது.
149. ஞானிக்குப் பெயர் நாத்திகன்!
நாத்திகன் என்றால் ஞானி, அறிவாளி என்றுதான் பொருள்; ‘கடவுள் இல்லை என்பவர்’ என்பது பொருள் அல்ல. ஞானி என்றால் முனிவர் என்பது அல்ல – ஞானம் உடையவன், அறிவு உடையவன் என்பது பொருள். எவன் ஒருவன் அறிவை உபயோகப்படுத்துகிறானோ – எவன் ஒருவன் அறிவு கொண்டு எதையும் விவகாரம் பண்ணுகிறானோ அவன் நாத்திகன் என்று கூறப்படுகிறான்.
150. மன்த்தூய்மை
உங்கள் மனதைத் தூய்மையாக வைத்துக்கொண்டு, தைரியமாகப் பேசவேண்டும். பொது வாழ்வில் மானத்தைப் பார்க்காதீர்கள். எந்த அளவு உணர்ச்சியோடு, உறுதியோடு, உங்கள் மனமறிய நீங்கள் குற்றமற்றவர்களாக, நல்ல ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கின்றீர்களோ அவ்வளவுக்கவ்வளவு துணிந்து நீங்கள் தொண்டாற்ற முடியும்.
151. தவறு செய்கிறவனே பக்தனாகிறான்
இலஞ்சம் வாங்கும் சைவன், இலஞ்சம் வாங்கும் வைணவன், இலஞ்சம் வாங்கும் முஸ்லிம், இலஞ்சம் வாங்கும் கிறிஸ்தவன் முதலிய இவர்கள் – பெரிதும் பூசை, வணக்கம், தொழுகை, பிரார்த்தனை இவைகளில் மிகக் கண்டிப்பாக – தவறாமல் நடந்து கொள்கிறார்கள்.
152. மாணவர்கள் எழுதப்பெறாத சிலேட்டு
வாலிபர்களுக்கு புதுமை சீக்கிரம் பிடிக்கும். காரணம் அவர்கள் உள்ளம் எழுதாத சிலேட்டு போன்றது. வயதானர்வர்கள் உள்ளம் பல சங்கதிகள எழுதப்பெற்றது. புதிய தன்மைகள் பதியப்படவேண்டுமானால், முன்னால் பதிந்தவைகள் அழிக்கப்படவேண்டும். அவைகள் எளிதில் அழிக்கமுடியாதபடி ஆழப்பதிந்து போயிருக்கும்.
153. அறிவு இல்லாத்து சுயநலம்
சுயநலத்திற்கு அறிவு தேவை இல்லை; உணவுக்கு அலைவதும் உயிரைக் காப்பதும் எந்த உயிருக்கும் இயற்கைதான்.
154. ஏழை பணக்காரன் என்ற தொல்லை நீங்க வேண்டும்!
இன்று பொதுவாகவே உலகம் முழுவதும் ஒரு தொல்லை இருக்கிறது. அந்தத்தொல்லை என்னவென்றால், மனித சமுதாயத்தில் உடையவன் – இல்லாதவன் என்ற தொல்லை. இந்தத் தொல்லை உலக முழுவதும் நீக்கமற நிறைந்துள்ளது. மனிதன் இயற்கையாகவே ஆசை குடிகொண்டுள்ள ஜீவன். தன் பயனாகத்தான் உலகில் உடையவன் – இல்லாதவன் என்கின்ற இரண்டு வித நிலைகள் உண்டாகிவிட்டன. இந்த நிலைமைகளை மதமும் கடவுளும் பாதுகாத்து வருகின்றன. அதற்கு ஏற்ப அரசாங்கமும் அமைந்துவிடுகிறது.
155. கடவுள் என்ற முட்டுக்கட்டை
உலக மாறுதலை வளர்ச்சிக்குப் பயன்படாமல் செய்வதும் மனிதனுக்கு உள்ள அறிவின் சக்தியை மனித வளர்ச்சிக்கு, கவலையற்ற வாழ்வுக்கு உதவாமல் செய்வதும் பெரிதும் கடவுள், கடவுள் சக்தி, கடவுள் செயல் என்பவை போன்ற முட்டாள் தனமான கருத்துக்களும், நம்பிக்கையுமேயாகும்.
156. நாடகக் கலை
நாடகக் கலை மக்களுக்கு பயன்படத்தக்க வகையில் இருக்க வேண்டும். நாடகம் என்றால் அறிவீனமான, மூடநம்பிக்கையான கருத்துகளுக்கு இடம் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதோடு மக்களின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் – முன்னேற்றத்திற்கேற்ற வகையில் இருக்க வேண்டும்.
157. கடவுளை நம்பாதே!
கடவுளைப்பற்றி அறிவைக்கொண்டு ஆராய்ந்து பாருங்கள்; சிந்தியுங்கள்! என்று சொன்னான். அவ்வளவு பச்சையாக்க்கூடச் சொல்லவில்லை புத்தன். ‘நம்பிவிடாதீர்கள், சிந்தியுங்கள்’ என்றான். கடவுள் நம்பிக்கைக்காரப்பயல்கள் அவர்களை என்ன பண்ணினார்கள்? வெட்டினார்கள்? வெட்டி, வெட்டி தலை ஒரு பக்கம், முண்டம் ஒரு பக்கம் குவித்தர்கள். இந்த வெட்டுனதும், குவித்ததும் கோயலிலே எல்லாம் இன்னும் சித்திரமாகவே இருக்கிறது. கல்லிலே அடித்து வைத்திருக்கிறான். – ஒருவன் காலைப்பிடித்து இருக்கிறான். ஒருவன் தலையைப் பிடிக்கிறான், ஒருவன் வெட்டுகிறான்.
158. வெளியே வாருங்கள்!
நீங்கள் உங்களுடைய நிலையைச் சிறிதாவது மாற்றிக்கொள்ள வேண்டும் என்று உண்மாயாக ஆசைப்படுவீர்கானால், இந்துமதம் என்பதயும் அது சம்பந்தப்பட்ட கடவுள், மத, புராண, சாஸ்திர, இதிகாசம் என்பவைகளையும் உதறித்தள்ளி அவற்றிலிருந்து வெளியே வாருங்கள். நீங்கள் அதைச் செய்யவில்லையானால் இனியும் ஓராயிரம் ஆண்டிற்குக்கூட நீங்கள் எப்படிப்பட்ட மாநாடுகளும், சங்கங்களும், பிரச்சாரங்களும், கிளர்ச்சிகளும் நடத்தினாலும் எவ்வளவுதான் அரசியல் சுதந்திரமும் பொருளாதார முன்னேற்றமும் பட்டம் பதவிகளும் பெற்றாலும் உங்கள் சமுதாயத்திற்கள்ள இழுவு நீங்கப்போவதில்லை. இது உறுதி! இது உறுதி!
159. திருமண சுதந்திரம்
கல்யாணம் என்றால் சுதந்திர வாழ்க்கை – சமத்துவ வாழ்க்கை என்று இருக்கவேண்டுமே ஒழிய அடிமை வாழ்க்கை – மேல் கீழ் வாழ்க்கை என்று இருக்கக்கூடாது என்பதே எனது ஆசை.
160. தன் புத்தியைப் பயன்படுத்து
கடவுள் சொன்னது, மகான் சொன்னது என்று பார்க்கின்றானே ஒழிய, தன் புத்தி என்ன சொல்லுகிறது என்று பார்ப்பதே இல்லை.
161. இன்பமும் திருப்தியும்
இன்பமும், திருப்தியும் ஏற்படுகிற காரியம் எல்லாம் சுயநலமாகிறபடியால், இவை இல்லாத காரியம் எதையும் மனிதன் தானாகச் செய்வதில்லை. செய்யவும் முடியாது. ஆதலால், மனிதனுக்குப் பிறர்நலம் பேணி தன்னலம் இல்லாமல் செய்யும் காரியம் எதுவும் இல்லை.
162. பத்திரிகை நல்துணைவன்!
முன்னேற்றமடையக் கருதும் ஒவ்வொருவருக்கும் பத்திரிகைதீன் இன்றியமையாத ஆசான்; பத்திரிகைதான் மக்களுக்கு அறிவையூட்டி வளர்க்கும் தாயினுமினியது; பத்திரிகைதான் – புத்தி புகட்டும் நற்றந்தை; பத்திரிகைதான் ஆபத்துக்கு உதவும் நற்புதல்வன்; பத்திரிகைதான் உண்மைத்தோழன்; அதுவே அய்ம்புலன்களையும் ஒருமித்து இன்பம் நுகர்ச்செய்யும் உத்தம மனைவி; அதுவே பெருஞ்செல்வம்; அதுவே நெருங்கிய சுற்றம்; அதுவே இன்பந்தரும் பெருவீடு; அதுவே நோயகற்ற்றும் சஞ்சீவி; அதுவே இன்னமுது; அதுவே உணைமைச் சேவகன். அது மக்கள் வசிக்கும் ஒவ்வொரு இல்லந்தோறும் வந்து, சுயேச்சையும், சுவாதீனமுமற்று அஞ்ஞான்த்திலும், சோம்பலிலும், பசியிலும், தரித்திரத்திலும் கிடக்கும் மக்களை எழுப்பி உய்விக்கும் நற்துணைவன்.
163. உணவில் புரட்சி
உணவுத்துறையில் நம் நாட்டில் பெரிய மாறுதல் ஏற்படவேண்டும். அரிசிக்கு பதிலாக வேறு ஏதாவது இராசாயனப் பொருளைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும். மனித இயந்திரத்தைப் பெருந் திண்டி மூலம் ஓடச்செய்யாமல், மின்சாரம் போன்ற சக்திவாய்ந்த வஸ்துவை கண்டுபிடித்து (சிறிய உணவை) அதைக்கொண்டே மனிதன் இயங்கும்படி உயிர் வாழும்படியும் செய்யவேண்டும்.
164. அரசாங்கம் தேவையில்லை.
சமுதாயத்துறையிலே வேலை செய்யவேண்டுமானால் அரசியலைக் கைப்பற்றிப்பயன் இல்லை. ஆட்சி பீடத்திலே இருந்துகொண்டு எதையும் செய்துவிடலாம் என்று நினைப்பது மிகவும் மோசமானது. அதனாலேயே நாங்கள் அரசியலைப் பற்றி பொதுவாக்க் கருதுவதில்லை. அரசாங்கத்தைக் கைப்பற்றித்தான் சமூக சீர்திருத்தம் செய்யமுடியும் என்று சொல்வதையும் ஒப்புக்கொள்வதில்லை.
165. உணர்ச்சி உண்டாக்கு!
எந்தக் காரணத்தைக் கொண்டாவது, இன்று நாட்டில் உள்ள பொருட்களையெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்துவிட்டாலும், நமது சாதிமுறைகள் மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலைமையைத்தான் உண்டு பண்ணிவிடும். மற்ற நாட்டு மக்களுக்குப் பொருளாதார சமதர்ம உணர்ச்சி ஏற்பட்டதுற்குக் காரணம் அவர்களில் பிறவியில் கீழ்நிலை, மேல்நிலை இருக்கும்படியான சாதிபேதம் இல்லாத்தேயாகும். நமது மக்களுக்கு வெறும் பொருளாதாரச் சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது; சாதி பேதம் ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லி, பொருளாதார சமதர்மம் சொன்னால்தான் உண்மையாகக் கஷ்டப்படுகின்ற மக்களுக்கு உணர்ச்சி முடிகின்றது.
166. கற்பனை காரியம்
நல்ல காரியம், கெட்ட காரியம் என்பது மூடநம்பிக்கையால், சுயநலத்தால் கற்பனை செய்யப்பட்ட காரியங்களே அல்லாமல், அதற்கென்று ரொஉ உண்மைத் தத்துவம் கிடையாது.
167. நாகரிகம்
தனக்கு என்னென்ன வசதிகள், நன்மைகள், பெருமைகள் தேவை என்று கருதப்படுகின்றதோ அவற்றைச் சமுதாயத்திலுள்ள அனைவரும் அடையச் செய்யும் வழியில் நடப்பதே – உன்மையான நாகரிகம் என்பாதகும், இது கால, விஞ்ஞான அறிவுப் பெருக்கத்துக்கு ஏற்ற வகையில், முன்னேறிக்கொண்டும் மாறுபட்டுக்கொண்டும் இருப்பதாகும். மக்கள் வாழ்க்கை இன்பமாகத் திகழச் செய்வதே நாகரிகம்.
168. சாபக்கேடான சூழல்
நம் நாட்டில் காலித்தனம், அயோக்கியத்தனம், கயவாளித்தனம், புரட்டு, பித்தலாட்டம், மோசடி, துரோகம்,வஞ்சனை முதலிய குணங்கள், தன்மைகள் இல்லாத மக்களையோ அரசியல் கட்சிகளையோ, தலைவர்களையோ, அரசியல்வாதிகளையோ காண முடியவே முடியாதபடி செய்துவிட்டது. பெரிய பித்தலாட்டம், துரோகம், வஞ்சனை இவைகளில் தேர்ச்சி பெற்றவர்கள்தான் தலைவர்களாகிறார்கள்; தேசியவாதிகளாகிறார்கள்; தேசபக்தர்களாகிறார்கள்.
169. அடிப்படைக் காரணங்களை கவனி!
பொருளாதாரத் துறையில் இந்திய நாடு முற்போக்கடைய வேண்டுமானால் அதன் அஸ்திவாரமான காரணங்களையெல்லாம் கவனிக்காமல்,மக்களுடைய மதியீனத்தையும், பகுத்தறிவற்ற தன்மையையும், ஆதரவாய் உபயோகித்துக்கொண்டு, வெளிநாட்டுத் துணியை மறியல் செய்வதாலும், கதரை வாங்கிக் கட்டுவதாலும், கள்ளுக் கடைகளை மூடிவிடுவதாகுர் பொகுரளாதார்த் துறையைச் சரிபடுத்திவிடலாம் என்று சொல்லுவது ஒரு நாளும் நாணயமானதோ, அறிவுடைமையானதொ, காரியத்தில் பயன் கொடுக்கக்கூடியதோ என்பதாகச் சொல்லிவிடமுடியாது.
170. பகுத்தறவை வெறுக்கும் பார்பனர்கள்
பார்ப்பனர்கள் பகுத்தறிவுக்கு எதிரிகள், புரிதல் உள்ளவனிடம் அவர்கள் சம்பம் சாயாது. பகுத்தறிவு வளர்ந்தால் தங்கள் சுகபோக வாழ்வு தகர்ந்துவிடும் என்று அவர்களுக்குப் பயம்.
171. அறிவை வளர்க்க
இப்போது நமக்கு வேண்டியதெல்லாம் கோயில்ல, பள்ளிக்கூடம்தான். அறிவால் பல அதிசய அற்புதங்களைச் செய்யலாம். அதனால் அறிவை வளர்ப்பதற்கு அடிப்படையான கல்விக்கூடங்கள்தான் இன்று நமக்கு மிகத்தேவை.
172. விபச்சாரம்
விபச்சார்ம் என்பது பெண்கள் அடிமைகள் என்பதைக் காட்டும் ஒரு குறிப்பு வார்த்தையாகும். ஏனெனில் ”விபச்சார தோஷம்” வழக்கில் பெண்களுக்குத்தான் உண்டே ஒழிய ஆண்களுக்கு இல்லை. எனவே விபச்சாரம் என்கிற வார்த்தையின் த்த்துவம் பெண்களை ஆண்களின் அடிமைகள் என்றும் விலைக்கு வாங்கவும், வாடகைக்கு விடவும்கூடிய பொருள்கள் என்றும் கருதுவதேயாகும்.
173. மாறுதல்கள்
நாம் மாறுதலுக்குக் கட்டுப்பட்டவர்களுர், ஆசைப்பட்டவர்களும் ஆவோம். ஆதலால், அந்த மாறதலேதான், அதுவும் அறிவு, ஆராய்ச்சி ஆகிய காரணங்களைக்கொண்டு இந்தத் திருமண முறையில் காணப்படுகின்ற மாறுதல்கள் ஏற்பட்டவையாகும்.
174. திருப்தி தராத திருப்பதி
திருப்பதிக்குப் போய்வந்த பிறகாவது, யாராவது தங்கள் துர்க்குணங்களையோ, கெட்ட செய்க்கைகளையோ விட்டுவிட்டதாக அல்லது திருப்பதி யாத்திரையானது இம்மாதிரிக் குணங்களை விடும்படி செய்த்தாகவாவது – நம்மில் யாராவது பார்த்திருக்கின்றோமா என்று கேட்பதுடன், இம்மாதிரியான அறிவீனமான காரியத்திற்கு நமது நாட்டில் வருடத்திற்கு எத்தனை கோடி ரூபாய் செலவாகின்றது என்பதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணராவது கண்க்குப் போட்டார்களா என்று கேட்கின்றேன்.
175. அரசியல்வாதியின் இலக்கணம்
யாருக்கு அதிகமாகப் புளுகத் தெரிகிறதோ, யாருக்குக தூஷணம் செய்ய தைரியமிருக்கிறதோ – அவரே தேர்தலில் வெற்றிப்பெறுவது சகஜமாக இருக்கிறது.
176. ஒழுக்கம் குறைந்துவிட்டது!
மனித சமுதாயத்தில் இன்று ஒழுக்கம் மிகமிக்க் குறைந்துவிட்டது. சுமார் 50, 60 வருஷங்களுக்கு முன்பு இருந்த ஒழுக்கம் இன்று இல்லை.
177. மனித அறிவு பெற
நம் மக்கள் பக்குவமடைய – மனித அறிவு பெற இன்னும் எத்தனை நாற்றாண்டு காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை. தமி.ழ்நாடு ஒரு பிரளய்த்தால், புயலால், வெள்ளத்தால், பூகம்பத்தால் அடிப்படை உட்பட அழிந்து புதுப்பிக்கப்பட்டாலொழிய விமோசனமில்லையென்றுதான் கருத வேண்டியிருக்கிறது.
178. அறிவு அரங்கேறும் நேரம் எப்போது?
உலகில் கற்பு காதல் என்பன போன்ற வார்த்தைகள் எப்படிப்பெண்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆளவென்று ஏற்படுத்திப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ, அதுபோலவேதான்
179. பயன்பாட்டிற்கில்லா பகுத்தறிவு
மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறது. அது ஆராய்ச்சிக்காக ஏற்பட்டதே தவிர கண்மூடித்தனமான மிருகத்தன்மைக்கு ஏற்பட்டதல்ல. பகுத்தறிவை மனிதன் தப்பாய்ப் பயன்படுத்தி, அதிகமான தொல்லையில் மாட்டிக்கொண்டிருக்கிறான்.
இந்தத் தொல்லைக்கு பரிகாரமாக்க் கடவுளை உருவாக்கிக்கொண்டான்.
180. எது விமோசனம்?
இசையினால் காது மூலம் உடலுக்கு விஷம் பாய்கிறது. நடிப்பினால் காது, கண் ஆகிய இரு கருவிகள் மூளம் உடலுக்குள் விஷம் பரவி இரத்தத்தில் கலந்து போகிறது. இவ்வளவு பெரிய குறைபாடும், இழிவும் உள்ள மக்களுக்கு இன்று கடவுள் பஜனையும், கடவுள் திருவிளையாடல் நடிப்புந்தானா விமோசனத்துக்கு வழியாய் இருக்க வேண்டும்?
நாடகம் எதற்கு? அது படிப்பிக்கும் படிப்பினை என்ன? புராணக் கதைகளை நடிப்பினால் அனுபவித்தால் மூடநம்பிக்கை, ஒழுக்க ஈனம், கட்டுத்திட்டமற்ற காம உணர்ச்சி, கண்ட மாத்திரத்தில் காமநீர் சுரக்கும்படியாகப்பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளுதல் முதலியன பிடிபடுவதல்லாமல் வேறு என்ன ஏற்படுகிறது?
‘இரணியன் நாடகத்தில், விஷ்ணு’ தூணிலிருந்து வெளிவரும்போத் கூத்துப் பார்க்கும் மக்கள் கைகூப்பி கும்பிடுகிறார்கள்.
‘வள்ளித் திருமணம்’ நாடகத்தில், வள்ளியைச் சுப்பிரமணியன் காதலித்துக் காதல் சேட்டை செய்யும்போது, பல ஆண்கள் பெண்கள் பக்கமும், பல பெண்கள் ஆண்பகள் பக்கமும் திரும்பிப் பார்த்து கண்ணோடு கண்ணை முட்டவைப்பதுபோல் ஆகி மூர்ச்சையாகிவிடுகிறார்கள்.
181.எமன்
சாதிபேதம் ஒழிவதை இழிவாய்க் கருதுகிறான்; சாதிக் கலப்பை விபச்சாரித்தனமாக எண்ணுகிறான். இந்த மனப்பான்மை சாதி ஒழிப்புக்கு எமனாய் இருக்கிறது.
182.பின்பற்றல்
எனது நாடு, எனது இலட்சியத்திற்கு உதவாது என்று கருதினால், உதவும்படி செய்ய முடியாது என்று கருதினால் உடனே விட்டுவிட்டுப் போய்விடுவேன். அது போலவே, எனது மொழி என்பதானது எனது லட்சியத்திற்கு என்னுடைய மக்கள் முற்போக்கு அடைவதற்கு – மானத்தோடு வாழ்வதற்குப் பயன்படாது என்று கருதினால் உடனே அதை விட்டுவிட்டுப் பயனளிக்கக் கூடியதைப் பின்பற்றுவேன்.
183. அனுபவ சித்தாந்தம்
உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளும் தன்தன் சரீரத்தில் பற்றுக் கொண்டவைகளாகவே இருந்து வருகின்றன. அந்த சரீரபற்று என்பது, சரீரமானது ஜீவித்திருப்பதற்கு ஆதாரமானது என்கின்ற தத்துவத்தினாலேயே ஏற்பட்டதாகும். தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சிக்காத ஜீவன் கிடையவே கிடையாது எனலாம். ஆனால், எல்லா ஜீவராசிகளும் என்றைக்காவது ஒரு நாள் ஜீவிதப்பற்று அற்று செத்தே போகும் என்பது மாத்திரம் அனுபவ சித்தாந்தமாகும்.
184. ஆத்மா இல்லை!
பார்ப்பானுடைய மதத்தைத்தவிர ஆத்மா என்ற சொல் வேறு மதத்தில் கிடையாது. கிறிஸ்து மதம், முஸ்லிம் மதம் , தமழ் மதம் ஆகிய எந்த மதங்களிலும் ஆத்மா என்பதே கிடையாது. ஆனால், இந்தப் பார்ப்பனர் வந்தபிறகு அவர்களுடைய வாழ்க்கை வசதிக்காக ஏற்படுத்திக்கொண்ட ஏற்காடே இந்த ஆத்மா என்பதாகும். புத்தர்கூட ஆத்மா என்பதாக ஒன்று இல்லை. அதற்கு எஜமான் என்று ஒரு கடவுளில்லை என்றுதான் கூறியிருக்கிறார்.
185. நகை ஏன்?
பெண்களுக்குக் காதுகளிலும், மூக்குளிலும் ஓட்டைகள் போட்டதற்கும், நகைகள் போட்டு பாரத்தை ஏற்றனதற்கும் காரணம், ஆண்கள் வைதால் பொறுத்துக்கொள்ளவும், அடிக்கப்போனால் முகத்தை கவிழ்த்துகொண்டு முதுகைக்காட்டவும் வசமாய் இருக்கட்டும் என்றே கருதி, மாட்க்கு மூக்காணங்கயிறு போடுவதுபோல் பெண்களுக்குப் பாரத்தைக் (நகைகள்)தொங்க வைத்திருக்கிறார்களே தவிர வேறு என்ன?
186. பாவமன்னிப்பு தரும் கடவுள்
எப்படி இலஞ்சம் வாங்கும் நீதிபதியும், அதற்கேற்ற போலீஸ் அதிகாரிகளும் நாட்டில் இருந்தால்,அட்டூழியங்கள் அதிகரிக்குமோ அதேபோல் – கடவுள் மன்னித்துவிடுவார், அவருக்கு விருப்பமான பிரார்த்தனையைச் செலுத்திவிட்டால் – என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படவும், முதலில் ஒரு குற்றம் செய்ய அஞ்சியவன் பிறகு நாளடைவில் பயமின்றிப் பல குற்றங்களைச் செய்ய முற்பட்டுவிடுகிறான். தான் ஒரு தவறு செய்தால் அது தன்னேயே பாதிக்கும் என்பதில் நம்பிக்கையற்று, அனைவரும் தான் வாழ்வதுதான் முக்கியமென்றும் அதற்கு எதையும் செய்துவிட்டு பிறகு வேண்டுமானல் பாவமன்னிப்பு பெற்றுக்கொள்ளலாம் என்றும் கருதி, எந்த அக்கிரமத்தையும் துணிந்து செய்ய முற்பட்டுவிட்டனர்.
187. எது தமிழ் உணர்ச்சி
மக்களுடைய வாழ்க்கைக்குப் பயன்படக்கூடியதும் அறிவையும், திறமையையும், தைரியத்தையும் உண்டாக்கக்கூடியதுமாகிய சிற்ந்த கலைகளையெல்லாம் தமிழில் எழுதி பரவச்செய்வதன்மூலம், மக்களுடைய அறிவையும், தமிழ்மொழியையும் செம்மை செய்வதே தமிழ் உணர்ச்சியாகும்.
188. வணங்கும் தன்மை
வணங்கும் தன்மை, அறிவற்ற மூடனிடம் அதிகம் காணப்படுகிறது.
189. மூடத்தனமான பக்திப்பாடல்களா இலக்கியம்?
தமிழனைப்ற்றிச் சிந்தித்து இலக்கியம் பற்றி ஏதாவது பேசுவதாக இருந்தால் முதலில் இலக்கியம், அதனால் நமக்கு என்ன பயன் என்று யோசிக்க வேண்டும். நம் புத்திக்கு எட்டிய வரையில் தமிழர் பண்புக்கு, கலைக்குத் தகுந்தவாறு ஏதாவது இருக்கிறதா என்றால் ஒரு இலக்கியங்கூட இல்லை, இருந்தால் யாராவது சொல்லட்டுமே! எல்லா இலக்கியங்களும் ஆரியர் பண்புக்கு, கலைக்கு நடத்தைக்குத்தான் இருக்கின்றன். வேண்டுமானால், குறள் இருக்கிறதே என்று சொல்வார்கள். நான் சொல்வேன் குறள் தமிழருக்கு 50 சதம்தான் இருக்கிறது என்று. நாட்டில் இலக்கியங்கள் இருந்தால் அது நாகரிகத்திற்கு, அறிவு வளர்ச்சிக்கு,புரட்சிக்கு, முற்போக்கு மாறுதலுக்கு உதவிடவேண்டும். ஆனல், நம்நாட்டு இலக்கியங்களோ, புலவர்களும், மதவாதிகளும், ஆரியர்களும் பிழைக்கத்தான் இருக்கின்றன. வடமொழி வேதங்கள் ஆரியர்களுக்கென்றால் தேவாரம், திருவாசகம், பிரபந்தங்கள் தான் நமது வேதங்கள் என்று ஒரு தடவை மறமலையடிகள் சொன்னார்கள். கடவுளை ‘கண்ணே’ ‘மணியே’ என்ற் பிரார்த்தித்தால் அது வேதமாகுமா? இலக்கியமாகுமா? மூடத்தனமான பக்தப் பாடல்கள் நமக்கு இலக்கியமல்ல.
190. பதிய புத்தர் பிறப்பது எப்போது?
புத்தரும், சமணர்களும், பார்ப்பனப் பித்தலாட்டங்களை விளக்கியும் கடவுள் மற்றும் மதப்புராணங்களின் பித்தலாட்டங்களை விளக்கியும் பிரச்சாரம் செய்த்தன் விளைவாக பார்ப்பனர்கள் மதிப்பிழக்க ஆரம்பித்தனர். இந்நிலையைக்கண்ட பார்ப்பனர்கள், சதி செய்து புத்தர்களையும், சமணர்களையும் அரசர்கள் மூலம் கொன்றே ஒழித்துக்கட்டினார்கள். அவர்களுக்குப்பிறக் வேறு எவரும் தோன்றவில்லை!
191. திராவிடத்தாய்
பண்டிதர்களில் சிலர், ”தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கும் ஒன்றிலிருந்து வந்தவை. ஒரே தாய் வயிற்றில் பிறந்த நான்கு அக்காள் தங்கைகள்” என்று கருதுகிறார்கள். இது பித்தலாட்டம்தான் என்பது என் கருத்து. திராவிடத்தாய்க்குப் பிறந்தது ஒரே மகள்தான் அது தமிழ் மகள்தான். அந்த ஒன்றைத்தான் நாம் நான்கு பெரிட்டு அழைக்கிறோம். நான்கு இடங்களில் பேசப்படுவதால் நான்கு பெயரில் வழங்குகிறதேயொழிய நான்கு இடங்களிலும் பேசப்படுவது தமிழ் ஒன்றுதான்.
192. ஆத்மா!
உலகத்தில் உள்ள மேற்கண்ட ஜந்துக்கள் எல்லாம் வேறு, மனித ஜந்து மாத்திரம் வேறு என்று சொல்லும்படி வேறுபாட்டை உடைய ஜந்துவா மனிதன்? என்பன போன்ற – இன்னும் அனேக்க் கேள்விகள் இருந்தாலும் மனிதன் என்ன என்பதை நாம் முதலில் ஆராய்வோம்.
மனிதன் என்பதன் தன்மை விளக்கம் ஆங்கிலத்தில்Self என்பதான ‘தான்’ ‘நான்’ ‘என்’ என்கின்ற குறிப்பு உணர்ச்சிகளேயாகும். அக்குறிப்புகளில் ஒரு மனிதன் தன்னை, ‘நான்’ என்று சொல்லக்கொள்ளும்போதும், ‘எனக்கு’ ‘என்னுடைய’ என்று சொல்லிக்கொள்ளும்போதும் ஏற்படுகின்ற உணர்ச்சி எப்படிப்பட்டது? அது எப்படி உண்டாகிறது? என்பதைக் கவனித்தால் ஆத்மத்தன்மை என்பது தானாகவே விளங்கும்.
193. கம்பராமாயணம் இலக்கியமா?
கம்பராமாயணம் அரிய இலக்கியமாய் இருக்கிறதாகச் சொல்கிறார்கள். இருந்து என்ன பயன்? ஒருவன் எவ்வளவுதான் பட்டினி கிடந்தாலும், மலத்திலிருந்து அரிசி பொறுக்குவானா? அதுபோல்தானே, கம்பராமாயண இலக்கியம் இருக்கிறது. அதில் தமிழ் மக்கள் எவ்வளவு இழிவாக்க் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்? சுயமரியாதையை விரும்புகிறவன் எப்படிக் கம்பராமாயண இலக்கியத்தைப் படிப்பான்? இன்று கம்பராமாயணத்தால் தமிழ் மக்களுக்கு இலக்கியம் பரவிற்றா, இழிவு பரவிற்றா என்று நடுநிலையில் இருந்து யோசித்துப்பாருங்கள்!
194. கலைத் தமிழ்
தமிழ், இந்த நாட்டு மக்களுக்கும் சகலதுறைக்கும் முன்னேற்றம் அளிக்கக்கூடயதும், சுதந்திரத்தை அளிக்கக்கூடியதும், மானத்தோடும் பகுத்தறிவோடும் வாழ தக்க வாழ்க்கை அளிக்கக்கூடியதுமாகும் என்பது எனது அபிப்ராயம். ஆனால், அப்படிப்பட்டவையெல்லாம் தமிழிலே இருக்கிறதா என்று சிலர் கேட்கலாம். எல்லாம் இல்லை என்றாலும் மற்ற அநேக இந்திய மொழிகளைவிட அதிகமான முன்னேற்றத்தை அளிக்கக்கூடிய கலைகள், பழக்கவழக்கங்கள், அதற்கேற்ற சொற்கள் தமிழில் இருக்கின்றன என்று அறிகிறேன். ஆதலால், தமிழுக்கு கேடு உண்டாக்கும் என சந்தேகப்படத்தக்க வேற மொழியும் விரும்பத்தகாததேயாகும்.
195. ஜீவராசி
உலகிலுள்ள மற்ற ஜீவராசிகளைப் போலவே, மனிதவர்க்கம் என்னும் ஜீவராசியும் ஒன்றாகும். ஒருமனிதனும், ஒரு யானையும், ஒரு எறும்பும், ஒரு சிறு பேனும், பூதக்கண்ணாடி மூலம் பார்த்தறியத்தக்க அதிநுட்பமான ஒரு கிருமியும் மற்றம் பிறவும் ஒரே தத்துவத்தைக் கொண்ட ஜீவராசிகளேயாகும்.
196. தொழிலாளர் சட்டம் ஒழிக்கப்படவேண்டும்.
தொழில் துறையில் தொழிலாளிகளிடையே சுமுகமும், நாணயமும், பொறுப்பும் ஏற்பட வேண்டுமானால் லாபத்தில் பங்கு கொடுத்து, தொழிலாளர் சட்டம் ஒழிக்கப்படவேண்டும். அய்க்கோர்ட்டில் சமுக நீதி வேண்டுமானால் பார்ப்பனரை ஜட்ஜாக நியமிப்பதும், அய்க்கோர்ட் நீதிபதிகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு ஜட்ஜூகளாக்குவதும் ஒழிக்கப்பட வேண்டும்.
197. பிற மொழிக்கு அடிமையாகாதே!
மற்றொரு மொழி நமது நாட்டில் புகுத்தப்படுவதைப் பார்த்து அதனால், நமக்கு ஏற்படும் இழப்பை அறிந்து சகிக முடியாமல்தான் எதிர்க்கிறேனே ஒழிய புதியது என்றோ, வேறு நாட்டினது என்றோ நான் எதிர்க்கவில்லை.
198. தாசி உத்தியோகம்
சாஸ்திரங்கள் என்பவைகளை எழுதினவர்கள் யார்? அவர்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக இப்படியெல்லாம் எழுதினார்கள்? இம்மாதிரி வேறு தேசத்தில், வேறு சாஸ்திரத்தில் எங்கேயாவது இருக்கிறதா? என்பவைகளை யோசித்துப் பார்த்தப்பிறகு, இவற்றைக் கவனிக்க வேண்டுமேயல்லாமல், எவனோ தனக்குத் தொழில் வேண்டும் வயிற்றுப்பிழைப்பு நடக்கவேண்டும் என்பதாக ஏதவது ஒன்றை எழுதிவைத்து நமக்குக் காட்டினால், அதுவே கடவுள் வாக்காகி விடுமா? அல்லது ஆதாரமாகிவிடுமா? மனிதனுக்கு பகுத்தறிவு எதற்காக இருக்கிறது? இப்பொழுது வரவர அனேக கோயில்களில் தாசி வழக்கத்தை எடுத்தாகிவிட்டது. உதாரணமாக, மைசூர் அரசர் தங்கள் ஆட்சிக்குட்பட்ட கோயில்களுக்கு, எங்கும் தாசி உத்தியோகம் இருக்கக்கூடாது என்பதாக ஓரு உத்தரவு போட்டு, தங்கள் சாமிகளை விபச்சாரத்தில் இருந்து மீட்டுவிட்டார்கள். அதன் மூலம் அந்த சமஸ்தானத்துக் கோயில் தாசிகள் எல்லாம் நீக்கப்பட்டாகிவிடது. மைசூர் சமஸ்தானத்துச் சுவாமிகளுக்கு வெட்கம் வந்து, தங்களுக்கு இனிமேல் தாசிகள் வேண்டியதில்லை என்று அந்தக் கவர்மெண்டுக்குச் சொல்லிவிட்டது போல, நமது நாட்டுச் சுவாமிகளுக்கும் என்றைக்காவது வெட்கம் வந்தோ, அல்லது கிழப்பருவம் வந்தோ இனிமேல் தங்களுக்கு தாசிகள் வேண்டியதில்லை என்று தேவஸ்தான போரடாரிடமாவது, கமிட்டியாரிடமாவது, தர்மகர்த்தாக்களிடமாவது சொல்லிவிடக்கூடாதா என்பதாக நமது நாட்டு ‘சாமி’களை கேட்டுக்கொள்கிறோம்.
199. புரட்சிவாதி யார்?
மாறுதல் வரும்போது அதைக் கையாளுங்கள் துன்பத்திற்கும், பழிப்புக்கும் ஆளாவுத என்பது புதிதல்ல; சில மாறுதல்கள் தற்காள மக்களுக்கு கசப்பாய் இருந்தாலும், பிற்கால மக்களால் மதிப்பும் பெருமையும் பெறும் என்ற துணிவு எனக்குண்டு. அந்த நம்பிக்கையின்பேரில்தான் நாம் எந்த மாறுதலையும் செய்யத் துணியவேண்டும். நாம் இன்றே பாராட்டப்பட வேண்டும் என்று கருதிக்கொண்டு செயல்படுவது பயன்படாது.
200. உண்மைத் தலைவர்கள் உருவாகவேண்டும்
பொதுத்தொண்டு போன போக்கானது, இன்று நாட்டுக்கு ஒரு சம்பிரதாயமான தலைவனில்லாம்ல் போய்விட்டது.முன்பு தலைவர், தலைவர்கள் என்றால் அது தானாகவே மக்கள் உள்ளத்தில் புகுந்து யாரையாவது தலைவர் என்று கருதச்செய்யும். அந்தப் பதவியையும் யாரோ சிலர்- வெகு சிலர்தான் விரும்புவார்கள். அவர்களும் நாடொப்பிய தலைவர்களில் ஒருவராக இருப்பார். மக்களும் தலைவராகக் கருதுவார்கள; மதிப்பார்கள். இப்போது ஒவ்வொருவனும் தன் வாழ்க்கைப் பிழைப்பை மாத்திரம் முன்னிட்டே கவுரவத்தைக் கூட கருதாமல் தலைவனாக முயற்சித்து கூலி ஆட்களைப் பிடித்து தன்னைத் தலைவனாக ஆக்கச் சொல்லுகிறான். செய்து கொள்ளுகிறான். அதற்கேற்ப கீழ்மக்களும் எவ்வளவு கீழானவரையும் சுயநல, பதவி, பணத்தாசைக்காரனையும் தலைவனாகக் கூப்பாடு போடுகிறார்கள்; பத்திரிகைக்காரர்களும் இந்த இழித்தன்மைக்கு முழு முயற்சியோடு ஒத்துழைக்கிறார்கள். ஆனதினாலேயே நாட்டில் உணைமைத் தலைவர்களே இல்லாமல் போய்விட்டார்கள்.
201. புரட்சி ஏற்பட!
கொலை, இரத்தக்களரி, கொளத்துதல் இல்லாமல் ஒரு கொள்கை, அதுவும் புரட்சிகரமான கொள்கை ஏற்படுவது என்பது என்றுமே முடியாதது.
202. கூட்டு வாழ்க்கை இலக்கணம்
ஒரு மனிதன் தனது காலுக்கோ, காதுக்கோ, நாவிற்கோ, நயனத்துக்கோ, வயிற்றுக்கோ, எலும்புக்கோ வலி இருந்தால் அவன் எனக்கு வலிக்கிறது என்று சொல்லுவது போல், உலகில் வேறு எந்தத் தன்ப்பட்ட மனிதனுக்கும் ஏற்படும் கஷ்டத்தையும், குறைபாடுகளையும் ஒவ்வொருவரும் தங்களக்கு ஏற்பட்டதுபோல் நினைக்கும்படியும் அனுபவிப்பதுபோல் துடிக்கும்படியும், எந்த அளவு ஈடுபாடு கொள்கிறானோ, அவ்வளவுக்கவ்வளவு கூட்டு வாழ்க்கையும் ஒற்றுமை உணர்ச்சியும் ஏற்படும்.
203. புகுத்தப்பெறம் கடவுள் நம்பிக்கை
உலகிலேயுள்ள கோடானுகோடி யானை முதல் கிருமி ஈறாக உள்ள ஜீவராசிகளில் மனிதனைத்தவிர, அதுவும் மினதரிலும் பல பேர்களைத்தவிர, மற்ற ஜீவராசிகளுக்கும், கோடிக்கணக்கான ஜீவனுக்கும் கடவுள் நம்பிக்கை என்பது அறவேயில்லை. மனிதரிலும், உலகில் ஒரு பகுதிக்குட்பட்ட மனிதருக்கு கடவுள் நம்பிக்கை புகுத்தப்படுகிறது, கற்பிக்கப்படுகிறது என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில், கடவுள் நம்பிக்கை உள்ள மக்கள் எல்லோருமே ஒரே மாதிரியான கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லர். ஒரே மாதிரியான கடவுள் தன்மை, ஒரே மாதரியான கடவுள் சக்தி, ஒரே மாதிரியான கடவுள் செயல் என்ற நம்பிக்கை கொண்டவர்களுமல்லர்.
இதற்குக் காரணமென்ன? கடவுள் நம்பிக்கையும் அதன்மேல் சொல்லப்பட்ட பலவாறான தன்மைகளும் மனிதனுக்கு இயற்கையாய்த் தானாகத் தோன்றாமல், மற்றவர்கள் கற்பிப்பதாலும், கற்பிக்க நேருவதாலும், சூழ்நிலையாலும் தான் அனுசரிக்கும் – தன் கட்டுப்பட்ட மத்தத்தாலும், மத ஆசாரங்களாலும், மதக்கற்பனை, மதக்கோட்பாடு என்பவைகளாலுமே ஏற்படுவதால் – இவை பற்றிய விஷயங்களில் ஒன்று போல் நம்பிக்கை கொள்ள முடிவதில்லை.
204. துயரம் நீங்குமா?
இந்த தேசத்தில் ஏற்பட்டிருக்கும் ஜனசமூக அமைப்பின் அஸ்திவாரமே சரியாய் இல்லாமல் இருக்கிறது. இந்த அஸ்திவாரத்தின் மீது கட்டக்கூடிய எந்த அமைப்பும் ஜனசமுகத்திற்கு நன்மையளிக்கக்கூடியதல்ல.
205. தமிழ் சீர்திருத்தம்
எழுபது, எண்பது ஆண்டுகளுக்கு முந்திய பதிப்புகளிலும் எழுத்துகளிலும் ”’ஈ” என்கற எழுத்தானது ”இ” எழுத்தையே மேலே சுழித்த வட்டவடிவத்தில் இருந்து வந்திருக்கிறது.
இன்னும் 400,500 ஆண்டுகளுக்கு முந்தின ”கல்லில் எழுதப்பட்ட எழுத்துக்கள்” அநேகம் வேறு வடிவத்தில் இருந்து வந்திருக்கிறது.
அதுபோலவே, இப்பொழுதும் சில எழுத்துக்களை மாற்ற வேண்டியதும் சில எழுத்துக்களைக் குறைக்க வேண்டியதும், சில குறிகளை மாற்ற வேண்டியதும் அவசியம் என்றும் அனுகூலமென்றும் பட்டால் அதைச் செய்யவேண்டியதுதான் அறிவுடமை.
206. கண்காட்சி
கண்காட்சி என்ற பெயர் பொருத்தமாக இருக்கிறதா அல்லது வேறுபெயர் வேண்டுமா என்கிற விஷயம் வேறு இருக்கிறது. ஏன் என்றால், கண் அழகுக்காக இது வைக்கப்படவில்லை. இதிலிருந்து மனிதன் தனக்குத் தேவையான பல அருமையான கருத்துகளை அறிந்துகொள்ள வைக்கப்படுவதுதான்.(மனிதனுடைய அறிவுக்கு, ஆராய்ச்சித்திறனுக்கு, நல்ல படிப்பினைக்கு, வாழ்க்கைக்கு மற்றும் பலவகையிலும் பயன்படுவதற்குக் கண்காட்சியானது பயன்படுகிறது.) இத்தனை நல்ல காரயங்களையும், மக்களின் அறவையும் கெடுத்து மக்களைக் கெடுப்பதற்காகவே, இதற்கு நேர்மாறாக ஏற்படுத்தப்பட்டவைதாம் இந்தக்கோயில்கள், விழாக்கள், உறசவங்கள், பண்டிகைகள் என்பவை ஆகும். இவை மக்களுக்கு ஒன்றும் பயன் தருவதில்லை. ஏதோ பல காரியங்களை முன்னிட்டு கூட்டம் சேர்கிறது. ஆண்கள் பெண்களைப் பார்க்கவும், பெண்கள் ஆண்களைப் பார்க்கவும்தான் இவை பயன்படுகின்றன. இதைத்தவிர எவனும் அங்கு போய்ப் பார்த்து புதிதாக – வாழ்க்கைக்குப் பயன்படுகின்ற அறிவுக்கேற்ற சங்கதி ஒன்றும் தெரிந்துகொண்டு வரமாட்டான். இவற்றின் மூலம் அறிந்து கொள்ளவும் முடியாது. ஆனால், கண்காட்சியைப் பார்ப்பதின் மூலம் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டு அறிவை விருத்தி செய்து கொள்ளலாம். நம்மவர்கள் பெரிய புண்ணிய சேத்திரங்களுக்குச் சென்று பார்க்கிறார்களே தவிர, இது மாதிரியான அறிவுக் கண்காட்சியை அவ்வளவு சிரத்தையுடன் சென்று பார்ப்பது கிடையாது.
207. வரியும் வறியவர்களும்
நாட்டை நல்ல முறையில் வளப்படுத்த, நான் நாட்டின் அதிகாரியாக இருந்தால், அதிக வரி போடுவேன். ஏழைகளிடத்தில் எவ்வளவுதான் கையில் கொடுத்தாலும் அடை உடனே செலவு செய்துவிடுவார்கள் ஆகவே அவர்கள் கையில் பணம் கொடுக்காமல் வரியாகப் பிடித்து அவர்க்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கலாம்.
208. இனச் சுயமிரயாதை
கன்னடியனுக்கும், மலையாளிக்கும் இனப்பற்றோ, இனச் சுயமரியாதையோ, பகுத்தறிவுணர்ச்சியோ இல்லை என்பதாகும். எப்படியெனில், அவர்களுக்கு வருணாசிரம்ம் வெறுப்பு கிடையாது; சூத்திரன் என்பதுபற்றி இழிவோ, வெட்கமோ பெரும்பாலோருக்குக் கிடையாது; அவர்கள் மத மூடநம்பிக்கையில் ஊறிவிட்டவர்கள்.
இரண்டாவதாக, அவர்கள் இருவருக்குமே மத்திய ஆட்சி என்னும் வடவர் ஆட்சிக்கு தங்கள் நாடு அடிமையாய் இருப்பதுபற்றியும் சிறிதும் கவலையில்லை.
209. கடவுளைச் சொல்லி அயோக்கியத்தனம்
நாம் உண்மையான அறிவுள்ள, சிந்தனையுள்ள மக்களாக வேண்டும். எவனுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ அவன் அயோக்கியத் தன்மையுடையவனாகத்தானிருப்பான். ஒவ்வொரு மதத்தையும் பரப்ப மதவாதிகள் இருக்கிறார்கள்.
210. சட்டம் நமக்கு உதவவில்லை!
சமுதாய சீர்திருத்த விஷயத்தில், அரசியல் சீர்திருத்தச் சட்டங்கள் மூலம் இதுவரை நாம் தக்க பலன் அடையவில்லை. சமுதாயத்தில் ஏதாவது சிறிய முன்னேற்றமாவது பெற்றிருக்கிறோம் என்று சொல்லப்படுமானால் – அது, பொதுக்கிளர்ச்சியின் பயனாய் – நிவர்த்தி இல்லாமல் மேல்சாதிக்கார்ர்கள் இடம் கொடுக்கவேண்டி ஏற்பட்டதல்லாமல் மற்றபடி சட்டத்தின் மூலமாய் ஏற்பட்டதென்று சொல்லுவதற்கு தகுந்ததான காரியம் ஒன்றும் இல்லை.
211. மனிதனாவது எக்காலம்?
பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருக்கிறீர்கள். சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கத் தயாராயிருக்கின்றீர்கள். ஆனால், உங்கள் பகுத்தறிவைச் சிறிதளவுகூடப் பயன்படுத்தத் தயங்குகிறீர்கள். இதில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம்காட்டுகிறீர்கள்? இந்நிலை இருந்தால் என்றுதான் நாம் மனிதர்ளாவது?
212. அறிவில் நம்பிக்கை வை!
ஆத்திகன் என்றால் அறிவில் நம்பிக்கை வைக்காமல் – சாஸ்திரம், புராணங்கள் முதலியவைகளை அப்படியே ஒப்புக்கொண்டு, ஆராயாமல் நடப்பவன் என்று பொருள். இராமயணத்திலேயே ஓர் இடத்தில் நாத்திகனைப் பற்றிக் குறிக்கும்போது ‘எவன் ஒருவன் நீதியில் நம்பிக்கை வைத்து நடக்கின்றானோ அவன் நாத்திகன்’ என்று குறிக்கப்பட்டுள்ளது. அப்படி அறிவில் நம்பிக்கை வைத்து நடக்கவேண்டும் என்றுசொன்னவர்களெல்லாம் ஒழிக்கப்பட்டே இருக்கின்றனர். அதன் காரணமாகவே இந்தத்துறையில் இறங்கிப் பாடுபட எவருமே முன்வருவதில்லை.
213. ஆரிய நாடு
ஆரியனுக்கு வெள்ளையனிடம் உள்ள உரிமையெல்லாம் ‘நான் உள்ளாளாயிருந்து சூழ்ச்சி செய்வதும், சதி செய்வதும், முஸ்லிமிடமிருந்தும், திராவிடனிடமிருந்தும் உன் கைக்கு நாடு வரும்படி செய்தேனே, என்று கேட்பதுபோல் அல்லாமல் வேறு என்ன தொடர்பு என்று கேட்கிறேன். வெள்ளைக்காரன் இந்தியாவின் பல நாடுகளையும் கைப்பற்றும்போது, ஆரியன்குக் எங்காவது நாடு இருந்ததா என்று கேட்கிறேன்.
214. கெட்டுக்கிடக்கும் நாடு
நிர்வாண நாட்டில் கோவணம் கட்டிக்கொண்டு நடப்பவன் பைத்தியம்பிடித்தவன் என்று சொல்லப்படுவதுபோல், காட்டுமிராண்டி நாட்டில் பகுத்தறிவுவாதி பைத்தியக்காரன் போல காணப்படுவது எப்படித் தவறாகும்?
215. காதல் மணம்
பழங்காலம் காதல் மணம் இன்று ‘மிருகப்பிராய’ மணம் என்றே சொல்லவேண்டும். காதல் என்பது மிக மிகச் சாதாரணமான அற்ப விஷயம். காதலுக்கு அடிமையாவது இன்றையச் சமுதாய வாழ்க்கை முறைக்கும் சிறிதும் பொருந்தாது. கண்டதும் காதல் கொண்டு காதல் பசி தீர்ந்ததும் சலிப்படைந்து, அதன் பயனைப் பிறகு வேதனையுடன் பொறுத்துக்கொண்டிருப்பதென்றால், அது இன்ப வாழ்க்கையாக இருக்க முடியாது. காதல் இல்லாமல் இருக்க முடியும். உண்மையைப் பேச வேண்டுமானால், யாரைப் பார்த்தால் யாருக்குக் காதல் இல்லாமல் இருக்க முடியும்? சமுதாயக் கட்டுப்பாடுகள் பல இருப்பதால் காதல் கொண்டு ஏமாற்றம் அடைவதுமாக வாழ்வு முடிகிறதே ஒழிய வேறில்லை. காதலை அவரவர் உள்ளத்திற்கே விட்டுவிடுவோம்.
216. தமிழ் பற்று
ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றேயாகும். மொழிப்பற்று இராதவரிடத்து தேசபற்று இராதென்பது நிச்சயம். தேசம் என்பது மொழியை அடிப்படையாக்க் கொண்டு இயங்குவது. ஆனால் தமழர்களுக்குத் தாய்மொழிப்பற்று பெருகவேண்டும் என்பது எனது பிரார்த்தனை.
217. பேதமில்லாத படிப்பு
பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் நல்ல நகைகள், ஆடம்பர உடைகள் உடுத்துவதுதான் பெருமை என்று கருதாமல் எளிய உடைகளே உடுத்தவேண்டும், எல்லா பிள்ளைகளும் கலந்து பழகும்படியான இடங்களில் பேதங்கள் இல்லாமலிருப்பதுதான் நல்லது.
218. அறத்தால் வரும் இன்பம்
தனக்குப்புகழ் வேண்டும்; தன்னை மற்றவர்கள் பெருமையாக்க் கருதவேண்டும் என்று கருதுவது மனித இயற்கை. இதற்காகவே மற்றவருக்கு உதவுவது, மற்றவருக்குப் பயன்படுவது, பொதுத்தொண்டு ஆற்றுவது என்பன ஆகும். சமுதாயத்தில் தன் கடமையை உணர்ந்து பிறருக்குப் பயன்படுதலே அறம்; அந்த அறத்தால் வருவது இன்பம்.
219. மனித முயற்சி
அய்ந்து வயது சராசரியாக வாழ்ந்த ஒரு இந்தியன் இன்றைக்கு எப்படி 52 வயது உடையவனாக மாறினான்? பெரிய பெரிய நோய்களையெல்லாம் எப்படித் தீர்த்துக் கட்டியிருக்கிறார்கள்? இது மனித அறிவு முயற்சியால்தானே! வெறும் கடவுளை மட்டும் நம்பிக்கொண்டு, ‘சிவசிவ’ என்றால் இந்த வளர்ச்சியைப் பெற்றிருக்க முடியுமா?
220. சுயராஜ்யம் யார் கையில் இருக்கிறது?
சுயராஜ்யம் வந்தாலும் வந்தது – இந்த நாட்டில், இதுவரை இல்லாதவர்களெல்லாம் வந்து புதிது புதிதாக்க் குடியேறுகிறார்களே! மவுண்ட் ரோடிலுள்ள பெரிய பெரிய கட்டடங்களெல்லாம் வடநாட்டவர்களுடையதாக ஆகி வருகின்றனவே! வியாபாரம், கைத்தொழில் இவை யார் கையில்? இந்நாட்டு வியாபாரமும் கைத்தொழிலும் பெரும்பாலும் வடநாட்டவர்களின் கையில்தானே இன்று இருந்து வருகின்றன.
221. கடவுளைவிட மேலானது எது?
பெரும்பாலோர் ஞானம் என்பதும், அறிவு என்பதும் கடவுளைக் காண்கிறதும், மோட்சத்தை அடைவதும்தான் என்று நினைக்கிறார்கள். இந்த எண்ணம் குழந்தையிலிருந்தே ஊட்டப்பட்டு வருவதால், மேன்மேலும் ஒரு மாணவன் தெளிவற்றவனாகவே ஆக்கப்படுகிறான்.
மாணவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய அருங்குணங்கள் ஒழுக்கம், நாணயம், நேர்மை, மற்றவர்களுக்கு நன்மை பயத்தல், பிறருக்கு ஊறு செய்யாமல் இருத்தல், இவைகள் நமக்குக் கடவுளைவிட மேலானவை.
222. சமநிறை அரசு
உண்மையான நல்ல ஆட்சி, சமநிறை ஆட்சி என்றால் துலாக்கோலும் முள்ளும் தட்டம்போல், ஒவ்வொரு மனிதனும் மற்ற மனிதனக்குச் சமநிறைபோல் ஆக்கப்படும் ஆட்சியாக இருக்கவேண்டும்.
223. மனித ஜீவன்
எப்போதும் நான் நன்றி பெறுவதில் கவலைப்படிவதே இல்லை. அது மனித சமுதாயத்திற்கு அவ்வளவு எளிதான காரியமல்ல. துஷ்ட மிருகங்களால் மக்களுக்கோ அல்லது எந்த ஜீவனுக்கோ நன்றி காட்ட முடியுமா?
அதுபோல்தான், மனித ஜீவனிடம் நன்றி எதிர்பார்ப்பது அறிவில்லாத தன்மையேயாகும். ஏனெனில், மனித ஜீவன் துஷ்ட ஜந்துக்கள் இனத்தில் சேர்ந்த ஜீவனாகும்.
மனிதன் என்பவன் தன்னலத்திற்கு என்பதாக வாழ வேண்டியவனே ஆவான்.
உலகில் என்க்குத் தோன்றிய அளவில் நாய் ஒன்றுதான் நன்றி காட்டும், விசுவாசம் காட்டும் ஜீவன். அதைப்பற்றி இங்கு அதிகமாக விவரிக்க நான் விரும்பவில்லை.
224. மதம் உழைப்பை அழிக்கும்
மதமே உழைப்பவனைத் தரத்திரத்தில் ஆழ்த்தி உழைக்காதவனை உச்சத்தில் வைப்பதற்கும் உதவி செய்கிறது – என்கிற முடிவின் பேரிலேயே ‘புரட்சி’ தோன்றியிருக்கிறது என்பதில் யாருக்கம் அய்யம் வேண்டாம்.
225. நல்ல நூல்கள் தேவை
மூடநம்பிக்கை, ஒழுக்கக்கேடு, சமுதாய இழிவு உள்ள நூல்கள் எவையானாலும் அவை பள்ளியில் மாத்திரமல்லாமல் அரசியலிலேயே புகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
226. அறிவைப் பெருக்கு
குளிர்நாட்டு உடை எப்படி உஷ்ண நாட்டிற்குப் பயன்படாதோ – அதேபோல், மேல்நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதார சமத்துவக் கொள்கை இந்நாட்டுக்கு இன்றைய நிலையில் பயன்படாது. நாமும் மேல் நாட்டினரைப் போல் பகுத்தறிவு உள்ள மக்களாக ஆகிவிடுவோமானால் அப்புறம் கம்யூனிசம் நமக்கு முற்றிலும் பயன்படும். இதை கம்யூனிஸ்டுகள் உணர்ந்து மக்களுக்கு முதலில் அறிவு பெருகச்செய்யவேண்டும்.
227. கற்பனையே கடவுள்
கடவுள், மதம், ஆத்மா, நான், பாவ-புண்ணியம், மோட்சம், நரகம், ஒழுக்கம் என்பனவெல்லாம் மனிதனால் கற்பனை செய்யப்பட்ட ஒரு கட்டுக்கதையேயொழிய வேறல்ல. இன்னும் தெளிவாக்க் கூறவேண்டுமானால் ஒவ்வொரு நாட்டிலுமுள்ள ஒருசில சுயநலக் கூட்டத்தார் – ஊரார் உழைப்பில் உடல் நோவாது உண்டு வாழவேண்டுமென்று விரும்பும் மனித் புல்லுருவிகள், புரோகிதர்கள் இத்தகைய கற்பனை செய்து மக்களை மூடர்களாக்கி, அறிவுக்கு பகைவர்களாக்கி, தன்னம்பிக்கையை இழக்கும்படி செய்து, இவ்வுளக வாழ்க்கையின் இன்பத்தை மக்கள் வெறுக்கும்படி தூண்டி, தாங்கள் இவ்வுளக வாழ்க்கையில் பூரண இன்பம் துய்துக்கொண்டு, மற்ற மக்களுக்கு மறு உலக வாழ்க்கையில் மோகங்கொள்ளும்படி செய்துவிட்டனர்.
228. கண்காட்சி அறிவு.
உலகத்திலுள்ள கண்காட்சிகளை எல்லாம் பார்ப்பவன் உலக அறிவு பெற்றவனாவான். உலகத்தில் இருக்கும் பல்வேறு கண்காட்சிகளும் ஒரு பல்கலைக்கழகம் போல் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
229. பழகத்தெரிவதற்கு பயிற்சியளிக்க வேண்டும்
பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளுக்கு முதன்முதலில் ஒழுங்கு முறையைப் புகட்டுவதில்தான் கவலை வேண்டும். அதுதான் முக்கியம். அடுத்தப்படியாக உள்ளதுதான் கல்வி. முதலில் எப்படிப் பழகவேண்டும் என்ற நல்லொழுக்கத்தைப் புகட்ட வேண்டும். நல்லொழுக்கம்தான் ஒரு மனிதனைப் பிற்காலத்தில் சிறந்த பண்புடையவனாக ஆக்குகிறது.
230. பதிவிரதை யார்?
பத்தினி- பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள்தனத்திலிருந்தும், மூர்க்கத்தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும்.
இச் சொற்களுக்கு இயற்கையிலோ, நீதியிலோ, சமத்துவத்திலோ, சுதந்திரத்திலோ சிறிதும் இடமில்லை. இச்சொற்கள் தமிழ்ச் சொற்களுமல்ல, இச்சொற்களுக்கு உரிய பொருளில் தமிழில் சொற்களோ, சொல்லோ இல்லை.
இச்சொற்பொருளுக்குள்ள குணம், மனிதர்களுக்கு அவசியம் என்ன? என்பதுபற்றி இதுவரையிலும் யாராலும் விளக்கப்படவே இல்லை. இச்சொற்கள் ஆரியமொழிச் சொற்கள் என்றாலும், அவர்களது பழக்க வழக்கங்களிலும் அவர்களது நூல்கள், கதைகள், கற்பனைப்புராண இதிகாசங்கள், நீதிகள், நடப்புகள், முதலிய எவற்றிலும் இச்சொற்களுக்கு உரிய குணங்கள் எவையும் அறிவுக்கு ஏற்ற முறையில் கற்பிக்கப்படவே இல்லை. ஆரிய புராண இதிகாசங்களில் காணப்படும் பதிவிரதைகள், பத்தினிகள் யாவரும் மேற்சொன்ன பொருளுக்கு ஏற்றபடி நடந்தார்கள். நடந்துகொண்டார்கள் என்பதாக ஒரு பதிவிரதைகூடச் சுட்டிக்காட்டப்படவில்லை.
231. ஆத்திகரின் கடவுள்
இளைத்தவனை வலுத்தவன் கொடுமைப்படுத்துவதும், ஏமாந்தவனைத் தந்திரசாலி ஏமாற்றுவதும் இன்று ஆத்திகர்களுடைய கடவுள்களின் இரண்டு கண்களாகவும், தேச பக்தர்கள், தேசாபிமானிகள் என்பவர்களின் ஜீவநாடியாகவும் இருந்து வருகின்றன.
232. அறிவளிக்கும் ஆசிரியைகள் தேவை
பெருமைமிக்க ஆசிரியர்கள் நமது பிள்ளைகளை, மதவாதிகளாக்க வேண்டுமென்று கருதுவதைவிட, அறிவாளிகளாக்க வேண்டுமென்று பாடுபடவேண்டும்.
233. நல்ல நூல்கள்
நூல் வியாபார நிலையங்கள் எந்த மாதிரி நூல் நிலையமானாலும் இனி நஷ்டப்பட வேண்டிய அவசியமேற்படாது. நாட்டில், படிக்கும் மக்கள் திகமாகி வருகிறார்கள், படித்த மக்கள் கொஞ்சம் பேரும் எதையாவது வேண்டும் என்கின்ற ஆர்வமுள்ளவர்களாக ஆகிவருகிறார்கள். அப்படியானால் குப்பை கூளப்பத்திரிகைகளும், ஒன்றுமற்ற அத்தான், அம்மஞ்சி, மன்னி, மதனி ஆரிய பழக்க வழக்க உரையாடல்களும், வெறும் காதல் கதைகளும்; நேரப்போக்கு போதைக்கேற்ற பித்தலாட்டக் கட்டுரைகளும், ரிஷிகள், மகான்கள், பாபாக்கள் விளம்பரங்களை செய்து மக்களை வஞ்சித்து ஏமாற்றும் செய்திகளும் – இவ்வளவு ஏராளமாய் விற்பனையாகுமா? இவைகளுக்காகவும், கொள்கை இல்லாமல் ஈசல்கள் போல் பொலபொலவென்று பத்திரிகைகள் தோன்றுமா? மக்களைப்படிக்கச் செய்யாமல் செய்து வைத்திருந்தார்கள் ஒரு கூட்டத்தார்; அதை மீறிக்கொண்டு எப்படியோ மக்களுக்குள், எதையாவுத் படிக்கவேண்டும் என்கின்ற ஆர்வம் வந்துவிட்டது. இது யாரால் ஏற்பட்டிருந்தாலும் இந்த ஆர்வத்தை முன்னரே தடைசெய்து வைத்திருந்த கூட்டத்தார் மூடநம்பிக்கைக்கும், மானமற்ற தன்மையை விரும்புவதற்கும், பித்தலாட்ட வஞ்சகர்களுக்கு மக்களை அடிமையாக்குவதற்கும் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள். அதற்கு நாம் இடம்விடுவதென்றால் இது மகா மோசமான காரியமேயாகும்.
234. அன்பானவன் நான்!
நான் தமிழனிடத்தில் அன்பு வைத்திருக்கிறேன் என்றால், அதன்மூலம் நான் எதிர்பார்க்கும் நன்மையையும், அது மறைய நேர்ந்தால் அதனால் இழப்பு ஏற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழனிடத்து அன்பு செலுத்துகிறேன்.
235. பெண்ணுக்கு இழைத்த கொடுமை
கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மையன்பை காதலை மறைத்துக்கொண்டு – காதலும், அன்புமில்லாதவனுடன் இருக்கவேண்டும் என்கிற சமூக்க் கொடுமையும் அழியவேண்டும்.
236. உழைப்பதாய்ச் சொல்லும் உன்மத்தர்கள்
‘பறையர்’என்கிற ஒரு சாதிப்பெயர் நம் நாட்டில் இருப்பதால்தான் ‘சூத்திரன்’ என்கிற ஒரு சாதிப்பெயர் நம்நாட்டில் இருக்கிறது. பறையர் என்கிற சாதிப்பெயரைவிட, சூத்திர்ர் என்கிற சாதிப்பெயர் மிக்க இழிவானது. இந்து சாஸ்திரப்படி, பறைய ஸ்திரிகளில் பதிவிரதைகளுக்கும் சரியான ஒரு தாய்க்கும், தகப்பனுக்கும் பிறந்தவர்களும் இருக்கலாம். சூத்திர்ர்களில் அப்படியிருக்க இடமில்லை. ஏனென்றால், ‘சூத்திரச்சி’ என்றால் தாசி, வேசி மகள் என்பதுதான் பொருள். ‘சூத்திரன்’ என்றால் தாசி மகன், வேசி மகன் என்றுதான் பொருள்.இதை ஒப்புக்கொள்ளாதவன் இந்து ஆக மாட்டான் என்பது சாஸ்திர சம்மதம். ஆகையால் என்போன்ற சூத்திரன் என்று சொல்லப்படுபவன், ‘பறையர்கள்’ என்று சொல்லப்படுவோருக்கு உழைப்பதாய் சொல்லுவதெல்லாம், சூத்திர்ர்கள் என்று தம்மை யாரும் கருதக்கூடாது என்பதற்காகத்தானேயல்லாமல் வேறல்ல. ஆகையால், எனக்காக நான் பாடுபடுவதென்பது உங்கள் கண்ணுக்கு உங்க்ளுக்காகப் பாடுபடுவதாய்த் தோன்றுகிறது. உங்களைத் தாழ்மையாய் கருதும் பெண்களும், ஆண்களும் தாங்கள் பிறரால், உங்களைவிடக் கேவலாமாய் – தாழ்மையாய்க் கருதப்படுவதை அறிவதில்லை. அன்னியர்களைத் தாழ்ந்தவர்களாக நினைக்கும் அறியாமையால், தங்களை மற்றவர்கள் தாழ்மையாய் நினைப்பது தங்களுக்கு ஈனமாய்த் தோன்றுவதில்லை.
237. கட்சி மாறி
அரசியலில் கட்சி மாறுகிறவர்கள், அயோக்கியர்கள், அயோக்கியர்கள், அயோக்கியர்கள்.
238. மொழிப்பற்றுக் கொள்… தமிழா!
தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு மொழிப்பற்று அவசியம்! அவசியம்! என்று சொல்லுகிறேன். வங்காளிக்கு வங்க மொழியில் பற்றுண்டு; மராட்டியனுக்கு மராட்டிய மொழியில் பற்றுண்டு. ஆனால், தமிழனுக்குத் தமிழில் பற்றில்லை. தாய்மொழியில் பற்று செலுத்தாத வரையில் தமிழர்கள் முன்னேற்றமடையமாட்டார்கள்.
239. சிந்துவெளி நாகரிகம்
சிந்துந்தி தீரத்தைப்பற்றியும் அங்கு மொகஞ்சதாரோ, ஹரப்பா முதலிய இடங்களல் கண்டுபிடிக்கப்பட்ட பூர்வ சின்னங்களைப்பற்றியும் பேசுவதில், ஆரியர்களுக்கு முன் தமிழர்கள் அங்கிருந்தார்கள் என்றும், இந்தியா கண்டம் பூராவும் தமிழர்கள் இருந்தார்கள் என்றும்தான் சொல்லப்படுகிறது.
ஆனால், மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகம் இன்றைக்கு 6000, 7000 வருஷ காலத்துக்கு முந்தியது என்று சொல்லப்படுகிறது.
ஆரியர்களுக்கு முன்பே இந்த இடங்கள் நாகரிகமாய் இருந்திருந்தால் ஆரியம் இங்கு எப்படி வந்திருக்க முடியும்! இந்தியாக் கண்டம் முழுவதும் சமயம், சமுதாயம், கலை, பழக்கவழக்கம் முதலிய யாவும் ஆரியமாய் – ஆரிய ஆகமம், ஆரிய ஆச்சாரம்,தர்மம், ஆரியக்கதை ஆகியவைகளைக் கண்ட இலக்கியம், சரித்திரம், காவியம் ஆகியவை எப்படி ஏற்பட்டிருக்க முடியும்?
240. போலியான ஆதரவு
ஆதிதிரவிடர் முன்னேற்றத்துக்கு உழைப்பதாய் நினைத்துக் கொள்வதும், ஆதி திரவிடர்களுக்கு உழைப்பதாய் சொல்லுவதும், வேஷத்திற்காகத்தான் உழைக்கிறவர்களும், பேசுகிறவர்களுமாய் இருப்பார்கள் என்பது எனது அபிப்ராயம். அதாவது, இந்தியாவின் நன்மைக்காக அய்ரோப்பியர்கள் இந்தியாவை ஆளுகிறார்கள் என்பதுபோல்தான் அது ஆகுமேயல்லாமல் வேறல்ல. நாம் அப்படி நினைக்கவே இல்லை.
241. கடவுள் செயலா?
மேடும் பள்ளமும் கடவுள் செயலானால், மேட்டை வெட்டிப் பள்ளத்தில் போட்டு சமம் செய்வது கடவுள் செயலுக்கு விரோதமான காரியமேயாகும். மனிதனுக்கு முகத்தில், தலையில் மயிர் முளைப்பது கடவுள் செயலானால், சவரம் செய்து கொள்வது கடவுள் செயலுக்கு எதிராகவே செய்யும் – அதாவது, ஓரளவுக்கு நாத்திகமான செயலேயாகும். பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவதும் நாத்திகமேயாகும்.
242. அறிவின் தன்மை
அறிவாளிக்கு, இயற்கையை உணர்ந்தவனுக்கு துன்பமே வராது. உடல்நலத்துக்கு ஊசி போட்டுக்கொள்வதில் வலி இருக்கிறது. அதற்காக மனிதன் துன்ப்ப்படுவதில்லை. வலி இருந்தாலும் அதைப் பொறுத்துக்கொண்டால்தான் சுகம் ஏற்படும் என்று கருதிப் பொறுத்துக்கொள்ளுகிறான். அதுதான் அறிவின் தன்மை.
243. நல்ல நூல் படி
சாதி வித்தியாசமோ, உயர்வு தாழ்வோ கற்பிக்கின்ற புத்தகங்களைப் படிக்கக்கூடாது என்று சொல்லிவிட வேண்டும். மீறிப் படிக்க ஆரம்பித்தால் அவற்றைப் பறிமுதல் செய்யவேண்டும்.
244. மதமும் சீர்திருத்தமும்
மதத்தை வைத்துக்கொண்டு, சீர்திருத்தம் செய்யவேண்டும் என்று புறப்பட்ட ஒருவர்கூட இதுவரையில் ஒரு சிறிதும் வெற்றிபெற முடியாமலேயே போய்விட்டது.
245. மானம்
ஒருவன் தன்னுடைய சொந்தக் காரியத்தைப் பொறுத்தவரையில்தான் மானத்தையும், கவுரவத்தையும் கவனிக்கவேண்டும். பொதுநலம், பொதுத்தொண்டு என்று வந்துவிட்டால் அவை இரண்டையும் பார்க்ககூடாது.
246. இயற்கையைப் புகழ்
சமுதாயத்துக்கு தந்திரபுத்தி இல்லாமல் உண்மையாய் பாடுபடுகிறவன்தான் உண்மையான் இயற்கைப் புகழை அடைகிறான். அப்புகழ்தான் அவனுக்குக் கிடைக்கும்.
247. ஆண் ஆதிக்கம்
ஆண் எப்படி வேண்டுமானாலும் திரியலாம்; எவ்வளவு மனைவிகளை வேண்டுமானாலும் மணக்கலாம் என்கின்ற முறையே, விபச்சாரம் என்னும் பிள்ளைகளைப் பெற்றெடுக்கின்றது.
248. படிப்பு
இன்றைக்கு நாம் அனுபவிக்கும் தொல்லைகளுக்கு படித்தவர்கள் படிப்பே காரணம், ஆடு, நரிக்குப் பயன்படுவதுபோல் படிக்காதவன், படித்தவர்களுக்கு உணவாய்ப் பயன்படுகிறான். நம் நாட்டில் ஆரியர் ஆதிக்கம், வருண முறை ஏற்பட்ட காலம் முதல் நமக்கு அளிக்கும் படிப்பு பெரிதும் அயோக்கியத்தனத்துக்கும், சுரண்டுவதற்கும் தூண்டுவது தவிர, வேறு ஒன்றுக்கும் பயன்படாது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
249. அறிவு வழி
மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டுவிட்டு அறிவின் வழிசென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையிலிருந்து மனிதத்தன்மை பெறமுடியும்.
250. ஆறாவது அறிவை அடக்கு வைக்காதே!
எதற்கும் பகுத்தறிவை உபயோகிக்கவிடாமலும், ஆராய்ச்சி செய்யவோ, ஆலோசனை செய்து பார்க்கவோ இடம் கொடுக்காமலும் அடக்கிவைத்த பலனே, நமது நாட்டின் இன்றைய இழிந்த நிலைக்கும் குழப்பத்திற்கும் காரணமாய் இருக்கிறது.
251. தெளிவுபெற்ற பகுத்தறிவு
உங்களை ஆள்வது கடவுளோ, தமவாதிகளோ அல்ல. உங்கள் அறிவுதான். நீங்கள் நான் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் உங்கள் பகுத்தறிவுக்குச் சரியென்று பட்டதைமட்டும் ஏற்றுக்கொண்டு மற்றதைத் தள்ளிவிடுங்கள்.
பகுத்தறவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி ஆகும். உயிரினங்களில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்த நிலையில் இருகின்றானோ, அவ்வளவுக்கவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள். மனிதன் எவ்வளவுக்கெவ்வளவு பகுத்தறிவில் தெளிவு பெறுகின்றானோ அவ்வளவுக்கவ்வளவு பகுத்தறியும் திறன் உள்ள பக்குவமானவன் என்று பொருள்.
252. சுதந்திர ஞானம் எப்படி வரும்?
அறிவு வேறு, மதம் வேறு என்று பிரித்துவிடவேண்டும். அறிவை உண்டாக்கிவிட்டு, பிறகு அந்த அறிவின் மூலம் மதத்தைக் கொள்ளும்படி செய்யவேண்டும். அப்படியல்லாமல், மதத்தை புகுத்தி அடன்மூலம் அறிவை வளரவிடாமல் செய்துவிட்டால் சுதந்திரஞானம் எப்படி ஏற்படும்?
253. சமதர்மம் ஏற்படுவது எப்போது?
இந்தியாவில் சமதர்மக் கொள்கை என்றைக்காவது ஒரு நாள் ஏற்படும் என்று நினைப்போமேயானால், அது தேசிய காங்கிரசும், காந்தியமும் ஒழிந்த நாளாக்த்தான் இருக்குமே தவிர, அவை ஒழியாமல் ஏற்படாது என்பது உறுதி.
254. முதலில் மனிதனாவதற்கு முயற்சி செய்!
மந்திரியாவதைவிட, முதல் -மந்திரியாவதைவிட, கவர்னர் ஆவதைவிட, கவர்னர் ஜெனரலாவதைவிட, அதற்கும் மேலான மகாத்மா ஆவதைவிட முதலில் நாமெல்லாம் மனிதர்களாக ஆகவேண்டும். மனிதர்களாக ஆகவேண்டுமானால் முதலாவது பகுத்தறிவு விளக்கமாக் ஆக வேண்டும். இயற்கை சிந்தானசக்தி வளர்க்கப்படவேண்டும்.
255. எழுச்சியாவது மண்ணாங்கட்டியாவது!
நாட்டிலே இவ்வளவு தூரம் எழுச்சியும், நாட்டு எழுச்சியும், மொழி எழுச்சியும் ஏற்பட்ட காலத்திலும் இந்த மந்திரிகள் இவ்வளவு அலட்சியமாக இருந்துகொண்டு, தங்கள் வாழ்வின் வளப்பத்தையும், பெருமையையும் மாத்திரம் கவனித்துக்கொண்டு, தங்களுக்குச் சொந்தத்தில் வேண்டியவர்களுக்கு மாத்திரம் ஏதோ ஒரு சில பதவியை அளித்துக்கொண்டு, காலம் தாழ்த்தி வருகிறார்கள் என்றால்- தமிழ் இனத்திற்கே இது அவமானமும், கேடும் ஆன காரியமாகுமல்லவா? தமிழை வளர்க்கின்ற சர்க்கார், தமிழுக்கு நல்லது செய்யாவிட்டாலும், தமிழர்களுக்கு மொழித்துறையில் தொல்லையாவது கொடுக்காமல் இருக்க வேண்டாமா?
256. ஆராய்ந்து அறி
நமக்கு அறிவு இருக்கிறது; அனுபவம் இருக்கிறது; ஆராயும் திறன் இருக்கிறது. அவற்றைக்கொண்டு எந்த சங்கதி ஆனாலும் ஆராய்ந்து பார்த்துதான் ஒப்புக்கொள்ளவேண்டும்.
257. அறப்பணி செய்யும் ஆசிரியர்கள்
ஆசிரியர்கள் பயன்படக்கூடியவர்களாய் இருக்க வேண்டுமானால், அவர்கள் ஒரு அளவுக்காவது சுதந்திர புத்தி உள்ளவர்களாகவும், பகுத்தறிவுக்கு சிறிதாவது மதிப்புக்கொடுக்கக்கூடியவர்களாகவும் இருக்கவேண்டும்.
258. இன்றைய அரசு
நான் கூறுகிறேன், பண்க்கார்ர்களைக் காப்பாற்றத்தான் இன்றைய அரசாங்கம் இருந்து வருகிறது. அரசாங்கத்தின் போலிஸ் இலாகாவும், கோர்ட்டும், ஜெயிலும், பட்டாளமும் ஏழைப் பாட்டாளி மக்களைக் காப்பாற்றுவதற்காக இருக்கின்றனவா என்படை நீங்கள் சற்றே சிந்தித்துப் பாருங்கள்.
259. அரசியல் வளர்ச்சி
அரிசியலில் நாம் பெற்ற வளர்ச்சி என்ன? மாறுதல் என்பது என்ன? கெட்டதிலிருந்து கழிசடைக்கு (From bad to the worse) சென்று கொண்டிருக்கிறோம். ஒரு எடுத்துக்காட்டு வாக்கியம் சொல்லவேண்டுமானால், ‘அவன் போனால் கலகமாக்கிவிடும், நான் போய் செருப்பால் அடித்துவிட்டு வருகிறேன் என்று சமாதானம் செய்ய வருகிறவன் சொன்னானாம்’. அது போல் இருக்கிறது நமது அரசியல் வளர்ச்சி.
260. நல்லவை வளர்க்க!
ஆசிரியர்கள், பெற்றோர்கள், அதிகாரிகள், எல்லோரும் மாணவர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை, நாணயம் இவைகளை வளர்க்க முயற்சி எடுத்துகொள்ளவேண்டும்.
261. இயற்கை
இயற்கையின் த்ததுவம், நமது அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப மாறுதல்களுக்கும், செப்பனிடுவதற்கும் வசதியளிக்கக் கூடியதேயாகும்.
262. விஷயம் தெரியாது
பட்டிக்காட்டில் உள்ளவனுக்கு, தாலுக்கா ஒரு கண்காட்சி, தாலுக்காவை விட்டு வெளியே வராதவனுக்கு ஜில்லா ஒரு கண்காட்சி, ஜில்லாவில் இருப்பவனுக்கு மாநிலத்தின் தலைநகர் ஒரு கண்காட்சி ஆகும். இரயிலைவிட்டு இறங்கி, வண்டியில் ஏறி, தாஜ்மகால் ஓட்டலில் இறங்கித் தங்கிவிட்டு வந்தால் விஷயம் தெரியாது.
263. அரசியல் உலகம்
அரசியல் உலகம் எப்படிப்பட்டது என்பது நமக்கு நன்றாய்த் தெரியும். மக்கள் யாராய் இருந்தாலும் அரசியலில் சுயநலமற்று, நேர்மையாய், நாணயமாய் நடந்து கொள்ளுவார்கள் என்பது இயற்கைக்கு விரோதமான காரியமாகும்.

No comments:

Post a Comment