முன்ஜென்மத்தில் தன்னை கொன்றவர்களை அடையாளம் காட்டிய சிறுவன்- வெளிநாட்டு வினோதம் (வீடியோ இணைப்பு)
முன்ஜென்மத்தில் தன்னை கொன்ற நபர்களை 3 வயது சிறுவன் ஒருவன் அடையாளம் காட்டியுள்ளான்.
சிரியா மற்றும் இஸ்ரேலின் எல்லையில் Golan Heights என்ற பகுதி அமைந்துள்ளது.
இப்பகுதியில் வசித்துவரும் ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 வயது சிறுவன் ஒருவன் தான் முன்ஜென்மத்தில் எவ்வாறு கொல்லப்பட்டான் என்பதை தனது பெற்றோரிடம் விவரித்துள்ளான்.
குழந்தை ஏதோ விளையாட்டாக கூறுகிறான் என்று எண்ணிய அவனது பெற்றோரும் அவன் கூறிய எதையும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
ஆனால் தொடர்ந்து அவன் பலமுறை தான் முன்ஜென்மத்தில் கோடாரியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும் தன்னை புதைத்த இடத்தை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளான்.
இதனால் கொஞ்சம் அச்சமடைந்த அவனது பெற்றோர், சரி. உன்னை புதைத்த இடத்தை காட்டு என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து அந்த 3 வயது சிறுவன் தனது பெற்றோரை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்து சென்று, இங்கு தான் என்னை புதைத்தார்கள் என்று கூறியுள்ளான்.
சிறுவனின் பேச்சை நம்புவதா வேண்டாமா என அஞ்சிய பெற்றோர், அவன் காட்டிய இடத்தை தோண்ட தொடங்கியுள்ளனர்.
அந்த இடத்தை தோண்ட தொடங்கிய சில நிமிடங்களில் அந்த பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
ஆம். அந்த இடத்தில் ஒரு மனித உடலின் எலும்பு கூடு இருந்தது.
அதோடு நிறுத்தாத அந்த சிறுவன் தான் கோடாரியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும், அந்த கோடாரி புதைத்த இடத்தை காட்டுகிறேன் வாருங்கள் என்று பெற்றோரை அழைத்து சென்றுள்ளான்.
மேலும், பிறக்கும்போதே அவனுக்கு நெற்றியில் இருந்த தடயத்தை காட்டி என்னை கோடரியால் இங்கு தான் தாக்கினார்கள் என்று கூறியுள்ளான். அவன் கூறியதை போலவே அந்த எழும்புகூட்டின் நெற்றியில் காயத்திற்கான தடயம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்த விடயம் ஊடக வெளிச்சத்தை பெறத் தொடங்கியது. இந்நிலையில், அந்த சிறுவன் தனது முன் ஜென்ம பெயர், ஊர் மற்றும் தன்னை கொன்றவர்கள் யார் என்பது வரை விவரித்தது பொலிசாரையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
பின்னர் பொலிசார் நடத்திய விசாரணையில், இந்த சிறுவன் பிறப்பதற்கு 4 வருடங்கள் முன்பு காணாமல் போன மருத்துவர் ஒருவரை பற்றி தகவல்களை தேடியபோது அவர் 2009ல் மரணமடைந்தது தெரியவந்துள்ளது.
மேலும், அந்த சிறுவன் தன்னை கொன்றவர் என்று குறிப்பிட்ட நபரிடம் காட்டிய போது, அந்த கொலை சம்பவத்தையும், அனைத்து பெயர்களையும் சரியாக கூறியதை கேட்டு முகம் மாறிய அந்த நபர் தான் மற்றும் சிலர் சேர்ந்து அந்த கொலையை செய்ததாக ஒப்பு கொண்டதாக கூறப்படுகிறது.
பலரையும் ஆச்சர்யத்திற்கும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த முன் ஜென்ம சம்பவம் பற்றி Children Who Have Lived Before: Reincarnation Today என்ற புத்தகத்தில் ஜேர்மானிய எழுத்தாளர் Trutz Hardo விவரித்துள்ளார்.
No comments:
Post a Comment