

சரி, ஆன்மிகம் சார்ந்த சமயமும் பொருளியல் சார்ந்த சமூகமும் அடிப்படையில் வெவ்வேறானவையானாலும் இரண்டுமே மனிதக் கூட்டத்திற்கு அவசியமாக இருப்பதோடு இணைந்தும் இருக்க வேண்டியுள்ளது. சரீரமும் ஆன்மாவும் இணைந்து இருக்க வேண்டியிருப்பது போலத்தான்! ஆனால் சமயம் ஆன்மாவைப் போலவே பூடகமாக இருப்பதால் சமூகத்தின் தாக்கம் அதன்மீது எளிதாகச் செல்லுபடியாகிவிடுகிறது. ஒரு சமூகத்தை முன்வைத்தே அதன் சமயத்தைக் காண்பதான நடைமுறை வந்துவிட்டிருக்கிறது. சமூகம் இவ்வாறாக முதல் மரியாதை பெறக் காரணம், சமூகம் தோன்றிய பின்னரே சமயம் தோன்றியது. இன்னும் சொல்லப் போனால் சமூகத்திலிருந்துதான் சமயம் தோன்றி, தகப்பன் சாமியாகிவிட்டது. தந்தைக்கு உபதேசம் செய்த தனயன் புராணம் இதைத்தான் சொல்கிறது. மனித மனதின் உள்ளுணர்வே இதற்கு, சமயம் தோன்றுவதற்கு, காரணம். தேடலில் உள்ள ஆர்வம், அதில் உள்ள சுகம். அதுவே சமயமாகப் பரிணமித்தது.
இதுவரை நாம் பார்த்த சமயம் என்ற கருதுகோளுக்குப் பொருந்தி வருவது ஹிந்துஸ்தானத்தில் தோன்றிய ஸனாதனதர்மம் என்று சொல்லக் கூடிய ஹிந்து சமயமும் (ஸனாதன தர்மம் என்பதேகூட அடையாளம் காட்டுவதற்காக, அவசியம் கருதிப் பிற்காலத்தில் சூட்டப்பட்ட பெயர்தான்.தர்மம் மட்டுமே உண்டு, சமணம் தோன்றியதன் விளைவாகத்தான் ஸனாதன-புராதன என்பது சேர்க்கப்பட்டது. சரித்திரப் புத்தகத்தில் சமணத்தைத் தோற்றுவித்தவர் வர்த்தமான மஹாவீரர் என்று எழுதப் பட்டிருந்தாலும், பரீட்சையில் அவ்வாறு விடை எழுதினால்தான் மதிப்பெண் கிடைக்கும் என்றாலும் சமணம் மஹாவீரருக்கு முன்பிருந்தே இருந்து வருகிறது. சங்கரர் மடங்களை ஸ்தாபித்தார் என்று எழுதினால்தான் மதிப்பெண் கிடைக்கும் எனப்துபோல!). சமணம், பெளத்தம் ஆகியவையுமே.

கிறிஸ்தவம், முகமதியம் இரண்டுமே மேலாதிக்க நோக்கத்துடன், தலைகளின் எண்ணிக்கையைப் பெருக்கும் குறிக்கோளுடன் தோற்றுவிக்கப்பட்டவை.அவற்றில் ஆன்மிகம் பெயரளவிற்குக் கூட இல்லை. ஆண்டவன், பரம பிதா என்றெல்லாம் பேசப்படுவதாலயே அவற்றில் ஆன்மிகம் இருப்பதுபோல் ஒரு மயக்கம் ஏற்படலாம். ஆனால் ஆன்மிகம் என்பது மனித மனதின் தேடல் ஆகும். கிறிஸ்தவத்திலும் முகமதியத்திலும் தேடலுக்கு இடமில்லை. எல்லாம் தன்னிச்சையாக முடிந்துபோன முடிபுகளே ஆகும்.
கிறிஸ்தவம் என்பது ரோமானியப் பேரரசின் உலகம் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும் என்கிற மேலாதிக்கச் செயல் திட்டமேயன்றி வேறல்ல. அதன் ஸ்தாபகரான ரோமானிய ஸால் என்கிற பால் ஆன்மிகவாதியும் அல்ல.
முகமதியத்தை ஸ்தாபித்த முகமதுவை எடுத்துக்கொண்டால் அவருக்கும் ஆன்மிகத்துக்கும் ஒருசிறிதும் தொடர்பு இல்லை.
இறைவனின் தூதன் என்று தன்னை அழைத்துக் கொண்டு இறைவன் பெயரால் கட்டளை பிறப்பித்தல் ஆன்மிகம் அல்ல.
நாட்ஸியம், மார்க்சியம் போல் முகமதியம் ஒரு மேலாதிக்கப் பேராசை கொண்ட எதேச்சாதிகார அரசியல் கோட்பாடே ஆகும்.
குரானை முழுவதும் படித்தால் அதில் ஆன்மிகத்துக்கு எள்ளளவும் இடம் இல்லாதது மட்டுமின்றி,மாற்று நம்பிக்கைகளை ஈவிரக்கமின்றி நசுக்கிச் சாகடிக்குமாறு உத்தரவுகளும் கடவுளின் பெயரால் இடப்பட்டிருப்பது விளங்கும். அதேபோல் கிறிஸ்தவத்தின் ஆணி வேரான புதிய ஏற்பாட்டில் சுவிசேஷங்கள் தவிர்த்து மற்ற பகுதிகளைப் படித்தால் அதில் ஆன்மிகத்துக்கு இடமில்லை என்பதும் அதுவும் கட்டளைகளின் தொகுப்புதான் என்பதும்
தெளிவாகும். சுவிசேஷங்களில் ஆன்மிகத் தேடலுக்கு இடமில்லை என்றாலும் ஏசு சொன்னதாகக் கூறப்படும் வாசகங்களில் ஆன்மிக நாட்டத்தின் தெறிப்புகளைக் காண முடியும். காரணம் அவர் யூத தொல் சமுதாயத்தில் தோன்றி அதன் நம்பிக்கை பாதிப்பில் இருந்தவர் (ஏசு என்று ஒருவர் இருந்தாரா என்கிற சர்ச்சை ஒரு தனி சமாசாரம்.இப்போது இங்கு அது தேவையில்லை).

முற்றிலும் ஆன்மிகம் சார்ந்த ஹிந்து சமயத்தைப் புரிய வைக்கிறேன் பேர்வழி என்று எவராவது நல்லெண்ணத்துடன் புறப்பட்டாலும், ஆன்மிகம் என்றாலே ஆண்டவன் என்பதாக ஒரு பெரியண்ணனின் கட்டளைகள்தான் என்கிற புரிதலுடன் காலங் காலமாக இருந்து வருவோருக்குப் புரிய வைக்க முடியாது.
அவர்களுடனான இணக்கத்திற்காக பகவத் கீதையில் அல்லா சொல்வதைப்போல என்று எழுதுவதும் அல்லாஹோ அக்பர் என முழங்குவதும் கேலிக் கூத்தாக முடியும்.
ஹிந்து சமயத்தின் இறைச் சக்தி பற்றிய கருதுகோளும் முகமதிய சமயத்தின் கருதுகோளும் வெவ்வேறாக இருக்கையில் பகவத் கீதையில் அல்லா என்று எழுதுவதும் அல்லாஹோ அக்பர் என முழக்கம் எழுப்புவதும் எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும்?
பகவத் கீதையில் என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ணன் நான் உனக்குச் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டேன், ஆராய்ந்து எடுத்துக் கொள்வதும் வேண்டாம் என விடுவதும் உன்பாடு என்று உற்ற தோழனாய் என்னிடம் கூறுகிறான். குரானில் அல்லா அப்படிக் கூறுவதாகச் சொல்ல முடியுமா?
என்மீது நம்பிக்கையில்லாதோரிடம் இந்த வாசகங்களைக் கூற வேண்டாம் என்றும் என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ணன் சொல்கிறான்.

அல்லாவோ குரானை அனைவர் மீதும் வலுக் கட்டாயமாகத் திணிக்கச் சொல்கிறார்! அல்லா என்கிற கருதுகோளே ஹிந்து சமய இறைக் கோபாட்டிற்குப் புறம்பானதாக இருக்கையில் பகவத் கீதையில் அல்லா சொல்வதைப்போல என்று எழுதுவதில் பொருள் ஏதும் இருக்க முடியுமா?

ஆனால் ஸ்ரீ களிமிகு கணபதியின் கட்டுரையோ,முகமதியருக்கு ஹிந்து மதத்தைப் புரிய வைப்பதாகப் புறப்பட்டு, இரு வேறு கோட்பாடுகளையும் ஒன்றிணைக்க முற்பட்டு அல்லாஹோ அக்பர் என முழங்குவதில் முற்றுப் பெறுகிறது. இதில் வேடிக்கை, அல்லாஹோ அக்பர் என்ற முடிந்த முடிபான பிரகடனத்தை முகமதியத்தை மகிழ்விப்பதற்காகச் சொல்லிவிட்டு அனைவருக்கும் பொதுவான ஸத்யமேவ ஜயதேயை அதனுடன் இணைக்கிறது.அல்லாஹோ அக்பர் என்கிற ஸத்யம் ஜயிக்கட்டும் என்று பொருள்படக் கூடிய விதமாக!
எனக்கும் பல முகமதிய நண்பர்கள் உள்ளனர். அவர்களுடன் நான் சமய அடிப்படையில் எவ்வித சமரசமும் செய்துகொண்டதில்லை.
ஹிந்து சமயக் கோட்பாடுகளை அவர்களுக்குப் புரிய வைத்து,மனத்தளவில் ஹிந்துக்களாக வாழ வைத்திருக்கிறேன். சிலர் துணிந்து தாய்மதம் திரும்பவும் உதவியிருக்கிறேன்.மனதளவில் ஹிந்துக்களாக வாழும் என் முகமதிய நண்பர்களின் பெயர்களைக் கேட்டால் திகைப்படைவீர்கள்.ஆனால் நான் அவர்களின் பெயர்களை வெளியிட்டால் அவர்களுடைய ஜமாத்துகளில் பல சங்கடங்களை அவர்கள் அனுபவிக்க நேரிடும்.

தமிழ்நாட்டில் ஒரு அரபு சமுதாயத்தை உருவாக்குவதில் வஹாபிகள் வெற்றி பெற்று விட்டார்கள் என்பது இதில் முக்கியமான செய்தி.
நமது மண்ணுக்குப் பொருந்தாத அரபு சம்பிரதாயங்கள் எங்கள் சமுதாயத்தில் திணிக்கப்படுகின்றன.எதிர்த்து நிற்க இயலவில்லை என்கிறார்கள். எங்களுக்கென்று உள்ள சுயம் வேகமாக அழிந்து வருகிறது என்று வருந்துகிறார்கள்.
வேதங்களையும் உபநிடதங்களையும் திரு மந்திரத்தையும் படித்துவிட்டு என்னிடம் விளக்கம் கேட்கும்முகமதிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களில் எவரும் குரான் வாசகங்களுடன் அவற்றை ஒப்பிட்டுப்பேசவில்லை. உருவ வழிபாடு தவிர்க்க இயலாதது என்று சொல்லும் அளவிற்குச் சிலர் உள்ளனர்.முகமதுவுக்கு உருவம் சமைப்பது சில நூற்றாண்டுகள் முன்புவரை இருந்ததை ஒப்புக்கொள்வது மட்டுமின்றி அதில் தவறு இல்லை என்று சூசகமாக எழுதும் அளவிற்குத் துணிவு பெற்றுள்ளனர்.இத்தகையோரை நாம் அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டுமேயன்றி அல்லா கீதையில் சொன்ன மாதிரி என்றெல்லாம் எழுதிக் கொண்டிருக்கலாகாது.
மத நல்லிணக்கம் என்பது ஹிந்து சமயத்தில் உள்ள ஷண் மதப் பிரிவுகளை முன்னிட்டுச் சொல்லப்பட்டதேயாகும். நமது மண்ணுக்கும் பாரம்பரியமான மனோபாவத்திற்கும் பொருந்தாத அயல் பிரதேசங்களிலிருந்து மதத்தின் பெயராலும் கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டும் வந்த மேலாதிக்கப் பேராசையும் அடிமைப் படுத்தும் நோக்கமும் உள்ள புறக்கோட்பாடுகளையல்ல.

ஹிந்து மதத்தை நம் நாட்டுக் கிறிஸ்தவர்களுக்கும் முகமதியருக்கும் புரிய வைப்பது அல்ல, அவர்களைத் தாய் மதம் திரும்பச் செய்வதே நமது நோக்கமாக இருக்கவேண்டும். அவர்கள் வழியிலேயே புரிய வைப்பதாக நினைத்துக்கொண்டு அசடு வழியக் கூடாது. முதல் படியாக அவர்கள் கிறிஸ்தவர்களாகவோ முகமதியராகவோ இருப்பதால் அடி பணிய வேண்டியிருக்கிற கட்டாயத்தை சமூக நோக்கில் விவரித்துப் பின்னர் நமது சமூக-சமய மேன்மைகளை உணர்த்த வேண்டும்.
இதனை எனது வழிமுறையாகக் கொண்டிருப்பதால்தான் எனக்கு திராவிட இயக்கம், கிறிஸ்தவ,முகமதிய வட்டாரங்கள் ஆகியவற்றில் இனிக்கும் நஞ்சு என்பதாக ஒரு பெயர் கொடுத்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment