Thursday 12 March 2015

உத்தரப்பிரதேசத்தில் மதநல்லிணக்கத்துக்கு அடையாளமாக முஸ்லிம் கட்டிய சிவன் கோயில்!


மதுரா: அடிக்கடி மதக்கலவரம் ஏற்படும் உத்தரப்பிரதேசத மாநிலத்தில் மதநல்லிணக்கத்துக்கு உதாரணமாக, முஸ்லிம் ஒருவர் இந்துக்களுக்காக கோயில் கட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே சாஹர் என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தின் தலைவரான அஜ்மல் அலி ஷேக் என்பவர் தனது கிராமத்தில் வாழும் இந்துக்களுக்காக தனது சொந்தப் பணத்தில் ரூ. 4 லட்சம் செலவிட்டு சிவன் கோயில் கட்டிக்கொடுத்துள்ளார். 
இதற்காக 8 மாதங்களுக்கு முன் கோயில் கட்டுமானப் பணி தொடங்கியது. தற்போது இப்பணி நிறைவுற்று, அங்கு சாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.




இதுதொடர்பாக அஜ்மல் அலி கூறும்போது, இருமதத்தைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக வாழும் இக்கிராமத்தில் இந்துக்களுக்கு கோயில் இல்லை என்ற குறை இருந்தது. இதற்காக, சில கி.மீ. தொலைவிலுள்ள கிராமத்துக்குச் சென்று வழிபட வேண்டி இருந்தது. எனவே இக்கோயிலைக் கட்ட முடிவெடுத்து தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்றார்.

சிறு காரணங்களுக்காகக் கூட அடிக்கடி மதக் கலவரம் நடைபெறும் உத்தரப்பிரதேசத்தில் ஷேக் கட்டிக் கொடுத்த இந்த கோயில் மத நல்லிணக்கத்துக்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment