Tuesday 7 April 2015

1450 BCEயிலிருந்து முகமதுநபி (570-632 CE) காலம்வரை அரேபியாவில் வாழ்ந்தவர்கள் யார்?

இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இஸ்லாமிற்கு-முகமது நபிக்கு முன்னர் அரேபியாவில் வாழ்ந்தவர்கள் யார் என்ற கேள்வி எழுகின்றது. அக்காலத்தில் சுற்றிலும் இருந்த நாகரிகத்தவர் சிறந்திருந்ததால், அரேபிய மக்களும் சிறப்பான நாகரிகத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவர்களில் முனிவர், அறிஞர், சித்தர், ஞானியர் போன்றோர் இருந்திருக்கவேண்டும். மக்கள் ஆரோக்யம், உடல்நலம் விஷயங்களிலும் சிறந்திருக்க வேண்டும். அதற்கான மருத்துவமுறையும்  இருந்திருக்க வேண்டும்.  அப்படியிருக்கையில், இஸ்லாமிற்கு-முகமது நபிக்கு முன்பான அரேபிய சரித்திரம் இருட்டடிக்கப் பட்டுள்ளது. அம்மக்கள் இருண்ட காலத்தில், அறியாமையில், விக்கிர ஆராதனை போன்ற பாவச்செயல்களில் ஈடுபட்டிருந்தனர் என்றும் விவரிக்கப்படுகிறது. ஆனால், அவர்களின் மொழியான அரேபியமொழி இன்றைய முஸ்லீம்களுக்கு தேவமொழியாக இருக்கிறது. நபி பேசிய மற்றும் குரான் மொழி அரேபிய மொழிதான். பிறகு அத்தகைய தேவமொழியைப் பேசி வந்தவர்கள் எப்படி இருண்ட காலத்தில், அறியாமையில் மூழ்கியிருந்தார்கள் என்று தெரியவில்லை.
அரேபியாஎன்பதுஎன்ன?: ஜைனர்கள் பாரத்தத்தின் வடமேற்குப் பகுதி வழியாக வெளியே சென்றனர், கிரேக்கர் உள்ளே வந்தனர் எனும்போது, அரேபியாவிற்கும் அவ்வாறுதான் சென்றிருப்பர். முதலில் அரேபியா மற்றும் அரேபியர் என்பன என்னவென்று புரிந்து கொள்ளவேண்டும்[1], ஏனெனில் இஸ்லாமிற்கு – நபிக்கு (570-632 CE) முன்பான அரேபியர்களைப் பற்றிய முழு விவரங்களை சரித்திர ஆசிரியர்கள் முழுமையாகக் கொடுப்பதில்லை. அவற்றை நூறு-இருநூறு ஆண்டுகள் பழமையான புத்தகங்களினின்று பெறவேண்டியுள்ளது. ஜெஸிரத்-அல்-அரப் (Jezirat-al-arab) என்பவர்கள் அரேபியாவில் இருந்தவர்கள் என்றும், அவர்கள் இருந்த இடம் அரபிஸ்தான் (Arabistan) என்றும் பாரசீகர்கள் மற்றும் துருக்கியர்கள் குறிப்பிட்டு வந்தார்கள்[2]. “ஜெஸிரத்அல்அரப்” என்றால் “அரேபியரது தீவு” என்று பொருள். அதாவது முன்னர் அரேபியா தீவாக இருந்ததா அல்லது அரேபியர் மற்ற மக்களிடமிருந்து தனித்து இருந்தார்களா என்று தெரியவில்லை. பாரசீகர்கள் ஒரு “சத்ரப்பை”த் தொடங்கி அதற்கு “அராபியா” என்று பெயரிட்டனர்[3]. பாரசீக “சத்ரபி” என்ற சொல் “க்ஷத்ரபாவ” என்ற சமஸ்கிருத சொல்லினின்று உருவானது, க்ஷத்திரியர்கள் வாழும் / ஆட்சிசெய்யும் இடம் என்று பொருள். “அரேபியா” என்றால் சதுரமான இடம் என்று பொருள். அரேபிய மொழியில் “மக்பி” என்றால் கனச்சதுரம் மற்றும் “காபா” என்பது முஸ்லீம்கள் வழிபடும் இடமாகும். “அரப்” என்றால் “பதவியா / பெதுவியா” என்ற நாடோடிக் கூட்டத்தையும் குறிக்கும். யூதமொழியில் “இரப்” என்றல் பாலைவனம், அதாவது செமித்திய மொழியிலும் பாலைவனம் மற்றும் அங்குவாழும் மக்களைக் குறிக்கிறது ஆனால் எந்த மக்களினத்தையோ, நாட்டையோக் குறிக்கவில்லை[4].
அரேபியர்கள்எவ்வாறுஅடையாளங்காணப்பட்டனர்?: அரேபிய அகராதிகளில் அரபி (ஆண்பால் ஒருமை. அரபியா (பெண்பால் ஒருமை) மற்றும் அரப் (பலவின்பால்) என்று அரேபிய மக்களைக் குறிக்கின்றன:
  1. ஒருவனுடைய மொழி அல்லது பேச்சு அரேபிக் மொழியானது அல்லது தூய்மையான அரேபியமொழியானது.
  2. அஜீரணமாகி, வயற்று உபாதையினால் அவஸ்தைப் படுபவன்.
  3. யாரொருவன் குழம்பி அல்லது சிதைந்து போயுள்ளானோ அவன்.
  4. யாரொருவன் அரேபியர்களுடன் கலந்து ஐக்கியமாகியுள்ளானோ அவன்.
பிறகு “அரப்” என்பது “அஜப்” என்ற வார்த்தையோடு ஒப்பிடும்போது, “அரப்” என்பது “தெளிவாகப் பேசுவது” ஆனால் “அஜப்” என்றால் தெளிவில்லாமல் பேசுவது அல்லது மற்றவர்களுக்குப் புரியாதமாதிரி பேசுவது என்று பொருள் கொள்ளப்படுகிறது. உண்மையில் பாரசீகர் அரேபியரை குறைவாக மதிப்பிட்டபோது, பதிலுக்கு அரேபியர் பாரசீகர்களை “அஜப்” என்று கூறிக் கிண்டலடித்தனர். சமஸ்கிருதத்தில் “ரப்” என்பது “சத்தம், கூச்சல், இரைச்சல்” என்று பொருள். “ரவ்” என்பது “ரப்” என்றும் உச்சரிக்கப்படும், அல்+ரவ் அல்லது அல்+ரப் =அரவ் / அரப் என்றானது. அதனால்தான் சத்தம்போடுபவனை, கூச்சலிடுபவனை “அரவவாடு” என்று தெலுங்கர் அழைக்கின்றனர். மேலும் இப்பகுதியில் குதிரைகள் உள்ளன அல்லது குதிரைகள் வரவழைக்கப்படுகின்றன என்பதால் “அரவஸ்தான்” என்று அழைக்கப்பட்டது[5]. அரபிஸ்தான்-அரவஸ்தான்-அரவத்தான்-ராவுத்தன் என்று தமிழில் பெறப்படுகிறது. மாவுத்தன் யானைப்பாகன் என்றால் ராவுத்தன் குதிரையோட்டியாகிறான்[6]. அதாவது குதிரைகளை வாங்குபவன், விற்பவன், வளர்ப்பவன், பழக்குபவன் என்றுள்ளது.
அரேபியர்கள் யார்?: இதைத்தவிர, அரேபியாவில் வாழ்ந்த எல்லோரும் அரேபியர் என்றழைக்கப்பாட்டாலும், அரேபிய எழுத்தாளர்கள், அவர்களைப் பிரித்துக் காட்ட, கீழ்கண்டவாறு அழைத்தனர்:
  1. அல்அரப்அல்பைதா = காணாமல் போன அரேபியர், மறைந்து போன அல்லது சரித்திரகாலத்திற்கு முந்தைய அரேபியர், முதல் அல்லது உண்மையான அரேபியர்.
  2. அல்அரப்அல்அரிபா = உண்மையான அரேபியர் அதாவது தென்னரேபியாவில் வாழும் அரேபியர் அல்லது கஹ்தான் வழிவந்தவர்கள் (ஜோக்தான் என்று பைபிளில் சொல்லப்படுகிறது).
  3. அல்அரப்அல்மூதா‘அர்ரிபா = அரேபியர்களுடன் ஐக்கியமானவர்கள், அல்-முஸ்தா ‘ரிபா = அரேபியர்களை நாடுபவர்கள், அரேபியமயமாக்கப்பட்டவர்கள். மோஸ்தராபியர் அல்லது இஸ்மாயில் வழிவந்தவர்கள்.
ஆகவே அரேபியாவில் இருப்பவர்கள் எல்லோருமே “அரேபியர்” அல்லர். அதேபோல இஸ்லாம் தோன்றி வளர்ந்தபிறகு, அரேபியாவில் இருந்தவர்கள் முஸ்லீம்களாக மாறியப் பிறகுக் கூட அரேபியர் எல்லோருமே “முகமதியர்”, “முசல்மான்கள்”, “முஸ்லீம்கள்” ஆகிவிடவில்லை. இந்திய கல்வெட்டுகளில் “துருக்கர், துலுக்கர், துருக்ஸாஸ்” எனப்படுபவர் எல்லோரும் முகமதியரா அல்லது துருக்கியிலிருந்து வந்தவரா என்றும் ஆராயவேண்டியுள்ளது. இஸ்லாம் தோன்றுவதற்கு முந்தைய இருந்த அரேபியர் மற்றும் இஸ்லாம் தோன்றிய பின்னர் அரேபியர் அனைவரையும் “முகமதியர்” என்றோ “இஸ்லாமியர் / முஸ்லீம்கள்” என்றோ எழுதிவைப்பது பிற்கால முஸ்லீம் எழுத்தாளர்களுக்கு வழக்கமாகியது[7].
அரேபியர்கள் இந்தியர்கள் செய்வதை தலைகீழாக செய்பவர்களா?: வேதமதத்தினர்-இந்துக்கள் செய்வதை தலைக்கீழாக செய்பவர்கள் ஜைனர்கள்-பௌத்தர்கள்-முகமதியர்கள் என்ற வழக்கும் உள்ளது. முதலில் ஜைனர்கள்-பௌத்தர்கள் அவ்வாறு செய்தாலும், பிறகு, பொதுவான இந்திய கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் மற்றும் நாகரிக காரணிகளால் சேர்ந்தே வாழ்ந்தார்கள். ஆனால், முகமதியர் ஆரம்பத்திலிருந்தே, வேறுபட்டு தலைகீழாக செய்து வந்ததால் அவர்களை “அரவநாட்டவர்” என்றே அழைத்தனர். தெலுங்குக்காரர்களை “கொலுடி” என்று தமிழர்கள் கலாட்டா செய்வது வழக்கம். அதாவது தெலுகு என்பதனை திருப்பிப் போட்டு குலுதி-குலுடி-கொலுடி என்று கிண்டல் செய்தனர். இதனால், தெலுங்கர் தமிழர்களை “அரவர் / அரவவாடு” என்று சொல்வதுண்டு. அதவாது துலுக்கர்களைப் போல தலைகீழாகச் செய்பவர்கள் என்ற பொருட்பட கூறினர். இந்துக்கள் அழுதால், துலுக்கர் சிரிப்பர்; இந்துக்கள் சிரித்தால், துலுக்கர் அழுவர்; குழந்தை பிறந்தால் அழுவர், யாராவது இறந்தால் சிரிப்பர் என்றெல்லாம் சொல்வதுண்டு. மேலே பாரசீகர்-அரேபியர் ஒருவரையொருவர் எவ்வாறுக் கூறிக் கொள்வர் என்று எடுத்துக் காட்டப்பட்டது. அதுபோல, ஆயிரக்கணக்கான வருடங்களாக அரேபியாவில் இருந்து வரும் பழக்க-வழக்கங்களை முழுவதுமாக மாற்ற முடியாது என்பதனால், அவற்றை மாற்றியமைத்திருக்கலாம்.
சதுரமானகனச்சதுரமானஇடம்“சதுரகிரியா”அல்லதுகாபாவா?: காபாவைப் பொறுத்தவரையிலும், நிச்சயமாக அது முகமதியர்-முஸல்மான்-முஸ்லீம்களின் வழிபாட்டு ஸ்தலமல்ல. “காபத்துல்லா” என்றழைக்கப்பட்ட “இறைவன் உறையும் இடத்தில்” – வளகத்தில் நடுவில் ஒரு விக்கிரகம் இருந்தது, அதனைச் சுற்றி 360 விக்கிரங்கள் இருந்தன. அவை சதுரமாக அல்லது வட்டவடிவில் வைக்கப்பட்டிருந்தனவா என்று தெரியவில்லை. ஏனெனில், சித்திரங்கள் இருவிதமாகவும் சித்தரித்துக் காட்டுகின்றன. எப்படியாகிலும் வட்டத்தை-சதுரமாக, சதுரத்தை-வட்டமாக்கும் வித்தைகளை இந்தியர்கள் தாம் அறிந்திருந்ததால், குறிப்பாக மந்திர-தந்திர-யந்திர வித்தைகளில் ஈடுபட்டிருந்ததால், அவ்வளாகம் அவ்விதமாக அமைக்கப்பட்டிருந்தது என்றறியலாம். 64-யோகினி-ஜோகினி கோவில்கள், வளாகங்கள் அவ்விதமாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதனை இந்தியாவில் காணப்படும் உதாரணங்களினின்று அறிந்து கொள்ளலாம்.  காபாவின் தரைப்படம் மற்றும் இந்த யோகினி கோவில்களின் தரைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மையினைப் பார்த்தேத் தெரிந்து கொள்ளலாம். இதனால் தான், முகமதியர் இந்தியாவில் நுழைந்தபோது, நபி அழித்தவையெல்லாம் இங்குள்ளனவே என்று அவரைப் போலவே செய்யவேண்டும் என்றுதான், முகமத் கஜினி, முகமது கோரி முதலியோர் செய்தனர். அதாவது அத்தகைய கோவில்களை அழித்தனர், விக்கிரங்கள உடைத்தனர், புத்தகங்களை எரித்தனர். ஒரிஸ்ஸாவில் உள்ள 64-ஜோகினி கோவில் ஓரளவிற்கு புனர்நிர்மாணம் செய்யப்பட்டிருக்கும் போது, மத்தியப்பிரதேசத்தில் உள்ள 64-ஜோகினி கோவில் எந்த அளவிற்கு சேதப்படுத்தப் பட்டுள்ளது என்பதனை அச்சிற்பங்களை வைத்தே கண்ட் உ கொள்ளலாம். சோமனாதபுரம் அல்-லத் என்ற விக்கிரமாக இருக்கும் என்றுதான் 17 முறை வந்து விக்கிரகத்தை-சிவலிங்கத்தை உடைத்தழித்துச் சென்றான்.
நபிகள் விட்டு வைத்ததை நபிகளின் வழிவந்தவர்கள் சிதைத்தது ஏன்?: நடுவில் ஒரு சதுரம், அதில் பிரதான தேவதை-பெண் கடவுள், சுற்றி வட்டத்தில் 64 தேவதைகளின் விக்கிரங்கள், சிற்பங்கள் இருக்கும். இவையெல்லாமே வெவ்வேறான பெயர்களில் குறிப்பிடப்படும் சக்திகள் தாம். அதேபோல, காபாவில் 360 விக்கிரங்கள் இருந்ததை முகமதியர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். அல்-அஜர்கி என்பவர் மற்றப;அ விக்கிரங்கள், ஓவியங்கள் காபாவில் இருந்ததாகக் கூறியுள்ளார்[8]. அவற்றை நபி அழித்தாலும், நடுவில் இருந்ததை அங்குள்ள மக்களின் வேண்டுகோளின் மீது விட்டு வைத்தார். ஆனால், பின்வந்தவர்கள் அதனையும் விட்டு வைக்காமல் உடைத்ததாலும், ஏரித்ததாலும் அவ்விக்கிரகம் சிதைந்து உருமாறிவிட்டது. 930ல் மெக்காவிலிருந்து தூக்கிச் செல்லப் பட்ட அக்கல் அல்லது கற்பாகங்கள் 931ல் திரும்ப கொண்டு வந்து வைக்கப்பட்டது[9]. அதாவது அவர்கள் நபியைப் போலவே தாங்களும் அத்தகைய வேலையை செய்யவேண்டும் என்ற போக்கில், இருப்பதையும் அழிக்கத்துணிந்தனர், அவ்வாறே சிதைக்கவும் செய்தனர். அதனால்தான், அவ்விக்கிரகம்-அக்கல் வெள்ளை நிறத்தில் இருந்தது, கருப்பு நிறத்தில் இருந்தது, ஒன்றாக இருந்தது, மூன்று துண்டுகளாக இருந்தன, என்று பலவாறாக சித்திரங்களில் காணப்படுகின்றன. அதே போல அபிரஹாம் மற்றும் அவரது மகன் சிற்பங்கள் இருந்தன, ஆனால் அவற்றையும் உடைத்தார் அல்லது அபிரஹாம் விக்கிரத்தை மட்டும் விட்டு வைத்தார் என்று பலவாறுக் கூறப்படுகின்றன[10]. எது எப்படியாகிலும் இருந்த விக்கிரகங்கள் அழிக்கப்பட்டதால், சரித்திர ஆதாரங்கள் மறைந்து விட்டன என்றாகிறது.
© வேதபிரகாஷ்
22-09-2012

[1] அரேபியா-அரேபியர் பற்றிய விவரங்கள் கீழ்கண்ட கட்டுரையிலிருந்து பெறப்பட்டது:
K. V. Ramakrishna Rao, The Presence of Arabs in South India before and after the advent of Islam, a paper presented  at the sixth session of Tamilnadu History Congress held at Islamiah College, Vaniyambadi, from October 23 to 24, 1999. இக்கட்டுரை முன்பாகவே குரியர் மற்றும் மின்னஞ்சலில் அனுப்பட்டும், அதற்கான ஆதாரங்கள் இருந்தும், ஜனாப் சஹாப்புத்தீன் என்பவர் “ஆய்வுக் கட்டுரை பட்டியலில்” கூட இடம் பெறாமல் மறைக்கப் பார்த்தார். இருப்பினும், திரு. ராஜு தலைமையில் நடந்த அமைவில் திரு கோ. வே. இராமகிருட்டிண ராவ் படித்துள்ளளர்.
[2] Henri Stierlin, Great Civilizations: The Cultural History of the Arabs, Italy, 1981, p.10.
[3] M. TH. Houtsma, T.W.Arnold and Harmann (Eds.), E. J. Brill’s First Encyclopedi of Islam 1913-1936, Netherlands, 1987, Vol.I, p.367.
[4] Pihilp K. Hitti, History of Arabs, Macmillan, 1985, Hongkong, p.41.
[5] Col. Wilford, Asiatik ResearchesVol.III, p.326.
[6] இடைக்காலத்தில் அருணகிரிநாதர், முருகனை, “குதிரையேறும் ரரவுத்தனே” என்று விளித்துப் பாடியுள்ளார்.
[7] K. V. Ramakrishna Rao, The Presence of Arabs in South India before and after the advent of Islamopt.cit.
S. M. Kamal, Muslimkalum, Tamizhagamum, Islamiya Ayvu Panpattu Maiyyam, Madras, 1990, p.22.
இவர் தமிழகத்தில் மூன்றாம் நூற்றாண்டிலேயே முஸ்லீம்கள் இருந்தார்கள் என்று எழுதுகியுள்ளார்!
[8] Oleg Graber, The Formation of Islamic art, Yale University, USA, 1973, pp.60-61. He gives the details about other objects, jewels etc., kept at Kaba till Mohammed destroyed them.
[9] Gerald de Gaury, Rulers of Meca, Roy Publishers New York, 1949, pp.109-110.
[10] De Lacy O’Leary, Arabia before Muhammed, Kegan Pauk, Lonon, 1927.

No comments:

Post a Comment