Monday 6 April 2015

இந்து கோவில்களின் பின்னணியில் இருக்கும் அறிவியல் ரீதியான காரணங்கள்!

இந்தியா என்ற இடம் பல விஷயங்களுக்காக அறியப்படுபவையாகும். அதில் முக்கியமான ஒன்றாக விளங்குவது நம் தனித்துவமான பண்பாடாகும். இந்த பண்பாடு பல விஷயங்களை சூழ்ந்துள்ளது: உணவு, ஆடை, சடங்குகள், நம்பிக்கை மற்றும் பல விஷயங்கள். நம்பிக்கையைப் பற்றி பேசுகையில், இந்தியா கண்டிப்பாக உங்களுக்கு பல ஆச்சரியங்களை அளிக்கும். நம் நாட்டில் பல நம்பிக்கைகள் மிக தீவிரமாக வளர்ந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதில் ஒவ்வொரு நம்பிக்கைக்கும் தனக்கென தனித்துவமான ஒரு முகம் உள்ளது. உலகத்தில் உள்ள பல மக்களின் ஆவலை தூண்டும் விதமாக இந்த நம்பிக்கைகள் அமைந்துள்ளது; ஏன் இன்னமும் ஆவலை ஏற்படுத்திக் கொண்டு தான் உள்ளது. இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான விஞ்ஞான காரணங்கள்! உலகத்தில் உள்ள மிக பழமையான நம்பிக்கைகளில் ஒன்று தான் இந்து மதம். பல வித சடங்குகள், கருத்துக்கள், மரபுகள் மற்றும்
பழக்கவழக்கங்களின் கலவையாக விளங்கும் இந்து மதம் எப்போதுமே கவரும் வகையான நம்பிக்கைகளைக் கொண்டுள்ளது. இந்த அருமையான நம்பிக்கைகளுக்கு மிகப்பெரிய தூண்களாக விளங்குவது புகழ்பெற்ற நம் கோவில்களாகும். இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் நீங்கள் பயணித்திருந்தால், ஒரு விஷயத்தை நீங்கள் அதிக எண்ணிக்கைகளில், பல வகைகளில், பரவலாக காணலாம்; அது தான் கோவில்கள். இந்துக்கள் ஏன் தலையை மொட்டை அடிக்கிறார்கள் என்பது தெரியுமா? ஒவ்வொரு நாள் காலையிலும் மக்கள் கோவிலுக்கு செல்லும் காட்சி, இந்தியாவில் சாதாரணமாக நாம் காணக்கூடியதாகும். நம்முடைய பிரார்த்தனைகள் அனைத்திற்கும் கோவில்களில் தான் விரைவில் பதில் கிடைக்கும் என மக்கள் அதிகமாக நம்புகின்றனர். அதனால் தான் நம் இந்தியா கலாச்சாரத்தின் முக்கிய பங்காக விளங்கி வரும் இவ்வகை நேர்த்தியான கோவில்களைத் தான் இந்தியாவின் சுற்றுலாத்துறை தீவிரமாக நம்பியுள்ளது. கடவுளை வழிப்படும் போது எதற்கு ஆரத்தி காண்பிக்கிறோம் என்று தெரியுமா? மீண்டும் நம்பிக்கைக்கு வருகையில், கோவில்களுக்கு சென்றால் நம் பிரார்த்தனைகளுக்கு உடனடியாக பதில் கிடைக்கும் என நீங்கள் நம்புகிறீர்களா? இல்லை என்று புத்தி சொன்னாலும் ஆம் என்று நம் நம்பிக்கை கூறுகிறது. உங்கள் நம்பிக்கை தான் சரி; கூடவே உங்கள் புத்தியையும் சமாளித்து விடலாம் என நாங்கள் சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? இந்து மதத்தின் கடைசி சடங்குகளில் பெண்கள் ஏன் ஈடுபடுவதில்லை? இந்து மதம் என்ற மதம், அது தொடங்கப்பட்ட காலம் முதல் எப்போதுமே அறிவியலைப் பின்பற்றி வருகிறது. நம்பிக்கையின் முக்கிய பங்கான கோவில்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்து கோவில்களின் கட்டுமான மற்றும் கட்டிடக்கலைக்கு பின்னணியில் அருமையான அறிவியல் அடங்கியிருப்பது உங்களுக்கு தெரியுமா? கோவில்களுக்கு பின்னணியில் உள்ள அறிவியல் உங்களுக்கு முழுமையான மற்றும் சந்தோஷமான ஆச்சரியத்தை தரும். இந்து கோவில்களின் பின்னணியில் இருக்கும் அறிவியல் பற்றியும், தினமும் மக்கள் ஏன் கோவில்களுக்கு செல்கிறார்கள் என்பதை பற்றியும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Read more at: http://tamil.boldsky.com/insync/pulse/2014/amazing-science-behind-hindu-temples-007105.html?utm_source=article&utm_medium=fb-button&utm_campaign=article-fbshare

No comments:

Post a Comment