Tuesday 7 April 2015

சவுதி அரேபியாவில் திருக்குறளை அரபு மொழியில் வெளியிட்டு சாதனை

சவுதி அரேபியா கலை மற்றும் கலாச்சார மையம், தம்மாம், சவுதி அரேபியா நடத்திய நான்கு நாள் கவிஞர்கள் மாநாட்டில் திருக்குறளை அரபி மொழியில் அறிமுகப்படுத்தி பேசியுள்ளார் முனைவர் ஜாகிர் உசேன்.

திருக்குறளை அரபு உலகிற்கு அறிமுகப்படுத்திய முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

நம் தாய் நாட்டுச் சொந்தங்கள், நண்பர்கள் அதிக அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அரபுக் கவிஞர்கள் வள்ளுவரின் வார்த்தைகளை மெய்மறந்து ரசித்தார்கள். இது ஓர் அற்புதமான அனுபவம்” என்று கூறியுள்ளார் முனைவர் ஜாகிர் உசேன்.



இப்படியான சிறந்த முன்னெடுப்பை மேற்கொண்ட முனைவர் ஜாகிர் உசேன் அவர்களுக்கு உலகத் தமிழர்களின் சார்பில் நம் பாராட்டுகளை தெரிவிப்போம். 


திருக்குறளின் அரபுமொழியாக்கம்,
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
نسيان الإحسان إليك ليس بحسنٍ
وحسنٌ نسيان الإساءة سريعاً. 



No comments:

Post a Comment