Saturday 11 April 2015

அந்த காலத்தில் இடி இடிக்கும் போது பெரியவர்கள் ”அர்ஜுனா”,”அர்ஜுனா”என்று உரக்க சொல்லுங்க

அர்ஜுனா... அர்ஜுனா...
அந்த காலத்தில் இடி இடிக்கும் போது பெரியவர்கள் ”அர்ஜுனா”,”அர்ஜுனா”என்று உரக்க சொல்லுங்க அப்பதான் நம்மை இடி தாக்காது என்று சொல்வார்கள். அது சரி அர்ஜுனன் இடியை வந்து வில்லால் அழித்து விடுவாரா,என்ன?என சிலபேர் கேலி பண்ணுவது உண்டு.
இதற்கு உண்மையா காரணம், இடி பலமாக இடிக்கும் போது அந்த சத்தத்தினால் காது அடைத்து கொள்வது மட்டுமல்லாமல் மன அதிர்வு ஏற்படும் அந்த நேரத்தில் “அர்ஜுனா"என்று சொல்லும்போது காது அடைக்காது. ஏனென்றால் ’அர்’ என்று சொல்லும் போது, நாக்கு மடிந்து மேல் தாடையைத் தொடும். 'ஜு' என்னும் போது வாய் குவிந்து காற்று வெளியேறும். 'னா' என்னும் போது, வாய் முழுமையாகத் திறந்து காற்று வெளியே போகும். இப்படி காற்று வெளியேறுவதால் காது அடைக்காது. மேலும் அர்ஜுனன் கிருஷ்ண பக்தர் அவர் பெயரை சொல்வதால் மன தைரியமும் ஏற்படும்.
இனிமேல் இடி இடித்தால் நல்ல தைரியமா,சத்தமா அர்ஜுனா...,அர்ஜுனா..,சொல்லுங்கள்.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

No comments:

Post a Comment