உலகளந்த பெருமாள் என்று சிறப்பாக விஷ்ணு புகழப்படுவதற்கு காரணமாக இருக்கும் வாமன அவதாரத்த்தில், விஷ்ணு ஒரு குள்ளமான பிராமணனாக வந்து, தேவர்களின் சொர்கத்தை தன் யோக பலத்தால் வென்ற மகாபலியிடம் இருந்து சொர்கத்தை மீட்டெடுப்பதற்காக, மகாபலியிடம் மூன்றடி நிலம் மட்டும் தனக்கு வேண்டும் என்று வாமனன் கேட்கிறார். மூன்றடி நிலம் தானே, உனக்கு எங்கு வேண்டுமானாலும் மூன்றடி நிலத்தை உன் விருப்பம் போல் எடுத்துக்கொள் என்று மகாபலி சொல்லி முடித்த உடனே, வாமணனின் விஸ்வரூப தரிசனத்தை கண்டு நடுங்கும் மகாபலி, வந்திருப்பது விஷ்ணு தான். அதனால் தான் முதல் இரண்டடியிலேயே பாதாள உலகத்தையும், சொர்கலோகத்தையும் அளந்து விட்டார். மூன்றாவது அடி வைக்க இடம் இல்லாததால் தன் தலை மீது மூன்றாவது அடியை வைக்க சொல்கிறார் என்பது என்னவோ நாம் எல்லோருமே வேதங்களின் மூலம் அறிந்த விசயமே. ஆனால் இதற்காக இப்பொழுது இருக்கும் நாம் ஏன் அவரை கோவில் கட்டி கும்பிட வேண்டும் என்று நம் பகுத்தறிவு கேட்கும் போது, இந்த கதையை
அப்படியே கேட்டால் எந்த விடையும் கிடைக்காது. மாறாக ஏன் பிராமணனாக அவதாரம் எடுத்தார் மற்றும் ஏன் குள்ளமாக அவதாரம் எடுத்தார் போன்ற கேள்விகளுக்கு எந்த மனிதர்கள் எழுதிய வேதத்திலும் காணப்படாத ஆழமான ஆன்மீக ரகசியம் அதில் ஒளிந்துள்ளதை உணர்ந்தால் மட்டுமே நாம் பொருள் புரிந்து பூஜை செய்ய தொடங்குவோம். அப்படிப்பட்ட ஞானத்தின் மூன்றாவது கண்ணை திறக்க உதவும் இந்த இறைவனின் நேரடி ஞானத்தை தாங்கி வரும் இந்த ஆன்மீக வீடியோவை உங்கள் அன்பான ஆன்மீக சகோதர சகோதரிகளுடன் அவசியம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment