Tuesday 7 April 2015

சிரவணர்களும்-பிராமணர்களும், ஜைனர்களும்-பௌத்தர்களும், இந்தியர்களும்-கிரேக்கர்களும்

வேதகாலத்தில் அல்லது வேதங்கள் படிப்புமுறையாக இருந்த காலத்தில் மஹாவீரர்-புத்தர் தோன்றியது: மஹாவீரரும், புத்தரும் திடீரென்று அறிவாளிகளாக, ஞானிகளாக, தீர்த்தங்கராக அல்லது புத்தராகிவிடவில்லை. பாரதத்தில் பிறந்ததால் வேதங்கள், வேதாங்கங்கள் மற்றும் இதர புத்தகங்களைப் படித்துதான் அந்நிலையை அடைந்திருந்தார்கள். குருகுலத்தில் பிராமணர்களிடம்தாம் அவர்கள் பயின்றார்கள். க்ஷத்தியர்களாக இருந்தும் அந்நிலையை அடைந்தார்கள் எனும்போது, அக்காலத்தில் எந்தவித வேறுபாடும் இல்லையென்றாகிறது. அதாவது, வேதங்களை யார் வேண்டுமானாலும் படிக்கலாம் கற்கலாம் என்றிருந்தது. இருந்த பிராமணர்களுடன் வாதிட்டு, தத்தமது புதிய கருத்துகளை மக்களிடம் பரப்பி அவர்கள் தங்களது சீடர்களை, நம்பிக்கையாளர்களை, அபிமானிகளை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். இவற்றை அந்தந்த ஜைன-பௌத்த நூல்களே எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், பாரதத்தின் வடமேற்கு பகுதிகள் வழியாக ஜைனர்களின் வெளியேற்றம், கிரேக்கர்களின் நுழைவுகள் சில மாற்றங்களை ஏற்படுத்தின.
ஜைன-பௌத்த மதங்களில் இருந்தது சில வித்தியாசங்களே: மஹாவீரர். (c.599-527 BCE) மற்றும் புத்தர் (c.567-487 BCE) சமகாலத்தவர்கள் தாம். இருவர்களின் போதனைகளும் ஒரேமாதிரியாகத்தான் இருந்தன. கடவுட்கொள்கையைத் தவிர, பெரும்பாலான விஷயங்களில், வேதங்களிலிருந்து விலகவில்லை. பொதுஜனங்களுக்கேற்ற வரையில், ஜைன-பௌத்தர்கள் வேதமத நம்பிக்கையாளர்களைப் போலவே இருந்தார்கள் என்று தெரிகிறது. அவர்களது தலைவர்களும் பிராமணர்கள் போன்றே இருந்தனர் என்று தெரிகிறது. இதனால் தான், சமகால கிரேக்கர்களும் அடையாளம் காணாமல் குழம்பிபோய் இருந்தனர். ஜைன-பௌத்தர்கள் பாரத சமூகத்தில் அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்று அத்தகைய வெளித்தோற்றத்தைக் கொண்டிருந்தார்கள் என்றும் தெரிகிறது[1].
கிரேக்கர்கள் இந்தியாவிற்கு வந்து படித்துச் சென்றது: இந்தியா அக்காலத்தில் விஞ்ஞானம், மருத்துவம், முதலிய துறைகளில் சிறந்து விளங்கியதாலும், அதற்கான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் (ஆசிரமங்கள்) இருந்ததினாலும், பல பாரதத்திற்கு கற்க வந்தனர். சுமார் 300 BCE க்தேசியாஸ் (Keasiast) மற்றும் மெகஸ்தனிஸ் (Megasthanese) என்ற இரு கிரேக்க மருத்துவர்கள் இந்தியாவிற்கு வந்து வடவிந்தியாவில் தங்கியதாக மேனாட்டு சரித்திராசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அவர்கள் ஒன்றும் அப்படியொன்றும் வெறுமனே தங்கியிருக்க வரவில்லை. முன்னர் கிரேக்க தத்துவஞானிகள், அறிஞர்கள் – பிதாகோரஸ்[2] (Pythagorus c.560-480 BCE), பிளாட்டோ[3] (Plato – 427-347 BCE) முதலியோரும் வந்துள்ளதாக அவர்களேக் குறிப்பிட்டுள்ளனர்[4]. இதனால்தான் கிரேக்கத் தத்துவங்களில் இந்தியத்தாக்கம் வெளியாகிறது[5]. ஆன்மா, ஆன்மா பலவுடல்களைப் பெறுவது, மறுஜென்மம், பாவம்-புண்ணியம், கர்மா போன்ற கருத்துகள் காணப்படுகின்றன. பொதுவாக கிரேக்க நுழைவுகளினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, ஏனெனில் அவர்கள் க்ஷத்தியர்களில் தாழ்ந்தவர்களாக (degraded), விலக்கி வைக்கப்பட்டவர்களாக (excommunicated) பிரிந்து போனவர்களாக, இந்தியமுறைகளினின்று மாறுபட்டவர்களாகக் கருதப்பட்டனர்[6].  புராணங்கள் இவ்விவரங்களை அதிகமாகவே தருகின்றன. எட்வர்ட் போக்காக் (Edward Pococke), காலனில் டோட் (Col. Tod), வில்லியம் ஜோன்ஸ் (William Jones) போன்றவர்களும் இதனை எடுத்துக் காட்டியுள்ளனர்.
ஜைனர்கள்-பௌத்தர்கள்-பிராமணர்கள் பற்றிய கிரேக்கர்களின் குழப்பம்: கிரேக்கர்கள், பிராமணர்களை அறிந்திருந்தனர், ஆனால், மேற்சொல்லப்பட்டக் காரணங்களால், கிரேக்கர்களை பிராமணர்கள் ஜம்புத்வீபத்தில் இருப்பவர்களாகக் கருதவில்லை[7]. மெகஸ்தனிஸ் போன்றவர்கள் பிராமணர்களை “தத்துவஞானிகள்” என்று குறிபிட்டிருக்கிறார்கள்[8]. இன்னொரு கிரேக்க ஆவணமோ அந்த தத்துவஞானிகளில் இரு பிரிவினர் சர்மேன்ஸ் (Sarmanes) மற்றும் பிராக்மேன்ஸ் (Brachmanes) என்றிருந்ததாகக் குறிப்பிட்டுகிறது. இருப்பினும் சிரவணர்கள் மற்றும் பிராமணர்கள் இடையில் கிரேக்கர்களுக்குக் குழப்பம் இருந்தது. மெகஸ்தனிஸ் இந்திய முனிவர்களை “ஹைலோபியோய்” (hylobioi) என்று குறிப்பிட்டு மற்றவரை “பௌத்த”வின் சீடர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் “ஹைலோபியோய்” என்பவர்கள் பிராமணர்கள் என்றும், “பௌத்த”வின் சீடர்கள் சிரவணர்கள் என்றும் கொள்ளலாம்.  உண்மையில் மெகஸ்தனிஸ் எழுதியதாக சொல்லப்படும் “இண்டிகா” என்ற நூலேயில்லை. பிற்காலத்தில் மெகஸ்தனிஸ் சொன்னது என்று பல கிரேக்க நூல்களில் உள்ளவற்றைத் தொகுத்து வெளியிட்டதுதான் அந்த “இண்டிகா” என்பது.
முதல் நூற்றாண்டுகளிலும் தொடர்ந்த குழப்பம்: இன்னொரு மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டு கிரேக்க ஆவணத்தை வைத்துக் கொண்டு, இந்த பிராச்மேன்கள் / பிராக்மேன்கள் / பிராமணர்கள் (Brachmanes) துங்கபத்திரை ஆற்றங்கரையில் நிர்வாணமாகச் சுற்றிக் கொண்டிருந்தார்கள் என்று விளக்கம் கொடுக்கிறார்கள்[9]. ஆனால் அப்படி நிர்வாணமாக சுற்றும் சாமியார்கள், திகம்பர ஜைன சாமியார்கள்தாம். ஆகவே கிரேக்கர்களுக்கு பௌத்த-ஜைன துறவிகளிடையே கூட வித்தியாசம் தெரியவில்லை என்று தெரிகிறது. இல்லை மேலே எடுத்துக் காட்டியபடி, அலெக்சாந்தர் தோற்றதை மறைக்க இப்படி குழப்பியிருக்கலாம். இல்லை சுமார் 250 BCE லிருந்து நான்காம் நூற்றாண்டு வரை ஜைன-பௌத்த-பிராமணர்களுக்கு வித்தியாசமே இல்லாமல் இருந்தது போலும். இல்லை ஜைன-பௌத்தர்கள் பிராமணர்களைப் போலவே தோற்றம் கொண்டு, வேடமிட்டு உலாவந்து கொண்டிருந்தார்கள் போலும். அதனால்தான், பிராமணர்கள் அவர்களை “பாஷாண்டிகள்” என்றழைத்தனர். அவர்களுக்கு வேதங்களைக் கற்றுக் கொடுக்க மறுத்தனர். ஏனெனில், வேதங்களைப் படித்து பிறகு வேதங்களையே குறைக்கூறுவது, தூஷிப்பது அவர்களது வேலையாக இருந்தது. மேலும், வேதங்களிலுள்ள பெரும்பாலான கருத்துகளையும், அடிப்படை உண்மைகளையும் ஏற்றுக் கொண்டு, அவ்வாறு வேதங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் அவர்களது போக்கும் போலித்தனமாகப் பட்டது.
அசோகர்காலத்தில் (c.250-200 BCE) சிரவணர்கள்பிராமணர்கள்சமமாக பாவிக்கப்பட்டார்கள்: அவர்களுக்கு அவர்கள் க்ஷத்தியர்களில் தாழ்ந்தவர்களாக (degraded), விலக்கி வைக்கப்பட்டவர்களாக (excommunicated) பிரிந்து போனவர்களாக, இந்தியமுறைகளினின்று மாறுபட்டவர்களாகக் கருதப்பட்டனர்[10].  அதனால், அசோகனுடைய கல்வெட்டுகளும் சிரவணர்கள், பிராமணர்கள் என்று குறிப்பிட்டு, கிரேக்கர்களைக் குறிப்பிடாமல் இருக்கின்றன சிரவணர்கள் மற்றும் பிராமணர்கள் இல்லாத சமூகக்குழுமங்களே/நாடுகளேயில்லை, ஆனால் கிரேக்கர்களிடம் மட்டும் அவர்கள் இல்லை[11]. அதாவது கிரேக்கர்கள் தங்களது நாட்டை அவ்வாறுக் கூறிக்கொள்ளவில்லை. இங்கு பண்டார்கர் போன்றோர் அயோனியர்கள் வேறு, கிரேக்கர்கள் வேறு என்று கூறுகின்றனர்[12]. ஆனால் மேற்பட்ட நம்பிக்கைகள் கொண்ட மதத்தைக் கொண்டிருந்தனர். எப்படியாகிலும் இருக்குழுக்களுமே சமுக்கத்தில் உயர்வாக மதிக்கப்பட்டார்கள் என்று தெரிகிறது. அசோகரைப் பொறுத்தவரைக்கும் இருவர்களுன் சமமாக பாவிக்கப்பட்டார்கள். “ப்ரமணஸ்ரவண” மறும் “ஸ்ரவணப்ரமண” என்ற சொற்றோடர் மாறிமாறி அசோகரின் கல்வெட்டுகளில் பல இடங்களில் உபயோகப்படுத்தப் பட்டுள்ளன.
ஜைன-பௌத்த காலத்தில் படிப்புமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டது: ஜைனர்கள்-பௌத்தர்கள் வேதநெறிகளினின்று மிகவும் விலகி மந்திர-தந்திர-யந்திரமுறைகளில் ஈடுபட்டபோது, சமூகத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. பெண்கள் ஒருபக்கத்தில் உரிமைகள் கொடுக்கப்பட்டாலும், மந்திர-தந்திர-யந்திரமுறைகளில் பாலியல் ரீதியில் மிகவும் சதாய்க்கப்பட்டார்கள் (Sexually exploited) என்று தெரிகிறது. மேலும் அஹிம்சையை (non-violence) போதித்துக் கொண்டு, ஹிம்சை வேலைகளில் ஈடுபட்டது, உள்ள நிலைமையை அனுசரித்து, அசோகனும் தனது கல்வெட்டில் தினமும் மூன்று மிருகங்கள் – இரண்டு மயில் மற்றும் ஒரு கருப்பு மான் – கறிக்காகக் கொல்லப்படலாம் என்று விலக்கு அளித்துள்ளார்[13]. மக்களுக்கு வியப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். குறிப்பாக அஹிம்சை போதித்து, பௌத்தர்கள் மாமிச உணவை உட்கொண்டது பெரிய முரண்பாடே. அதேபோல, அஹிம்சை கடைபிடிக்கும் ஜைனர்கள் போர்களில் ஈடுபாட்டு, நாடுகளை தங்களது ஆதிக்கத்தில் கொண்டு வந்தது. அதில் அசோகன் மட்டும் விதிவிலக்காக இருந்தான். அவரும் கலிங்கப் போருக்குப் பிறகுதான் மாறினான். இதனால், இவர்கள் காலத்தில் பொதுப்படையாக, வெளிப்படையாக இருந்த ஆசிரமமுறை பள்ளிக்கூடங்கள் மாறி, விகாரங்கள்-மடாலயங்கள் முறை படிப்புமுறை தோன்றியது. ஆனால், ஜைன-பௌத்த விகாரங்கள்-மடாலயங்கள் ஊர்களுக்கு-நகரங்களில் வெளியில், ஒதுக்குப்புறத்தில், தூரத்தில் இருந்தன. அங்கு யார் வேண்டுமானாலும் சென்றுவிடமுடியாது, சேர்ந்து படிக்க முடியாது. அதாவது ஜைன-பௌத்தர்களுக்குத்தான் முதலிடம் என்பது தெரிந்த விஷயமே.
மடாலய-குருக்குல வேறுபாடுகள் பல்கலைக்கழகப் படிப்புகளில் சண்டை-சச்சரவானது: ஒதுக்குப்புறமாக விகாரங்களில் நடக்கும் விஷயங்கள் பொது மக்களுக்குத் தெரியாமல் இருந்தாலும், விளைவுகள் தெரியவரத்தான் செய்தன. படிப்புமுறைகளில் மட்டுமல்லாது, மருத்துவமுறைகளில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. மந்திர-தந்திர-யந்திரமுறைகள் கவனமாகக் கற்றுக் கொள்ளப்பட்டு, முறையாக, வேண்டிய காரியங்களுக்கு மட்டும் தான், உபயோகப் படுத்தப் படவேண்டும் என்றமுறை போய், யார் வேண்டுமானாலும், எங்கே வேண்டுமானாலும், எப்படியும் உபயோகப் படுத்தலாம், பரிசோதிக்கலாம் என்று வந்தபோதுதான், துஷ்பிரயோகங்கள் ஆரம்பித்தன. காபாலிகர், காலபைரவர், காளாமுகர், பாசுபத, லகுலீஸ போன்றோர் தாம் பிணங்களை அறுப்பது (dissection of dead bodies – cadavre), அறுவைசிகிச்சைச் செய்வது என்றமுறை போய், மற்றவர்களும் செய்ய ஆரம்பித்தனர். கண்-பொறை நீக்கல், மண்டையோட்டு அறுவைசிகிச்சை, மற்ற ரணசிகிச்சை முதலியவை வேண்டியவர்களுக்கு ஜாக்கிரதையாக முறையாகச் செய்யப்பட்டன. புத்தரே அறுவைசிகிச்சைமூலம் பிறந்து இறந்தார், அதாவது சிஸரியன் ஆபரேஷன் மூலம் பிறந்து, தனது எண்பதாவது வயதில் பன்றி மாமிசம் உண்டபோது, உணவுக்குடலில் சிக்கிக் கொண்டு, அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, பலன் அளிக்காமல் இறந்தார். இதனால், அறுவைசிகிச்சைமுறை, பாரத்தில் தடை செய்யப்பட்டது. ஆனால், பாரத்ததிற்கு வெளியே தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டது[14].
பிணங்களை அறுப்பது-அறுவைசிச்சை செய்வது முதலியன: அஹிம்சை போதித்த ஜைனர்-பௌத்தர் எப்படி பிணங்களை அறுத்து மருத்துவர்கள் ஆகியிருக்க முடியும் என்று யாரும் யோசித்ததாகத் தெரியவில்லை. இதனால்தான், சரகசம்ஹிதையை சரியாகப் படிக்காதவர்கள், அறுவைசிகிச்சை பயிலும் மாணவர்களுக்கு பிணங்களுக்கு பதிலாக, காய்கறிகள் கொடுத்து, அவற்றையறுத்து பயிற்சி பெற்றனர் என்று விளக்கம் அளிக்கின்றனர். அதுமட்டுமல்லாது, இந்தியர்களுக்கு எலும்பியல் அறிவேயில்லை என்றும் முடிவுக்கு வந்து திரிபு விளக்கங்கள் கொடுக்கின்றனர். ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொள்வதாக இருந்தால், யாகங்கள் புரிந்த வேதகாலத்தவர்கள் ஆடு, மாடு, குதிரை போன்றவற்றைப் பலிக்கொடுத்திருந்தால், அவர்களுக்கு பிணங்களை அறுக்க ஒன்றும் தயக்கமோ, பயமோ, அறுவருப்போ இருந்திருக்காது. ஆனால், அஹிம்சை போதித்த ஜைனர்-பௌத்தர் அவ்வாறு செய்திருக்க முடியாது. ஆகவே உண்மையில் உயிர்பலி, கொலை முதலியன ஏன் தடுக்கப்பட்டது என்று ஆராயவேண்டியுள்ளது.
இன்றைக்கும் ஆயுர்வேதம்-சித்தா படிக்கும் மாணவர்கள் [B.A.M.S (Bachelor of Ayurvedic Medicine and Surgery) மற்றும் B.S.M.S (Bachelor of Siddha Medicine and Surgery)] பிணங்களை அறுத்து (dissection of dead bodies – cadavre) பயிற்சி இல்லாமல் மருத்துவர் ஆகமுடியாது. அம்மருத்துவக் கல்லூரிகளில் பிணங்கள் அழுகாமல் பாதுகாத்துவைக்க குளிர் அறை இருந்தால் தான், அப்படிப்புகளுக்கு ஒப்புதலே அளிக்கப்படுகிறது. ஆகவே, பழங்காலத்தில் ஒன்றும் தெரியாமல், கண்-பொறை நீக்கல், மண்டையோட்டு அறுவைசிகிச்சை, மற்ற ரணசிகிச்சை முதலியவற்றை செய்தனர் என்பது ஏதோ “சித்துவேலை” காட்டுவதைப் போல இருக்கும். அத்தகைய “சித்தர்கள்” அக்காலத்தில் இருந்திருக்க முடியாது. எனவே அறுவைசிகிச்சை செய்யப்பட்டதற்கு அகழ்வாய்வு ஆதாரங்கள் இருக்கும் போது, அதற்கான மருத்துவர்கள் மற்றும் அறுவைசிகிச்சை வல்லுனர்கள் இல்லை என்று வாதிடுவது அற்பத்தனமாகவே தோன்றுகிறது.
© வேதபிரகாஷ்
14-09-2012

[1] இது சூப்பிக்கள் இந்துமதத்துறவிகள் போல, பிற்காலத்தில் சித்தர்கள் போல வேடமிட்டு உலா வந்தது போன்றது எனலாம். கிருத்துவர்களும் அதேபோல காவியுடையணிந்து, குடுமி வைத்துக் கொண்டு உலல வந்தார்கள். இன்றைக்கும் கிருத்துவர்கள் தங்களை பத்மா முதலியார், மணி ஐயர் என்று கூறிக்கொண்டு, பாமர மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
[2] Pythagoras arrived in India too late to come into personal contact with the Buddha, he was greatly influenced by his teachings. He went to India a student, he left it as a teacher, and even to this day he is known in that country as Pitar Guru, and as Yavanacharya, the Ionian Teacher.
[3] Typically Indian are the dying words of Plotinus, noblest of the Neo-platonists “Now I seek to lead back the self within me to the All-self.” One great teacher has said, “The end of knowledge is to know God – not only believe; to become one with God – not only to worship afar off.” We gain a hint in the Kathopanishat (V1- 17) “Let a man with firmness separate it (the soul) from his own body, as a grass stalk from its sheath,” to which point we will return later.
[4] Richard Garbe, India and Christendom, He points out, “…………….the historical possibility of the Greecian world of thought being influenced by India through the medium of persia must unquestionably be granted, and with it the possibility of the above-mentioned ideas (of the Sankyan and Vedanta Philosophy) being transferred from India to Greece”.
E. W. Hopkins says: “Plato is full of Sankhyan thought, worked out by him, but taken from Pythagoras. Before the sixth century B.C. all the religious philosophical ideas of Pythagoras are current in India. (L. Schroeder, Pythagoras). If there were but one or two of these cases, they might be set aside as accidental coincidences, but such coincidences are too numerous to be the result of change. ”
[5] வில்லியம் ஜோன்ஸ் போன்றோர் பாரதம் மற்றும் கிரேக்க கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, முதலியவற்றிலுள்ள பல ஒற்ருமைகளை எடுத்துக் காட்டியுள்ளனர். இக்கருத்து வலுப்பட்டபோது தான், தலைக்கீழ் கருதுகோள்களை மேனாட்டவர் உண்டாக்கி, கிரேக்கர்களிடமிருந்து இந்தியர்கள் காப்பியடித்தார்கள் என்று முன்வைத்தார்கள்.
[6] மஹாபாரத யுத்தம் நடந்த பின்னர், க்ஷத்தியர்கள் பாண்டவர்-கௌரவர் என்று இருதரப்பில் சேந்து சண்டையிட்டதால் அவர்களிடம் அவ்வாறான பாகுபாடு ஏற்பட்டது. மேலும் துவாரகை கடலில் மூழ்கி யாதவர்கள் முழுவதுமாக அழிந்தபோது, கிருஷ்ணரும் மறைந்தார். அப்பொழுது ஒன்பது கோள்களும் ஒரே கோட்டில் வந்ததால் கலியுகம் பிறந்ததாகக் கணக்கிடப்படுகிறது. அது 3102 BCEயிலிருந்து ஆரம்பிக்கிறது. இக்கலி சகாப்தம் குறிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுகளும் ஆவணங்களும் உள்ளன.
[7] Romila Thapar, Asoka and the Decline of the Mauryas, Oxford University Press, New Delhi, 1987, p.167.
[8] Strabo, XV, I, p.59.
[9] Pseudo-Origen, Philosophia, p.24.
[10] மஹாபாரத யுத்தம் நடந்த பின்னர், க்ஷத்தியர்கள் பாண்டவர்-கௌரவர் என்று இருதரப்பில் சேந்து சண்டையிட்டதால் அவர்களிடம் அவ்வாறான பாகுபாடு ஏற்பட்டது. மேலும் துவாரகை கடலில் மூழ்கி யாதவர்கள் முழுவதுமாக அழிந்தபோது, கிருஷ்ணரும் மறைந்தார். அப்பொழுது ஒன்பது கோள்களும் ஒரே கோட்டில் வந்ததால் கலியுகம் பிறந்ததாகக் கணக்கிடப்படுகிறது. அது 3102 BCEயிலிருந்து ஆரம்பிக்கிறது. இக்கலி சகாப்தம் குறிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுகளும் ஆவணங்களும் உள்ளன.
[11] J. Bloch, Les Inscriptions d’Asoka, Paris, 1950, p.128.
[12] D. R. Bhandarkar, Asoka, Univesity of Calcutta, 1969, P.27
[13] அசோகருடைய 14ம் கல்வெட்டு. Edict.No.I, The Sacredness of life.
[14] K.V. Ramakrishna Rao, The Position of Surgery before and after Buddha, in Sastra Trayi-Proceedngs of Bhaskariyam-Bharatiyam-Dhanvantariyam, 2007, Bangalore, pp.197-198.

No comments:

Post a Comment