Saturday 11 April 2015

யார் சொன்னது பெண்கள் ஆண்களுக்காக ஒரு செங்கல்லை கூட நட்டு வைத்ததில்லை என்று?

மும்தாஜூக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மஹாலை போலவே ( அதை விட அழகாகவே கிணற்றை போல தரைக்கு அடியில் இருந்தும்) முதலாம் பீமதேவரின் நினைவாக அவரது மனைவி உதயமதி கட்டிய நினைவகம் குஜராத்தில் உள்ளது. உதயமதி இதை கட்ட ஆரம்பித்தாலும் இதனை கட்டி முடித்தது அவரது மகன் முதலாம் கரன்தேவ். இந்த கிணற்றில் இருந்து கிட்டதட்ட 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்க வழி உள்ளது. கல்லால் ஆன குழாய்கள் போடப்பட்டு அருகேயுள்ள சித்ப்பூர் என்ற நகர் வரை உள்ளது. இது தண்ணீர் செல்லும வழியா இல்ல தப்பி செல்லும் வழியா என்று சொல்ல முடியவில்லை. இந்தியாவின் மிக நீளமான சுரங்க வழியும் இதுவே.
படிகளாக இறங்கி செல்லும் இந்த நிலத்தடி மாளிகை ஒரு ஆழமான கிணற்றில் சென்று முடிகிறது. பாதிக்கு மேல் செல்ல இன்று அனுமதி இல்லை. உள்ளே எல்லா இடங்களிலும் இடைவெளி இல்லாமல் சிற்பங்கள். இந்த நிலத்தடி கிணறின் நீளம் 64 மீட்டர் நீளமும், 27 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த கிணற்றின் வடிவ நேர்த்தியை எந்த கோணத்தில் நின்று நோக்கினாலும் பரவசத்துடன் அல்லது உணர முடியாது. 1998 முதல் இகயது யுனெஸ்கோவால் பாதுக்காக்கப்படுகிறது. ( ஜலாலுதீன் கீல்ஜியின் தளபதியாக இருந்த அலாவுதின் கில்ஜீ எல்லா கோட்டைகளையும் கோயில்களையும் இடித்தழிந்தார். கிட்டதட்ட 300 இந்து சமண கோயில்களை இடித்தார் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.) அதில் கொஞ்சம் சிதிலம் அடையாமல் இருப்பதில் இந்த ''ராணி கீ வாவ் '' முக்கியமான ஒன்று.
அலாவுதீன் கில்ஜியில் இடித்த தள்ளப்பட்ட இந்த கலை அற்புதம் மேலும் மேலும் செங்கல் விழுந்து மண்மூடிப் புதைந்து கிட்டதட்ட ஆயிரம் ஆண்டுகள் எவருக்கும் தெரியாமல் கிடந்தது. அந்த இடம் மக்களால் ராணி கீ வாவ் என அழைக்கப்பட்டது.1958ஆம் ஆண்டு இந்த இடம் அகழ்வாரய்ச்சி கழகத்தின் கவனத்திற்க்கு வந்தாலும். 1972ஆம் ஆண்டுதான் அகழ்வு மீட்பு பணிகள் தொடங்கின. 1984 ல்தான் இது பொது பார்வைக்கு வைக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் சுற்றுலா பயணிகள் கலையார்வர்கள் பலர்க்கு இந்த இடம் பற்றி தெரியாது. மிக மிக குறைவாகவே இங்க பயணிகள் வருகின்றனா். மிகுந்த கவணத்துடன் இந்த கிணற்றிலிருந்து சிற்பங்கள் மீட்க படுகிறது. இதன் கட்டமைப்பில் 30 சதம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. அதுவே பிரமிக்க செய்கிறது. இதை போன்ற ஒரு மகத்தான கட்டுமானம் உலகில் வேறு எங்கும் உண்டோ என்பதே ஐயம்தான்.

No comments:

Post a Comment