முதலில் நம் பெண்கள் ஏன் தாலி அணிய வேண்டும் என்பதை ஒரு சித்த மருத்துவரை கொண்டு விளக்க வேண்டும்..
ஒவ்வொரு இடத்தின் தட்பவெட்ப நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள் அமைகின்றன.
தாலி மஞ்சள் கயிற்றில் அணிந்து தினமும் குளிக்கும்போது மஞ்சளா தாலியில் பூசுகின்றனர்.
மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி..
மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள்.அப்போது பல்வேறு நோய் தொற்றுகளுக்கு எளிதில் உள்ளாகிறார்கள்.அதிலிருந்து
கிருமி நாசினி மஞ்சள் தாயையும்,சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.
ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் எவ்வளவு சுய பிரசவம் நடந்தது,இப்போது எவ்வளவு நடை பெறுகிறது என்பதை கணக்கெடுங்கள்.
அது போல் 10 ஆண்டுகளுக்கு முன்பு எத்தனை பென்களுக்கு மார்பக புற்று நோய் இருந்தது, இப்போது எத்தனை பெண்களுக்கு இருக்கிறது என்றும் கணக்கெடுங்கள்..
அப்போது தெரியும் உங்கள் பகுத்தறின் விளைவு..
எம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை,உங்கள் பகுத்தறிவு அவர்களின் கால் தூசிக்கு ஈடாகாது.
அது போல் கிராமங்களில் கர்ப்பம் தரித்த பெண்கள் வெளி ஊர்களுக்கு செல்லும் போது தலையில் வேப்பிலை இலையை சொருகி வைப்பார்கள்.எதற்காக வேப்பிலை ஒரு கிருமி நாசினி..
உங்கள் பகுத்தறிவு இயக்கம் ஆரம்பித்கப்பட்டதன் நோக்கமே எம்மை இயற்கை வாழ்விலிருந்து அப்புரப்படுத்தி மேலை நாட்டானின் செயற்கை சேற்றில் தள்ளுவதற்கே..
No comments:
Post a Comment