நாம் இறைவனை தவிர மாதா, பிதா, குரு, சுவாமிகள், அகோரிகள், ரிஷிகள், ஆன்மீக வாதிகள், பெரியோர்கள் போன்றவர்களிடம் காலில் விழுந்து வணங்குவதையோ அல்லது வேறு முறையில் அவர்களுக்கு மரியாதை செய்வதையோ இஸ்லாமியர்கள் நகச்சுவையாக பார்ப்பது வழக்கம். காரணம் இறைவனை தவிர படைப்புக்களை வணங்குகின்றீர்கள் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களுடைய வேத புத்தகத்தகமான குறானை எடுத்துக்கொண்டால் அதில் ஆதாம் எனப்படும் ஒரு மனிதனை அல்லாஹ் வணங்கச்சொல்லி இருக்கின்றார். இதனை அவர்கள் சரியாக படிக்கவில்லை என்றுதான் நினைக்கின்றேன். ஆதாம் என்பவர் யார்? ஒரு மனிதர் ஆனால் இஸ்லாமியர்களால் கூறப்படும் வசனம் அல்லாவை தவிர பிற யாரை வணங்காதீர்கள் என்று, அப்படி சொல்லும் நீங்கள் ஆதாமுக்கும் அல்லாவுக்கும் இடையில் ஏன் இந்த முரண்பாடு
சற்று அலசி ஆராய்வோம் வாருங்கள்...
குர்ஆன் வசனங்கள்
2:34 ‘ஆதமுக்குப் பணியுங்கள்!’ என்று நாம் வானவர்களுக்குக் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான்.
7:11 உங்களைப் படைத்தோம். பின்னர் உங்களை வடிவமைத்தோம். பின்னர் ”ஆதமுக்குப் பணியுங்கள்!” என்று வானவர்களுக்குக் கூறினோம். இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் பணிந்தவர்களில் ஒருவனாக இல்லை.
17:61’ஆதமுக்குப் பணியுங்கள்!’ என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். ‘களிமண்ணால் நீ படைத்தவருக்குப் பணிவேனா?’ என்று அவன் கேட்டான்.
18:50 ‘ஆதமுக்குப் பணியுங்கள்!’ என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்.
20:116 ‘ஆதமுக்குப் பணியுங்கள்! என்று வானவர்களிடம் நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவன் மறுத்து விட்டான்.
குர்ஆன் என்ன சொல்லுகிறது.
ஆனால் மேலே குர் ஆனில் சொல்லப்பட்ட வசனங்கள் ஆதாமை படைத்து தேவ தூதர்களை பார்த்து அல்லாஹ் ஆதாமை வணங்கும்படி சொன்னதாக சொல்கிறது. மொழிபெயர்ப்பில் பணியுங்கள் என்று மொழிபெயர்த்தாலும் அரபியில் அவை வணங்குங்கள் என்ற அர்த்தத்தையே தருகிறது.
கீழே உள்ள குர் ஆன் வசனத்தை பாருங்கள்.
41:37 இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகி யவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய் யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்கு வோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்!
மேலே உள்ள இரண்டு வசனங்களிலும் ஸஜ்தா என்ற வார்த்தை வருவதை காண்பீர்கள். இதன் அரபி மொழியில் ஆங்கிலத்தில் எழுதிய வசனங்களை கீழே தருகிறேன்.
Transliteration 53:62:
Transliteration 41:37:
Wamin ayatihi allaylu waalnnaharu waalshshamsu waalqamaru la tasjudoo lilshshamsi wala lilqamari waosjudoo lillahi alathee khalaqahunna in kuntum iyyahu taAAbudoona
இந்த இரண்டு வசனங்களிலும் சுஜூத் என்ற வார்த்தை இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.இதே வார்த்தைதான் ஆதாமுக்கு பணியுங்கள் என்ற வசனத்திலும் உள்ளது. கீழே அந்த வசனத்தை பாருங்கள்.
Al-Baqara[2:34]
Waith qulna lilmalaikati "osjudoo" liadama fasajadoo illa ibleesa aba waistakbara wakana mina alkafireena
Al-Araf[7:11]
Walaqad khalaqnakum thumma sawwarnakum thumma qulna lilmalaikati "osjudoo" liadama fasajadoo illa ibleesa lam yakun mina alssajideena
Al-Isra[17:61]
Waith qulna lilmalaikati "osjudoo" liadama fasajadoo illa ibleesa qala aasjudu liman khalaqta teenan
Al-Kahf[18:50]
Waith qulna lilmalaikati "osjudoo" liadama fasajadoo illa ibleesa kana mina aljinni fafasaqa AAan amri rabbihi afatattakhithoonahu wathurriyyatahu awliyaa min doonee wahum lakum AAaduwwun bisa lilththalimeena badalan
Taha[20:116]
Waith qulna lilmalaikati "osjudoo" liadama fasajadoo illa ibleesa aba
மேலே உள்ள அனைத்து வசனங்களிலும் சுஜூத் என்ற வார்த்தை இருப்பதை காணலாம். இவை ஸஜ்தா என்ற மூலச்சொல்லில் இருந்து வந்த வார்த்தையாகும்.
இன்னும் மவ்லவி பிஜே அவர்கள் இந்த வசனத்துக்கு கொடுத்துள்ள விளக்க உரையில் என்ன சொல்லியுள்ளார் என்பதை கீழே வாசிக்கலாம்.
மவ்லவி பிஜே அவர்களின் விளக்கம்
///
பணியுங்கள் என்று தமிழாக்கம் செய்த இடத்தில் ஸஜ்தா எனும் மூலச் சொல் இந்த வசனங்களில் (2:34, 7:11, 15:29-31, 17:61, 18:50, 20:116, 38:72) பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸஜ்தா என்ற சொல்லுக்கு காலில் விழுதல் என்ற பொருளும், பணியுதல் என்ற பொருளும் உள்ளது.
////
இங்கு என்ன பிரச்சனை என்றால் இறைவனுக்கு மட்டுமே பணிய வேண்டும் என்பது அல்லாஹ்வுடைய வார்த்தையாக உள்ளதை மேலே உள்ள 53:62 வசனத்தில் இருந்து அறிந்துகொள்ளுகிறோம். அப்படி இருக்கும் பொழுது ஆதாமுக்கு ஏன் தேவதூதர்களை பணிந்துகொள்ள சொன்னார் அல்லாஹ் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.
மனிதர்களை வணங்குவதற்கு இஸ்லாமில் அனுமதி உண்டா? இல்லை என்பது பெரும்பாலான இஸ்லாமியர்களின் கருத்தாகும். அப்படியானால் ஏன் தேவதூதர்கள் ஆதாமை வணங்கவேண்டும்?
மனிதர்களை வணங்கலாமா?
சரி இந்துமதத்தை பொருத்தவரை அதிகாரத்துக்கு மேட்பட்டவர்களை மதிப்புக்குரியவர் என்ற காரணத்திற்காக மட்டும் வணங்குவதில் தவறு இல்லை. ஏன் என்றால் அது தடை செய்யப்படவில்லை. ஆனால் கடவுளுக்கு கொடுக்கவேண்டிய மரியாதையை எந்த மனிதனுக்கும் கொடுக்கவும் கூடாது எந்த மனிதரும் அதை ஏற்றுகொள்ளவும் கூடாது என்பதை இந்துதர்மம் எடுத்துக்காட்டுகிறது.
உதாரணத்திற்கு மனிதன் கழுதையைக் கூட வணங்கலாம். சுய ஆதாயம் எதையும் எதிர்பாராத பட்சத்தில், முகஸ்துதியாக மகிழ்விக்க வேண்டும் என்கிற நோக்கமின்றி, எவரும் எவரையும் வணங்கலாம். அப்படி வணங்குகையில் வணங்கப் படுகிறவர் உண்மையிலேயே வணங்கத் தக்கவராக இருக்கும் பட்சத்தில் அவ்வாறு வணங்கப் படுகையில் தாமும் கை கூப்பி, இங்கு செய்யப்படுகிற வணக்கம் தனக்கல்ல, தனக்குள்ளே குகையில் ஒளிரும் இறைச் சக்திக்கு உரித்தானதாகும் என மானசீகமாகச் சொல்லிக் கொள்ளத் தவறமாட்டார். அப்படி எண்ணுகிற பக்குவம் இல்லாதவராக இருப்பினும் அவரை வணங்குவதில் தப்பில்லை. எனெனில் வணங்குபவரின் பணிவே காலப் போக்கில் வணங்கப்படுபவரைப் பக்குவப்படுத்திவிடும். ஒருவரைப் பக்குவப்படுத்துவது பெரும் தொண்டே அல்லவா?
வணக்கம் அகந்தையை அழிக்கும். பணிவைத் தரும். பணியுமாம் பெருமை. பணிவு இழிவல்ல. பெருமைக்குரியதுதான். உண்மையில் நீ ஒருவனை வணங்குகிறபோது, வணங்கப்படுகிறவனைப் பார்க்கிலும் வணங்கத் தக்கவனாக ஆகிவிடுகிறாய்.
வணக்கம் பலவீனத்தின் அறிகுறி அல்ல. அடிமைப் புத்திக்கு அடையாளம் அல்ல. குருட்சேத்திரத்தில் அர்ஜுனன் எதிர் நின்றவர்களின் பாத கமலங்களின் முன் அம்பெய்து முதல் வணக்கம் செய்தபின்னரே அவர்களை அம்பெய்து கொன்றான். உன்னை வணங்குகிறேன், உலகாயத அவசியங்களுக்காக உன் வெளித் தோற்றத்தைத் தாக்குகிறேன். அது உனக்குச் செய்யபப்டும் அவமரியாதை அல்ல. இத்தாக்குதலில் தகுதியுள்ளவன் வெல்லட்டும். சத்தியம் வெல்ல சக்தியின் துணை அவசியம் என்பதை அறிந்துள்ளேன். அதன் பிரயோகத்தைப் பொருத்தே முடிவு நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதையும் அறிந்துள்ளேன் என்கிற பிரக்ஞையுடன் விரோதியையும் வணங்கலாம். பகைவனுக்கருள்வாய், நன்னெஞ்சே. புரிந்து கொள்வது சிரமம். புரிந்துவிட்டால் பிறகு சொர்க்க சுகம்.
மரம், செடி, கொடி, விலங்குகள் அனைத்தையும் வணங்க நம் முன்னோரால் நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. அது அச்சத்தின் காரணமாக அல்ல. மடமையின் காரணமாகவும் அல்ல என்பதை மெய்யாகவே, மெய்யாகவே அறிந்துள்ளேன். அது ஒரு நன்றி பாராட்டல்.
மனிதனே அனைத்திலும் மேம்பட்டவன் என்கிற அகந்தையை வளர விடாமல், இவ்வுலகம் நம் அனைவருக்கும் சொந்தம், நாம் அனைவரும் பங்காளிகள், இங்கு ஒருவருக்கொருவர் இசைந்து ஒருவர் இருத்தலை மற்றவர் அங்கீகரித்து வாழ்தலே தொடர்ச்சிக்கு வழி என்று சொல்லாமல் சொல்லும் சமிக்ஞை அந்த வணக்கம்.
சிவானந்த சுவாமி இவ்வாறு கூறுகின்றார்
மனிதன் கடவுளாக முடியுமா? என்று பக்தர் ஒருவர் சிவானந்த சுவாமியிடம் கேட்டபோது மனிதன் பெறுகிறான் மறந்து விடுகிறான். கடவுள் கொடுக்கிறார், மன்னிக்கிறார். எப்போது மனிதனும் கொடுக்கவும் மன்னிக்கவும் செய்கிறானோ அப்போது அவன் தெய்வத்தன்மையை அடைகிறான் என பதிலளித்தார்.
இதிலிருந்து நாம் தெளிவாக புரிந்துகொள்ளுகிறோம் கடவுளுக்கு கொடுக்கவேண்டிய தொழுகையை மனிதர்களுக்கோ,அல்லது தேவதூதர்களுக்கோ எந்த காரணத்தை கொண்டும் நாம் கொடுத்துவிடக்கூடாது என்பதை.
ஆனால் குர் ஆனை பொருத்தவரை ஆதாமை அல்லாஹ் வணங்கும்படி தேவதூதர்களுக்கு கட்டளையிட்டார் என்று சொல்லப்படுவதில் இவர்களின் தவ்ஹீத் வீழ்ச்சியடைகிறது. தவ்ஹீத் என்றால் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, அவனுக்கு கட்டுப்படுவது என்று பலர் சொல்லுவதை கேட்டுள்ளேன். உடனே இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வார்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டுவது என்றால் அவர் ஆதாமை வணங்கு என்று சொன்னால் வணங்குவது உட்பட்டதுதான் என்பார்கள். அதைபற்றி கொஞ்சம் பார்ப்போம்.
சமீபத்தில் ஒரு விவாதம் தூத்துக்குடியில் நடைபெற்றதில் தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த நண்பர் சொல்லுகிறார் அல்லாஹ் வணங்கு என்று சொன்னால் வணங்கிவிட்டு போகவேண்டியதுதான் என்கிறார். அப்போ அல்லாஹ் வணங்கச்சொன்னால் எதை வேண்டுமானாலும் வணங்கலாமா? அப்படி வணங்கச்சொன்னால் அவர் இறைவனா?
இந்த வீடியோவை பாருங்கள்.
ஆதாமை வணங்க சொல்லும் அல்லாஹ்
https://www.facebook.com/Religion.History/videos/885839308173164/
என்ன நண்பர்களே கொஞ்சம் பகுத்தறிவோடு சிந்தித்துபாருங்கள். அல்லாஹ்வை தவிர வணக்கத்துக்குரியவன் யாரும் இல்லை என்று சொல்லும் நீங்கள் அல்லாஹ் சொன்னால் யாரையும் வணங்குவோம் என்று சொல்லுவது முரண்பாடாக இல்லையா? மனிதர்கள் செய்ய கூடாது என்று சொல்லும் மிகக்கேவலமான தவறை இறைவன் மனிதர்களை பார்த்து செய்யசொல்லுவான் என்று சொல்லுகிறீர்களே. இது எந்த வகையிலும் நியாயமாக முடியுமா? கொஞ்சம் நிதானமாக சிந்தியுங்கள். இதன் விளைவு என்ன தெரியுமா? இந்த வசனத்துக்கு விளக்கமாக இஸ்லாமிய அறிஞர்களில் பலரும் பலதை சொல்லுகிறார்கள். கீழே உள்ள மவ்லவி பிஜே அவர்கள் விளக்கியுள்ள விளக்கவுரையில் எழுதப்பட்டுள்ள சிலதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இந்த வசனத்துக்கு பல இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் கருத்தை பிஜே அவர்கள் மறுக்கிறார்.
// ///இவ்வசனங்களைச் சான்றாகக் கொண்டு பெரியார்களுக்கும், மகான்களுக்கும் ஸஜ்தா (சிரம் பணிதல்) செய்யலாம் என்று சிலர் வாதிட்டு வருகின்றனர். இது முற்றிலும் தவறாகும்.
//////
மவ்லவி பிஜே அவர்கள் மற்றவர்களை வணங்கலாமா? கூடாதா என்பதற்கு கொடுக்கும் விளக்கம்..(தேவையானவை மட்டும் இங்கு பதிவு செய்யபடுகிறது)
//நாம் இப்போது செய்வது போலவே அவர்கள் ஸஜ்தாச் செய்தார்கள் என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டால் கூட அதை நாம் பின்பற்ற முடியாது. காரணம் ஸஜ்தாச் செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதால் தான் வானவர்கள் ஆதமுக்கு ஸஜ்தாச் செய்தனர். “பெரியவர்களுக்குச் ஸஜ்தா செய்யுங்கள்” என்று அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதரோ நமக்குக் கட்டளையிடவில்லை. மாறாகத் தடை விதித்துள்ளனர். படைக்கப்பட்டவற்றுக்கு ஸஜ்தாச் செய்யக் கூடாது. படைத்தவனுக்குத் தான் ஸஜ்தாச் செய்ய வேண்டும் என்பது தான் நமக்கு இடப்பட்ட கட்டளை. முஆத் (ரலி), ஸல்மான் (ரலி) போன்ற நபித் தோழர்கள் தமக்கு ஸஜ்தாச் செய்ய முன் வந்த போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டனர். மனிதனுக்கு மனிதன் ஸஜ்தாச் செய்யக் கூடாது என்று பிரகடனப்படுத்தி விட்டனர்.
(நூல்கள்: திர்மிதி 1079, இப்னுமாஜா 1843, அஹ்மத் 12153, 18591, 20983, 23331)
இவ்வாறு நமக்குத் தெளிவான தடை இருக்கும் போது வானவர்களுக்கு இடப்பட்ட கட்டளையை நாம் செயல்படுத்த முடியாது. பெரியவர்களிடம் பணிவாகவும், அடக்கமாகவும் நடந்து கொள்ளலாம். ஆனால் அவர்களின் கால்களில் விழுவதையும், அவர்களுக்கு ஸஜ்தாச் செய்வதையும் இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை.///
இஸ்லாமிய அறிஞர்கள் வாதம் சரியானதா?
இதுதான் மவ்லவி பிஜே அவர்கள் சொல்லும் விளக்கம் ஆகும்.பாருங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் இந்த வசனத்தை விளக்கம் எவ்வளவு தடுமாறுகிறார்கள் என்று பாருங்களேன். சாதாரணமாக அறிந்தவண்ணம் சர்வ வல்லமை உள்ள கடவுள் ஏன் சாதாரண மனிதனை தேவதூதர்கள் வணங்கும்படி சொன்னார் என்ற காரணம் சரியாக சொல்ல முடியவில்லை. அதனால் தான் கடவுள் வணங்கச்சொன்னால் வணங்கவேண்டும் என்கிறார்கள். அல்லாஹ்வை தவிர யாரையும் வணங்கக்கூடாது என்கிறவர்கள் அல்லாஹ் தேவதூதர்களை ஆதமை வணங்கச்சொல்லி சொன்னார் என்று சொல்லுவது எவ்வளவு பெரிய முரண்பாடு என்பதை இவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்
முடிவுரை
இஸ்லாம் ஆதாமை வணங்க சொல்லி இருக்கின்றது. ஆனால் இவர்கள் அதை மறுக்கின்றனர் என்பதை இக்கட்டுரையில் இருந்து புரிந்து கொள்வீர்கள். இது மாதிரி எத்தனை பொய்களைதான் இஸ்லாமியர்கள் சொல்லியிருப்பார்கள். பொய்கள் மேலோங்கியும் உண்மை அழிந்துவிட போவதும் இல்லை...
இப்பக்கத்தை உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துக்கள். இந்துமதத்தில் இருக்கும் பணிவினை குறை கூறி மூலைச்சளவை செய்யும் நண்பர்களுக்கு பதிலடி கொடுப்போம். இப்பக்கத்தோடு இணைந்து கொள்ளுங்கள்.
இப்பக்கத்தை உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துக்கள். இந்துமதத்தில் இருக்கும் பணிவினை குறை கூறி மூலைச்சளவை செய்யும் நண்பர்களுக்கு பதிலடி கொடுப்போம். இப்பக்கத்தோடு இணைந்து கொள்ளுங்கள்.
https://mudunekade.blogspot.com/2012/09/saajada-or-vilakkam.html
ReplyDelete