Friday, 5 December 2014

ஒரு ஊரில் அழகே உருவாய்...

தோழிகளை கடுப்பேற்றி ரசிப்பதன் சுகமே அலாதி. அதிலும் அவர்களின் "பொஸஸிவ்னஸ்"ஐ சீண்டி ரசிப்பதில் ஆனந்தமோ ஆனந்தம் தான். அப்படி என் தோழியை கடுப்பெற்றி ரசித்த ஒரு SMS நிகழ்வுதான் இது.

நான்: ஹாய் டா....

தோழி: சொல்லு டா செல்லம். என்ன பண்ற? எங்கடா இருக்க? உன்னை பார்க்கணும் போல இருக்கு.

நான்: நான் இப்போ பஸ் ஸ்டேண்ட்’ல இருக்கேன் மா. உன்ன பாக்க தான் கிளம்பிட்டேன். இன்னும் அரை மணி நேரத்துல வந்துடுவேன். :) 

(இந்த அரை மணி நேரம் எவ்ளோ கடுப்பாக போறான்னு தெரியாமலே..)

தோழி: அய்யோ.. ச்ச்சோ ச்ச்வீட் டா.. சீக்கிரம் வாடா செல்லம்.

நான்: வேய்ட்டீஸ்.. இரு பஸ் ஏறிக்கிறேன். அப்புறம் மெசேஜ் பண்றேன்.

தோழி: என்ன டா பஸ் ஏறிட்டியா?

தோழி: செல்லம், மெசேஜ் பண்ணுடா.

தோழி: சீட் கெடச்சுதா டா.

தோழி: டேய்... இன்னுமா பஸ் ஏறல.

தோழி: :)

தோழி: :(

தோழி: (எம்டி மெசேஜ்)

#(நான்: மனதிற்குள், அடிப்பாவி, ஒரு அஞ்சு நிமிஷம் பஸ் ஏறி மெசேஜ் பண்றதுக்குள்ள ஆயிரம் மெசேஜ்)

நான்: i got the bus.#(கோவமா இருக்கிறதா காட்டிக்கணும், அதனால இங்க்லீஷ்)

தோழி: என்னடா கோவமா இருக்கியா? #(அட! என்ன எப்படி புரிஞ்சு வெச்சுருக்கா பாருங்க)

நான்: no.

தோழி: என்னாச்சு டா செல்லம். சாரி உன்ன கோவப் படுத்தி இருந்தா.

நான்: பரவால்ல #(நமக்கு சீக்கிரமா உருகுற மனசுங்க)

தோழி: என்ன கலர் டிரெஸ் போட்ருக்க, நானும் அதே கலர்’ல போட்டு வரேன்.

நான்: லைட் ப்ளூ ஷர்ட், ப்ளாக் பேன்ட்.

தோழி: சூப்பர் டா. அதுல நீ ரொம்ப க்யூட்’டா இருப்ப. நான் அப்போ அந்த ப்ளூ சுடி போட்டு வரேன்.

நான்: டி டி டி... பஸ் ல ஒரு சூப்பர் பொண்ணு.

தோழி: டேய்.... வேணாம்.

நான்: செம க்யூட், லவ்லி டா. பிங்க் கலர் டிரெஸ் போட்ருக்கா.

தோழி: எம்டி மெசேஜ் #(கோவமா இருக்காங்களாம்)

நான்: என்னையே பாக்குறா டா. வெயிட்டீஸ். நான் அப்புறம் மெசேஜ் பண்ணுறேன். :)  

தோழி: நீ மெசேஜ் பண்ணவே வேணாம். போ.

#(அப்புறம் ஒரு அஞ்சு நிமிஷம் நான் மெசேஜ் பண்ணல)

தோழி: :( #(ஃபீல் பண்றாங்களாம்)

நான்: நிஜமா அவ அழகா இருக்கா டா.

தோழி: இப்போ எங்க இருக்க?

நான்: அவ பேரு ஷக்தி. அவ அம்மா அவள கூப்பிட்டப்போ கேட்டேன்.

தோழி: இன்னும் எவ்ளோ நேரம் ஆகும் நீ வர.

நான்: அவ அம்மாவுக்கு நான் எழுந்து இடம் கொடுத்தேனா அவ என்ன பாத்து சிரிச்சா டா. தேங்க்ஸ்’ன்னு சொன்னா. என்னா ஸ்மைல்..! ஆஸ்ஸம். அழகு டா.

தோழி: வேற ஏதாச்சும் பேசுறியா? #(இதுக்கு பேரு பொறாமை, கேட்டா பொஸஸிவ்னஸ்’ன்னு சொல்லுவா)

நான்: என்னையே பாத்துட்டு இருக்கா. எனக்கு என்னென்னமோ பண்ணுது. ப்ளீஸ் நான் அப்புறம் மெசேஜ் பண்றேன்.

தோழி: #(இரண்டு மிஸ்டு கால், நான் எதுவும் ரிப்ளை பண்ணல)

தோழி: அவள புடிச்சிருந்தா, அப்படியே அவகூட போயிடு. பிடிக்காம யாரும் என்ன பாக்க வர வேணாம்.

நான்: :) (ஸ்மைலி மட்டும்)

தோழி: நிஜமா உனக்கு என்ன பிடிக்கலையா டா. நான் வேணாமா?

நான்: பிடிச்சிருக்கு.

தோழி: அப்புறம் ஏன் அவள பத்தி பேசி உசுர வாங்குற.

நான்: நிஜமா அவ அழகா இருக்கா டா. அழக ரசிக்கிறது தப்பா.?

தோழி: நீ ரசி, என்னமோ பண்ணு. என்கிட்டே சொல்லாத. #(கடுப்பாயிட்டா)

நான்: அத விடு. அவளும் உன் ஸ்டாப் தான். ப்ளீஸ் டா. பஸ் ஸ்டாப்’க்கு வந்துடு.

தோழி: நான் யாரையும் பாக்க விரும்பல.

நான்: ஏய். விளையாடத. நாங்க இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவோம்.

தோழி: “நாங்க”ன்னு சொல்ற போடா. என்கிட்டே பேசாத. அப்ப என்ன விட அவ அவ்ளோ முக்கியமா போய்ட்டாளா.

நான்: ப்ளீஸ் ப்ளீஸ். கோச்சுக்காத டா. பஸ் ஸ்டாப் வந்துடு. அவள நீ கண்டிப்பா பாக்கணும். அப்புறம் நாம கோவிலுக்கு போலாம்.

தோழி: வேணாம். நான் வரல. மனசு சரி இல்ல. இன்னொரு நாள் பாக்கலாம்.

நான்: அப்ப அவ்ளோதானா? சரி நான் போறேன். இனி நீ  கூப்பிட்டாலும் வர மாட்டேன்.

தோழி: #(எம்டி மெசேஜ்)

நான்: வர முடியுமா, முடியாதா?

#(இரண்டு நிமிடங்கள் மெசேஜ் வரல, அவ மொபைல் சுவிட்ச் ஆப். இரண்டு நிமிடங்கள் கழித்து)

தோழி: சரி, வரேன். ஆனா அவள பாக்க மாட்டேன்.  அவள பத்தி நீ பேச கூடாது.

நான்: ச்சோ.... ச்வீட்... J

#(பஸ் ஸ்டேண்டில் காத்திருக்கிறாள், என்னைப் பார்த்ததும் கோபமாய் முகத்தை திருப்பிக் கொள்ள)

நான்: ஹாய் டா. என்ன கோவமா?

#(பதிலில்லை)

நான்: அங்க பாரு ஷக்தி.

தோழி: நான் பாக்க மாட்டேன்.

#(நான் அவள் முகத்தை தூக்கி, திருப்பி ஷக்தியை காட்ட, லேசாய் புன்னகை. அது கோபத்தோடு கூடிய அழகிய மந்திரப் புன்னகை)

நான்: அதுதான் ஷக்தி. ரெண்டு வயசு. இது அவங்க அம்மா அப்பா. அங்கிள் பாப்பா’வ கொடுங்க.

#(ஷக்தியை வாங்கி அவளிடம் கொடுக்கிறேன்)

#(கோபமும், மகிழ்ச்சியும், அதிர்ச்சியுமாய் என்னவளின் முக பாவனைகள் கண்ட எனக்கு, விவரிக்க முடியாதபடி ஒரு சந்தோஷம்)

தோழி: குட்டிப் பாப்பா பேரு ஷக்தியா? #(என்று அவளைக் கொஞ்சி ஒரு முத்தம் கொடுக்க, அவளிடம்  வாங்கிய முத்தத்தை என்னிடம் கொடுத்துச் சென்றாள் ஷக்தி.)

டிஸ்க்ளைமர்: இப்படி ஒரு தோழி இருந்து, இப்படியெல்லாம் நடந்தால் நன்றாக இருக்கும் என்று கற்பனையில் எழுத்தப்பட்டதே இந்த பதிவு.

No comments:

Post a Comment