இன்று காதலர் தினம். உலகமே காதல் நினைவுகளில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. புதிதாக காதலைச் சொல்பவர்கள் முதல் மனைவியுடன் காதலர் தினத்தைக் கொண்டாடுபவர்கள் வரை எல்லோரும் ஆனந்தக் கடலில் மூழ்கும் நாள் இன்று.
இன்று மாலை நேரமானதும் கடற்கரை, பூங்கா, கோயில், திரையரங்கு என எல்லாமுமே காதலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
காதலைக் கொண்டாட ஒரு தினம் வேண்டுமா? இது காதலர்களுக்கு
மட்டும்தான், இது மேற்கத்திய நடைமுறை நமக்கெதற்கு என்று காதலர் தினத்திற்கு எத்தனையோ எதிர்ப்புகள் உண்டு.
இவையெல்லாம் வெறும் பசப்பல்கள்தான். உண்மையில் எல்லாவற்றிற்கும் ஒரு நாள் வேண்டும்தான். தினமும் சூரியன் உதிக்கத்தான் செய்கிறது, தமிழர் திருநாள் பொங்கல் அன்று மட்டும் சூரியனை நாம் கொண்டாடவில்லையா? அதற்கென்ன சூரியன் நம்மிடம் கோபித்தாக் கொள்கிறது?
காதலர்களுக்கு மட்டும்தான் காதலர் தினம் என்பது எந்த வகையில் நியாயம்? திருமணமானவர்கள் அவர்களது துணையை காதலிப்பதில்லையா? அதுவும் காதல்தான். அவர்களுடனும் இந்த காதலர் தினத்தைக் கொண்டாடலாமே?
இது மேற்கத்திய கலாச்சாரம் என்பது முற்றிலும் தவறு, நமது முந்தைய காலத்திலும் இந்திர விழா, மன்மத விழா, வில் விழா என்றெல்லாம் பல பெயர்களில் இந்த காதலர் தினம் கொண்டாடப்பட்டுள்ளதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. எனவே நமது கலாச்சாரத்தைக் கொண்டாடுங்களேன்.
நீங்கள் விரும்பும் அல்லது காதலிக்கும் உங்கள் துணையை அது காதலர்/காதலியாகவோ அல்லது கணவன்/மனைவியாகவோக் கூட இருக்கலாம். அவர்களுடன் கொண்டாடுங்கள் காதலர் தினத்தை எந்த எதிர்மறையான கருத்தும் இன்றி.
என்ன தயாராகிவிட்டீர்களா காதலர் தினத்திற்கு...
அதற்கு முன் இந்த காதல் பரிசோதனையில் பங்கேற்பீர். இதில் நீங்கள் பெற விரும்பும் முத்தம், நீங்களும் உங்கள் துணையும் கொண்டிருக்கும் நெருக்கம், இவற்றிற்கெல்லாம் மேலாக உங்கள் காதலின் அளவைக் கூறும் லவ்மீட்டர் என அடுக்கி வைத்துள்ளது தமிழ்.வெப்துனியா.காம்.
இவை அனைத்தையும் இந்த காதலர் தினத்தில் உங்களுக்கு நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்.
இதனைப் பார்த்து உங்கள் காதலின் அளவை அறிந்து கொள்ளுங்கள். வாவ் என்று வாய்பிளக்கும் அளவிற்கு மதிப்பெண் வந்தால் உங்கள் காதலிக்கோ அல்லது காதலருக்கோ கூறி மகிழுங்கள். பாராட்டையும் பெறுங்கள்.
இல்லையென்றால் பரவாயில்லை. தாமதிக்காதீர் அடுத்த ஆண்டுக்குள் காதல் அளவில் சதமடிக்கும் எண்ணத்துடன் கிளம்புங்கள் காதல் கொண்டாட்டத்தில் பங்கேற்க.
உங்கள் காதலின் ஆழத்தைக் காண
காதல் முத்தத்தைப் பெற
உங்கள் காதலின் அளவை அறிய
காதலர் தின வாழ்த்துகள்!

No comments:
Post a Comment