Wednesday, 3 December 2014

ஆரோக்­கி­யமாக இருக்க வேண்­டுமா? இதோ தண்ணீர் மருத்­துவம்

சாதா­ர­ண­மாக தாகத்தை தணிக்கக் கூடிய தண்ணீர் உடலில் ஏற்­படும் பல்­வேறு பிரச்சி­னை­க­ளுக்கு தீர்­வாக இருக்­கி­றது.
இத்­த­கைய தண்­ணீரை வெறும் வயிற்றில் நாம் தினமும் குடித்து வரு­வதால் நம்மை தாக்கும் பல நோய்­களில் இருந்து விடு­ப­டலாம். இதற்கு பெயர் தண்ணீர் தெரபி.
இதை கடை­பி­டிக்கும் ஜப்­பா­னிய மக்கள் எப்­போதும் சுறு­சு­றுப்­புடன் ஆரோக்­கி­ய­மாக இருக்­கின்­றனர். இதை பற்­றிய நன்­மை­களை தெரிந்து கொள்­ளலாம்.
செரி­மா­னத்­திற்கு உதவும்
காலையில் வெறும் வயிற்றில் வெது­வெ­துப்­பான நீரை குடித்து வந்தால், உடலின் மெட்­ட­பாலிக் விகி­த­மா­னது 24 சத­வீதம் அதி­க­ரிக்கும். இதனால் உண்ணும் உண­வா­னது விரைவில் செரி­மா­ன­ம­டைந்­து­விடும்.
அல்சர் பிரச்சினை நீங்கும்
காலையில் சாப்­பி­டாமல் அலு­வ­ல­கத்­திற்கு செல்­ப­வர்கள், தினமும் அதி­கா­லையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், அல்சர் ஏற்­ப­டாமல் தடுக்­கலாம்.
நச்­சுக்­களை நீக்கும்
தண்­ணீ­ரா­னது உடலின் மூலை­மு­டுக்­கு­களில் தங்­கி­யுள்ள நச்­சுக்­களை சிறுநீர் மூல­மாக வெளி­யேற்­றி­விடும். இதனால் உட­லா­னது நச்­சுக்­களின் சுத்­த­மாக இருக்கும்.
பசி எடுக்கும்
தண்­ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழி­வுகள் மற்றும் நச்­சுக்கள் வெளி­யேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்­பித்­து­விடும்.
குடல் சுத்­த­மாகும்
அதி­கா­லையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்­பதால் கிடைக்கும் நன்­மை­களில் முதன்­மை­யா­னது குட­லா­னது சுத்­த­மாகும். அதற்கு தண்ணீர் குடித்­த­வுடன், சிறிது நேரத்­தி­லேயே மலம் கழிக்­கக்­கூடும்.
நீர்ச் சத்து அதி­க­ரிக்கும்
பெரும்­பா­லா­னோ­ருக்கு உடலில் நீர்ச்­சத்து குறை­வாக இருப்­பதால் தலை­வலி அடிக்­கடி ஏற்­படும். அத்­த­கை­ய­வர்கள் தினமும் அதி­கா­லையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்­சத்­தா­னது அதி­க­ரித்து, தலை­வ­லி­யா­னது குறையும்.
கொழுப்பு கரையும்
எடையை குறைக்க நினைப்­ப­வர்கள், அதி­கா­லையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்­கி­யுள்ள நச்­சுக்­க­ளுடன், உடலின் மெட்­ட­பா­லிசம் அதி­க­ரிப்­பதால் தேவை­யற்ற கொழுப்­புக்­களும் கரைந்து வெளி­யேறி, உடல் எடை குறைய உத­வி­யாக இருக்கும்.
முகப்­பொ­லிவு கிடைக்கும்
குட­லா­னது சுத்­த­மாக இல்­லா­விட்டால், முகத்தில் பருக்கள் வர ஆரம்­பிக்கும். இப்­படி பருக்கள் வந்தால் சரு­ம­மா­னது அழகை இழந்­து­விடும். எனவே தினமும் தண்­ணீரைக் குடித்து வந்தால், குட­லி­யக்கம் சீராக நடை­பெற்று, முகம் பருக்­க­ளின்றி பொலி­வோடு இருக்கும்.
உடல் பல­ம­டையும்
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்­பதால், இரத்த சிவப்­ப­ணுக்­களின் வளர்ச்­சி­யா­னது அதி­க­ரித்து, இரத்­த­மா­னது அதி­கப்­ப­டி­யான ஆக்­ஸி­ஜனை கொண்­டி­ருப்­பதால், உட­லா­னது எனர்­ஜி­யுடன் இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
உடலுக்கு மிகவும் இன்றியமையாதது தண்ணீர். இத்தகைய தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலமானது வலுவடைந்து, நோய்கள் உடலை தாக்காதவாறு பாதுகாக்கும்.
neerponnu

No comments:

Post a Comment