இஸ்லாம்:
யூத மதத்திற்கு – பழைய ஏற்பாடும், டோராவும் (Torah); அதன் பின் வந்த கிறித்துவத்திற்கு பழைய ஏற்பாடும், பைபிளும்; அதன் பின் வந்த இஸ்லாமிற்கு பழைய ஏற்பாடும், குரானும். இந்த மூன்று மதங்களும் ஆபிரகாமிய மதங்கள் என்றோ, semitic religions என்றோ அழைக்கப்படுகின்றன. யூத மதம் மோசஸ் காலம் வரை பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டவைகளை உள்ளடைக்கியது. Ten Commandments படக் கதைதான். அவர்களைப்பொறுத்த வரை மனிதர்களை மீட்க ‘மெஸையா’ இன்னும் வரவேண்டும்; அதற்காகக் காத்திருக்கிறார்கள். கிறித்துவர்களுக்கோ மோசஸ் காலத்திலும் அதற்கு முன்பும் சொல்லப்பட்ட – கடவுளால் வாக்களிக்கப்பட்ட – ‘மெஸையா’தான் ஏசு. ஏசுவின் வருகை வருமுன் உறைக்கும் ‘தீர்க்க தரிசி’கள் (Prophets)பலரால் முன்மொழியப்பட்டதாகவும், அவை அப்படியே நிறைவேறின என்பதும் கிறித்துவர்களின் நம்பிக்கை. தந்தை (Holy Father), ஜெஹோவா என்றழைக்கப்படும் முதல் கடவுளின் ஒரே மகனே ஏசு என்பது கிறித்துவர்களின் நம்பிக்கை. மூன்றாவதாக, மேற்கூறிய Torah-வும், பைபிளும் மனிதர்களால் திரிக்கப்பட்டு விட்டதால் இறுதியாக கடவுளால் (அல்லாஹ்) முகமது நபிக்கு ஜிப்ரீல் (Gabriel) என்ற கடவுளின் தூதன்(arch-angel) மூலம் ஹீரா என்ற மலையிலுள்ள ஒரு குகையில் கொடுக்கப்பட்டதே ‘இறுதி வேதமான’ குரான் என்பது இஸ்லாமியரின் நம்பிக்கை.
முகம்மது 570 கி.பி.-ல் க்வாரிஷ்(Quraish) என்ற அரேபிய குலத்தில் (Tribe) பிறந்து, கதீஜா என்ற பணக்காரப் பெண்ணின் கீழ் வேலை செய்து, பின் அவரையே திருமணம் செய்திருக்கிறார். அதன் பின் 610-ல் கடவுளின் தூதரால் ‘கடவுளின் கட்டளைகள்’ மனிதர்களுக்காக அருளப்பட்டது என்பதாகவும், தனக்கு எழுதப்படிக்கத் தெரியாத நிலயில் தான் எப்படி கடவுளின் வார்த்தைகளை எழுதிவைக்கமுடியும் என்ற அச்சத்தையும், ஐயத்தையும் ஜிப்ரீல் தீர்த்துவைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதிலேயே, முகமது ஒரு பெரிய வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தவர் என்ற முறையில் எப்படி எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்திருப்பார் என்ற கேள்வியும், இஸ்லாம் அறிஞர்களுக்குள்ளாகவே முகமது எழுதப்படிக்கத் தெரிந்தவர்தான் என்பதான கருத்தும் உண்டு. முகமதே ஜிப்ரீலின் வார்த்தைகளில் நம்பிக்கைகொள்ளத் தயங்கியபோது கதீஜா அவருக்குத் தைரியம் கூறியுள்ளார். 595 to 619 வரை கதீஜாவுடன் மட்டுமே திருமண வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் முகமது. அவரது கூற்றுக்களில் முதன் முதல் நம்பிக்கைவைத்தவர் மனைவி கத்தீஜாதான். அதன் பிறகு 10 வயதான Ali ibn Abi Talib என்பவரும், அதன்பின் அவரது நெருங்கிய நண்பரான அபு பக்கரும் அவரைப் பின்பற்றினர். அதன்பின் முகமதின் பின்சென்ற மெதீனா முஸ்லீம்களுக்கும், மெக்காவிலிருந்தவர்களுக்கும் பலமுறை யுத்தம் நிகழ ஆரம்பிக்கின்றது. ஹதீஸ்களில் சொல்லப்பட்டவைகளை வைத்து அவரது பிந்திய வாழ்க்கை வரலாறு அறியப்படுகிறது. அந்த வரலாறுகளைச் சுருக்கிச் சொல்லும் முகமாக ஒரு சிறு அட்டவணை:
618 Medinan Civil War
624 Battle of Badr
625 Battle of Uhud
627 Battle of the Trench
628 Conquest of the Jewish oasis
629 Attack on Byzantine empire fails
630 Attacks and bloodlessly captures Mecca
630 Battle of Hunayn
630 Siege of al-Ta’if
631 Subjugates Arabian peninsula tribes
632 Attacks the Ghassanids: Tabuk
ஆக, 40-வது வயதில் கடவுள் தூதனின் தரிசனம்; 48-வது வயதிலிருந்து போர்முனையில் வாழ்க்கை. . 15 ஆண்டுகள் போர்வீரனாகவும் வாழ்வு. இதில் சில போர்முனைகள் வெற்றியைத் தந்தன; சில தோல்விகளைத் தந்தன. (வெற்றிக்குக் காரணம் அல்லாஹ்வின் ஆசி என்றால், தோல்விகளுக்கு யார் காரணம் – இந்தக் கேள்வி Omniscience பற்றி நான் எழுதிய முதல் பதிவின் தொடர்ச்சியாகக் கொள்ளவும்.)
இதன் பின் அவரது திருமண வாழ்க்கை:
இது பற்றி அதிகம் பேச விரும்ப வில்லையாயினும் சில முக்கிய சம்பவங்களைப் பற்றி மட்டும்: கத்தீஜாவிற்குப் பிறகு 9 அல்லது 10 மனைவியர் என்பது வரலாறு. அதில், மூன்று திருமணங்கள் மட்டுமே (என்னைப் பாதித்தவை) குறிப்பிடத் தக்கவை.
1 ஆயிஷா – முகமது இப்பெண்ணை மணம் முடிக்கும்போது அவரது வயது 50-க்கு மேல்; பெண்ணுக்கோ 9. (இல்லை, 15 என்ற கருத்தும் உண்டு).(இராமாயண சீதாதேவி கதையின் சாயலில் ஒரு நிகழ்ச்சியும் உண்டு)Sahih Muslim Book 008, Number 3310: ‘A’isha (Allah be pleased with her) reported: Allah’s Apostle (may peace be upon him) married me when I was six years old, and I was admitted to his house when I was nine years old.’
2. Zaynab bint Jahsh- ஜேனாப் என்ற இந்தப் பெண்மணி முகமதின் வளர்ப்பு மகனின் மனைவி; வளர்ப்பு மகன் விவாகரத்து செய்த பின் இப்பெண்ணை முகமது மணம் முடிக்கிறார்.
3. ஜுவேரியா – இந்தப் பெண்ணின் கதை மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமாயிருந்தது. போரில் தோற்றவனின் மனைவி விரும்பாத ஒருவனின் மனைவியாவதைத் தவிர்க்க, பேரம் பேசப்பட்டு, முகமதின் மனைவியாகிறாள். எந்த நூற்றாண்டாயிருந்தால் என்ன..பெண்கள் நிலை எங்கும் எப்போதும் ஒரே மாதிரிதான் போலும்!
முகமதின் மனைவிமார்கள்:
Hafsa bint Umar
Juwayriya bint al-Harith
Khadijah bint Khuwaylid
Maria al-Qibtiyya
Maymuna bint al-Harith
Ramlah bint Abu Sufyan
Safiyya bint Huyayy Sawada bint Zama
Umm Salama Hind bint Abi Umayya
Zaynab bint Jahsh
Zaynab bint Khuzayma
இனி என் ஐயங்கள்:
1.)பழைய ஏற்பாடு இரு (கிறித்துவம், இஸ்லாம்)மதத்தினருக்கும் பொது எனப்படுகின்றது. கிறித்துவர்களின் பைபிளில் ஆதாம் – ஏவாள் படைப்பைப் பற்றி சொல்லும்போது ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டாள் என்பதை, இது ஓர் ஆணாதிக்க விளக்கம் என்று கூறியிருந்தேன். ஆனால், முஸ்லீம் எழுத்துக்களில் அந்த முதல் பெண்ணுக்குப் பெயரே இல்லை. பெயர் தரும் அளவிற்குக்கூட பெண்ணுக்கு முக்கியம் இல்லையோ?
(கேட்டிருக்கும் கேள்விகளில் இந்த முதல் கேள்வியை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். ஏனெனில் அக்கேள்விக்கு நண்பர்கள் பதில் கொடுத்துவிட்டார்கள். அந்த முதல் பெண்ணுக்கு ‘அவ்வா’ (AWWA) என்று பெயர் குரானில் சொல்லியுள்ளதாக விளக்கியுள்ளார்கள்.
விளக்கத்திற்கு நன்றி. )
1.) ஆதாம் கடவுளால் தோற்றுவிக்கப் பட்டான்; ஏவாள் அவனது விலா எலும்பிலிருந்து உண்டாக்கப் பட்டதாக பழைய ஏற்பாடு சொல்கிறது. இஸ்லாமில் மனிதன் உறைந்த ரத்தத்திலிருந்து உண்டாக்கப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அது யாருடைய ரத்தம்? மனிதன் படைக்கப் படுவதற்கு முன் எங்கிருந்து ரத்தம் வந்தது? ஒருவேளை கடவுளின் ரத்தமாக இருக்குமோ?
2.)ஆபிரஹாமின் வழித்தோன்றல்கள்தான் கிறித்தவர்களும், இஸ்லாமியரும் – பழைய ஏற்பாட்டின் படி. அதை இஸ்லாம் ஏற்றுக்கொள்கிறதா? (ஏனெனில், குழந்தை இல்லா ஆபிரஹாமுக்கும் அவர் மனைவி சாராயின் அடிமைப் பணிப் பெண்ணான ஆகாருக்கும் பிறந்த குழந்தையான – ‘இஸ்மயேலின்’ சந்ததிகள்தான் பின்னால் இஸ்லாமியர்களாக ஆனார்கள் – என்கிறது பழைய ஏற்பாடு.) அதோடு, கடவுளின் தூதர் இஸ்மயேலைப் பற்றி சொல்லும் “நல்ல” வார்த்தைகள்…? (ஆதி. 16, 17) அவைகளை நான் இங்கு தர விரும்பவில்லை; வேண்டுமென்றால் தெரியாதோர் அங்கு சென்று வாசித்துக் கொள்ளவும்.
3.)யூதர்களுக்கு அருளப்பட்ட தோராவும், கிறித்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட புதிய ஏற்பாடும் திரிக்கப்பட்டு விட்டதாலேயே ‘இறுதி’ வார்த்தைகளாக குரான் கொடுக்கப்பட்டது என்ற வாதம் ஒன்று வந்தது. இது ஏதோ மதங்களின் பரிணாம வளர்ச்சிபோல சொல்லப்பட்டு, அந்தப் பரிணாம வளர்ச்சியின் ‘இறுதி நிலை’தான் (the final format)இந்த இஸ்லாம் என்பதுபோல கூறப்பட்டது. உலகம் என்ன இந்த மூன்றே மூன்று மதங்களை மட்டுமா கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான மதங்கள்; நம்பிக்கைகள் – அவைகளில் இந்த மூன்றும் உண்டு; அவ்வளவே. நம் பார்வைகள் அகன்றிருக்க வேண்டிய அவசியம் இந்த விவாதத்திலிருந்து தெரியும்.
4.)’கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்’ (மத். 6: 38) என்பது பழைய ஏற்பாட்டின் விதிமுறை. இந்த வன்முறை புதிய ஏற்பாட்டில், :”…அப்போது ஏசு அவரிடம், “உனது வாளை அதன் உறையில் போடு. ஏனெனில், வாளை எடுப்பவன் வாளால் அழிந்து போவர்; …” (மத். 26:52) என்றும், அதே போல, “…மாறாக, உங்களை வலது கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் காட்டுங்கள்” (மத். 6: 39) மிகவும் சாத்வீகமான ஒன்றாக மாறியுள்ளது. (இது சரியா, நம்மால் முடியுமா என்ற கேள்விகளுக்குள் இப்போது நுழையத்தேவையில்ல. ஏனென்றால், வேதங்கள் சொல்வதை எல்லாம் நம்மால் கடைப்பிடிக்க முடியுமா என்ன? ‘எதைக் கொண்டு வந்தோம்; எதைக் கொண்டு போகப் போகிறோம் என்றா இருக்க முடியும்?) . பழைய ஏற்பாட்டின் வன்முறை மறைந்து புதிய ஏற்பாட்டில் சாத்வீகம் வந்த பின்பு மறுபடியும் இஸ்லாமில் ஏன் இந்த வன்முறை மீண்டும் புகுந்தது? மனிதனுக்கும் மனிதனுக்கும் இந்த வன்முறை வந்தால்கூட பரவாயில்லை; இஸ்லாமில் இந்த வன்முறை கடவுளுக்கும்-மனிதனுக்கும் நடுவே வருவது ஆச்சரியம் மட்டுமல்ல; அதி பயங்கரமும் கூட.
இந்த வசனத்தைப் பாருங்களேன்: ஹதீது: ஹ்ல்ரத் அலீ (ரலி): “உலகினில் ஏற்படுகின்ற குழப்பங்களுக்குத் தீர்வு காண அல்லாஹ்வின் வேதந்தான் சிறந்த வழி. …(தன் அறிவைக்கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை (அமல் படுத்தாமல்) விட்டு விட்டால், அல்லாஹ் அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவான். அது அல்லாத (வேறு கிரந்தத்)தில் நேர்வழியைத் தேடுபவரை வழிதவறச் செய்து விடுவான்.” கடவுள் கருணையின் உருவாய் இருக்கவேண்டாமோ? இதென்ன கொடுமை? கடவுளின் வார்த்தைகளில் தேவையா இந்தக் கொடூரம்?
5.)
குர்ஆன் 25 : 68: ‘அவர்கள் எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள்.(காரணத்தோடு கொல்லலாம் என்று பொருள் படுகிறதே?’ – கொலை செய்பவனுக்கு ஒரு காரணம் கண்டுபிடிப்பதா பெரிது?)
5:32: “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலுடைய மக்களின் மீது நாம் விதியாக்கினோம்.
5:33 அல்லாஹ்வுடனும், அவன் ரஸூலுடனும் போர் செய்து கொண்டு, பூமியில் குழப்பத்தை உண்டாக்கித் திரிபவர்களுக்குரிய தண்டனையானது அவர்கள் கொல்லப்படுதல், அல்லது அவர்கள் தூக்கிலிடப்படுதல்; அல்லது அவர்கள் மாறுகால் மாறுகை வாங்கப்படுதல் அல்லது அவர்கள் நாடு கடத்தப்படுதல்…
கிறித்துவத்தில் ‘கொலை செய்யாதே’ என்பது ஒரு கட்டளையாகக் கொடுக்கப்பட்டுள்ளது; சமணத்தில் நுண்ணுயிர்களைக் கூட கொல்லக் கூடாதென்ற தத்துவம்; பிறப்பொக்கும் எல்லா உயிரும் என்கிறது தமிழ்மறை; எல்லா உயிரும் ஒன்றே, உயிர்க்கொலை தவறு என்கிறது இந்து மதம். இந்த கோட்பாடுகளில் எந்த clasue, sub-clause-ம் கிடையாது, அதாவது இந்தந்த மாதிரி நேரங்களில் மட்டும் கொலை செய்யலாம் என்ற விலக்குகள் தரப்படவில்லை. கொலை என்பது ஒட்டுமொத்தமாக தவறு; பாவம் என்றுதான எல்லா மதங்களும் போதிக்கின்றன.
இஸ்லாமியத்தில் மட்டும் கொலை செய்வதற்கு ஏன் சிலவிதிவிலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஏதாவது ஒரு சரியான காரணம் கொண்டு -
இந்த சமயங்களில் கொலை செய்வது சரியா?
கொடூரக் கொலைகாரர்கள்கூட தங்கள் கொலைக்குக் காரணம் சொல்ல முடியுமே. அப்படியானால் ஒவ்வொரு கொலையும் யாரோ ஒருவரால் – நிச்சயமாக கொலை செய்தவனால் – காரண காரியங்களோடு நியாயப்படுத்த முடியுமே! அதோடு பழி வாங்குவது, அதற்காகக் கொலை செய்வது அனுமதிக்கப்படுகிறதே! இவைகள் எப்படி சரியாகும்.
6.)ஏற்கெனவே கிறித்துவ மதம் பற்றி பேசும்போது கேட்ட கேள்வி இங்கும் பொருந்தும். நித்திய தண்டனையான நரகம் பற்றியது. அது போன்ற நித்திய தண்டனை சரிதானா என்று அங்கேயே கேட்டேன். இப்போது அதோடு சேர்ந்த மற்றொரு கேள்வி: கிறித்துவத்தில் ‘மோட்சத்தில் கடவுளை முகம் முகமாய் கண்டு கொண்டிருப்பார்கள்’ என்றிருக்கும்; கடவுளின் பிரசன்னமே பெரிய பாக்கியம் என்ற பொருளில். ஆனால், இஸ்லாமிய மோட்சத்தில் தேன் பாயும்; பச்சைப்பசேல் என்றிருக்கும் என்பதெல்லாம் சரி. ஆனால் இது என்ன ? ஒவ்வொருவருக்கும் ‘houris’ எனப்படும் (perpetual virgins) ‘நித்திய கன்னிகைகள்’? முகமதுக்கு இவ்வுலகத்தில் கிடைத்ததைவிடவும் இரண்டு மடங்கு எண்ணிகையில் கிடைக்கும் என்பது எந்த வகையில் ஒரு கடவுள் தரும் ‘பரிசாக’ இருக்கும். It is not definitely in good taste. (நரகத்தில் பெண்களே அதிகமாயிருப்பார்கள் என முகமதுவே ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.) ஆயினும் ஆண்களுக்குக் கிடைக்கும் இந்தப் பரிசிற்குச் சமமாக மோட்சம் செல்லும் பெண்களுக்குக் கிடைக்க என்னவெல்லாம் காத்திருக்கப் போகிறது என்பதைப் பற்றி ‘நல்ல வேளை’ எதுவும் சொல்லப்படவில்லை!
7.) (Arch-angel, Gabriel)தேவதூதன் காப்ரியல் ஏசுவின் பிறப்பைப் பற்றி மேரியிடம் சொல்லியதாகவும், பிறக்கப்போகும் அந்தக் குழந்தையே மனிதர்களை உய்விக்க வந்த ‘இம்மானுவேல்’ என்றும் கூறியதாகவும் கிறித்துவம் சொல்கிறது. ஆனால், அதே தேவதூதன் (இஸ்லாமில், ஜிப்ரேல்) முகமதுவிற்கு அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கூறியதாகச் சொல்லப் படுகிறது. இரண்டு தேவதூதரில் எது சரி? ‘இதோ, கடவுள் உன்னிடம் குழந்தையாகப் பிறக்கப் போகிறார்’ என்று மேரியிடம் சொன்ன தேவதூதனா, இல்லை, பயப்படாதே, நான் அல்லாஹ்வினால் அனுப்பப் பட்டேன் என்று முகமதுவிடம் சொன்ன தேவதூதனா, எது சரி? இரண்டில் ஒன்றுதான் சரியாக இருக்க வேண்டும். அல்லது இரண்டுமே கதையாக இருக்க வேண்டும். கடைசியாகச் சொன்னதே எனக்குச் சரியெனப் படுகிறது.
இனி நபியின் வாழ்க்கை வரலாறுக்கு வருவோம்:
8.)கிறித்துவத்தில் (St. Paul) பவுல் என்றொருவர் ஏசுவின் பக்தர்களுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தவர்; பின் மனம் மாறி ஏசுவின் முக்கிய போதகராக மாறினார் என்று சொல்வார்கள். அதைக்கூட விடுங்க; நம் நாட்டின் தந்தை காந்தியடிகள் சின்ன வயதில் தவறுகள் பல செய்தும் பின் மனம் மாறி மகாத்மா ஆனார் என்பது வரலாறு. சாதாரண மனிதர்களே வாழ்வில் இது போல நடந்து கொண்ட போது, முகமது 40 வயது வரை வியாபாரம் செய்து கொண்டிருந்தவர் ஒரு பெரும் போர்வீரனாக, தளபதியாக மாறியது மட்டுமின்றி, அந்த நாட்டின், மக்களின் அன்றைய வழக்கப்படியே கொள்ளையில் ஆரம்பித்து (Much criticism has been leveled at Muhammad for engaging in caravan raids and wars of conquest. Critics say that his wars went well beyond self-defense. Muslim commentators, however, argue that he fought only to defend his community against the Meccans, and that he insisted on humane rules of warfare), பல போர்களை முன்னின்று நடத்தி, ஒரு திறமையான போர்த்தளபதியாக விளங்கி, அதோடு அங்குள்ள வழக்கப்படியே, தோற்றவர்களைக் (வயதுக்கு வந்த சிறுவர்களையும், பெண்களையும் கூட) கொன்று, அல்லது சிறைப்பிடித்து அடிமைகளாக்கி – எல்லாமே அந்த நாளில் இருந்திருக்கக்கூடிய ஒரு தளபதியாகவே முகமது இருந்திருக்கிறார். (After the battle, all the Banu Qurayza adult males (including boys who had reached puberty), as well as one woman, were beheaded by the order of Saad ibn Muadh, an arbiter chosen by the Banu Qurayza. The remaining women and children were taken as slaves or for ransom. All the property from the tribe was then divided among the Muslims).இது வரலாறு தரும் சேதி. இஸ்லாமிய ஹதீதுகள் தரும் சேதி. யாரும் மறுக்கவோ, மாற்றவோ முடியாதது. ஆனால், தனித் தனி அர்த்தங்கள் கற்பிக்கலாம். அது அவரவரது நம்பிக்கையையோ, நம்பிக்கையின்மையையோ பொருத்தது.
இங்கு ஏசுவின் போதனைகளை நினைவு கூறுவது நலம். (நான் கிறித்துவத்தை தூக்கி வைத்துப் பேசுகிறேன் என்று யாரும், அதுவும் என் முந்தைய பதிவுகளைப் படித்தவர்கள் கூற மாட்டீர்களென நம்புகிறேன்.) இஸ்லாமியர்கள் சொல்லுவது போலவே, ஏசுவின் வாழ்க்கையைத் திரித்து அப்படி அவரை ஜோடித்துவிட்டார்கள் என்று கூட வைத்துக்கொள்வோம். ஒரு இறைதூதன் என்ற மரியாதைக்கேற்ப அவரது கதை’ஜோடிக்கப்பட்ட’ விதயம் என்றுகூட கொள்வோம். ஒரு மரியாதை வரக்கூடிய அளவில் எசுவின் ‘கதை’ உள்ளது. ஆனால், முகமதின் வாழ்க்கை – அதுவும் ஹதீஸிலேயே சொல்லப்பட்டுள்ள – வாழ்க்கை வரலாறு, கடவுளால் தேர்ந்தெடுக்கப் பட்ட மனிதனின் வாழ்க்கை – அது எப்படி இருக்கவேண்டுமென சாதாரணமாக எதிர்பார்ப்போம். நிச்சயமாக எல்லாவிதத்திலும் வேறுபட்ட, என்னைவிட, உங்களை விட சிறந்த ஒரு மனிதனாக அவர் இருக்க வேண்டாமா? நாம்தான் அது வலைப்பதிவுகளாக இருக்கட்டும், கோத்ராவாக இருக்கட்டும்; காஷ்மீராக இருக்கட்டும்; ஈராக்காக இருக்கட்டும்; செர்ப்-ஸ்லோவாக்கியாவாக இருக்கட்டும் – எங்கேயும் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கும் அற்ப மனிதர்களாய் இருக்கிறோம். நம்மை வழிகாட்ட வந்த தெய்வமனிதர்களுமா அப்படி இருப்பார்கள்; கடவுள் அப்படிப்பட்ட ஒரு சாதாரண மனிதனையா தேர்ந்தெடுப்பார் என்கிறீர்கள்? எந்த விதத்தில் முகமது நம் வாழ்க்கையில் நாம் நித்தம் நித்தம் காணும் சாதாரண மனிதர்களை விட உயர்ந்தவராக இருந்ததாக வரலாறு கூறுகிறது? உண்மையிலேயே எனக்கு இந்தக் கேள்விக்குப் பதில் தெரியவில்லை; தெரிந்தவர்கள் எனக்குச் சொல்லுங்கள். அவர் என்ன சொன்னார் என்பதைவிட (எனக்கும் உங்களுக்கும் முன்மாதிரியாக) அவர் எப்படி நடந்துகொண்டார் எனபதைத் தெளிவு படுத்துங்கள்.
9.) ஏசுவின் வாழ்க்கையில் அவரின் ‘ஜாதித் துவேஷம்’ என்று சில நிகழ்வுகளை வைத்துக் கூறியிருந்தேன். அதன் முடிவாக – என் முடிவாக – அவர் தன் ஜாதி (tribe)மக்களை முன்னேற்ற வந்த சமூகத் தலைவர் என்றே நான் கருதியதாகச் சொல்லியுள்ளேன். அவராவது, பல இடங்களில் தன் குலத்திற்காக மட்டுமே வந்ததாகக் கூறியிருந்தாலும், சில இடங்களிலாவது தான் எல்லா மானுடப் பிறவிகளுக்காகவும் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். நான் காண்பித்தது எனக்கு வேண்டியிருந்த negative side மட்டும்தான்.
ஆனால், நபி முழுக்க முழுக்க தன் க்வாரஷி குல நன்மைக்காகப் போராடிய மாவீரன் என்பதைத் தவிர -உலக மக்களுக்காக, அனைத்து மனிதர்களுக்காக, அவர்தம் நன்மைக்காக வந்ததாக எங்கும் குரானிலோ, ஹத்தீஸிலோ கூறியுள்ளதாகக் காண்பித்தால் நன்று. ஏசு தன் குலம்பற்றியே பேசியது போலவே, முகமதுவும் தன் க்வாரஷி மக்களுக்கு என்று ஆரம்பித்து, முஸ்லீம்கள் என்ற தன்னைப் பின் பற்றிய அந்த நாளைய அரபி மக்களைப் பற்றி மட்டும்தானே பேசுகிறார்?
10.) முகமதுவின் மறைவிற்குப் பின் வந்த நான்கு கலிஃபாக்களுமே அவரோடு ரத்த சம்பந்தம் உள்ளவர்கள் தான். (நாம் இன்று சொல்கிறோமே – குடும்ப அரசியல் அல்லது அரசியல் குடும்பம் என்று; அதேபோல் தான்.) இந்தக் கலிஃபா க்கள் முகமதின் மறைவுக்குப் பின் ‘சில தத்துவங்கள்’ பேசி, இறந்த முகமதின் விதவைகளுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய சொத்தில் ஏதும் பங்கு தராது விட்டது வரலாற்று உண்மை. (“We (Prophets) do not have any heirs; what we leave behind is (to be given in) charity” நபி உலக உறவுகளுக்கு அப்பாற்பட்டவர்; ஆகவே, அவருக்கு விதவைகள் என்று யாரும் உரிமை கொண்டாடக்கூடாது என்ற தத்துவமே அது!) Might is right- இந்த இரண்டு வரலாற்று உண்மைகளைப் பார்க்கும்போது அன்றிருந்தது முழுக்க முழுக்க ஒரு tribal set up என்பதே இதிலிருந்து தெரிகிறது.
இனி அவர்தம் தனி வாழ்க்கை பற்றி :
11.) Less said about this is better. முகமதின் திருமணங்களைப்பற்றி அதிகம் கூற விரும்பவில்லை. இருப்பினும், அவைகளுக்குக் கற்பிக்கப்பட்ட சில நியாயங்கள் பற்றி மட்டும் சொல்ல விழைகிறேன். சில மேற்கோள்கள் தர ஆசை. தனக்குக் கற்பிக்கப் பட்டது எவ்வளவு தவறான ஒரு விதயமாக இருந்தாலும் ஏதோ ஒரு காரணம் காட்டி, அவைகளை நியாயப்படுத்தப் பார்க்கும் மனித மனங்களின் இயல்பு இங்கு தெளிவாகத் தெரியும் என்றே நினைக்கிறேன்.
Rather, they( இந்தத் திருமணங்கள்) had much higher purposes in the divine plan. These goals were mainly related to his mission of unifying Arabs, and also, not less importantly, intended to set standards (என்ன விதமான ஸ்டாண்டர்ட்ஸ்!!!) for reforming intractable customs that had caused so much misery and destruction for humanity.”
12.) “By marrying them he was setting a precedent to reverse the taboo of widow marriage” (கைம்பெண்களுக்கு வாழ்வளிப்பதற்கு இதுதான் நல்ல வழியா? ஏன் தன் கீழுள்ள வாலிபர்களுக்குத் திருமணம் செய்வித்திருக்கலாமே!!!????). Secondly, he was paying back his due to some of the companions who had perished in battles leaving behind widows (நன்றிக்கடன்!)
இப்படியும் ஒரு காரணம்: The wisdom behind the Prophet (SAW)’s plural marriages is to show all possible types of marriage in Islam. (முன்மாதிரி? இந்த விளக்கங்கள் உண்மையிலேயே நம்பிக்கையாளர்களுக்கு ஏற்புடையதாகத்தான் இருக்கிறதா? ஆம், என்று சொல்வீர்களேயானால், அதற்கு மேல் உங்களிடம் பேசுவதற்கு என்னிடம் ஏதுமில்லை. அதில் எந்த பொருளுமில்லை – கால விரையம் மட்டுமே)
இதை விட, கீழ்வரும் பதிவு எனக்கு முக்கியமாகப் படுகிறது.The question of the Prophet’s multiple marriage should never pose a problem for the faithful when they heed the statement of Allah in the Qur’an concerning his marriages:
“(Hence) no blame whatever attaches to the Prophet for (having done) what God has ordained for him. (Al-Ahzab: 38).13.) எனது கேள்வி: கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தனி மனிதனின் செயல்களை அல்லாவே இவ்வாறு எல்லோரையும் ஏற்றுக்கொள்ளச் சொல்வார் எனபதை நம்புவதா? அல்லது அப்படி அல்லாஹ் என்னிடம் சொன்னார் என்று சொல்வதை நம்புவதா? (குற்றம் சுமத்தப்பட்டவரே சாட்சி சொல்வதுபோல் அல்லவா இது இருக்கிறது!) Is it not strange to accept that God himslef would have come to give excuses to the excess of his disciple?
13.) இன்னொன்று. நம் ஊரில் இப்போதும் ஒன்று பார்க்க முடியும். Our law makers are the first law-breakers. நான்கு மனைவிகள் வைத்துக்கொள்ளலாம் என்று மற்றவர்க்குச் சொன்ன நபி தான் மட்டும் எப்படி இப்படி…? “Those who regard him as the inventor of these Qur’anic rules see this as a case of a leader enjoying privileges he denied to his followers!”
14.)Dr Annie Besant(Dr Annie Besant in ‘The Life and Teachings of Mohammad,’ Madras, 1932)”But do you mean to tell me that the man who in the full flush of youthful vigour, a young man of four and twenty (24), married awoman much his senior, and remained faithful to her for six and twenty years (26), at fifty years of age when the passions are dying married for lust and sexual passion?” – இதற்குப் பதில் சொல்லவேண்டுமா? வயதிற்கும், பாலியல் உணர்வுகளுக்கும் தொடர்புண்டா என்ன? அதோடு 45-50 வயதிற்குப் பிறகே அவர் தன் இனத்தாருக்குத் தனிப்பெருந் தலைவராகிறார்; அது மட்டுமல்லாது, வாழ்வின் வசதிகள் கூடியாதாகவும், பெரும் செல்வந்தர் ஆனாரெனவும் ஹத்தீஸிலிருந்து தெரிகிறது. அதிலும், 50 வயதிற்குப் பிறகு இளம் பெண்களைக் கல்யாணம் செய்து கொள்வதால் அந்த பெண்களுக்கு வாழ்வா கிடைக்கும்; அது அவர்களுக்கு ‘இரட்டை தண்டனை’ அல்லவா?
15.) அன்றைய சமுதாயச் சூழலில் நான்கு மனைவியர் என்பது தேவையான ஒன்று; அதனாலேயே அவ்வாறு நபி சொன்னதாக நம் நண்பர்கள் சொல்வதுண்டு. ஆனால், இப்போது யாரும் அப்படி செய்வதுகொள்வதில்லை என்பதும் தெரியும். நபியைப் பின்பற்றும் நம் தற்காலத்து முஸ்லீம் நண்பர்கள் யாரும் அப்படி பலதாரக்காரர்கள் அல்ல; ஏனென்றால், இன்றைய வாழ்க்கைக்கு, சமூகத்துக்கு, வாழ்வியலுக்கு ஒத்து வராத காரியம். Simple logic: ஆகஅன்று நபி சொன்னது எல்லாருக்கும் எல்லா காலத்துக்கும் பொதுவான விஷயங்களாக இல்லை, இருக்கவும் முடியாது என்பது தெளிவாகிறதல்லவா?
பின் எப்படி என்றைக்கும், எல்லாருக்கும் அருளப்பட்டதாகக் குரானைச் சொல்ல முடியும்?
16.) இஸ்லாமியர் ஒவ்வொருவருக்கும் ஐந்து கடமைகள் உள்ளன; அவைகளில் ஒன்று ஹஜ் யாத்திரை. முகமதால் அருளப்பட்ட இந்தக் கடமையை உலகில் உள்ள இஸ்லாமிய மக்கள் யாவரும் நிறைவேற்ற முடியுமா? ஏழை இஸ்லாமியருக்கு அது ஒரு கனவாகவே முடியும். பின் எப்படி இந்தக் கடமை கொடுக்கப்பட்டிருக்க முடியும். 90 விழுக்காடு முஸ்லீம்களுக்கு இந்தக் கடமையை ஒரு காலத்தில் நிறைவேற்ற முடியாது போகும் என்பது அல்லாஹுக்கு அன்றே தெரிந்திருக்காதா? அன்று, நபியால் இந்தக் கடமை கொடுக்கப் பட்ட போது இஸ்லாம் அன்றைய அரபு நாட்டில் மட்டுமே பரவியிருந்த மதம். அப்போது அந்தக் கடமையைச் செய்ய – குதிரைப் பயணமாகவோ, ஒட்டகப் பயணமாகவோ – சிறிது சிரமத்துடன் நிறைவேற்றக்கூடிய ஒன்றாக இருந்திருக்கும். அதனால் அன்று அது சரி. ஆனால், இன்று எல்லா கண்டங்களிலும் பரவியிருக்கும் இஸ்லாம் மதத்தினர் எல்லோருக்கும் அது சாத்தியமில்லை. அப்படியானால், ஏற்கெனவே கூறியபடி இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை வைத்து வந்த மதமே – கிறித்துவம் போலவே – என்பது (எனக்குத்) தெளிவாகிறாது.
17.) என்னிடம் கடவுள் பேசினார்; நானே கடவுள்; – இப்படியெல்லாம் சொல்லி தனக்கென cult-களை உருவாக்குவது என்பது எல்லா மதங்களிலும் நடந்துவரும் ஒரு விதயமே. சான்றுகள்: நம்ம ஊர் கல்கி; அமெரிக்காவில் ஜோன்ஸ்;ஜப்பானில் ரயிலில் விஷ வாயு வைத்த கூட்டம்; இதுபோல் எண்ணற்றவர்கள் உண்டு – இவர்களின் சாயம் நாளாவட்டத்தில் வெளிறி விடுகிறது. இவர்கள் இப்படி சொல்வதற்கு அவரை நம்புவோர் யாரும் எந்தச் சான்றுகளும் கேட்பதில்லை. மதங்களில்தான் கேள்விகளே கிடையாதே! ஏசு பல அதிசயங்கள் நிகழ்த்திக் காட்டியதாகவும், இறுதியில் உயிர்த்தெழுந்தாரென்றும் – அவைகள் இட்டுக் கட்டப்பட்ட கதைகளாகவேகூட இருக்கட்டும் – சொல்லப்படும் காரியங்கள் அவரை நம்புவோர்க்குச் சான்றுகளாகத் தெரியும். ஆனால், முகமதுதான் கடவுளின் தூதன் என்று சொல்லியதை ‘அன்று’ அவர் கூட்டத்தினர் நம்பியது பெரிதல்ல; ஆனால் இன்றுவரை நம்புவதற்குரிய காரணங்கள் – ‘ ஊட்டப்பட்ட மத நம்பிக்கை என்பதைத் தவிர – ஏதாவது உண்டா? என் தாத்தா பாட்டியும் நம்பினார்கள்; , அப்பா அம்மாவும் சொல்லிக் கொடுத்தார்கள் என்பதா வளர்ந்தவர்களின் நம்பிக்கைகுரிய தூண்களாக இருக்கவேண்டும்? நமது நம்பிக்கைகளுக்கு ஏதாவது ஒரு சான்று வேண்டாமா? அது தேவையில்லையா? ஆத்மார்த்தமாக உணர்கிறேன் என்ற கிறித்துவர்களின் வழக்கமான பதிலில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில், ஆத்மார்த்தமான உணர்வுகள் ஊட்டப்பட்டவை; simple brain-washing.
18.)தன் அம்மாவின் கைச்சமையலை அவ்வப்போது புகழ்ந்து பேசாதவர் யாரேனும் உண்டா? அதற்குக் காரணம் நம் அம்மாவின் உண்மையான சமையல் திறன் அல்ல. சிறு வயதிலிருந்தே our tastes are conditioned to her cooking – என்பதுதான் உண்மை. And it becomes the reference point. நம் மதங்களும் அப்படியே. We are conditioned to accept the beliefs and faiths as they were given to us from childhood. அதைவிட்டு கொஞ்சம் வெளியே எட்டிப் பார்த்தாலென்ன? அதில் என்ன தவறு? ஆனால், ‘வெளியே’ பார்த்து விடாதே என்பதில்தான் இந்த மூன்று ஆபிரஹாமிய மதங்களில்தான் என்ன ஒரு ஒற்றுமை! மூன்றிற்கும் உள்ள ஒற்றுமைகள் இதோடு முடிவடைவதில்லை. வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இன்னொரு முக்கிய ஒற்றுமை தெரியும் – இந்த மூன்று மதத்தினருமே தம் தம் மதமே, மார்க்கமே சரியான வழி என்ற நம்பிக்கையில் மிகவும் தீவிரமாக இருப்பவர்கள். யூத மதம் பிறப்பினால் வரும் ஒன்றாக இருப்பதால் அதை நாம் விட்டுவிடலாம்; அதோடு அவர்கள் மற்றவர்களைத் தம் மதத்தின் பக்கம் இழுக்க முயற்சிப்பதேயில்லை; ஆகவே, அவர்களைப்பற்றிய விவாதம் நமக்கு இங்கு தேவையில்லை. நானே ஒரு கிறித்துவனாக வளர்க்கப்பட்டாலும் எனக்கு புரியாததும், ஆச்சரியத்திற்குரிய விதயமாக இன்னும் இருப்பது இந்த இரு மதங்களிலும் உள்ளவர்களுக்கு மட்டும் மதத்தின் மேல் எப்படி இவ்வளவு ஆழமான நம்பிக்கையும், ஈடுபாடும், தீவிரமும் சிறு வயது முதற்கொண்டே வந்துவிடுகின்றன என்பதே. இதிலும் இஸ்லாம் ஒரு படி மேல்தான். கிறித்துவர்கள் ஜெஹோவா எனப்படும் முதற்கடவுளை விடவும் ஏசுவுக்கே முதலிடம் தருவதுபோலவே, இஸ்லாமியரிடம் அல்லாஹைவிட நபியே முதலிடம் பெருகிறார். இந்த மதத்தீவிரம் தீவிரவாதமாக மாறுவதும் தேவையற்ற ஒன்றாகவே உள்ளது. ‘அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு’ என்று பேச்சுக்குச் சொல்லப்பட்டாலும், இவ்விரு மத நம்பிக்கையாளர்களுமே தன் மதமே உயர்ந்தது என்ற நம்பிக்கையால் ஒரு superiority complexயை ஏற்படுத்திக் கொண்டு, தம் கருத்துக்களைத் தவிர வேறு உண்மைகளே இருக்கமுடியாது என்ற தீவிர நம்பிக்கையால், தங்கள் மதம் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது; விமரிசிப்பவர்களின் விமர்சங்கள் எல்லாமே தேவ தூஷணம் (blaspehmy) என்ற முடிவுக்கே வருகிறார்கள். அவர்களின் மதங்கள் தரும் அறிவுரைகளைப் பார்ப்போமே: ஹல்ரத் அலீ (ரலி): “உலகினில் ஏற்படுகின்ற குழப்பங்களுக்குத் தீர்வு காண அல்லாஹ்வின் வேதந்தான் சிறந்த வழி ….(தன் அறிவைக்கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை அமல் படுத்தாமல் விட்டு விட்டால், அல்லாஹ் அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவான். அது இல்லாத (வேறு கிரந்தத்)தில் நேர்வழியைத் தேடுபவரை வழிதவறச் செய்துவிடுவான்…”. ஏசுவோ என்னைத் தவிர உனக்கு வேறு கடவுளே இல்லை; நானே வழியும் ஜீவனுமாயிருக்கிறேன்’ என்கிறார். இந்த மதத்தீவிரம் தேவைதானா? நானும், நீயும் நண்பனாயிருக்க மதம் தேவையா? ‘மனிதம்’ மட்டுமே போதாதா?
19.) என் சின்ன வயதில் மனிதன் எவ்வளவு நல்லவனாயிருந்தாலும் அவன் கிறித்துவனாக இருந்தால் மட்டுமே அவனுக்கு மோட்சம் என்ற கருத்தைத்தான் சொல்லி வந்தார்கள். நாங்கள் சின்ன பசங்களாக இருந்த போது இதற்கு எதிர்க் கேள்வியாக காந்தி அல்லது அதுபோன்ற பெரிய நல்ல, ஆனால், கிறித்துவரல்லாத மனிதர்களின் பெயர்களைச் சொல்லி, அவர்கள் கூடவா மோட்சம் செல்ல முடியாது என்று கேட்டிருக்கிறோம். அப்போதெல்லாம் அவர்களுக்கு மோட்சம் கிடைக்காது; வேறு என்ன என்பதை ஏசு முடிவு செய்வார் என்றுதான் கூறினார்கள் எங்களுக்கு வேதம் சொல்லித் தந்தவர்கள். ஆனால், பின்னால் இந்தக் கருத்து கிறித்துவத்தில் நன்றாகவே நீர்த்துப் போய் விட்டது; முன்பு போன்று ‘வெட்டு ஒன்று; துண்டு இரண்டு’ என்ற நிலை மாறிவிட்டது. ஆனால், இன்னமும் இஸ்லாம் அந்தக் கருத்தில்தான் வேரூன்றி நிற்கிறது. இது ஒரு பாஸிச கருத்தன்றி வேறல்ல.
20.) ஒரு பானைக்கு ஒரு சோறு: Satanic verses என்பது முகமது சாத்தானால் சோதிக்கப்பட்டு, அல்லாஹ் கூறாத ஒரு வசனத்தைக் குரானில் சேர்த்ததாகவும், பின்பு மனம் கசிந்து அதை எடுத்ததாகவும், இல்லை அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்றும் இரு தரப்பு வாதங்கள் உண்டு. முகமதின் வாழ்க்கையில் நடந்த இந்த நிகழ்வுக்கு சர் வில்லியம் முய்ர் என்பவர் வைத்த பெயரே இது. இதை ஒரு நாவலுக்கு தலைப்பாக வைத்தார், சல்மான் ருஷ்டி. அதற்கு ஏன் இத்தனை வன்மம்? எந்த மதத்தின் மீதுதான் கிண்டல்களோ, விவாதங்களோ, எதிர்ப்புகளோ வரவில்லை. கீமாயணம் எழுதியதால், பிள்ளையார் சிலை உடைப்பால் இந்து மதம் நலிந்து விட்டதா? கடைசியாக எழுதப்பட்ட Da Vinci Code மாதிரி எத்தனை புத்தகங்கள், சினிமாக்கள் – கிறித்துவமதத்தைவிட்டு எல்லோரும் வெளியேறி விட்டார்களா? அதை விடுங்கள், கிறித்துவமதமும், இஸ்லாமும் எதிர் கொள்ளாத தடைகளா, இல்லை போர்களா; இந்த இரண்டு மதங்களுமே போடாத சண்டைகளா (பங்காளிகள் அல்லவா?) crusades, spanish inquisition – இதனாலென்ன, அந்த மதங்கள் மறைந்து விட்டனவா, என்ன? மதத்திற்கு எதிராக எழும் வாதங்களையோ, மற்ற விதயங்களையோ ஏன் மற்ற மதத்தினர்போல் இஸ்லாமியர்கள் எதிர் கொள்ளக் கூடாது? ஏனிந்த மதத்தீவிரம்? யாருக்குத்தான் அவரவர் மதங்கள் மேலும், கடவுள்கள் மேலும் பற்று இல்லை. பற்று சரி; தீவிரப் பற்று ஒரு ‘மதக்காரனை’ தன்னையே முதலில் காயப் படுத்திக் கொண்டு, பின் அடுத்தவனையும் காயப் படுத்த வைக்கிறது. அத்தகைய ‘தீவிர மதப்பற்று’ தேவைதானா?
Some references:
1. குரான் தர்ஜமா -திரீயெம் பிரிண்டர்ஸ், சென்னை
1. Revelation, Rationality, Knowledge and Truth -Mirza Tahir Ahmad
3. Introduction to Asian Religions – Geoffrey Parrinder, Oxford University Press
4. http://www.arches.uga.edu/~godlas/Sufism.html 5.http://www.islamonline.net/servlet/Satellite?id=1119503547222&pagename=IslamOnline-English-Ask_Scholar/FatwaE/FatwaEAskTheScholar
6. http://answering-islam.org.uk/Hahn/Mawdudi/
7. http://en.wikipedia.org/wiki/Bah%C3%A1%27%C3%AD_Faith
8.http://www.islamonline.net/servlet/Satellite?cid=1119503547222&pagename=IslamOnline-English-Ask_Scholar/FatwaE/FatwaEAskTheScholar
9. http://www.islamicinstitute.ca/answers.php?id=362
10. http://www.themodernreligion.com/women/w_polyplural.htm
11. http://www.wefound.org/texts/Muhammad_files/Muhammad2.htm (Wisdom Behind Prophet Muhammad’s Plural Marriages Dr. Norlain Dindang Mababaya)
12.http://en.wikipedia.org/wiki/Islam 10.http://en.wikipedia.org/wiki/Pillars_of_Islam 13.http://en.wikipedia.org/wiki/Muhammad
14.http://en.wikipedia.org/wiki/Gabriel_%28archangel%29 15.http://en.wikipedia.org/wiki/Archangel
16.http://en.wikipedia.org/wiki/Fundamentalism
17.http://en.wikipedia.org/wiki/Ahmadiyya
கடைசிப் பதிவொன்று அடுத்த இரண்டு நாட்களுக்குள் தருகிறேன். அதன் பிறகு பின்னூட்டச் சாளரங்களைத் திறக்கிறேன். சரிதானே…?

No comments:
Post a Comment