Thursday, 19 February 2015

நாட்டுப்புற வழிபாடு - ஓர் அறிமுகம்


Folk Worship - Intro - Tamil Poltics News Article
தமிழகத்தில் பல்வேறு சமயங்களும், சாதிகளும் உள்ளன. அத்தகைய சமயத்தினரும், சாதியினரும் பல தெய்வங்களை வணங்கி வருகின்றனர். அவை உருவங்களாகவும், அருவங்களாகவும் வைத்து காலங்காலமாக வழிபடப்படுகிறது. அறிவியல் வளர்ந்துள்ள இக்காலத்தில் பலவகையான கண்டுபிடிப்புகள் மனித மனதை பிரமிக்க வைக்கின்றன. சூரியன், சந்திரன், பூமி
போன்ற கோள்களின் இயக்கங்கள் ஏன் என்று கேட்கும் போது அதற்குப் பதில் காண முடியவில்லை. மனித மனமோ ஒரு கொடியைப் போன்றது. அது ஏதேனும் ஒரு பற்றுதலைக் கொண்டு படர வேண்டும். மனிதனின் வாழ்வில் தோன்றும் அச்சத்தையும் அதனால் ஏற்படும் துன்பத்தையும் போக்க அதன் காரணமாக எழுந்ததுதான் வழிபாடும் நம்பிக்கையும் ஆகும்.

வழிபாடு என்பதன் விளக்கம்:-
வாழ்க்கையின் முதலும் முடிவும் கடவுளைச் சார்ந்தவை என்று தெளிந்து அந்த வழியில் சிந்தனையைச் செலுத்துவதே வழிபாடு ஆகும். உருவ வழிபாடு சிறந்ததா, அருவ வழிபாடு சிறந்ததா என்ற வேறுபாடு பார்க்கத் தேவையில்லை. அவரவர்கள் மன ஒருமைப்பாட்டிற்கு உதவி புரியும் சக்தி எதுவோ அதைப் போற்றி வழிபடலாம். ஆதிமனிதர்கள், தாங்கள் காணாத இயற்கை சிற்றங்களையும், மாறுதல்களையும் கண்டு அச்சப்பட்டார்கள். அந்த அச்சத்தைப் போக்கிக் கொள்ள அவர்கள் மேற்கொண்ட செயல்களே வழிபாடு என அழைக்கப்படுகிறது. மண்ணில் பிறக்கும் மனிதர்கள் யாவரும் இன்பமாகவே வாழ நினைக்கிறார்கள். துன்பங்களில் இருந்து தன்னைக்காத்துக் கொள்ள நினைக்கிறார்கள். அதன் விளைவாக பல செயல்களைச் செய்கிறார்கள். அது எதுவாக இருந்தாலும் அவர்களின் வாழ்வின் மேம்பாட்டிற்காகவே அமைகிறது. அவ்வாறு நோக்கும் போது தன்னையும் தன்னைச்சுற்றியுள்ள மக்களையும், விண்ணையும், கடலையும், இயற்கைச் செல்வங்களையும் நோக்குகிறான். அவற்றால் தனக்கு பயன்கிடைத்திருந்தால் நன்றியோடு நினைக்கின்றான். மரியாதை செய்கிறான். இப்படித்தான் வாழ்விற்கு தேவையான அனைத்தையும் போற்றுகிறான். அத்தகைய போற்றுதலே வழிபாடாக மாறுகிறது. வழிபாட்டின் போது பணத்தை தருவதாலோ பணத்தை செலவு செய்து சில சடங்குகள் செய்வதாலே கடவுளின் நம்பிக்கையைப் பெற முடியும் என்ற மூட நம்பிக்கையை அறவே விடுதல் வேண்டும். அன்பு ஒன்றுதான் இறையை அடைய வழியாகும். இதைத்தான்,
"நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே
மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே"
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்"
"செய்பொருள் வாய்க்க" என செவி சார்த்துவோரும்
"ஐஅமர் ஆடுக" என அருச்சிப் போரும்.
என்று தாயுமானவர் அன்பை வளர்த்து வழிபட வேண்டும் என்று கூறுவது இங்கு குறிப்பிடத்தக்கது. கூட்டம் கூட்டமாக வாழ்ந்த மக்களிடத்தில் பல தெய்வ வழிபாடுகள் இருந்தாலும் அதனால் யாரும் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்கு அன்பே அடிப்படையாகும்.

பண்டைத் தமிழர்களின் வழிபாடு:-
தமிழர்கள் தனக்கு மேல் ஒரு சக்தி உண்டு என்றும் அதுவே தெய்வம் என்றும் நாகரீகம் வளரத் தொடங்கிய பின் நம்பினர். தொல்காப்பியர் நால்வகை நிலங்களைக் குறிப்பிடும் போது அதன் தெய்வங்களையும் கூறுகிறார்.
"மாயோன் மேய காடுறை உலகமும்
என்னும் நூற்பா மாயோன், சேயோன், இந்திரன், வருணன் என்ற முதன்மைத் தெய்வங்களைக் கூறி வேறோரிடத்தில் கொற்றவையையும் குறிப்பிடுகிறது. இவற்றில் மாயோன், சேயோன் வழிபாடுகள் பிற்காலத்தில் இருபெரும் சமயங்களாக வளர்ச்சிப் பெற்றுள்ளன. வழிபாடு என்பது மக்கள் பயன் கருதி செய்யப்பட்டது. மழைவளம் பெருகவும் தங்கள் வாழ்வு சிறக்கவும் தெய்வத்தை வழிபடுகின்றனர். இம்மை வாழ்வில் தாம் விரும்பும் பயன்களைத் தெய்வத்திற்கு செய்யும் பூசை முதலியவற்றில் பெறலாம் என்று நம்பினர்.
"கருவயிறு உறுக" எனக் கடம்படுவோரும்
என்ற பயன்களை விரும்பி மக்கள் வழிபட்டதாகப் பரிபாடல் கூறுகிறது. மகளிர் கருவுறுதலுக்கும் வேளாண்மை பெருகுவதற்கும் வழிபட்டதை இது உணர்த்துகிறது.
நாட்டுப்புற வழிபாடு:-
தமிழக வரலாற்றில் பல்வேறு ஆட்சி மாற்றங்கள் சங்க காலத்தில் இருந்தே நிகழ்ந்தாலும் வழிபாட்டு முறைகள் மாறாமல் வரவேண்டும் என்று மக்கள் சில முறைகளை கடைபிடித்தனர்.
கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது முதுமொழியாகும். ஆனால் நாட்டுப்புறங்களில் மனிதர்கள் நடமாடாத இடங்களான காடு மலைகளில் கூட கோயில்கள் காணப்படுகின்றன. தெய்வமாக இருந்தாலும் முன்னோராக இருந்தாலும் இயற்கையாக இருந்தாலும் நாட்டுப்புற மக்கள் அவற்றை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் வழிபடுகின்றனர். வழிபாடு திருவிழாவாக நடைபெறும் போது அவற்றில் சில செயல்களைத் தொடர்ந்து முறையாக செய்து வருகின்றனர். நாட்டுப்புற வழிபாட்டில் பூசைக்கென்று காலநேரம் இல்லை. அவரவர் விரும்பினால் எந்த நாளிலும் நேரங்களிலும் பொங்கல் வைத்து பூசை செய்து கொள்வர். இந்த வழிபாட்டிற்கென்று தனியாக யாரும் நியமிக்கப்படுவதில்லை. கிராம தெய்வங்களுக்கு சிலைகள் பெரும்பாலும் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அவை முறையாக வடிவமைக்கப்படாத தன்மை கொண்டதாகும். இவ்வகை தெய்வங்களுக்கு பலியிடுதல் காணிக்கையாக கொடுக்கப்படுகின்றது. சரியான பூசாரி இல்லாததால் அருள் வந்தோர் கடந்த காலம், எதிர்காலம் பற்றி கூறுவதும் உண்டு. எனவே, நாட்டுப்புற வழிபாடு என்பது எவ்வித கட்டுப்பாடுமின்றி தங்களிடம் கிடைத்த பொருள்களைப் படைத்து, தங்களையும், வணங்கும் தெய்வத்தையும் திருப்திபடுத்துவதற்காகவே வழிபடுகின்றனர்.

வழிபாட்டிற்குரிய தெய்வங்கள்:-
நாட்டுப்புற சமயங்களில் சைவம், வைணவம் என்ற வேறுபாடு இல்லை. நாட்டுப்புற தெய்வங்களை அனைத்து மதத்தினரும் வழிபடுதலை கண்கூடாகக் காண்கிறோம். நாட்டுப்புற மக்களிடம் இந்து, இஸ்லாம், கிறித்துவம் என்ற வேறுபாடு இல்லை. சில அங்காளம்மன் கோவில்களில், கிறித்துவர்களும் சில இஸ்லாமிய கோயில்களுக்கு இந்துக்களும் போகின்றார்கள். சான்றாக விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரே கோயிலில் கோபுரம், சிலுவை, பிறை உள்ள வடிவம் பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நாட்டுப்புற மக்கள் வழிபடும் தெய்வங்களை ஐந்து வகையாக சு. சக்திவேல் கூறுவார். தமக்கு உதவி செய்த அல்லது உதவி செய்யும் இயற்கை, மனிதர்கள், முன்னோர், கண்ணிற்குப் புலப்படாத சக்தி முதலானவையே நாட்டுப்புற தெய்வங்களாக அமைகின்றது. இவற்றை சிறு தெய்வங்கள் என்பர். ஆனால் இக்கூற்று சரியல்ல. வேத நெறிப்படி அமைக்கப்பட்ட கோயில்களில் சைவ, வைணவ சமயங்களைச் சார்ந்த தெய்வங்கள் பெருந்தெய்வங்கள் எனப்படுகின்றன. இவை பெருந்தெய்வங்கள் என்று அழைக்கப்பட்டாலும் ஆரியர் வருகைக்கு முன்னரே, நம் நாட்டில் வழிபடுகின்ற பழக்கம் இருந்தது. பழமை வாய்ந்த நாட்டுப்புறத் தெய்வங்களை தமிழர்கள் காலங்காலமாக வழிபட்டு வந்துள்ளனர். இத்தகைய பழமைமிக்க தெய்வங்களை சிறு தெய்வங்கள் எனக் கூறுவது சரியல்ல. எனவே, அவற்றை பழந்தெய்வங்கள் என்று அழைக்கலாம் என நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வழிபாட்டின் நோக்கம்:-
கிராமப்புறங்களில் வாழும் மக்கள் வழிபடும் தெய்வங்களுள் பெரும்பாலானவை பெண் தெய்வங்களே ஆகும். அதற்குக் காரணம் தமிழர்களின் பண்பாடு. தமிழர்கள் ஓடும் ஆறுகளையும், அலைமோதும் கடலையும், பசுபோன்ற விலங்குகளையும் பெண்ணாகக் கருதி வணங்குகின்றனர். மேலும், தாய்மண், தாய்மொழி, தாய்நாடு, என்று தாய்மைப் பண்பை போற்றுபவர்கள் என்பதனால் பெண் தெய்வ வழிபாடு அதிகம் இருந்தது. இவை தவிர ஊர் தெய்வம், காவல் தெய்வம், குல தெய்வம் என்று பல நிலைகளில் வழிபடுகின்றனர். இவற்றிற்கு கள்ளும், இறைச்சியும் வைத்து பொங்கலிட்டுப் படைப்பதை பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் கருதினர். மஞ்சளாடை, வேட்டி, குதிரை உருவம், கத்தி போன்ற ஆயுதங்கள் முதலானவற்றை நேர்த்திக் கடன்களாக வைத்து வழிபடுவதும் உண்டு. இந்த நேர்த்திக் கடன்கள் அவரவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப அமையும்.
நாட்டுப்புற வழிபாட்டு முறைகளில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற ஏற்றத்தாழ்வுகள் இல்லை. கோயில் வழிபாட்டால் சில காரணங்களால் முதல் மரியாதையைப் பெறுவர். ஏழையானாலும் அவருக்குரிய மரியாதையை மக்கள் கொடுப்பர். அவருக்குப் பின்னால் அவருடைய பரம்பரையினரும் இந்த சிறப்பைப் பெறுவதுண்டு. இந்த பழந்தெய்வ வழிபாட்டினால் ஒற்றுமையையும் அன்பினையும் நட்பையும் மக்கள் வளர்த்து பண்பாட்டைப் பாதுகாத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment