Saturday, 14 February 2015

காலில் விழுவதும் கட்டிப்பிடிப்பதும் - கலாச்சாரம்.. !

எனக்கு நீண்ட நாளாகவே ஒரு சந்தேகம். மனித உடலிலே ஏனைய பாகங்களை போலவே கால் என்பதும்  ஒரு உறுப்பு.  அப்பிடி இருக்க காலில் விழுவதென்பது எதை குறிக்கும்!!!  அடிமை தனமா!! 

ஆசி பெறுவதற்காக காலில் விழுவார்கள்! என்று  தான் நான் அறிந்திருக்கிறேன், பொதுவான கருத்தும் கூட.  ஆனால் அதுவே இன்று ஆதிக்க சக்திகளின் அடையாள சின்னமாக மாறிவிட்டது.  ஒருவருக்கு தமது அதி தீவிர விசுவாசத்தை காட்டுவதற்காய்  அவரின் காலில் விழும் கலாச்சாரம் நம்மவர்களில் உண்டு. இதுவும் ஒரு சுயநலம் தான். அனேகமாக இந்த பழக்கம் தமிழர்களிடம் தான் அதிகமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.




எமது காலில் விழும் கலாச்சாரம் போல மேலைத்திய நாட்டவர்களிடையே கட்டிப்பிடி கலாச்சாரம் என்ற ஒன்று உள்ளது.  ஆசி பெறுவது என்று சொன்னாலும்  இல்லை தமது அன்பை வெளிப்படுத்துவதாக இருந்தாலும் நாகரிகாமாக இவ்வாறு செய்துகொள்வார்கள். ஆனால் காதலர்கள் கட்டி கொள்வதற்கும் அன்பின் நிமிர்த்தம் இருவர் கட்டி பிடிப்பதற்கும் அதி வேறுபாடு உள்ளது ;-)  அதோடு  இவர்களில் உள்ள நல்ல பழக்கம்  வர்க்க வேறுபாடு இல்லாது  தமது  அன்பை இவ்வாறு பரிமாறிக்கொள்வார்கள். நான் அறிந்தவரை அநேகமான மேலைத்தேய நாடுகளில் உள்ளது  இரண்டே சாதி.  ஒன்று உழைக்கும் வர்க்கம் மற்றையது சோம்பேறி கூட்டம். அதனால்  தான் ஒரு நகரத்திலே இருபது இனத்தவர்கள் வசித்தாலும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். 




என்னை பொறுத்தவரை ஆசிரியர்கள் காலில் விழுவது கூட விரும்பத்தகாதது என்றே நினைக்கிறேன்.

பாடசாலை பருவத்தின் இறுதி நாட்களில்  எம் இறுதி பரீட்சைக்கு போக முன் நமது  அதிபர் சொன்னார்   "உங்களுக்கு கற்ப்பித்த  எல்லா ஆசிரியர்கள் காலில்  வீழ்ந்து  ஆசிர்வாதம்  வாங்குங்கள்"  என்று,  நாமும் சென்றோம்...  அநேகமான ஆசிரியர்கள் "வா வந்து விழு"  என்று  அர்த்தப்பட  நாம் அருகில் போக  முன்னரே  தாம்  எம் முன்வந்து  நின்றார்கள்;  கூடவே    தனது நண்பனுக்காக மாணவியிடம் லவ் லெட்டர் கொடுத்த வாத்தியார் உட்பட!   ஆனால்   ஓரிரு   ஆசிரியர்கள்   மட்டும்  "நான் ஒன்றும் பெரிய மனிதர்  இல்ல இதெல்லாம் தேவையற்றது"  என்று  சொல்லி  நாம் அவர்கள் அருகில் போக  முன்னரே விலகி  சென்று விட்டார்கள்.  இதை தான் சொல்வார்களோ  "நிறைகுடம் தளம்பாது என்று!"  உண்மையிலே அவர்கள் மீது  மட்டும் அன்று ஒரு படி மரியாதை கூடி விட்டது.  இதில் ஒருவர் எம் கூட நண்பராக பழகிய பாடசாலை உதவியாளர் (பியூன்).. 



 ஒரு மகன் தன் பெற்றோர் காலிலோ இல்லை தன வீட்டு  மூதாதையர் காலிலோ விழுவதை ஏற்றுக்கொள்ளலாம்.  காரணம் பெற்றோர் எப்பொழுதும் தமது பிள்ளைகளுக்கு நல்லதையே நினைப்பார்கள். அது நடைமுறையில் உள்ளதும் கூட..  ஆனால் ஏனையவற்றை சகித்துக்கொள்ள முடியாது,
காலில் வீழ்பவனும்  மனிதன் காலில் வீழப்படுபவனும் மனிதன் அப்படி இருக்க ஏன் இந்த பாகுபாடுகள்? புரியவில்லை!  ஏனெனில்  இன்று  அது  எவ்வாறு வழக்கத்துக்கு வந்துள்ளது.  மேல் சாதிக்காரன் என்று கருதப்படுபவன் காலில் கீழ் சாதிக்காரன்  விழுவது.  அரசியல்வாதி  காலில் தொண்டன்   விழுவதும்.  நடிகர்கள்  காலில்  ரசிகன்   விழுவதுமாக  காலில் விழுவதை அடிமையின் சின்னமாகவே  மாற்றிவிட்டார்கள்.  




11 comments:

  1. காலில் விழும் கலாச்சாரம் தென்னகத்தில் மட்டும்...அதுவும் தமிழகத்தில்தான் அதிகமாக நிலவுகிறது.

    இந்தப் பழக்கம் ஆசிர்வாதம் வாங்குகிறேன் என்று பள்ளி துவங்கி,அரசியல் கலாச்சாரம் வரை பெருகி வளர்ந்து விட்டது.

    இனி வரும் தலைமுறை குழந்தைகளுக்காவது இந்தப் பழக்கத்தைக் கற்றுக்கொடுக்காமல் இருக்க முயற்சிப்போம்.
    Reply
  2. ஹா ஹா ஹா ஹா அந்த ரெண்டாவது போட்டோ சூப்பர்....
    Reply
  3. ராஜ நடராஜன் said...

    காலில் விழும் கலாச்சாரம் தென்னகத்தில் மட்டும்...அதுவும் தமிழகத்தில்தான் அதிகமாக நிலவுகிறது.

    இந்தப் பழக்கம் ஆசிர்வாதம் வாங்குகிறேன் என்று பள்ளி துவங்கி,அரசியல் கலாச்சாரம் வரை பெருகி வளர்ந்து விட்டது.

    இனி வரும் தலைமுறை குழந்தைகளுக்காவது இந்தப் பழக்கத்தைக் கற்றுக்கொடுக்காமல் இருக்க முயற்சிப்போம்.//// உண்மை தான் ......

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    Reply
  4. ////MANO நாஞ்சில் மனோ said...

    ஹா ஹா ஹா ஹா அந்த ரெண்டாவது போட்டோ சூப்பர்....//// அவர் நித்திரை


    ரொம்ப நன்றி பாஸ் கருத்துக்கு
    Reply
  5. உண்மையான கருத்து...
    உங்களுக்கு கருத்து கந்தசாமின்னு நான் பட்டம் வைக்கவா??
    உண்மையாக ஆசிரியர் காலில் விழுவதெல்லாம் தேவையற்றது பாஸ்..
    தமிழ் மணத்தோட கோபமா??
    Reply
  6. மனிதனை சமமாக மதிப்பவன் காலில் எல்லாம் விழ விடுவதில்லை
    Reply
  7. Mahan.Thamesh said...
    SUPPER POSt/// நன்றி உங்கள் கருத்துக்கு
    Reply
  8. ///மைந்தன் சிவா said...
    உண்மையான கருத்து...
    உங்களுக்கு கருத்து கந்தசாமின்னு நான் பட்டம் வைக்கவா??
    உண்மையாக ஆசிரியர் காலில் விழுவதெல்லாம் தேவையற்றது பாஸ்..
    தமிழ் மணத்தோட கோபமா??/// ஹிஹிஹி பட்டம் நல்ல தான் இருக்கு ஆனா அதுக்கு எனக்கு தகுதி வேணுமே.. நன்றி உங்கள் வருகைக்கு நண்பா
    Reply
  9. ////யாதவன் said...
    மனிதனை சமமாக மதிப்பவன் காலில் எல்லாம் விழ விடுவதில்லை///உண்மை தான் . நன்றி யாதவன் உங்கள் கருத்துக்கு
    Reply

No comments:

Post a Comment