Saturday, 14 February 2015

சுவனப்பிரியன் என்னும் ஒரு சகாப்தம்!

என்னடா சுவனப்பிரியனிடனம் இவன் துட்டு கிட்டு வாங்கிட்டு எழுதிறானோ என்று நினைத்தீர்கள் என்றால் அது உங்கள் மடமை! ஆனாலும் எனக்கு சுவனப்பிரியனை பற்றி எழுத தோன்றுகிறது; இது ஒருவித நன்றி உணர்ச்சியாக கூட இருக்கலாம்! நான் சுவனப்பிரியனால் அடைந்த நன்மைகள் அதிகம்.. நான் என்று சொல்வதை விட பலர்.. என்று சொல்வதே பொருந்தும்!

நான் கடந்த சில மாதங்களாக சுவனப்பிரியனின் பதிவுகளை படித்த பின், அப்படி என்ன தான் இருக்கிறது இந்து மதத்தில்? என்ற ஆர்வம் சாதாரணமாக தொடக்கி தீவிரமாக பற்றிக்கொண்டது. அதில் ஒரு கட்டமாக கண்ணதாசன் அவர்கள் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை இரண்டு தடவைகள்
புரட்டி விட்டேன். இன்னமும் இந்து மதம் சார்பாக பல விடயங்களை தேடி தேடி படித்தேன். அதன் விளைவாக, நிச்சயமாக சொல்கிறேன்; எனக்கு என் மதம் சகல உரிமைகளையும் கொடுக்கிறது. எந்த விதமான விமர்சனத்தையும் என் மதம் சார்பாக என்னால் முன் வைக்க முடியும்! கல்லெறி சிரச்சேதங்கள் இல்லை! ஏன், பிடிக்கவில்லையா காறி உமிழகூட எனக்கு இங்கே சுதந்திரம் இருக்கிறது!

பிறப்பால் நான் ஒரு ஹிந்து. ஆனால் இந்த மதத்தை நான் நினைத்து பார்ப்பதும் இல்லை; அது தொடர்பில் அலட்டிக்கொள்வதும் இல்லை. நான் கடந்த பத்து மாதங்களிலே ஒரே ஒரு தடவை மட்டுமே கோவிலுக்கு சென்றுள்ளேன்! ஆனால் பல தடவைகள் சர்ச்சுக்கு சென்று வந்துள்ளேன்! காரணம் எனக்கு சர்ச்சுக்கு போவதற்கான போக்குவரத்து வசதி கோவிலுக்கு போவதை விட எளிது. எனக்கு கோவில் போவதானாலும் சரி, சர்ச்சுக்கு போவதானாலும் சரி, உள்ளே போனால் ஒரே அளவு மன அமைதியே கிடைக்கிறது; அங்கே இறைவன் இருக்கிறாரோ இல்லையோ அது வேறு விஷயம்! ஆனால் மன அமைதி கிடைக்கிறது! இந்த வகையில் எனக்கு விரும்பிய மத தலத்துக்கு போவதற்கும் வழிபடுவதற்க்கும், இந்து மதம் எனக்கு எந்த கட்டுப்பாடுகளையும், எல்லைகளையும் விதிக்கவில்லை! அந்த வகையில் நான் ஒரு இந்துவாக பெருமைப்பட்டுக்கொள்கிறேன். சுவனப்பிரியன் போல ஒரு இஸ்லாமியனாக பிறக்காததை இட்டு நின்மதி அடைகிறேன். இதை எனக்கு/என்னை போன்ற பலருக்கு உணர்த்த முன்னின்று உழைத்த/உழைத்து வரும் சுவனப்பிரியனுக்கு கோடி நன்றிகள்!

இப்படியான சேவைகளை வலைத்தலத்தினூடே செய்துவரும் இந்த சுவனப்பிரியன் என்பவர் யார்?!... எனக்கு தெரியவில்லை. ஆனாலும் என் ஊகத்தின்படி 'பாலாரும் தேனாறும் ஓடும்' சவூதி அரேபியாவிலே 'மதம் சார் நிறுவன கட்டமைப்பிலே' ஊழியம் பெறும் ஒரு உயர்மட்ட அதிகாரியாக/ ஊழியனாக இருக்க வேண்டும். ஏனெனில் இருபத்தி நான்கு மணி நேரமும் மதத்தை பற்றி மட்டும் சிந்தித்து/செயற்ப்படுத்திக்கொண்டு இருந்தால் சாப்பாட்டுக்கு எங்கே போவது? குடும்பம் நடத்த என்ன வழி? (பல தார திருமணத்தை வேறு ஆதரிக்கிறாராம; அப்படியெனில் அண்ணனுக்கு நாலஞ்சு அன்னிமார் இருப்பார்களே என்ற பொதுவான சந்தேகம் நமக்கு எழுவது இயல்பு தானே!) அதனால் தான் சொன்னேன் மதம் சார் நிறுவன கட்டமைப்பின் ஊழியன் என்று!

(அண்ணனின் தொழில்)
நாம் அனைவரும் அறிந்த/சிலர் அறியாத ஒரு விடயம் என்னவென்றால், சுவனப்பிரியனுக்கு ஹியூமர் சென்ஸ் ரொம்ப ஜாஸ்தி! உதாரணமாக; தனது பக்கத்து வீட்டு சுப்பர்ர பசுமாடு பேத்தை குட்டி போட்டதை பதிவாக போட்டும்; "சுப்பரின் பசுமாடு பேத்தைக்குட்டி போட்டதுக்கு அல்லாவே காரணம்" என எழுதி, அதன் கீழ் நான்கு குர்ரான் வசனங்களையும் இணைத்து, அதை வாசிப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கக்கூடிய நகைச்சுவை உணர்வு சுவனப்பிரியனிடம் அதிகமாகவே உள்ளது. இவ்வாறு அவ்வப்போது எழுதும் தனது பதிவுகளில் இஸ்லாம் மதம் சார்ந்த எள்ளல்களையும், கடிகளையும் வைத்து வெளியிடக்கூடிய தைரியம் எத்தனை பேருக்கு வரும்? ஆம், இவ்வாறு, இந்து மதம் கொடுக்கும் "சுதந்திரத்தை" போன்று , இஸ்லாம் மதமும் கொடுக்க வேண்டும் என்று, புதியதொரு பரிணாமத்தில் இஸ்லாம் மதத்தை அழைத்துச்செல்லும் சுவனப்பிரியன் ஒரு சகாப்தம் தானே!

நான் பார்த்த வரையில் சுவனப்பிரியனிடமும் கருணாநிதியிடமும் ஒருமித்த குணங்கள் அதிகமாகவே உள்ளது. கருணாநிதி கண்ணில் படும் ஜீவராசிகளை எல்லாம் எப்படி "உடன்பிறப்பே" என்று சொல்லி கழுத்தறுப்பாரோ, அதே போல தான் சுவனப்பிரியனின் "சகோ"...! அத்துடன் ஏற்கனவே பலதார திருமணக்கொள்கையை ஆதரித்த கருணாநிதியை(!) ஆரம்ப காலங்களில் சுவனப்பிரியன் போன்ற ஒருவர் ஆட்க்கொண்டிருக்க வேண்டும்!

அப்பப்போ கருத்துக்களில் நிலையில்லாமல் கருணாநிதியை போல் தள்ளாடும் சுவனப்பிரியன் எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரக்கூடிய சந்தர்ப்பம் அதிகம்.. ஆனா என்னே, அதன் பின் தமிழ்நாட்டின் சனத்தொகை தாங்காது!

'பேஸ்மென்ட் வீக்கான' இந்த சுவனப்பிரியனுக்கு பின்னாலே எப்பவும்அண்டர்வேயர் போட்ட நாலு காமெடி பீஸ் அடியாட்கள் சுற்றுவார்கள்! இவர்களின் வேலையெல்லாம் கலகலப்பாக இருக்கும் பகுதிகளை தேடிச்சென்று கலவரம் உண்டு பண்ணிவிட்டு வருவது தான்! ஆனால் அதுக்கெல்லாம் சேர்த்து, தர்ம அடி விளுவதென்னமோ 'பேஸ்மென்ட் வீக்கானா' இந்த அப்பாவி சுவனப்பிரியனுக்கு தான். சமீபத்தில் கூட அண்ணரின் விழுதுகளில் ஒன்றான சர்மிளா அகமத் என்ற பொண்ணு கலகலப்பாக இருந்த பேஸ்புக் குழுமத்திற்கு வந்து "முஸ்லீம் அல்லாதவர்கள் எல்லாம் இஸ்லாம் மதத்தை பற்றி அறிந்து கொள்ள எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்" என்று கூறி தன்னுடைய மெயில் ஐடியை கொடுக்காது, இன்னொரு 'விழுதின்' மெயில் ஐடியை கொடுத்துவிட்டு, கலவரத்தை உண்டு பண்ணிவிட்டு சென்று விட்டது!

இவ்வாறான செயற்பாடுகள் இஸ்லாம் மதம் சார்பாக வெறுப்பலைகளை தான் உண்டு பண்ணும் என்று காமெடி பீஸுகளான விழுதுகளுக்கு தெரியாது! ஆனால் சுவனப்பிரியனுக்கு நன்றாகவே தெரியும்! ஆனாலும் இவற்றை தடுக்க மாட்டார். காரணம் சுவனப்பிரியன் அடிப்படையில் ஒரு இந்து ஆதரவாளர்! அவர் ஹோர்மொன்கள் எல்லாம் இந்து மதம் சார்பாக தான் செயற்படுகிறது! அவர் குர்ரானை படித்தார், ஆனால் இந்து மதத்தை கரைத்துக் குடித்துள்ளார். வேண்டுமென்றால் இந்துமதம் சார்ந்த ஏதாவது சந்தேகங்களை அவரிடம் நீங்கள் கேட்டுப்பாருங்கள்! மதுரை ஆதீனம் கூட அவருக்கு அடுத்தபடி தான். இது அவரின் முற்பிறப்பின் தொடர்பாக கூட இருக்கலாம்!

இவ்வாறாய் இன்று வலைத்தளத்திலே தொடங்கிய சுவனப்பிரியனின் இஸ்லாம் மதம் தொடர்பான "பட்டும் படாத" விழிப்புணர்வும், இந்து மதம் தொடர்பான, என் போன்ற பலருக்கு ஏற்ப்படுத்திய நன்மதிப்பும் வலைத்தளத்தை தாண்டியும் இன்னும் பலரை சென்றடைய வேண்டும் என்பதுவே என் போன்ற பலரது அவா..!

No comments:

Post a Comment