Friday, 27 February 2015

இந்து மதமும் அதன் அர்த்தங்களும்

     இந்து மதம்  



                                     
இந்து மதம் "    

  மதம் என்றால் என்ன  ?

ஒரு மதம் பிடித்த யானையை பலத்த சங்கிளிலியால் கேட்டிபோடுவதை போல வாழ்கையில் நெறி கெட்டு  திரியும் மனிதனை நல் வழி படுத்துவதே மதங்கள் ஆகும் .உலகில் எத்தனயோ மதங்கள் உள்ளன அனால் அனைத்து மதங்களின் சாரமும் ஒன்றே மனிதனை அற நெறியில் செல்ல வைப்பதே. அப்படி பல மதங்களில் ஒன்றே நம் இந்து மதம் ஆகும். பலவற்றில் ஒன்று என்று சொல்லுவதை விட அனைத்திலும் சிறந்தது என்று சொல்லுவதே சிறப்பாகும்.

அப்படி என்ன சிறப்பு இருக்கிறது நம் இந்து மதத்தில் ?

           நம்  மதத்தை இந்து மதம் என்று சொல்லுவதை விட சனாதன தர்மம் என்று  சொல்லுவதே சிறப்பாகும் . இறைவனை அடைய நாம் செல்லும் இந்த வழியை சனாதன தர்மம் என்றே நம் முன்னோர்களால் பின் பற்றப்பட்டது . "இந்து மதம் " என்ற பெயர் அன்னியர்களால் இட பட்டது . அதாவது சிந்து நாகரிக மக்களால் பின் பற்ற பட்ட சனாதன தர்மமே இந்து மதம் என்று அன்னியர்களால் அழைக்கப்பட்டது. இது நமக்கு இடையில் வந்த பெயர் ஆகும்.
இந்து மதம் யாராலும் உருவாக்க பட்டதல்ல ....எப்போது தோன்றியது என்ற யாராலும் கணிக்க முடியவில்லை. உதாரணமாக கிறிஸ்து மதம் ஏசுவுக்கு பின் தோன்றியவை , முஸ்லிம் மதம் முகமது நபியால் உருவாக்க பட்டவை , பௌத்த மதம் புத்தருக்கு பின் தோன்றியவை அனால் நம் இந்து மதமோ இப்படி யாராலும் உருவாக்க பட்டது அல்ல.இது பல யுகங்களை கடந்து நிற்க்கிறது.

யுகங்கள் என்றால் என்ன ?

காலங்களின் அளவே யுகம் என இந்து மதங்களில் அழைக்கபடுகிறது. யுகங்கள் மொத்தம் நான்கு , அவை
1 )  க்ருதயுகம் 
2 ) திரேதாயுகம்
3 ) துவாபரயுகம்
4)  கலியுகம் 

என்பனவாகும். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு கால அளவுகளைக் கொண்டன. இவற்றுட் சிறிய யுகமான கலியுகம் நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் (4,32,000) ஆண்டுகள் கொண்டது. துவாபர யுகம் கலியுகத்திலும் இரண்டு மடங்கு கால அளவு கொண்டது. இது 8,64,000 ஆண்டுகளையும், கலியுகத்திலும் மூன்றுமடங்கு பெரியதான திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகளையும் கொண்டன. கிருத யுகம் மொத்தம் 17,28,000 ஆண்டுகள் கொண்டது. இது கலியுகத்தின் நான்கு மடங்கு பெரியதாகும்.இப்பொழுது நாம் வாழும் இந்த யுகம் கலியுகம் ஆகும்.இப்படி பல யுகங்களை கடந்து வந்துள்ளது நம் இந்து மதம்.

நான்கு வேதங்கள் , உபநிதங்கள் , மற்றும் பல புராணங்கள் , சடங்கு சம்பிரதாயங்களை  கொண்டது நம் இந்து மதமாகும்.ஒவ்வொன்றும் மனிதர்களை நல் வழி படுத்த வியாசர் மற்றும் பல முனிவர்கள் மூலம் இறைவன் நமக்கு அளித்த அருள் கொடைகளாகும்.

வேதங்கள் என்றால் என்ன ?

மந்திரங்கள் மற்றும் இறை துதிபாடல்களை உள்ளடக்கியதே வேதங்கள் ஆகும்.வேதங்கள் மொத்தம் நான்கு வகை , அவை 

1 ) ரிக் வேதம்
2 ) யஜுர் வேதம்
3 ) அதர்வண  வேதம்
4 ) சாம வேதம்  என இப்படி நான்கு  வேதங்கள்  ஆகும் .





          
பல கடவுள் ஏன் ?

ஹிந்து மதம் அதை பின்பற்றுவருக்கு பல சுதந்திரங்களை தந்துள்ளது. இந்த நேரத்தில் தான் இறைவனை தொழ வேண்டும் இப்படி தான் வழிபட வேண்டும் என்று பிறர் கருத்துகளை  நம் மீது தினிபதில்லை.அவரவர் என்னங்களுகேர்ப்ப  இறைவனை வழிபடலாம் என்கிறது. இது எந்த மதத்திலும் இல்லாத கருத்து. இவ்வாரே வந்ததுதான் சிவ , விஷ்ணு , மற்றும் சக்தி வழிபாடு ஆகும்.
                 
              பிற மதத்தவர் நம் மதத்தை பார்த்து கேட்கும் கேள்வி இது தான் " பல கடவுள் இந்து மதத்தில் ஏன் ?...உண்மையில் பல கடவுள் உண்டா என்றால் இல்லை ... பிறகு யார் இந்த சிவன் , விஷ்ணு , பிரம்மா, பார்வதி , லட்சுமி சரஸ்வதி . இவர்களெல்லாம் ஒரே பரமாத்மாவின் வெவ்வேறு அம்சங்களே. அந்த பரமாத்மா உயிர்களை படைக்கும் போது பிரம்மா என்றும் , படைத்த உயிர்களை காக்கும் போது விஷ்ணுவாகவும் , படைத்த உயிர்களை அழிக்கும் போது சிவனாகவும் பார்கின்றனர் நம் இந்து மதத்தவர்கள்.அந்த பரமாத்மாவின் அளவற்ற சக்தியே பராசக்தி , அவரின் அளவற்ற செல்வமே லக்ஷ்மி , அவரின் ஞானமே சரஸ்வதி இவ்வாறு ஒரே பரமாத்மாவின் பல நிலைகளே பல கடவுளாக இருக்கிறது ஹிந்து மதத்தில். இப்படி பல வடிவங்களில் யாரை வணங்கினாலும்   நாம் அந்த ஒரே பரமாத்மாவையே வழி படுகிறோம். இந்து மதத்தில்  இறைவனுக்கு ஏன் இந்த பல வடிவங்கள் என்று கேட்டால்  பொதுவாக நாம் பள்ளி பருவங்களில் கணக்கு பாடங்களில் பாத்திருப்போம் ஒரு பெரிய கணக்கை பல steps ஆக பிரித்து வகுத்து இறுதியில் ஒரே விடையாக தந்துருப்பர்கள் . ஏன் இப்படி பல steps என்று கேட்டால்  நாம் எழிதில் அந்த கணக்கை புரிந்து கொள்வதற்கு , இப்படி நாம் ஒரே பரமாத்மாவை பல வடிவங்களில்  ஏதாவது  ஒரு வடிவினை பற்றிக்கொண்டு இறைவனை சாதாரண மக்களும் எழிதில் புரிந்து கொள்வதற்கே என்பது   இந்து மதத்தின் கூற்று .எப்படி ஒரு கணக்கில் பல steps இருந்தாலும் இறுதில் ஒரே விடையே தருவது போல் நாம் இப்படி பல வடிவங்களில்  இறைவனை வழிபடுவதினால் இறுதியில் அடைய போவது அந்த ஒரே பரமாத்மாவைத்தான்......







                                                              


ஒரே வழி ....

" ஆறேன்றும் குளமென்றும் ஓடையேன்றாலும் அது நீர் போகும் பாதை தன்னை குறிக்கும் "  என்ற அழகான பாடல் வரிகளுகேர்ப்ப இந்த உலகில் எத்தனயோ மதங்கள் இருந்தாலும்  அது நம்மை கடவுளிடம் கொண்டும் செல்லும் ஒரே பாதைதான் என்பதை உணர்ந்தாலே என் மதம் பெரியது உன் மதம் பெரியது என்ற சண்டை ஓயும்.இன்று பல மதங்கள் ஹிந்து மதத்தை பார்த்து சொல்லும் ஒரே சொல் இது சாத்தனின் மதம்.உண்மையில் சாத்தான் என்றால் யார் ? அப்படி ஒருவர் உண்டா என்றால் கிடையாது ....வேதங்கள் , பைபிள் , குரானை நன்கு படித்து அறிந்தவர்களை கேட்டால் ஒரே பதில் வரும் அதாவது மனதில் எழும் தீய எண்ணங்களே சாத்தான்...... அப்படி சாத்தன் என்ற தனி நபர் இருந்தால் இறைவன் ஏன் அவனை படைக்க வேண்டும் ? அதன் நோக்கம் என்ன ? இறைவன் நினைத்தால் அந்த சாத்தானை  ஒரே நொடியில் அழிக்க முடியும் தானே ? ஏன் இறைவன் அவனை ஒழிக்க வில்லை ? இதை ஒரு நொடி சிந்தித்தால் சாத்தான் என்பது எதுவென்று  விளங்கி விடும்..

              சாத்தான் என்பவன் வெளியில் இல்லை மக்களின் எண்ணங்களில் தான் இருக்கிறான் . அதை இறைவன் ஒழிக்க வேண்டியதில்லை நாம் தான் ஒழிக்க வேண்டும் .இப்படி மக்களை நல்வழிபடுத்தும் புனிதமான இந்து மதத்தை சாத்தானின் மதம் என்று கூறி மற்றவர்களின் நம்பிக்கையை உதாசினை படுத்துவர்களின் எண்ணங்களில் தான் சாத்தான் இருக்கிறான் .
அனால் ஹிந்து மதம் கூறுவதோ " எந்த பாதை உன்னை தர்ம வழியில் அழைத்து  செல்கிறதோ அது இறைவனை  அடையும் பாதையே " .

அதை விடுத்து  கூப்பாடு போட்டு அழைபதாலோ , ஐந்து வேளை தொலுவதினாலோ இறைவனை அடைய முடியாது என்பது சத்தியமே ...இன்று எங்கள் மதம்தான் உண்மையான மதம் என்று சொல்லும் மதத்தவர்கள் முதலில் தங்கள் முதுகை ஒரு முறை திரும்பி பார்க்கவேண்டும் நாம் நம்முடைய வேதத்தின் வழி நாம் நடக்கிறோமா என்று சிந்தித்தால் அடுத்த மதத்தை ஏளனம் செய்யும் தகுதி நமக்கு கிடையாது என்ற உண்மை தெரியவரும் . அதனால் தான் ஹிந்து மதத்தில் அடுத்த மதத்தின் நம்பிகையை பழித்ததாக எந்த வேதங்களிலும் காண முடியாது .எல்லாவற்றியும் தன்னில் ஐக்யமாக்குமே தவிர பிரித்து பார்ப்பதில்லை.ஹிந்து மதம் கூறுவது " முதலில் நீ திருந்து பின் அடுத்தவரை நீ திருத்து ".....இதுவே நம்மளுடைய சகிப்புத்தன்மைக்கு காரணம் . பிறர் மதத்தவர்கள் நம் மதத்தை பழிப்பது கசாப்பு கடைக்காரன் உயிர் பழி கூடாது என்று சொல்வது போல் ஆகும் "....





                                                           
இறைவன் படைத்தானா ?

 பொதுவாக எல்லா மதமும் கூறுகிறது  இறைவன்  எல்லாவற்றையும் படைத்தான்  என்று .... அனால் உண்மையில் அப்படி படைக்கிறான் என்றால் எதை மூலமாக கொண்டு படைக்கிறான் ? எதற்காக நம்மை படைக்கிறான் ?
அதன் நோக்கம் என்ன ?  ...இதற்க்கு நம் ஹிந்து மதம் என்ன விளக்கம் தருகிறது என்று பார்போம் ...

இறைவன் என்பவன் என்றும் ஆனந்த மயமானவன் ...அவன் இந்த அண்டங்கள் மற்றும் ஜீவராசிகளை படைத்ததன் நோக்கமே அவன் ஆனந்தமாய் இருப்பதற்கே ...அவன் தனித்து இருக்க விரும்பவில்லை அதன் விழைவே இந்த உலகம் மற்றும் உயிரினங்கள். கடற்கரயில் விளையாடும்  குழந்தை  மணலில் அழகான வீடு கெட்டும் பின் வீடு திரும்பும்பொழுது அதை இடித்து விடும் காரணம் கேட்டல் சும்மா விளையாட்டாக கெட்டினேன் பின் இடித்தேன் என்று பதில் வரும். அதே போல் தான் இந்த அண்டத்தின் படைப்பும் .அனால் மற்ற மதங்கள் கூறுவது போல்  இறைவன் உலகை படைக்க ஆறு  நாட்கள் எடுக்கவில்லை.அவர் நான் பலவாக ஆவேனாக என்ற சங்கல்பம் எடுத்ததன் மூலம் தோன்றியவையே இவை அனைத்தும். அவர் தன்னையே மூலமாக கொண்டு எல்லாவற்றையும் படைத்தார் என்கிறது இந்து வேதங்கள். அவன் தன்னையே மூலமாக கொண்டு படைத்ததினால் எல்லாவற்றிலும் அவனுடைய அம்சம் நிறைந்திருக்கிறது . இதுவே இறைவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்ற தத்துவத்துக்கு ஆதாரம்.
                     
    எப்படி ஒரு குயவன் மன்பாண்டகள் செய்ய மண்ணை மூல பொருளாக கொள்கிறானோ அதை போல் இறைவன் தன்னை மூல பொருளாக கொண்டான்.இதனாலே அவனை நாம் ஆதிமூலம் என்கிறோம். மற்ற மதங்கள் இறைவன் மனிதனை சேவை செய்வதற்காக அல்லது  வழிபடுவதற்காக படைதான் என்கிறது . ஆனால் இறைவனோ இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் நாம் சேவை செய்வதனொலோ அல்லது வழிபடுவதிலோ அவன் மகிழ போவதில்லை அவனுடைய எதிர்பார்பெல்லாம் மனிதன் தன் இறுதி இலக்கான தன்னை அடைவதிலே மகிழ்கிறான்.  ஹிந்து மதமோ இதை   இறைவனின் திரு விளையாடல்களே என்கிறது.
         உதாரணமாக பரமபதம் விளையாட்டை எடுத்து கொள்வோம் அதில் coins- ஆக இருப்பவன் மனிதன் , அவன் தன் மனதை தாயமாக உருட்டி விடுகிறான் நல்ல எண்ணங்கள் மற்றும் அவன் செய்யும் தர்மங்களின் மூலமாக விரைவாக முன்னேறி இறைவனை அடைகிறான்  அல்லது அவன் செய்யும் தீய வினைகளுக்கேற்ப மீண்டும் பின்னோக்கி செல்கிறான் இதுவே அந்த இறைவனின் விளையாட்டாகும். ஆனால் அனைவரும் ஒருநாள் பரமபதத்தை அடைவது சத்தியமே .



இறைவனை ஏன் அடையவேண்டும் ?
இந்த  கலியுகத்தில்  மனிதன் முதலில் எது நிரந்தர இன்பம் எது நிலையில்லாத இன்பம் என்று அறிய இன்னும் முயற்சிக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும் .இன்று  அவன் எதெல்லாம் நிரந்தரம் என்று நினைக்கிறானோ அதெல்லாம் அவன் கண் முன்னே  அழிந்து  போனாலும் மீண்டும் மீண்டும் அதையே அடைய துடிக்கிறான்.சிறு வயதில் ஒரு பொம்மை மீது ஆசை வைக்கிறான் பின் வளர்ந்த பிறகு அந்த பொம்மையின் மீது  உள்ள ஆசை போய்விடுகிறது. பின் குறிப்பிட்ட வயதிற்க்கு பின் எதிர் பாலினத்தின் மீது அவன் ஆசை போகிறது . அதுவும் மணம் முடித்த பின் கசக்கிறது . பின் பணத்தை தேடி அலைகிறான் அது கிட்டியவுடன் நின்மதியாக  இருக்கிறான் என்றால் இல்லை , இருக்கும் பணத்தை மேலும் எப்படி அதிகமாக்குவது அதை எப்படி பாதுகாப்பது என்று சிந்தித்து தன் வாழ் நாளை அதிலே வினாக்குகிறான் சரி அப்படி அவன் சேர்க்கும் பணம் கடேசி வரை அவன் கூட நிரந்தரமாக இருக்குமா என்றால் அதுவும்  சந்தேகம் தான்.
     
                         பின் எதுத்தான் நிரந்தரம் என்று சிந்தித்து பார்க்கும் முன் அவன் ஆயுளும்  முடித்து விடுகிறது. இன்று நாம் வாழும் இந்த பூமியே நிரந்தரமில்லாதது அப்படி இருக்க இந்த பூமியில் இருக்கும் நாம் மற்றும் நாம் அடையும் பொருட்கள் எப்படி நிரந்தரமாய் இருக்க முடியும் . அப்படி நிரந்தரமில்லாத இந்த பொருட்கள்  மற்றும் அசைகளால் எப்படி நிரந்தரமான இன்பத்தை அடையமுடியும்?. இறைவனின் ஒரு அம்சமாய்  அவனிடம் இருந்து பிரிந்த நாம் அவன் தோற்றவித்த இந்த மாய உலகத்தையே நாம் நிரந்தரம் என்று மீண்டும் மீண்டும் அதையே அடைய விரும்புகிறோம் . சாகும் தருவாயில் கூட நாம் நம்மை படைத்த  இறைவனை நினைப்பதில்லை மாறாக அவன் உருவாக்கிய   மாய தோற்றங்களே நிரந்தரம் என்று அதையே நினைத்து  உயிரை விடுகிறோம்  . அதுவே நம்  மறு பிறவிக்கு காரணமாய் அமைத்து விடுகிறது. அப்படி என்றால் எது நிரந்தர இன்பம் என்றால்... இறைவனிடம் இருந்து பிரிந்த நாம் மீண்டும் அவனை  அடைதலே நிலையான இன்பம் . அவனை அடைந்த பிறகு நமக்கு மறு பிறப்பில்லை. மறுபடியும் பிறப்பதால்  தானே நாம் ஒரு உடலை அடைய வேண்டியதிருக்கிறது , பிறகு ஒரு சொந்தம் கிடைக்கிறது ஒரு சமயம் அந்த சொந்தம் நம்மை பிரியும் பொது நாம் துக்க படுகிறோம் , பிறகு பொருளை சேர்க்க மாடாய் உழைக்கிறோம் , அந்த பொருளையும் நாம் சாகும் பொழுது  எடுத்து செல்ல முடியவில்லை , நாம் கொண்ட உடலும் நோய் வாய் படுகிறது இதனால்  மேலும் துன்பமடைகிறோம் . இதெல்லாம் ஏன் என்றால் நாம் நம் பற்றுதலை இறைவனின் மீது வைக்காமல் இறைவன் படைத்த இந்த நிரந்தர மில்லாத பொருட்களின் மீது வைப்பதினால்  வந்த வினை.
                       ஆனால் இறைவனின் விருப்பமோ அவனிடம் இருந்து பிரிந்த அவனுடைய அம்சமாகிய நாம் அவனை   அடைவதிலே..... நம்முடைய நிலையான இன்பமும் அவனே . அவனை அடைந்த பிறகு நமக்கு பிறவி இல்லை , உடல் இல்லை  , சொந்தம் தேவையில்லை பொருட்கள் தேவையில்லை , பசி இல்லை , பிணி இல்லை. ஒரு தங்கத்தில் இருந்து வடிவமைக்க பட்ட கம்மல், தோடு , வளயல் , மூக்குத்தியை உருக்கினால் மீண்டும் அதே  தங்கமாய் மாறும். அதுபோல் நாம் இறைவனை அடைவதினால் அவனோடு கலந்து அவனில் ஒரு அங்கமாகிறோம்.அவன் என்றும் இன்பமயமாய்  இருப்பவன் அவனோடு நாம் கலப்பதினால் நாமும் நிலையான இன்பம் கொண்டிருப்போம்.


                                       
இறைவனுக்கும் நமக்கும் என்ன உறவு ? 

இறைவனுக்கும் நமக்கும் இடையில் உள்ள உறவு என்னவென்று  இந்து மதம் கூறுகிறது  என்று பார்ப்போம்..

                    பொதுவாக இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையில் உள்ள உறவு என்பது படைத்தவன் மற்றும் படைக்க பட்ட உயிர் என்பதையும் தாண்டி இறைவனை  தாயாகவும் , தந்தையாகவும் , காதலனாகவும் , நண்பனாகும் தனக்கான முதாளியாகவும்  பார்க்கிறது இந்து மதம். இது சரியா என்றால் இது தான் சரி இதுதான் நமக்குண்டான சுதந்திரம். இறைவனும் மனிதர்களின் என்னங்களுகேர்ப்ப  இசைந்து கொடுக்கிறான் என்கிறது   இந்துமதம், அதற்கான ஆதாரமே நமது புராணங்கள் மற்றும் இதிகாசங்கள் . அப்படி நாம் நினைப்பது தவறென்றால் தன்னை இப்படிதான் பார்க்கவேண்டும், தன்னிடம்  இப்படிதான் பேசவேண்டும், பழகவேண்டும்  என்று அகம்பாவம் பிடித்து திரியும்  மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள  வித்யாசம்தான் என்ன என்று சிந்திக்க சொல்கிறது இந்து மதம். " அடக்கமாய் இரு அடிமையாகிவிடாதே " என்று பகவத் கீதையில் கண்ணபிரான் கூறியிருக்கிறார் , அப்படி இருக்கையில் நாம் படைத்த உயிர்கள்
நமக்கு அடிமையாய் மட்டுமாய் இருக்க வேண்டும் என்று எப்படி இறைவன் நினைப்பார்  என்று சிந்தித்தார்கள் நம் முன்னோர்கள்  அதன் விழைவே இறைவனை தாயாகவும்,தந்தையாகவும் பார்த்திருக்கிறார்கள் .
             அவ்வாறே ஆண்டாள்  இறைவனை தன் காதலனாக  நினைத்து இறைவனை  அடைந்தாள் , திருஞான சம்பந்தருக்கு அன்னை உமா தேவியாக வந்து பாலுட்டினார், அர்ஜுனனுக்கோ நண்பனாகவும் , பாரத போரில் ஒரு நல்ல வழிகாட்டியுமாய் இருந்தார். இதில் இருந்தே தெரிகிறது தூய பக்தர்களுக்காக இறைவன் என்றும் தன் நிலையிலிருந்து இசைந்து கொடுப்பான் என்று...

            ஆனால் மற்ற மதங்களோ இறைவன் என்பவன்  முதலாளி நாம் அனைவரும் அவன் படைத்த அடிமைகள் மட்டுமே அவனை நாம் எவ்வாறும் அவனை உறவு சொல்லி அழைக்க கூடாது அது பாவம் , மீறி அழைத்தால் இறைவனின் கோபத்திற்கு ஆளாவோம் என்கிறது....ஒரு நிமிடம் சற்று  சிந்திக்கவேண்டும் முதலாளி அடிமை என்பதே இந்த உலகில் இருக்க கூடாது என்று கூறும்   இறைவனே  நம்மை அடிமைபடுத்துவாரா ? அவன் என்ன  சாதாரண தலைகனம் பிடித்த மனிதனா ? ...அவன்  இறைவன்...
அவன் நம்மிடம் எதிர்பார்ப்பது தூய தன்னலமில்லாத பக்தி மட்டுமே ..
அந்த பக்தியை எந்த வழியில்  செலுத்தினால் என்ன ?
நமது தூய பக்திக்காக தன் நிலையில் இருந்து இறங்கி வராதவர் எப்படி
இறைவனாக இருக்க முடியும் என்கிறது இந்து மதம்....     


                                                         

மறு ஜென்மம் !!!!!!!...

       இந்து மதமும் மற்றும் பௌத்த மதம் உலகில் மற்ற அந்நிய மத கொள்கைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட முக்கியமான கொள்கைகளில் இதுவும் ஒன்று அதுதான் மறுஜென்மம்....
         இஸ்லாம் மதமும் கிருஸ்துவ மதமும் மறுஜென்மம் என்பது மனிதனுக்கு கிடையாது அவன் இறந்த பிறகு ஒன்று சொர்கத்திற்கு செல்வான் அல்லது நரகத்திற்கு செல்வான் என்கிறது...அனால் இந்து மதமோ ஒரு மனிதன் இறந்த பிறகு அவனுடைய ஆத்மா அவன் செய்த கர்ம வினைகளுகேர்ப்ப வேறொரு உடலை அடைகிறது  அதுவே மறு ஜென்மம் என்கிறது....வேறொரு உடல் என்பது மிருகங்களுடைய அல்லது பறவைகளுடைய மற்றும் பூச்சிகளுடைய அல்லது மனித உடல் என்பனவாகும்...

ஏன் மறுஜென்மம் ? 

           
                        பிறவிகளிலே மிகவும் உயர்ந்த பிறவி மனித பிறவி ஆகும் . ஏன் என்றால் மனித பிறவியில் இருக்கும் ஒரு உயிரால் மட்டுமே பகுத்தறிவோடு சிந்தித்து செயல் படமுடியும். எது தர்மம் எது அதர்ம செயல் என்று பிரித்து பார்த்து செயல் படும் மனோபாவம் மனித பிறவிக்கு மட்டுமே உண்டு .அனால் மனிதனோ இந்த அரிதான பிறவியை கொண்டு இறைவன் வகுத்த அர நெறியில் வாழ்கையை நடத்தாமல் தனக்கு எது சரியென்று படுகிறதோ தான் வகுத்த அந்த  வழியிலே செல்கிறான். சரி அவன் வகுத்த வழி தர்ம வழியாய் இருந்தால் பரவாஇல்லை , என்று அது அதர்மத்தை நிலைநாட்டுகிறதோ அன்று முதல் அவன் தீய செயலை  செய்ய தொடங்குகிறான். அவன் செய்த தீய செயல்களே அவனுடைய மறுபிறவிக்கு காரணமாய் அமைந்து விடுகிறது. ஒரு ஆத்மா என்று முக்தி அடைகிறதோ அதன் பிறகே அதற்க்கு மறு  பிறவியில்லை . அனால் முக்தி அடைவது என்பது ஒரு ஆத்மா மனித பிறவியில் இருக்கும் பொதுத்தான் சாத்தியம் என்கிறது இந்து மதம் .
              இன்றும் நாம் காணலாம் மனிதன் மட்டும் பழைய நிலைகளில் இருந்து மாறுபட்டு கொண்டிருக்கிறான் ஏன் நம்மோடு தோன்றிய ஆடு மாடு மற்றும் விலங்குகள் , பறவைகள் மறுபடாமல் இருக்கின்றன. மனிதனுக்கு மூளை இருப்பது போல் விலங்குகளுக்கும் மூளை இருக்கின்றன அனால் அதெல்லாம் சிந்திப்பது இல்லை மனிதனாகிய நாம் தான் சிந்தித்து செயல் படுகிறோம் . அதனால் தான் ஒரு ஆத்மா  முக்தி அடைய மனித பிறவியே சிறந்த பிறவி என்கிறது இந்து மதம் .அனால் நமக்கு இறைவன் கொடுத்த இந்த அறிய வாய்ப்பை நாம் ஒழுங்காக பயன் படுத்துகிறோமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.....நாம் செய்யும் சில தீய செயல்களாலே நாம் முக்தி அடையாமல் மீண்டும் வேறொரு பிறவி எடுத்து விடுகிறோம்...ஏன் இந்த மறு பிறவி என்றால் செய்த வினைகளுக்கான தண்டனை என்பதை விட நம் பாவத்தை போக்குவதற்கான வழி என்றே சொல்கிறது இந்து மதம் ...எடுத்து காட்டாக ஒரே வகுப்பறையில் இரண்டு மாணவர் இருக்கிறார்கள் ஒருவன் நன்றாக படிப்பான் மற்றவன் உதாரிதனம்மாக திரிகிறான்...நன்றாக படித்த மாணவன் இறுதி ஆண்டுதேர்வில் வெற்றிபெற்று அடுத்த வகுப்புக்கு செல்கிறான் அந்நாள் உதாரிதனமாக திரிந்த மாணவனோ அதே தேர்வில் தோல்வியுற்று மீண்டும் அதே வகுப்பில் படிக்கும் படி ஆகிவிடுகிறது ...இது அந்த உதாரிதனம்மாக  திரிந்த மாணவனுக்கான தண்டனை அல்ல மேற்படிப்புக்காக அவனை தயார் ஆக்கி கொள்ள மீண்டும் அவனுக்கு கிடைத்த சந்தர்ப்பம்...இதுவே மறுபிறப்பின் ரகசியம் ...ஆன்மிகபாதையில் முன்னேருகிறவன் படி படியாய் முன்னேறி இறைவனை அடைகிறான் ....பாவம் செய்தவனோ அவன் கர்ம வினைகளுகேர்ப்ப பல பிறவி எடுத்து தாமதமாக இறைவனை அடைகிறான் ...எனவே பிறவி என்னும் பெருங்கடலை தாண்டி நாமும் என்றாவது இறைவனை அடையவது சாத்தியமே இது சத்தியமே....



                                                          
 அனைவருக்கும் ஏன் கிடைக்கவில்லை  வேதம் !

இன்று பல மதத்தில் சிறு குழந்தையிடம் கூட அவர்கள் மதத்தின் வேதங்களை படிக்க செய்கிறார்கள் ...அனால் நம் இந்துமதத்தில் மட்டும் என் அனைவரிடமும் வேதம் இல்லை என்று வருத்த படும் பலபேர் நம் இந்துமதத்தில் இருக்கின்றார்கள் ...முதலில் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன் சிறு வயது முதல் பைபிள் படித்த கிறிஸ்துவர்கள் எல்லாம் கிறிஸ்து போல் வாழ்கின்றார்களா ? அல்லது சிறு வயது முதல் குரான் படித்த அணைத்து முஸ்லிம்களும் நல்ல ஒழுக்கங்களோடு இருகின்றார்களா ?

ஒரு எடுத்துகாட்டு ....

பள்ளி முடிந்து மாலை வேளையில் ஓடி விளையாடும் சிறுவனிடம் பள்ளி பாட புத்தகத்தை படிக்க சொன்னால் அவன் படிக்க மாட்டான் ,பெற்றோர்கள் கண்டித்து படிக்க சொன்னால் அவன் அந்த புத்தகத்தை படிப்பது போல் ஏமாற்றுவான் , அவன் எண்ணமெல்லாம் அந்த விளையாட்டிலே இருக்கமே தவிர அந்த புத்தகத்தில் என்ன விசயம் இருக்கு என்று அவனுக்கு தெரியாது ...

அந்த மாணவனின் நிலையில் தான் நாம் இன்று இருக்கிறோம் .அதாவது இன்று (கலியுகத்தில் ) நிரந்தரமில்லாத பணம், பொருட்கள் , நிலையில்லாத சுகங்களின் மீதே நம் மனம் அலைபாய்கிறது ...அதற்கேற்றார் போல் இறைவனும் நமக்கு பல சந்தர்பங்களை தருகிறான் அவற்றை பெறுவதிற்கு , என்று நாம் இந்த நிரந்தரமில்லாத பொருட்களை மறந்துவிட்டு எதுதான் நமக்கு நிரந்தர இன்பம் என்று யோசிக்கும் தருவாயில் தான் நமக்கு இறைவன் அளித்த வேதங்களை படிப்பதற்கு இறைவன் முலாமாகவே வாய்ப்பு கிடைகின்றது ....அபோதுதான் அந்த வேததிர்கான பொருள் நமக்கு விளங்கும் ....அதை விடுத்து உலக பற்றுகளில் நம் ஆசையை விடாமல் நாம் எத்தனை தடவை வேதங்களை படித்தாலும் அதன் அர்த்தம் நமக்கு விளங்காது ...


பிராமணர்களால் தான் வேதம் நமக்கு கிடைக்க வில்லை என்று நாம் குறை கூறுகிறோம் .." இறைவைனின் வேதத்தை நமக்கு கிடைக்காமல் தடுப்பதற்கு இவர்கள் யார் ? " இந்த பொருள் இவனுக்கு இந்த நேரத்தில் கிடைக்கும் என்று இறைவன் நினைத்த பிறகு அதை தடுக்கும் உரிமை யாருக்கு உண்டு ? ...

எனவே நமக்கும் வேதம் கிடைக்கும் ...அதற்கான நேரம் வரும்பொழுது ...

குரான் நல்லவற்றை தான் போதிக்கிறது அதை நாங்கள் முழு அர்த்தத்தோடு சிறு வயதில் முதல் படித்து வருகிறோம் என்று பெருமிதமாய் அவர்கள் கூறினால் அவர்கள் நல்ல ஒழுக்கத்தோடு இருப்பார்கள்.....உலகில் எங்கும் கலவரமே இருக்காது......

அதைபோல் சிறு வயதில் முதல் நாங்கள் முழு அர்த்தத்தோடு பைபிளே படித்து வருகிறோம் என்று கிருஸ்துவர்கள் கூறினால் மட்ரவர்களை மதம் மாற்றாமல் முதலில் இவர்கள் திருந்தி உலகில் எத்தனையோ மதர் தெரேசாவாக மாறி

இருப்பார்கள்..

அது ஏன் நடக்கவில்லை ...யாருக்குமே முழுமையான , இறைவனின் உண்மையான வேதம் கிடைக்க வில்லை ...சற்று சிந்திக்க வேண்டும் அர்ஜுனனுக்கு கிருஷ்ணரால் கீதை எப்ப உபதேசிக்க பட்டது ...ஒரு போர்க்களத்தில் தானே ஏன் வேறு எங்கு வைத்தாவது உபதேசித்திருக்க வேண்டியது தானே ஏன் போர்களத்தில் உபதேசிக்க பட்டது....ஏனென்றால் அது தான் சரியான இடம் அதுதான் சரியான தருணமும் கூட ....செய்வதறியாமல் எல்லாவற்றயும் விடுத்து கிருஷ்ணனை சரண் அடைந்தான் அர்ஜுனனன், அந்த தருணத்தில் தான் கீதை அவனுக்கு  உபதேசிக்கப்பட்டது ...ஒருநாள் நமக்கும் கிடைக்கும் அதற்கான தகுதி நமக்கு வரும் பொழுது ...நம் அனைவரின் கையிலும் ஒரு நாள் பகவத் கீதை இருக்கும் அதற்கான மன பக்குவம் நமக்கு கிடைக்கும் பொழுது ....

1 comment: