இந்தியாவின் வடக்கு எல்லையாக அமைந்திருக்கும் மலைத்தொடர் இமய மலையாகும். இமாலயம் என்ற வடமொழி சொல்லுக்கு ‘பனியின் இருப்பிடம்‘ என்று அர்த்தம். உலகின் மிகப் பெரிய மலை இதுதான். இந்த மலைத்தொடர் 73 பாகை கிழக்கு அட்ச ரேகையிலிருந்து 95 பாகை கிழக்கு அட்ச ரேகை வரை பரவி கிடக்கிறது. 2,400 கிலோ மீட்டர் நீளமும், 160 கிலோ மீட்டர் முதல் 240 கிலோ மீட்டர் வரை அகலமும் கொண்டது. இவ்வளவு பெரிய மலை உலகில் வேறு எங்கும் இல்லை.
இது திபெத்தையும், இந்தியாவையும் பிரிக்கும் பெரிய சுவர் போல அமைந்திருக்கிறது. இந்தியாவின் பக்கம் அமைந்துள்ள இமயமலை உச்சியில் இருந்து அடிவாரம் வரை மிகச் செங்குத்தாகவும், மத்திய ஆசியாவின்
பக்கத்தில் மிகச்சரிவாகவும் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள மலைகளை எடுத்துக்கொண்டால் 8 கிலோ மீட்டர் உயரத்திற்கு மேற்பட்ட மலைச்சிகரங்கள் ஐந்து மட்டுமே இருக்கின்றன. இந்த ஐந்து மலைச்சிகரங்களும் இமயமலைத் தொடரில்தான் உள்ளன. எவரெஸ்ட் 8,751 மீட்டர் உயரம் கொண்டது. மற்ற சிகரங்கள் காட்வின் ஆஸ்டின் 8,682 மீட்டர் உயரமும், கஞ்சன்ஜங்கா 8,452 மீட்டர் உயரமும், தவளகிரி 8,406 மீட்டர் உயரமும் கொண்டதாக உள்ளன. இருப்பதிலேயே மிக அழகான சிகரம் கஞ்சன்ஜங்கா தான்.
இமயமலையின் தட்ப வெப்ப நிலையில் இடத்தை பொறுத்து பெரிய வேறுபாடுகள் உள்ளன. மேற்கு பகுதிகளை விட கிழக்கே வெப்பமும், மழையும் அதிகம். தாவரங்களும் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றன. மரங்களில் சாலம், வெல்வாகை, தேவதாரு ஆகியவை சிறப்பானவை. 2,102 மீட்டர் உயரம் வரை தேயிலை பயிராகிறது. திபெத் பகுதியில் பெரும்பாலும் 2 அடி உயரத்துக்கும் குறைவான புதர்களே காணப்படுகின்றன. 2,402 மீட்டர் உயரத்தில் நாகப் பாம்புகளும் 5,405 மீட்டர் உயரத்தில் பல்லி, தவளை முதலிய உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன.

No comments:
Post a Comment