வடக்கிந்தியாவில் இஸ்லாம் பரவியதற்கும் தமிழ்நாட்டில் இஸ்லாம் வேர் பிடித்ததற்கும் பெருத்த வேறுபாடுகள் உண்டு. தமிழகத்தோடு அரபு வணிகர்கள் தொன்றுதொட்டு வாணிபம் செய்துவந்திருக்கிறார்கள். ஏழாம் நூற்றாண்டில் அரபு மண்ணில் இஸ்லாம் தோன்றிவிட்டதையொட்டி இஸ்லாமியர்களாகிவிட்ட அரபு வணிகர்கள் காலப்போக்கில் தமிழகத்தில் குடியேறி வாழத் தொடங்கிவிட்டனர்.
வடக்கிந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி பல நூறு வருடங்கள் நடைபெற்றதைப் போல, தமிழகத்தில் முஸ்லிம்களின் ஆட்சி இருக்கவில்லை. மதுரை சுல்தான்களின் ஆட்சி 1333-1378 வரை இடைப்பட்ட
ஆண்டுகளில்தான் நடை பெற்றிருக்கிறது. பதினான்காம் நூற்றாண்டிற்கு முன்பாகவே திருச்சியிலும், இராமநாதபுரம் ஏர்வாடி பகுதியிலும், இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இறை நேசச் செல்வர்கள் தமிழகத்திற்கு வந்துவிட்டார்கள்.
ஆண்டுகளில்தான் நடை பெற்றிருக்கிறது. பதினான்காம் நூற்றாண்டிற்கு முன்பாகவே திருச்சியிலும், இராமநாதபுரம் ஏர்வாடி பகுதியிலும், இஸ்லாத்தைப் பரப்புவதற்காக இறை நேசச் செல்வர்கள் தமிழகத்திற்கு வந்துவிட்டார்கள்.
இதற்கு வரலாற்றுச் சான்றுண்டு. பதினான்காம் நூற்றாண்டில் திருச்சி அருகே கண்ணனூர் என்ற பெயரில் ஓரூர் இருந்திருக்கிறது. ஹொய்சாளர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களது தலைநகராகவும் கண்ணனூர் விளங்கியிருக்கிறது.
1310-ல் டில்லி சுல்தானான அலாஉத்தீன் கீல்ஜியின் பிரதிநிதியாக மாலிக்காபூர் தென்னகம் நோக்கிப் படையெடுத்து வந்தபோது கண்ணனூர் பகுதியில் இஸ்லாத்தை ஒப்புக்கொள்ளும் அடிப்படை மந்திரத்தை மட்டும் தெரிந்துகொண்டு, மற்ற மத அனுஷ்டானங்களைப் பற்றி அதிகம் பரிச்சயம் இல்லாத முஸ்லிம்கள் இருந்து வந்ததையும் அவர்களுக்கு எந்தப் பாதகமும் செய்யாமல் மாலிக்காபூர் விலகிவிட்டதையும், மாலிக்காபூருடன் பயணம் செய்த அமீர் குஸ்ரு என்ற இஸ்லாமிய வரலாற்றாசிரியர் பதிவு செய்திருக்கிறார்.
குஸ்ருவின் குறிப்பினைத் தமிழகம் பற்றி நிறைய செய்திகள் கொண்ட சௌத் இந்தியா அன்ட் ஹெர் முஹம்மதன் இன்வேடர்ஸ் என்ற தனது நூலில் மேற்கோள் காட்டியிருக்கிறார் இருபதுகளில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக பணியாற்றிய கிருஷ்ணசாமி ஐயங்கார்.
படையெடுப்புகளுக்கு முன்பாகவே தமிழகம் வந்த இஸ்லாம் தமிழ்ப் பண்பாட்டோடு பிரிக்க முடியாதபடி நெருக்கமாகக் கலந்துவிட்டது. தமிழ் இலக்கிய மரபை அடியொற்றித் தமிழ் முஸ்லிம் புலவர்கள் ஏராளமாக காப்பியங் களையும் சிற்றிலக்கியங்களையும் படைத்திருக்கின்றனர். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த பல்சந்தமாலை என்ற செய்யுள் தமிழக முஸ்லிம்களின் தொன்மையைக் காட்டக்கூடியதாக இருக்கிறது.
இதற்கு தமிழ்த் தாத்தாவான உ.வே. சாமிநாத ஐயர் வழியாகவும் நமக்குச் சான்றுகள் கிடைக்கிறது. உ.வே.சா அவரது சரிதையான என் சரித்திரத்தில் தஞ்சை களத்தூர் பகுதியில் வெற்றிலைக் கொடிக்கால் வைத்து ஜீவனம் நடத்திக் கொண்டிருந்த முஸ்லிம்கள் தமிழ் இலக்கியப் பயிற்சி மிக்கவர்களாகவும், கம்ப ராமாயணம், திருவிளையாடல், பிரபுலிங்க லீலை போன்ற நூல்களை மதிப்புடன் கற்று வைத்திருந்ததாயும், தானும் அந்நூற்களை அந்த முஸ்லிம்களிடம் கேட்டுச் சுவைத் ததைப் பற்றியும் ஒரு சிறு குறிப்பை எழுதியிருப்பார். உ.வே.சா.வின் பதிவு, முஸ்லிம்கள் தமிழ் மண்ணோடு ஒன்றி தனித்ததொரு அடையாளத்தைப் பெற்று விட்டார்கள் என்பதைத்தான் சுட்டுகிறது.
இஸ்லாமிய வெகுஜன இலக்கியங்கள்
நீண்ட காலத்துக்கு முன்பாகவே, தமிழ் மரபையொட்டி முஸ்லிம் புலவர்கள் இஸ்லாம் சம்பந்தப்பட்ட நூல்கள் இயற்றியது போக, பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போர்ச் சூழலில் நிஜமாக ஈடுபட்டிருந்த இஸ்லாமிய நாயகர்களை கதாபாத்திரங்களாகக் கொண்டு மூன்று வெகுஜன இலக்கியங்கள் வந்திருக்கின்றன.
கி.பி. 1757-ல் தென் மாவட்டங்களில் வரி வசூலிப்புக்கென்று ஆங்கிலேயர் களால் பதவி கொடுக்கப்பட்டு ஆங்கிலேயர் களாலேயே தூக்கிலிடப்பட்ட கான் சாகிப்பைப் பற்றி ‘கான் சாகிபு சண்டை’ என்ற நூல் வந்திருக்கிறது. அடுத்தது வட தமிழகத்தில் செஞ்சிக் கோட்டையிலிருந்த மராத்தியர்களின் ஆட்சியை நீக்குவதற்காக மொகலாயப் படைகள் எட்டு ஆண்டுகள் (1690 -1698) அங்கு முற்றுகையிட்டிருந்தன. அந்த நீண்டகால போர்ப் பின்னணியை யொட்டி எழுந்தது ‘சீதக்காதி நொண்டி நாடகம்’.
மற்றுமொரு கதைப் பாடல் ‘தேசிங்கு ராஜன் கதை’ என்பது. அதுவும் செஞ்சிக் கோட்டைப் பகுதியை மையமாகக் கொண்டது. கி.பி 1714-ல் ராஜபுத்ர இளவரசனான தேஜ்சிங் செஞ்சியை ஆண்டுகொண்டிருக்கிறான். அவன் ஆர்காடு நவாபுக்கு கப்பங்கட்ட மறுத்து நவாபுடன் போரிட்டு வீர மரணம் அடைகிறான். தேஜ்சிங்கிற்கு உற்ற நண்பனாக இருப்பவன் மகபத் கான் என்ற முஸ்லிம். தேசிங்கு ராஜனுக்காக மகபத் கானும் தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை வேண்டாமென்று சொல்லிப் போர்க்களம் புகுந்து மரணமடைகிறான். தேசிங்கு ராஜன் கதையைக் கண்ணதாசன் எம்.ஜி.ஆரை வைத்துப் படமாயிருக்கிறார்.
கதைப் பாடல்கள்
சீதக்காதி நொண்டி நாடகம், கான்சாகிபு சண்டை, தேசிங்கு ராஜன் கதை ஆகியவற்றினின்றும் மாறுபட்டது. கடல் வாணிகத்தில் சிறந்தோங்கி விளங்கிய தமிழ் முஸ்லிம் வணிகர் ஒருவரைப் பற்றித் தமிழ்ப் பண்பாட்டின் அம்சங்கள் அழுத்தமாக ஊடுருவி இயற்றப்பட்ட படைப்பு இது.
சீதக்காதி இராமநாதபுரம் கீழக்கரையில் வாழ்ந்தவர். ஷெய்கு அப்துல் காதர் என்பதுதான் சீதக்காதியாய் மருவி யிருக்கிறது. 1698வரை வாழ்ந்திருக்கும். அவர் பன்முகங் கொண்டவர். பெரிய வணிகர். வங்கம், சீனா, மலாக்கா போன்ற நாடுகளுக்கு அவரது கப்பல்களில் முத்து பாக்கு, கிராம்பு மிளகு என்று பல சரக்குகள் போயிருக்கின்றன. அவரைப் பற்றி டச்சு, ஆங்கிலேயே ஆவணங்கள் இருக்கின்றன. அவர் உமறுப் புலவர் சீறாப்புராணம் பாடுவதற்கு நிதியுதவி செய்தவர். இராமநாத புரத்தை ஆண்ட கிழவன் சேதுபதிக்கு மந்திரி போல வலதுகரமாகச் செயல்பட்டவர்.
சீதக்காதிக்கு மதிப்பளிக்கும் வகையில் சேதுபதுகளுக்கேயுரிய விஜயரகுநாத என்ற பட்டத்தையும், கடற்கரையோர முத்து சலாபத்தின்போது வரி வசூலிக்கும் அதிகாரத்தையும் சீதக்காதிக்கு வழங்கியுள்ளார் கிழவன் சேதுபதி. கர்ணன் போல் கொடுத்துக் கொடுத்துச் சிவந்த சீதக்காதியின் கரத்தைப் பற்றிச் சைவப் புலவரான பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் பாடியுள்லார். அந்தப் பாடல்:
காய்ந்து சிவந்தது சூரியகாந்தி கலவியிலே தோய்ந்து சிவந்தது மின்னார் நெடுங்கண்டொலைவில் பன்னூல் ஆய்ந்து சிவந்தது பாவாணார் நெஞ்சமனுதினமும் ஈந்து சிவந்தது மால் சீதக்காதியிரு கரமே. சீதக்ககாதி இறந்தது தாளாமல் அவரது சமாதிக்குப் போய் படிக்காசுப் புலவர், புலவர்கள் வாயில் மண் அள்ளிப் போட்டு, ‘இப்படிப் போய்விட்டீரே யார் இனி ஆதரிப்பார்கள்' என அழுது அரற்றிக்கொண்டிருக்கும் சமயத்தில் சமாதி வெடித்துக் கையில் போட்டிருந்த மோதிரத்தை எடுத்துக்கொள்ளும்படி சீதக்காதியின் கரம் வெளிப்பட்டதாம்.
அந்த அதிசயம்தான் புலவர்களின் கற்பனையினால் ‘செத்தும் கொடுத்த சீதக்காதியே' என்ற பேச்சு வழக்காகி, வள்ளல் தன்மையோடு தொடர்புடைய பெயராக சீதக்காதியின் நினைவை நம்மிடம் நீட்டி வைத்திருக்கிறது.
Keywords: தமிழக இஸ்லாமியர்கள், இந்தியாவில் இஸ்லாம், முஸ்லிம் மக்கள், சீதக்காதி, அரேபியர்கள், முஸ்லிம்கள் ஆட்சி, மதுரை சுல்தான்கள், இஸ்லாம் மதம்
- mackie noohuthambi from BANGALORE
வள்ளல் சீதக்காதி என்ற சேகு அப்துல் காதர் அவர்கள் காயல்பட்டினத்தில் பிறந்தவர்கள் கீழக்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்ற சர்ச்சை இலக்கியவாதிகள் மத்தியில் இன்னும் தொடர்கின்றன. இன்னொரு செய்தி. படிக்காசு புலவர் பாடிய பாட்டுக்கு பதில் அளிக்கும் முகமாக வள்ளல் சீதக்காதி அவர்கள் மரணித்த பிறகு அவர்கள் அடக்கஸ்தலத்தில் இருந்து அவரது கை வெளியே நீட்டியது என்பதும் அந்த கையில் ஒரு தங்க மோதிரம் இருந்தது என்பதும் ஷரீஅத் சட்டத்துக்கு உடன்பாடானது அல்ல. ஒரு முஸ்லிம் மரணித்தவுடன், அவனது உடைகள் களையப்பட்டு, அவன் குளிப்பாட்டப்பட்டு, தைக்கப்படாத இரண்டு வெள்ளை ஆடைகளால் மட்டுமே போர்த்தப்பட்டு அடக்கம் செய்யப் படவேண்டும்.ஆண்கள் தங்கம் அணிவது அவர்கள் வாழும் காலத்திலே கூட இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. பெண்கள் அணிவதற்கு அனுமதி இருக்கிறது .அதுவும் அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் உடலில் இருந்து அகற்றப்படவேண்டும். அப்படி இருக்க, இஸ்லாமிய விழுமங்கள் நிறைந்த வள்ளல் கையில் தங்க மோதிரத்துடன் அடைக்கப்பட்டார், கையை வெளியில் நீட்டினார் என்பதும் ஏற்புடையது அல்ல. கவிஞர் அப்படி பாடவும் இல்லை.Points790
- oorvambu from TAIPEI
சில நாட்கள் முன்,, ஒரு இஸ்லாமிய தாயும் தந்தையும் தங்கள் குழந்தைக்கு நெற்றியில் (நடுவில் அல்ல சற்று ஓரமாக) கருமையில் போட்டும், தாடைக்கு சற்று மேலே ஒரு திருஷ்டி போட்டும் வைத்து இருந்ததை பார்க்க முடிந்தது,, உலகில் எந்த ஒரு இஸ்லாமிய நாட்டிலும் இது போன்ற பொட்டு கலாச்சாரம் இல்லை,, இந்துகளும் இஸ்லாமியர்களும் இணக்கமாக வாழ்ந்தனர்,, கலாசார பகிர்வுகளுடன் இருந்தனர் என்பதற்கு இது போன்று எண்ணற்ற அடையாளங்கள் உள்ளன,, நாகூர் தர்கா வில் சந்தன கூடு விழாவின் பொது இஸ்லாமியர்களை விட சற்று கூடுதலாகவே இந்துகளை பார்க்க முடியும்,, இப்போது தான் உலக வன்முறைகளின் தாக்கத்தால் நம் மத ரீதியான பிளவுகளுக்கு அடித்தளம் அமைத்து கொண்டு இருக்கிறோம் என்பது வேதனை,,Points7980
- Wickrama Baskaran at Federal Government of Australia from BLACKTOWN
சீதக் காதியின் கதை சின்ன வயதில் பள்ளியில் படித்தது. ஆனால் இது எல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. சீதக்காதியின் மோதிரத்தை புலவர் களவாடினார் என்பதே உண்மை. பிறகு ஒரு பொய்யை அவிழ்த்து விட்டிருக்கின்றார். அதை எல்லாம் ஒரு உண்மை கதையாய் உலகுக்கு நாம் பரப்புகின்றோம். அது எங்கள் அறியாமை.Points615
- செ. from THANJAVUR
நான் நான்காம் வகுப்பும் என் மூத்த தமக்கை 5 ஆம் வகுப்பும் கற்றபோது, தமக்கையின் தமிழ் பாடநூலில் "செத்தும் கொடுத்த சீதக்காதி" வள்ளல் பற்றி ஒரு பாடம் உண்டு. அதற்கு, சமாதி ஒன்றிலிருந்து ஒரு கை தன் மோதிரமணிந்த விரலை வெளியே நீட்டி, உதவி வேண்டிவந்த ஏழை ஒருவருக்கு இறந்தபின்பும் தானம் வழங்கிய விபரம் புரியுமாறு தெரியும். சிறுவனான நான் வியப்புடன் பலமுறை அந்தப் பாடத்தைக் கற்பதுண்டு. இப்போதெல்லாம் அத்தகைய இறவாப் பெரும்புகழ் வள்ளல் பெருமக்களைப்பற்றி பள்ளிப்பாடங்கள் எவராலும் எழுதப்படுவதில்லை. மாறாக, ஊழல் புரிந்து இன்றளவும் கோடு கச்சேரி என்று மானம் வெட்கமின்றி அலையும் அரிதார அரசியல் புரட்டர்களின் அருவருக்கத்தக்க வாழ்வும் வரலாறுகளுமே பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் தென்படுகிறது. அதிவீர ராம பாண்டியர், வள்ளல் சீதக்காதி, வ. வே. சு. அய்யர், தீரன் சின்னமலை, நெல்கட்டும் சேவல் பூலித்தேவன், தத்தா இரட்டைமலை சீனிவாசன், கணிதமேதை ராமானுஜன், வ.உ.சி., தியாகி சுப்பிரமணிய சிவா, உ.வே. சாமிநாத அய்யர், விபுலானந்தா அடிகள், ஆறுமுக நாவலர் என்று தமிழ் வரலாறு காட்டுவோரை பாடநூல் நிறுவனம் மறந்து, கொடியவர் வாழ்வை முன்வைக்கிறது.Points17515
- christopher david from MUMBAI
மத ஐக்கியம் தமிழ் மண்ணில் மாறாத மரபு, இந்த கட்டுரை அதற்கு முத்திரை....,Points1325
- Regunathan from DUBAI
நண்பர் அப்துல் சொல்வது சரிதான்....ஒரு சிலர் செய்யும் தவறுக்கு மொத்த சமுதாயத்தையும் பழிப்பது என்பது மூடத்தனம்...ஆனால் இன்றைய சமூக நிலைமையில் இன்டர்நெட்,மீடியா ஆகியவைகளின் தாக்கம் பலமாக உள்ளது.....'நமக்கு ஏன்டா வம்பு ' என்று எண்ணி பலரும் நல்லவர்களுக்கு உதவ தயங்குகிறார்கள் ,தீயவர்களுக்கு எதிராக குரல் கொடுக்கவும் அஞ்சுகிறார்கள்...இந்து வானாலும் சரி முஸ்லிம் ஆனாலும் சரி 'பணம் இல்லையென்றால் மதிப்பு இல்லை' என்ற நிலைமைதான் மக்களுக்கு...இறை பக்தி குறைந்து மதவெறி பெருகி வருகிறது ...மற்ற மதத்தின் மேல் குறை கண்டு நாம் பெருமை கொள்கிறோம் ...இதை எல்லாம் குறைக்க ஒரே ஒரு வழி தான் உள்ளது ...இறைவனிடம் அனைவருக்கும் நல்ல மனதை கொடுக்க பிரார்த்தனை செய்யலாம்...Points910
- kupendran from MANAMA
எனது இஸ்லாமிய நண்பர்கள் எனது பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்வார்கள். என்னுடன் சேர்ந்து சாப்பிடுவார்கள். யேன், வுறங்கி கூட இருக்கிறார்கள். ஆனால் எனது ஹிந்து நண்பர்கள் , என் சாதியை பார்த்து, பக்கத்தில் கூட அமர்ந்து பிரயாணம் செய்ய மாட்டார்கள்.Points5885
- தமிழ்மாறன் from DUBAI
சரியாக சொன்னீர் குபேந்திரன் ,அந்த அனுபவம் எனக்கும் அதிகம் ,6 months ago · (11) · (1) · reply (0) ·
- suvanappiriyan from AL FUWAYLIQ
சீதக்காதி பல வறியவர்களுக்கு உதவியிருக்கலாம். ஆனால் அவரது சமாதி வெடித்து விரல் வெளிபட்டது என்பதை கற்பனையே! அன்றைய புலவர்கள் அளவுக்கு மீறி புகழ்வது வாடிக்கை. 'கவிதைக்கு பொய் அழகு' இல்லையா? இறந்தவர்கள் மறுபடி இந்த உலகத்துக்கு வருவது சாத்தியமில்லை என்கிறது குர்ஆன். அறிவியலும் இறந்தவர்கள் திரும்ப வெளி உலகுக்கு வருவதை ஒத்துக் கொள்வதில்லை. மேலும் தமிழக முஸ்லிம்களின் வீடுகளில்தான் தற்போது தமிழ் வாழ்கிறது. படித்த முஸ்லிம்கள் கூட ஆங்கிலேய ஆட்சி எதிர்ப்பு உணர்வால் இன்று வரை ஆங்கிலம் கலக்காத தமிழையே பேசி வருகின்றனர். இஸ்லாமியர்களின் வரவால் தமிழகத்தில் தீண்டாமை ஒரு கட்டுக்குள் வந்தது என்பதை மறுக்க முடியாது. 'நாம் இவ்வாறு தீண்டாமையை தொடர்ந்தால் அனைத்து மக்களும் இஸ்லாத்தின் பக்கம் சென்று விடுவார்கள்' என்ற பயத்தினால் பல ஆதிக்க சாதியினர் தங்களின் தீண்டாமை உணர்வை ஓரளவு குறைத்துக் கொண்டனர் என்றால் அது மிகையாகாது. இஸ்லாம் தமிழகத்தை தொட்டதால் தமிழர்கள் அடைந்த மறுமலர்ச்சி இது.Points635
- annamalai from VELLORE
////முஸ்லிம்களின் வீடுகளில்தான் தற்போது தமிழ் வாழ்கிறது///// """""அஸ்லாமு அலைக்கும், இன்சா அல்லா, அல்லாவு அக்பர், கைரத் கியா? பஹுத் சுக்ரியா. சலாம் போலோ """"" ஆகியவைகள் எல்லாம் தமிழ் வார்த்தைகள் என்றால் நிச்சயம் முஸ்லிம்கள்தான் உண்மையான தமிழர்கள். சந்தேகமே இல்லை. (முஸ்லிமில் வரும் "ஸ்" என்பது வடமொழி எழுத்து இல்லை என்று சொன்னாலும் ஒத்துகொள்ள வேண்டியதுதான்.6 months ago · (8) · (12) · reply (1) ·
- Regunathan from DUBAI
தமிழ் இஸ்லாமியர்கள் பெரும்பாலும் இன்றும் இந்துகளோடு இணக்கமாகவே உள்ளார்கள்.இதற்கு காரணம் தமிழ் இஸ்லாமியர்கள் மற்றும் இந்துகளின் சகிப்புத்தன்மையே காரணம் ....ஆனால் இப்போது சமீப காலங்களாக இந்த சகிப்புத்தன்மை குறைந்து வருகின்றது ....al umma போன்ற தீவிரவாத கும்பல் வேருன்ற பார்க்கின்றது தமிழ்நாட்டில் ...இது போன்ற விஷயங்கள் இவ்விரு சமுதாயங்களுக்கும் நல்லதல்ல...அனைவரும் கல்வி அறிவு பெற்று ஒரு நல்ல வேலையில் இருந்தால் இது போன்ற ஒரு விஷயங்களில் மனம் ஈடுபடாது..இதை அந்தந்த சமுதாய பெரியோர்கள் முன்னின்று செய்ய வேண்டும் ...Points910
- S.M.ABDUL from RIYADH
ரகுநாதன் அவர்கள் எழுதி இருப்பது மிகவும் சரியே .நான் பள்ளியில் படித்த நாட்கள் மற்றும் பொதுப்பணித்துறையில் வேலை செய்த நாட்களை எல்லாம் நினைவு கூர்ந்தால் மிகவும் சந்தோஷமாக உள்ளது.அனால் இப்போது வீடு வாடகைக்கு பார்க்கும் போது முஸ்லிம்கள் பகுதியா என்று பார்க்க வேண்டி உள்ளது.அப்படியே ஹிந்துக்கள் வாழும் பகுதியில் சென்று விட்டால் முஸ்லிம்கள் என்று தெரிந்து வீடு கொடுக்க மறுக்கிறார்கள்.என்னைப்பொறுத்தவரை இதற்கு எல்லாம் மிகப்பெரிய காரணம் சங்க பரிவாரங்களின் விஷப் பிரச்சாரம் தான்.எல்லாம் வல்ல இறைவன் இந்தியாவை காப்பாற்றுவானாக.6 months ago · (17) · (0) · reply (0) ·
- ஷான் ஷான் Marketing at Mannar & Company from NOIDA
கடல் வழி இணைப்பு., ஆக்கிரமிப்பு கடினம் ,நில வழி ஆக்கிரமிப்பு செய்வது சுலபம் .அதனால் தான் வட இந்திய அளவுக்கு இங்கு மொகலாயர் ஆட்சி இல்லைPoints50235
- பாலா from NEW DELHI
உண்மைதான். ஆப்கானிஸ்தான், சிந்துவெளி பிரதேசம் ஊடாகவே முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு இருந்தது. அவர்கள் வாள்களின் முனையில் பலரை மதம் மாற்றினர் (இன்றைய ISIS போலவே). போர்முனையில் இறந்த வீர்களின் மனைவியரை சித்திரவதை, கற்பழிப்பு செய்தனர். இவர்களின் கொடூரங்களில் இருந்து தப்பவே வட இந்தியாவில் உடன்கட்டை ஏறும் வழக்கம் வந்தது. ஆனால் இந்தப் பாதகர்கள் பின்னர் இதை இந்து சமயத்துடன் இணைத்து மூடநம்பிக்கையாக அதைக் காட்ட முயல, மூடர்களும் அதை நம்பத் தொடங்கினர். பாரதத்தை ஆக்கிரமித்தவர்களால் திரிவுபடுத்தப்பட்ட வரலாறு இன்றும் பரவலாக காணப்படுகிறது. நாம் நமது உண்மையான வரலாறுகளை அறியாமையே எமது சாபம்.6 months ago · (9) · (3) · reply (0) ·
- Jafer Sadiq from ABU DHABI
நல்ல ஒரு அப்டேட் , தேங்க்ஸ் ஹிந்து முஸ்லீம்ஸ் ஒன்னும் அராபிய வில் இருந்து வந்து குடியரவில்லை... அதை போல் லெப்பை என்ன குறுவது குட அரபியார் கள் லெப்பைக் ,,, என அடிக்கடி கூறுவதால் தான் அதை போல் இந்தியாவின் முதல் பள்ளிவாசலும் கேரளாவில் தான் உள்ளது, சேரன் மகான் பெருமான் தான் முதல் முஸ்லிம் ஆன மன்னர் ஆவர்.. கேரளா கடற்கரை அரேபியாவின் மிஹ அருஹமையில் இருந்தால் அங்கை வியபர்த்திர்க்க ஹ வந்தவர்களை பார்த்து மக்கள் மாறினார்கள் ..Points955
- shahul Hameed at Royal Saudi Naval Forces - Riyadh from BANGALORE
ராமநாதபுரம் அருகில் உள்ள பெரியபட்டிணத்தில் உள்ள பள்ளிவாசல் 700-800 ஆண்டுகள் முற்பட்டது என்று அவ்வூர்வாசிகள் கூறுகின்றார்கள். மேலும், அந்தப் பள்ளியை கட்டிய வெளிநாட்டு வணிகரின் வாரிசுகள், இன்றளவும்..., வந்து பள்ளியை பார்வையிட்டுச் செல்கிறார்களாம். பள்ளியை கட்டிய ஜமால் மற்றும் ஜலால் ஆகியோரின் அடக்கத்தலமும், அவ்வூர் பள்ளியிலேயே உள்ளது. கூடுதல் தகவல்..., அன்று கட்டப்பட்ட நிலையிலேயே அந்தப் பள்ளி பாதுகாக்கப் பட்டு வருகிறது.6 months ago · (11) · (1) · reply (0) ·
- shahul Hameed at Royal Saudi Naval Forces - Riyadh from BANGALORE
ராமநாதபுரம் அருகில் உள்ள பெரியபட்டிணத்தில் உள்ள பள்ளிவாசல் 700-800 ஆண்டுகள் முற்பட்டது என்று அவ்வூர்வாசிகள் கூறுகின்றார்கள். மேலும், அந்தப் பள்ளியை கட்டிய வெளிநாட்டு வணிகரின் வாரிசுகள், இன்றளவும்..., வந்து பள்ளியை பார்வையிட்டுச் செல்கிறார்களாம். பள்ளியை கட்டிய ஜமால் மற்றும் ஜலால் ஆகியோரின் அடக்கத்தலமும், அவ்வூர் பள்ளியிலேயே உள்ளது. கூடுதல் தகவல்..., அன்று கட்டப்பட்ட நிலையிலேயே அந்தப் பள்ளி பாதுகாக்கப் பட்டு வருகிறது.6 months ago · (10) · (1) · reply (0) ·
No comments:
Post a Comment