Saturday, 14 February 2015

மங்காத்தாவும், அபிசேக ஆராதனைகளும்.

ஈழ பிரச்சனையாக இருந்தாலும் சரி, தென்னிந்திய சினிமாவாக இருந்தாலும் சரி இல்லை இன்ன பிற  விடயங்களாக இருந்தாலும் சரி, மொழியால் மட்டுமல்ல உணர்வுகளாலும் கூட  ஈழ தமிழர்களும், தமிழக தமிழர்களும்  ஒன்றுபட்டவர்கள் தான் என்பதை என்றைக்கும் அவர் தம்  செயற்ப்பாடுகள்  மூலம் உணர்த்தி  நிற்ப்பார்கள். 

அந்த வகையில் சமீபத்தில் மங்காத்தா  திரைப்படம் ஈழத்திலே  உள்ள திரையரங்கில் ரிலீசான போது அஜித்தின் ரசிகர்கள் தமிழகத்தை போல பெருவாரியாக கொண்டாடினார்கள்.



முக்கியமாக மட்டக்களப்பில் வெடி கொளுத்தி பாலால் அஜித்தின் கட்டவுட்டுக்கு  அபிசேகம் செய்திருந்தார்கள். 

இதற்க்கு முன்னர் யாழ் திரையரங்குகளின் முன்னால் இவ்வாறான சில சம்பவங்கள் நடந்திருந்தாலும், முதன் முறையாக காணொளி வடிவில் அதை இணையத்தில் ஏற்றி  'நாம் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை' என்று   காட்டியிருக்கிறார்கள். 


 ( முக்கியமா,  youtube ல் இந்த வீடியோவுக்கு கீழே உள்ள கமென்ட்'டுகளை  பார்த்துவிடாதீர்கள்.)

ஒரு விதத்தில் பார்க்கும் போது சந்தோசமாகவும் இருக்கிறது. முப்பது வருடங்களாக யுத்தத்தையும், அதுகொடுத்த துன்பத்தையும், வடுக்களையும் சுமந்து திரிந்த எமக்கு  இன்று சந்தோசமாக கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடிய  சூழலும்  வந்துவிட்டது.

ஒரு நடிகர்  மீது கொண்ட  அபிமானம் தான் இவ்வாறாக அவரை  தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதற்கும் ஏதுவாக இருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை.  ஆனால் பொது வெளியில் ஒரு நடிகனின் கட்டவுட் வைத்து  பாலாபிசேகமும், இன்ன பிற  ஆதாரனைகளும்  செய்யும் அளவுக்கு நாம்  இருக்கிறோமே என்பது தான் என்றுமே சகித்துக்கொள்ள முடிவதில்லை..  

எமக்கு  ஒரு நடிகர் மீது அளவுகடந்த பற்று இருந்தால் அவரை  எங்கள்  நெஞ்சில் வைத்து பூசிக்கலாம்.  இல்லை எங்கள்  வீடுகளிலே சாமி அறையில் உள்ள படங்களை தூக்கி எறிந்துவிட்டு, குறித்த நடிகனின் படத்தை வைத்து தினமுமோ இல்லை ரிலீஸ் நேரமோ  ஆராதனைகளை நடாத்தலாம். (ஒருவேளை இதற்க்கு உங்கள்  பெற்றோர்/மனைவி  எதிர்ப்பு தெரிவித்தால், குறித்த நடிகரின் அருமை பெருமைகள் சாதனைகள், திருவிளையாடல்கள் முதலியவற்றை அவர்களுக்கு எடுத்துக்கூறி புரியவைக்கலாம்) ஆனால் அவற்றையெல்லாம்  தாண்டி தெருவுக்கு கொண்டு வருவது........ !

இன்று நாம்  இருபது பேர் சேர்ந்து தலைக்கு அபிசேகம் செய்கிறோம் , எதிராக நாளை இருநூறு பேர் சேர்ந்து தளபதிக்கு ஆராதனைகள் செய்வார்கள். [ நான் நினைக்கிறேன் வடகிழக்கிலே தலையை விட தளபதிக்கு தான் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று (நான் வாழ்ந்த பிரதேசத்தை மையமாக வைத்து சொல்கிறேன்)]  இதுவே  இவ்வாறு  தலை, தளபதி, சின்ன தளபதி, புரட்சி தளபதி, லொட்டு லொசுக்கு என்று  போய்க்கொண்டே தான்  இருக்கும்.

தலையோ, தளபதியோ எந்த ஒரு காலத்திலும் தமக்கு அபிசேக ஆராதனைகள் செய்யச்சொல்லி வேண்டிக்கொண்டதில்லை. அதிலும் அஜித்துக்கு இது தேவையில்லை. காரணம், அவர் எந்த ஒரு காலத்திலும் தன்னை அரசியல்வாதியாக காட்டிக்கொள்வதில்லை.  மாறாக நீங்கள் அவர் மீது கொண்ட அன்பால் தான் இதை செய்கிறீர்கள் என்றால், இதை விட குறித்த நடிகரை பெருமைப்படுத்தும்  விதமாக  செய்ய கூடிய விடயங்கள்  எவ்வளவோ இருக்கே..!

நீங்கள் சொல்லலாம் 'ஒரு  லீட்டர் பாலை ஊற்றி வீணடிப்பதன் மூலம் யாருக்கும் எந்த வித நட்டமும் வந்துவிடப்போவதில்லை, யாரும்  பட்டினியால் செத்துவிடவும்போவதில்லை' என்று!  நானும் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இன்னொன்றை நாம் புரிந்து கொள்ள மறுக்குறோமே,  "இவ்வாறான செயற்ப்பாடுகள் நம் இன்னொரு சமூகத்துக்கோ இல்லை  தலைமுறைக்கோ முன்மாதிரியாக இருக்கப்போகிறது"  என்பதை!

நான் இங்கே யாருக்கும் அட்வைஸ் பண்ண வரவில்லை. அப்படி  நீங்கள் நினைத்தால் ஐயாம் சாரி, இது வெறும் என் உணர்வுகளின் வெளிப்பாடு  மட்டுமே. இதை எழுதியதால் நாளை இவ்வாறான செயற்ப்பாடுகள் நிகழாது என்று நான் நினைத்தால் அது எனது மடமை.. ஆனால் இவ்வாறான செயற்ப்பாடுகளில் ஈடுபடுபவர்களில்  ஒருவர்  இதை  வாசித்து  புரிந்து  கொண்டால்........!




43 comments:

  1. நான் இங்கே யாருக்கும் அட்வைஸ் பண்ண வரவில்லை. அப்படி நீங்கள் நினைத்தால் ஐயாம் சாரி, இது வெறும் என் உணர்வுகளின் வெளிப்பாடு மட்டுமே.// இது தேவை இல்லையே?
    Reply
  2. நல்ல விளக்கம் ஆனால் இதைச் செய்யும் ரசிகர்கள் அறிவுத்தனத்தை எப்படி சொல்லுவது மடமையிலும் மடமை என்பதா? இப்படியான விசில் குஞ்சுகளை திருத்துவது கல்லில் நார் உரிப்பது போல்!
    Reply
  3. வணக்கம் பாஸ்,
    இருங்க படிச்சிட்டு வாரேன்.
    Reply
  4. கொண்டாட்டங்கள் அவசியம்தான் ...ஆனால் அது பிறரை எக்காரணம் கொண்டும் பாதிக்காத வகையில் இருக்கவேண்டும் ....வாழ்த்துக்கள் மாப்ள !
    Reply
  5. ஈழ பிரச்சனையாக இருந்தாலும் சரி, தென்னிந்திய சினிமாவாக இருந்தாலும் சரி இல்லை இன்ன பிற விடயங்களாக இருந்தாலும் சரி, மொழியால் மட்டுமல்ல உணர்வுகளாலும் கூட ஈழ தமிழர்களும், தமிழக தமிழர்களும் ஒன்றுபட்டவர்கள் தான் என்பதை என்றைக்கும் அவர் தம் செயற்ப்பாடுகள் மூலம் உணர்த்தி நிற்ப்பார்கள்.//

    அவ்...ஆரம்பமே ஓவராக குத்துவது போல இருக்கே...
    Reply
  6. முக்கியமாக மட்டக்கிளப்பில் வெடி கொளுத்தி பாலால் அஜித்தின் கட்டவுட்டுக்கு அபிசேகம் செய்திருந்தார்கள். //

    ஹி....ஹி....அஜித் விசுவாசம் கூடிப் போச்சு போல இருக்கே...
    Reply
  7. முதன் முறையாக காணொளி வடிவில் அதை இணையத்தில் ஏற்றி 'நாம் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை' என்று காட்டியிருக்கிறார்கள்.//

    ஹி....ஹி....என்ன கொடுமை பாஸ்.
    Reply
  8. அஜீத் இம்மாதிரியான விஷயங்களை தவிர்க்க தானே சொல்கிறார். மனிதர்கள், சக மனிதர்களை துதி பாடுவதை விட்டொழிக்க வேண்டும்.
    Reply
  9. ன். ஆனால் இன்னொன்றை நாம் புரிந்து கொள்ள மறுக்குறோமே, "இவ்வாறான செயற்ப்பாடுகள் நம் இன்னொரு சமூகத்துக்கோ இல்லை தலைமுறைக்கோ முன்மாதிரியாக இருக்கப்போகிறது" என்பதை//

    ஆமாம் பாஸ்....இது எம் சமூகத்திற்கு இந்த இளைஞர்கள் மூலம் கிடைக்கப் போகின்ற சாபக் கேடு.
    Reply
  10. வணக்கம் சார்!கும்புடுறேனுங்க! இது கொஞ்சம் சிக்கலான மேட்டரா இருக்கும் போலிருக்கே!என்ன சொல்றதுன்னே தெரியல!
    Reply
  11. இதெல்லாம் மாறாது!மாற்ற முடியாது!

    த.ம.7
    Reply
  12. விளையாடு மங்காத்தா விடமாட்டா எங்காத்தா!
    Reply
  13. எனக்கு இந்த விஷயங்கள் அறவே பிடிப்பது இல்லை.
    Reply
  14. அஜித்தே ரசிகர்களிடம் இவ்வாறு செய்யாதீர்கள் என்றுதான் கூறியுள்ளார். தன் ரசிகர் ம்ன்றத்தை கலைத்துவிட்டதாக கூட தெரிகிறது. ரசிகர்களின் ஆர்வத்திற்கு அணை போட முடியாதல்லவா?நடத்தட்டும்,நடத்தட்டும்.
    Reply
  15. சரியான ஆதங்கம் பாஸ்
    Reply
  16. இப்பிடியான சம்பவங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.. எனது மகனுக்கு விஜய் படங்கள் பிடிக்குமென்பதால் அவனை ஒரு முறை அவ்ரின் படத்துக்கு அழைத்து சென்றேன் அங்கு எம்மவர்கள் செய்த ஆர்பாட்டத்தை இதுவரை நான் கண்டதில்லை.. விஜய் வேண்டுமென்றே இப்படியான முட்டாள்கள் கூட்டத்தை வளர்கிறார்.. இவ்விடயத்தில் நான் அஜித்தை பாராட்டுவேன் ரசிகர் மன்றங்களை கலைத்ததற்காக.. அப்படி பட்ட அவருக்கே இவர்கள் இதை செய்கிறார்கள் என்றால்..!!!!
    Reply
  17. என்ன கொடும சார் இது.......
    Reply
  18. ரசிகர் மன்றங்களை கலைத்தும் கலைக்கட்டுகிறது...
    Reply
  19. அசீத்- துரைதயாநிதி அழகிரி கூட்டணியின் வெற்றி கணக்கு ஈழத்தமிழர்களின்-தமிழ் உணர்வு எழுச்சியில் கூடுதலாகிறது.ஆனால் கொத்துக் கொத்தாக செத்து மடிந்த ஈழத்தமிழர்களுக்கு மங்காத்த கூட்டணி என்ன செய்யப்போகிறது....வாக்குப்பதிவு மற்றும் வாழ்த்துக்களுடன்..
    டி.கே.தீரன்சாமி,தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு--வாங்க எங்க பக்கம்-theeranchinnamalai.blogspot.com
    Reply
  20. உங்கள் கருத்து சரி தான்....
    Reply
  21. அபிசேக ஆராதனை,கோயில் கட்டுவதெல்லாம் ரத்தத்தில் ஊறி விட்டது.அப்புறம் முதல் பத்திக்காக நன்றி கந்தசாமி.
    Reply
  22. முக்கியமாக மட்டக்கிளப்பில் வெடி கொளுத்தி பாலால் அஜித்தின் கட்டவுட்டுக்கு அபிசேகம் செய்திருந்தார்கள். //
    நிறைய குழந்தைகள் பால் இல்லாமல் அழும் நம் நாட்டில் இதெல்லாம் ரொம்ப ஓவர்
    எனது புதிய பதிவு http://pc-park.blogspot.com/2011/09/jaffna.html
    Reply
  23. நல்ல பதிவு பாஸ், நீங்கள் எப்படி சொன்னாலும் அதுவள் மாற மண்டையில் ஏறவா போகுது......... என்னைபொருத்தவரை இவர்கள் எல்லாம் சுரணையே
    அற்ற ஜென்மங்கள்.
    Reply
  24. //நான் இங்கே யாருக்கும் அட்வைஸ் பண்ண வரவில்லை. அப்படி நீங்கள் நினைத்தால் ஐயாம் சாரி, இது வெறும் என் உணர்வுகளின் வெளிப்பாடு மட்டுமே.//


    மனிதர்கள் எல்லோருடைய உணர்வும் உங்கள் உணர்வுடன்தான் ஒத்துப்போகும்
    மற்றவர்களை யார் சொன்ன மனிதர்கள் என்று?????
    Reply
  25. மிக அவசியமான பதிவு பாஸ்,
    இனி வேலாயுதம் வந்தா இன்னும் என்ன என்ன கூத்து எல்லாம் நடக்க போகுதோ...
    நினைக்கவே என் மண்டை சுரர்ண்ணுது அவ்வ்
    Reply
  26. //ஆனால் பொது வெளியில் ஒரு நடிகனின் கட்டவுட் வைத்து பாலாபிசேகமும், இன்ன பிற ஆதாரனைகளும் செய்யும் அளவுக்கு நாம் இருக்கிறோமே என்பது தான் என்றுமே சகித்துக்கொள்ள முடிவதில்லை.//

    சரியே என்னாளும் இவற்றை சகிக்கவே முடிவதில்லை..

    பாலாபிசேகமும் ஆராதனைகளும் கடவுளுக்கா இல்லை நடிக்கனுக்கா இன்னும் புரியவில்லை..

    இம்மாதிரியான முட்டாள்களை திருத்துவது கடினம் ஒதுங்கிப்போவதே நன்று,

    நல்ல பதிவு நண்பரே
    Reply
  27. //தலையோ, தளபதியோ எந்த ஒரு காலத்திலும் தமக்கு அபிசேக ஆராதனைகள் செய்யச்சொல்லி வேண்டிக்கொண்டதில்லை. அதிலும் அஜித்துக்கு இது தேவையில்லை. காரணம், அவர் எந்த ஒரு காலத்திலும் தன்னை அரசியல்வாதியாக காட்டிக்கொள்வதில்லை. மாறாக நீங்கள் அவர் மீது கொண்ட அன்பால் தான் இதை செய்கிறீர்கள் என்றால், இதை விட குறித்த நடிகரை பெருமைப்படுத்தும் விதமாக செய்ய கூடிய விடயங்கள் எவ்வளவோ இருக்கே..!///

    சரியாச்சொன்னீங்க

    அப்பறம் நானும் மங்காத்தா பார்த்தேன் அதில் கமலா காமேஸ்ம் சாரி செங்கோவி அண்ணன் கூட கூட்டு வைச்சுகிட்டதால எனக்கும் வந்துடுச்சி மீண்டும் சாரி த்ரிஷா இவங்களும் அஞ்சலி அக்காவும்(இப்ப எல்லாம் இவங்களை இப்படித்தான் கூப்பிடுறேன்)தான் நம்ம கண்ணுக்கு தெரிஞ்சாங்க தலையும் அக்சன் கிங்கும் இந்த படத்தில் நடிச்சாங்களா என்னையா சொல்லுறீங்க.ஹி.ஹி.ஹி.ஹி..
    Reply
  28. எல்லாமே நல்லாவே நடக்கிறது
    Reply
  29. கந்தசாமி நான் இவர்கள் இவ்வாறு செய்வதை நியாயப்படுத்தவில்லை. சிலருக்கு தியட்டர் சென்று படம் பார்ப்பது மகிழ்ச்சி. சிலருக்கோ அங்கே கைதட்டி விசில் அடித்து படம்பார்ப்பது மகிழ்ச்சி. அதே போல் சிலருக்கு இவ்வாறு செய்வதும் மகிழ்ச்சியை தருகின்றதாக்கும். இவர்கள் செய்வது சரியென்று கூறவில்லை. ஆனால் நாங்கள் செய்யும் பல செயல்களுக்கு என்னாலோ ஏன் உங்களால் கூட பதில் கூற முடியாது. பலவிடயங்கள் எங்கள் மனதிருப்தியுடன் தொடர்பு பட்டது என நினைக்கிறேன்!!
    Reply
  30. பாஸ் சரியா சொநீங்க ...ஆனா இத செய்தவங்க திருந்துவாங்களா எண்டு தான் தெரியவில்லை...
    Reply
  31. ஹிஹி ஆல்ரெடி பேஸ் புக்கில் கலவரப்பட்ட விடயம்!
    ம்ம் நீங்கள் கூறுவது மெத்தச் சரி கந்தசாமி அண்ணே!
    Reply
  32. ஹிஹி ஆல்ரெடி பேஸ் புக்கில் கலவரப்பட்ட விடயம்!
    ம்ம் நீங்கள் கூறுவது மெத்தச் சரி கந்தசாமி அண்ணே!
    Reply
  33. தல சொல்லியே கேட்கலை. நீங்க சொல்லியா....
    Reply
  34. தமிழகத்தின் ஈயடிச்சான் காபியா:)

    மொழி மட்டுமல்ல!ரசனையும் கூட மாறுவதில்லை.
    Reply
  35. இங்கு எல்லோரும் தங்களைவிடுத்து மற்றவர்களை தான் hero வாக நினைத்துக் கொள்கின்றனர். . .
    Reply
  36. சேம் ஃபீலிங் தலைவரே... அங்கேயாவது அரை லிட்டர், ஒரு லிட்டர்... இங்கே ரெண்டு பேர் ஆளுக்கு அரை குடம் பாலை கொண்டு வந்து ஊற்றினார்கள்... ஒருத்தன் பட்டாசு வேடித்தபடி இருந்தான்... இதையெல்லாம் சொன்னால் நீயெல்லாம் ஒரு அஜீத் ரசிகனா என்று கேட்கிறார்கள்...
    Reply
  37. நான் நினைக்கிறேன் வடகிழக்கிலே தலையை விட தளபதிக்கு தான் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று//

    சிவகாசி கட்டவுட்டுக்கு யாரோ ஒருவர் மனோகராவில் காசு மாலை போட்ட ஞாபகம். (பத்து ரூபாய் தாள்)
    Reply
  38. எதுவும் கடந்து போகும் நண்பா...
    It is a passing phase...அவர்களாக மாறுவார்கள் ஒரு நாள்...
    Reply
  39. தனி நபர் துதி தமிழ்நாட்டில் அதிகம்
    Reply
  40. .நல்ல விளக்கம் சிறப்பான பதிவு உளம் கனிந்த பாராட்டுகள் .
    Reply
  41. (இதை எழுதியதால் நாளை இவ்வாறான செயற்ப்பாடுகள் நிகழாது என்று நான் நினைத்தால் அது எனது மடமை.)உண்மை வரிகள்
    Reply
  42. மாப்ள பகிர்வுக்கு நன்றி!
    Reply

No comments:

Post a Comment