இந்த மதம் தான் இந்து மதம் என்றில்லை, எல்லா மதமும் இந்து மதம்தான் என்பதே என் கருத்து. 2010ம் ஆண்டு இந்த களம் பற்றிய சிந்தனை வந்தது. அன்றைய காலக்கட்டத்தில் மதம் பற்றி அறிந்திருந்தைவிட இப்போது பன்மடங்கு அதிகமாக அறிந்திருக்கிறேன். அப்போது பெருந்தெய்வங்களை மட்டுமே அறிந்திருந்த நான், இப்போது நாட்டார் தெய்வங்களைப் பற்றிய அறிவையும் வளர்த்திருக்கிறேன். அத்துடன் தத்துவார்த்த நிலைகளைப் பற்றிய புரிதல்களை நோக்கி சென்றுகொண்டிருக்கிறேன். என்னிடமிருந்த மாற்று மதங்களின் மீதான வெறுப்புணர்வு அம்மதங்களின் அடிப்படைகளைப்
புரிந்து கொண்டமையால் குறைந்திருக்கிறது. அப்பாவிடம் இருந்து வந்த கடவுள் மறுப்பும், இப்போது திராவிட நண்பர்களிடம் இருந்து கிடைக்கப் பெரும் பகுத்தறிவும் என்னுடைய கட்டுரைகளை செம்மையாக்க உதவும் என நினைக்கிறேன். என்நிலை வர்ணனை இதோடு போதும் கட்டுரைக்கு செல்வோம்.
புரிந்து கொண்டமையால் குறைந்திருக்கிறது. அப்பாவிடம் இருந்து வந்த கடவுள் மறுப்பும், இப்போது திராவிட நண்பர்களிடம் இருந்து கிடைக்கப் பெரும் பகுத்தறிவும் என்னுடைய கட்டுரைகளை செம்மையாக்க உதவும் என நினைக்கிறேன். என்நிலை வர்ணனை இதோடு போதும் கட்டுரைக்கு செல்வோம்.
கோவில் நிகழும் பாகுபாடு -
நீங்களும் நானும் கோவிலுக்கு செல்கிறோம் என்றால், முதலில் காலணிகளை கழற்றி வைத்துவிட்டு கோவிலுக்குள் நுழைவோம். அடுத்தாக முதல் நாயகன் விநாயகரை வணக்க வேண்டும். ஆனால் அவற்றுக்கும் முன் அரசாங்கத்திற்கு வருமானம் கொடுக்க அர்சனை ரசிதையும், நுழைவு ரசிதையும் பணம் கொடுத்து பெற்றுக் கொள்ள வேண்டும். நமது பொருளாதாரத்தினைப் பொருத்தும், நம்மைபோல் கோவிலுக்கு வருகின்றவர்களின் கூட்ட நெரிசலை கண்டும் சில இடங்களில் ரூபாய் 5க்கு ஆரமிக்கும் நுழைவு ரசிதானாது, ரூபாய் 2000 வரை செல்கிறது. அதல் ஏதேனும் ஒன்றை பெற்றுக் கொள்வது அவசியம். இல்லாவிட்டால் கடவுளின் தரிசனம் என்பது இல்லை என்பதை கொள்கையாக வைத்துள்ளார்கள்.
சரி கட்டமில்லா தர்ம தரிசனம் இருக்குமென்று நினைத்தால், சில கோவில்கள் அது போன்ற வசதியை முழுவதுமாகவே மறுத்துவிடுகிறார்கள். இன்னும் சில கோவில்களில் தர்ம தரிசனம் என்று பெரிய மக்கள் வரிசையில் காத்திருப்பார்கள், அவர்களுடன் நாமும் இணைந்து கொள்ள வேண்டும். அதிக பணம் கொடுத்தவன் அரை நொடியில் கடவுளை தரிசனம் செய்து திரும்பிவிடுவான். பணம் குறைய குறைய நேரம் கூடிக்கொண்டே போகும். பரமபத பாம்பு போல சுற்றி சுற்றி வருமாறு வைக்கப்பட்டிருக்கும் இரும்பு பாதையில் வரிசையில் வர வேண்டும். கால் வலிக்க நெடுநேரம் நின்றும் நடந்தும் வந்தாலும் கடவுள் இருக்கும் கருவரையின் பத்தடி தூரத்திற்கு முன்பே தடுத்து நிறுத்தப்படுவோம். அங்கிருந்தபடியே கடவுளை வேண்டிக்கொண்டு திரும்ப வேண்டியதுதான். நமக்காக ஒரு தீபாரதனையோ, அர்ச்சனையோ தர்ம தரிசனத்தில் கிடையாது. விபூதி, குங்குமம், பூ என எந்த அர்ச்சிக்கப்பட்ட பிரசாதமும் இல்லை. மேலும் நம்மைப் போல கட்டமில்லாமல் கடவுளை தரிக்கவந்து வரிசையில் இருக்கும் பக்தர்களுக்காக உடனே நகர்ந்துவிட வேண்டும்.
இது போல ஏழை பக்தர்களை இம்சை செய்தும், பணக்கார பக்தர்களுக்கு மரியாதை செய்வது ஏதோ தனியார் கோவில்களில் நடைபெறும் செயல் அல்ல. இந்து சமய அறநிலையத்துறை எனும் அரசாங்கத்தின் ஒரு பிரிவின் கீழ் வரும் கோவில்களில்தான் இந்த கொடுமை. கோவில் பராமரிப்புக்காகவும், ஏனைய இந்து சமய அற நிலையத்துறையின் செயல்பாடுகளுக்காக இந்த கட்டணவசூலா என்ற சிந்தனை எழும்வேளையில், கோவில்களை கட்டிபோட்டு அதை பராமரிக்கும் முறைகளை புறக்கணித்து சென்றுவிட்டார்களா நம்முன்னோர்கள் என்ற கேள்வி எழுகிறது.
கண்டுகொள்ளப்படாத கோவில் நிலங்கள் -
பண்டைய தமிழர்களின் கலைதிறனை மட்டுமல்ல, நிர்வாகத்திறனையம் நாம் கோவிலில் கண்டுகொள்ளாலாம். பெரும் கோவில்களோ, சிறு கோவில்களோ அவற்றை நடத்த கூடிய பொருளாதார வழிகளுக்கு எல்லா முன் ஏற்பாடுகளும் அவர்களால் செய்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த பொருளாதார வழியின் அச்சாணி கோவில் நிலங்களும், கோவிலுக்காக நேந்து விடப்படும் மாடுகளும்,ஆடுகளும்,கோழிகளும்தான். ஒவ்வொரு கோவிலுக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நிலங்கள் சொத்தாக பக்தர்களாலும், அரசனாலும் கொடுக்கப்பட்டன. இதில் விளைநிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயிகள் பயிர் செய்தார்கள். கிடைக்கும் லாபத்தில் நிலத்திற்கான குத்தகை பணத்தினை கோவில் நிர்வாகத்திற்கு தந்தார்கள். நிலங்கள் மூலமாக கணிசமான பணத்தொகை கிடைக்க, மாடுகளும்,ஆடுகளும் மேய்ப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அத்துடன் மேச்சல் நிலமும் தரப்பட்டது. ஆடு மாடுகளிடமிருந்து கிடைக்கும் குறிப்பிட்ட பாலை கடவுளுக்கு நெய்வெய்தியம் செய்ய கொடுத்தவிட்டால் போதும் என்பது போன்ற நுட்பமான கோட்பாடுகளை வகுத்திருந்தார்கள். விளை நிலங்கள் என்றுமட்டும் இல்லாமல் வீடுகளும், கடைகளும் நவீன காலத்திற்கு ஏற்ப இப்போதும் சொத்தாக கொடுக்கப்படுகின்றன.
கடந்த 2011 செப்டம்பர் மாத கணக்குபடி இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், 4 லட்சத்து, 78 ஆயிரத்து, 463 ஏக்கர் நன்செய், புன்செய், மானாவாரி நிலம் இருக்கிறது. இந்த நிலங்களை முறையாக குத்தகைக்கு வி்ட்டு கிடைக்கும் பணத்தினைக் கொண்டு செயல்பட்டால் இந்து கோவில்கள் புரணமைப்பு மட்டுமல்லாது, ஏனைய பிற செயல்பாடுகளிலும் தீவிரமாக இறங்க இயலும். அதுவும் கோவில் ஏழை பணக்கார பாகுபாடின்றி கடவுளை தரிசிக்க வரும் பக்தர்களை எவ்வித இன்னலுக்கும் ஆளாக்காமல் செய்யமுடியும். இது தவிர, 22 ஆயிரத்து, 599 கட்டடங்களும், 33 ஆயிரத்து, 627 மனைகளும் உள்ளன. இவற்றினை முறைப்படுத்தி வாடகை வசூல் செய்தால் இன்னும் சிறப்பாக பக்தர்களுக்கும், கோவிலுக்கும் நிறைய பணிகளை செய்ய முடியும்.
திறன் இல்லாத நிர்வாகம் -
மற்ற அரசு துறைகளை போல எந்த திட்டமிடுதலும், அதிரடி நடவெடிக்கையும் எடுக்காத துறையாக இந்து சமய அறநிலையத்துறை உள்ளது. நிலத்தையோ, கடையையோ நடப்பு குத்தகைக்கு விலைக்கு தராமல், என்றோ நிர்ணயக்கப்பட்ட குறைந்த பண அளவிலேயே இன்றளவும் குத்தகைக்கு விடப்படுகின்றன. பாரம்பரிய விவசாயிகள் எல்லாரும் பட்டா போட்டு நிலத்தினை விற்றுவிட துணிந்துவிட்ட இந்த நிலையில் கோவில் நிலங்கள் மட்டுமே மிகச்சிறந்த விளைநிலங்களாக உள்ளன. அதுவும் ஏக்கர் கணக்கில் ஒரே இடத்தில் கிடைப்பதை உணர்ந்த அரசியல்வாதிகளும், செல்வாக்கு மிகுந்தவர்களும். மிகக்குறைந்த குத்தகைக்கு கோவில் நிலங்களை எடுத்துவிட்டு, அந்த குறைந்த நில குத்தகை பணத்தினையும் தர மறுக்கிறார்கள்.
இப்படி குறைந்த குத்தகையைகூட தர மறுப்பவர்கள் மேல் வழக்கு தொடுக்க தனித்த சட்டமும், அந்த வழக்குகளை உடனடியாக தீர்க்க தனி நீதிமன்றங்களும் இல்லை என்பது வெட்ககேடான செயல். வருமானம் மிகுந்த வழிகளையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசு, மக்களை வாட்டி வதைப்பதில்தான் குறியாக உள்ளது. மதுரை, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட ஆறு இடங்களில், வருவாய் நீதிமன்றங்களும், சேலம், மன்னார்குடி உள்ளிட்ட நான்கு இடங்களில், முகாம் நீதிமன்றங்களில் வெறும், 28 கோடி ரூபாய் குத்தகை நிலுவைக்காக, 28 ஆயிரத்து, 382 வழக்குகள் தொடரப்பட்டு, 13 ஆயிரத்து, 307 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை குத்தகைதாரர்கள் செலுத்திவிட்டனரா என்ற தகவல் இல்லை. இதுதவிர, இன்னும், 17 கோடி ரூபாய் குத்தகைப் பணம் தொடர்பாக, 15 ஆயிரத்து, 75 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்கிறது 2011 செப்டம்பர் மாத புள்ளிவிவரம்.
இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிலங்களையும், கடை, வீடுகளையும் இன்றைய காலக்கட்டத்திற்கு தகுந்தது போல விலை நிர்ணயம் செய்து குத்தகையை வசூல் செய்தாலே,. கோவில்களை பராமரிக்கவும், பக்தர்களை மகிழ்விக்கவும் தேவையான அளவுக்கும் மேல் பணம் கிடைக்கும் என்பது உறுதி. இந்த நிலை வர மெத்தனமாக இருக்கும் இந்து சமய அறநிலையத்துறையை விரைவாக செயல்பட வைக்க வேண்டும். அப்போதுதான் பக்தர்களிடம் பஞ்ச பாட்டு பாடி பணம் பிடுங்கும் வேலையை நிறுத்தி, உண்மையான பக்தர்களை எந்த கட்டணமும் இன்றி கடவுளை தரிக்க வைக்க செய்யமுடியும்,.
சிந்தனை செய்வோம்…
நன்றி.
பார்வையிட முகவரி-வலைச்சரம்
அறிமுகம்செய்த திகதி-24.07.2014
-அன்புடன்-
-ரூபன்-