Wednesday, 4 March 2015

குழந்தைகளை கைப்பற்ற குறுக்கு வழி

எப்படி நமது அரசியலமைப்பு சட்டம் களவாடப்பட்டது? எதனால் சமயம் சார்புடைய சர்ச்சைகளில் முஸ்லிம் அல்லாதவரும் ஷரியா நீதிமன்றம் செல்ல நேர்ந்தது?  இதற்கு ஓர் இணக்கமான முடிவை எப்படிக் காண்பது? விடை கான, விருவிருப்பாகவும் தெளிவாகவும் மூத்த வழக்கறிஞர் கி. சீலதாஸ் செம்பருத்திக்காக ‘சமயம் சட்டமானது! சட்டம் சமயமானது! ‘ என்ற தலைப்பில் எழுதி வரும் தொடர், சிறப்பு கட்டுரை பகுதியில் வெளியிடப்பட்டு வருகிறது. படிக்கத் தவறாதீர்!
(கட்டுரைத் தொடர்ச்சி பகுதி 5) 
இரண்டு மனைவிகளுக்கு இரண்டு பிள்ளைகள் 
121(1)  ஷரத்து  அமலாக்கப்பட்டபின்  ஏற்பட்ட  சட்ட  சிக்கல்களையும்,  அதனால்  விளைந்த  சங்கடமான   நிலைமைகளையும்   கவனிப்போம்.
h 1கங்கா  தேவிக்கும்  சந்தான   தாமோதரன்  ஆகிய   இருவருக்கும்   நடந்த  வழக்கில்   கங்காவும்   சந்தானமும்  9.12.1987இல்  திருமணம்  செய்து   கொண்டார்கள்.  இருவரும்  இந்து  சமயத்தைச்   சார்ந்தவர்கள்.  அவர்களின்  திருமணம்   பதிவதிகாரியால்  முறையாகக்  குடும்ப  சட்டத்திற்கு  இணங்க  பதிவு   செய்யப்பட்டது.  அவர்களுக்கு  ஓர்  ஆண்  பிள்ளை 14.7.1990ல்  பிறந்தான்.  அந்தப்  பிள்ளைக்கு  சஞ்சீவ்  விஷ்ணு  என்று  பெயர்  சூட்டப்பட்டது.  அந்தப்  பிள்ளையை  பிறந்ததில்  இருந்து  பராமரித்தவர்  மனைவி  கங்கா.  1990ஆம்  ஆண்டு  மாலா  என்ற  மற்றொரு பெண்ணை  இந்து   கோயிலில்  திருமணம்  செய்து  கொண்டார் சந்தானம்.  மனைவி  கங்காவை   விவாகரத்து  செய்யவில்லை  சந்தானம்.  மாலாவும்  ஒரு  மகனைப்  பெற்றார்.
பிள்ளைகளைக் கடத்திய சந்தானம்
1993-ஆம்  ஆண்டு  சந்தானம்  இரு  பிள்ளைகளையும்  எடுத்துக் கொண்டு   போய்விட்டார்.  கங்கா  சட்ட  உதவி  இலாகாவின்   துணையோடு  தன்  மகனுக்காக  பாதுகாப்பு  உரிமை  ஆணையை  உயர்   நீதிமன்றத்திடமிருந்து   பெற்றார்.  கங்கா   தொடுத்த வழக்கைப்   பற்றி   தெரிந்திருந்தும்  சந்தானம்   நீதிமன்றத்தில்   முன்னிலையாகவில்லை.
1995-ஆம்   ஆண்டில்  கங்கா  தன்  கணவரிடமிருந்து  விவாகரத்து  பெற்றார்.  சந்தானம்  அலோர்ஸ்டார்  ஷரியா  நீதிமன்றத்திடமிருந்து  இரு   பிள்ளைகளுக்கான   பாதுகாப்பு  உரிமையைப்  பெற்றார்.  அவர்  இஸ்லாத்தை  தழுவிக்   கொண்டுவிட்டார்.
இஸ்லாத்தைத்  தழுவிய சந்தானம்   
h 2போலீஸாரிடம்   புகார்  செய்யப்பட்டு   பிள்ளைகள்   இருக்கும்  இடத்தைத்   தேடிப்  பிடித்தனர்  சந்தானத்தின்  மனைவிகள்  கங்காவும்,  மாலாவும்.  இரு  பிள்ளைகளும்   அவரவர்  தாய்மார்களிடம்   ஒப்படைக்கப்பட்டனர்.  மாலாவின்  மகன்  அவரோடுதான்   இருக்கிறான்.  ஆனால் கங்காவின்   மகன்  சஞ்சீவ்  விஷ்ணுவைக்   கணவர்   எடுத்துச்  சென்றுவிட்டார்.
2000-ஆம்  ஆண்டு கங்கா  உயர்  நீதிமன்றத்தில்  தன்  மகனின்  பாதுகாப்பு   உரிமையைக்   கோரினார்.  ஆனால்,  நீதிமன்றமோ  இந்த  விவகாரம்  121(1A)  ஷரத்தின்படி   ஷரியா  நீதிமன்றம்  மட்டும்தான்  விசாரிக்க  முடியும்   என்று   கூறி கங்காவின்   மனுவை   நிராகரித்தது.
பொது நீதிமன்றம் கை கழுவியது
h 4இங்கு  கவனிக்க   வேண்டியது  என்னவெனில்   ஒருவர்  சட்டப்படி   திருமணம் செய்து  கொண்டார்   என்றால்  அந்தத்  திருமணம்   நிலைத்திருக்கும்போது   வேறொரு  திருமணம்  செய்து  கொள்ள  முடியாது.  அப்படித்  திருமணம்   செய்து  கொண்டால்   தண்டனைச்  சட்டத்தின்  (Penal  Code)  494ஆம்  பிரிவுபடி   குற்றமாகும்.  குற்றம்   நிரூபிக்கப்பட்டால்   ஏழாண்டு  விஞ்சாத  சிறைத்  தண்டனையும்  அபராதத்திற்கும்   ஆளாவர்.
அது  ஒரு  புறமிருக்க,  சட்டப்படி  ஒருவரின்   திருமணம்   நிலைத்திருக்கும்போது  மற்றுமொரு   திருமணத்தைச்  செய்து   கொண்டு  அதன்  வழி  குழந்தை   பிறந்தால்  அந்தக்   குழந்தை  மீது   சட்டப்படி   தந்தையால்  உரிமை  கொண்டாட   முடியாது  என்கிறது  பொது   சட்டம் (Civil Law).  அந்தக்   குழந்தைக்கான  எல்லா  பொறுப்புக்களையும்  தாயே  ஏற்றுக்  கொள்ள   வேண்டும்.  பிள்ளையின்  பாதுகாப்பு  உரிமையும்   அவருக்கே  உரியதாகும்.  அந்தப்  பிள்ளையை  முறையிலா  மணப்பிறப்பு (lllegitimate)  என்று சட்டம்  சொல்கிறது.
குற்றவாளி தப்பிக்க இஸ்லாம் ஒரு வழிமுறையா?
p35எனவே,  இப்படிப்பட்ட  சூழ்நிலையில்   கணவன்   சட்டப்படி   திருமணம்  செய்து  கொள்ளாமல்  ஒரு   பிள்ளைக்குத்   தந்தையானார்  என்றால் அந்தப்  பிள்ளையின்  மீதான அவரின்  உரிமைகள்  மிகவும்   குறைவானதே.  அப்படிப்பட்ட சூழ்நிலையில்    தாம்  இஸ்லாத்தைத்   தழுவி   சட்ட   இசைவு   பெறாத  பிள்ளையையும்   இஸ்லாத்தில்   சேர்க்க   அவருக்குச்  சட்டப்படி எந்த  உரிமையும்   இல்லை  என்கின்ற  போது   இஸ்லாமிய   நிர்வாக  அமைப்பு  எவ்வாறு   அந்தக்  குழந்தையை   இஸ்லாத்துக்கு  மாற்ற   முடியும்?  ஷரியா எந்த  அதிகாரத்தைக்  கொண்டு   உரிமையில்லா   தந்தையின்  ஒப்புதலோடு  அந்தப்   பிள்ளையின்  பாதுகாப்பு   உரிமையை  அவருக்கு  வழங்க   முடியும்?
இது  சட்டச்  சிக்கல்   என்பதைவிட   ஒரு  பகிரங்கமான சட்ட   துஷ்பிரயோக   நடவடிக்கை  என்றால்   மிகையாகாது.
குழந்தைகளை கைப்பற்ற குறுக்கு வழி
ஷியாமளாவுக்கும்   டாக்டர்  ஜெயகணேஷூக்கும்  நடந்த   2002-ஆம்   ஆண்டு  வழக்கு   அரசியலமைப்புச்  சட்டத்தின்  121(1A)  ஷரத்து  இழைக்கும்  சங்கடத்தை   வெளிப்படுத்துகிறது.
h 3ஷியாமளாவும்  டாக்டர்  ஜெயகணேஷனும்   1998ஆம்  ஆண்டு  இந்து   ஆச்சாரப்படி   திருமணம்  செய்து   கொண்டனர்.  அவர்களுக்கு   இரண்டு   பிள்ளைகள்   இருக்கிறார்கள்.  19.11.2002-இல்   ஜெயகணேஷ்   இஸ்லாத்தைத்  தழுவினார்.  25.11.2002-இல்   தம்  இரு  பிள்ளைகளையும்   இஸ்லாத்திற்கு  மாற்றிவிட்டார்.  கணவன்  மனைவிக்கு  இடையே  தகராறு   முற்றிவிட்டதால்   அவர்களுடைய  திருமணம்  முறிவு  நிலையை   அடைந்துவிட்டது.   18.12.2002-இல்   ஷியாமளா  தன்  கணவரை  விட்டுப்   பிரிந்து  செல்லும்  போது   தமது   இரு   பிள்ளைகளையும்  கூடவே   தன்  பெற்றோரின்   இல்லத்திற்குக்  கொண்டு  சென்றார்.
31.12.2002-இல்  தம்  இரு   பிள்ளைகளுக்கான  பாதுகாப்பு   உரிமையைக்  கோரி  உயர்   நீதிமன்றத்தில்   வழக்கைத்   தொடுத்தார்.  இந்த  வழக்கு   16.1.2003-இல்  விசாரணைக்கு  வந்தபோது     கணேஷ்  முன்னிலையாகி   தமக்கு   வழக்குரைஞரை  நியமிக்க   அவகாசம்  தேவை  என்று  விண்ணப்பித்ததை   நீதிமன்றம்   அனுமதித்து   விசாரணையை 25.2.2003-ஆம்  தேதிக்கு   ஒத்திவைத்தது.
 - தொடரும்.
பகுதி 1 - குழப்பத்திற்கு யார் காரணம் 
பகுதி 2 –   உரிமையை பறிக்க அரசியல் சட்ட மாற்றம்
பகுதி 3 - வினையால் விளையப்போகும் கொடுமைகள் 
பகுதி 4 – சுன்னத்து செய்யாத குருதேவ் சிங் ..



  • manggai wrote on 10 August, 2013, 12:39
    இஸ்லாத்தில்  நிறைய  ஓட்டைகள்  இருப்பதால் தான்  ஆண்களுக்கு  அந்த  மதம்  சாதகமாக  இருக்கிறது . ஒரு பெண்  விரக்தியில்  மதம்  மாறலாம்  ஆனால்  அது   கூட  1000 தில்  ஒன்று  தான்  . ஒரு  மதத்தின்  படி  செய்துகொண்ட  திருமணத்தையும்  இந்த  நான்கு  திருமணம்  செய்து கொள்ளும்  மதம்  நன்றாகவே  உபயோகித்து கொள்கிறது . இது  உலகு எங்கும்  வாழும்  இஸ்லாம்  அல்லாதாருக்கு  வாய்த்த  சாபக்கேடு . கடவுள்  பெயரால்  நெறி  தவறி  வாழ்பவர்களுக்கே  இந்த  மதம்  சொந்தம் .
  • SURESH wrote on 10 August, 2013, 14:17
    இதற்கு இந்து  சங்கம் சில விதிமுறைகள் கொண்டு வர   வேண்டும்
    யார் இந்து  விலிருந்து மாறினாலும்.. ,இந்து  சங்கத்திற்கும் அவர்களுடைய பேற்றோர்களுகும்  ஒரு கடிதம் அனுப்ப வேண்டும்  ….இது நடை முறைக்கு கொண்டு வர வேண்டும் …
  • மதாவன்் wrote on 11 August, 2013, 13:12
    இந்து சங்கம் எதுவும் செய்ய இயலாது. டத்தொ பட்டம்    உள்ளவர்கள் வாய் திறக்க மாட்டார்கள். இது தான் நடந்து வருகிறது.  
  • BOTHIVARMAR wrote on 11 August, 2013, 14:37
    நம்மிடையே குறைபாடுகள் இருக்கலாம். அதனைக் காரணம் காட்டி சும்மா இருக்க முடியாது. இந்து சங்கம் இன்னும் வலுவாகவே இருக்கிறது. இன்னும் பத்துமலை தேவஸ்தானம், இந்து மாமன்றம் இன்னும் மற்ற சமய அமைப்புகளுடன் சேர்ந்து இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். மங்கை, இது உலகம் எங்கும் உள்ள பிரச்சனை அல்ல. மலேசியாவில் உள்ள பிரச்சனை மட்டும் தான். இஸ்லாமைப் பற்றி முழுமையாக அறியாத அரைகுறைகளால் நாட்டில் குழப்பம் ஏற்படுகிறது.
  • நேத்ரா wrote on 14 August, 2013, 12:28
    இது இந்துக்கள் மட்டுமன்றி இஸ்லாம் அல்லாதார் அனைவரும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனை. இஸ்லாம் அல்லாதார் ஒருங்கிணைப்பு மன்ற தலைவர் இப்போது இப்பிரச்சனையை தீர்க்கமான முடிவோடு கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. அரசியலமைப்புச்  சட்டத்தின்  121(1A)  ஷரத்து மாமாக் மஹாதீரால் கொண்டுவரப்பட்டபோது சயா சொகோங் சொன்ன அரசியல் தலைகள் இப்போதாவது கொஞசம் பயம் தெளிந்து குரல் கொடுக்கலாமே.. தானாக மாறும் என்று காத்திருக்க முடியாது. எதிர்காலத்தில் பள்ளிக்கு செல்லும் சுப்பன், soffian  ஆக் மாறி வீடு திரும்பவும் கூடும் !!
  • nila wrote on 17 August, 2013, 9:53
    tamilanukkuthan em mathamum sammathamaache…!

No comments:

Post a Comment