Saturday, 28 March 2015

உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..

 நம்மவர் எந்த இடம் போனாலும் தம் பெயரை ஏதோ ஒரு வகையில் பொறித்திருப்போம் அதில் ஒன்று தான் நாம் பார்க்கப் போகும் இக் கோயிலாகும் இதன் பெயர் அங்கோர்வாட் (Angkor Wat ) என்பதாகும்.
                இது கம்போடியாவில் அமைந்துள்ளது. அங்கோர் என்பது தலை நகரம் அல்லது புனித நகரம் என பொருள்படும். கி.பி 12 ம் நூற்றாண்டில் 2 ம் சூரியவர்மனால் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் கோபுரங்கள் நிலத்திலிருந்து ஏறத்தாள 64 மீட்டர் உயரமானவை.  2 ம் சூரியவர்மன் இந்து அரசானாக இருந்தவன்
இருந்தாலும் இந்த விஷ்ணு ஆலயம் அவனாலேயே அமைக்கப்பட்டது. அங்கே பல சிவன் ஆலயங்களும் சேர்த்தே அமைக்கப்பட்டிருக்கிறது.
            இந்திய, ரோமானியா, கிரேக்க, எகிப்திய, மாய நாட்டுக் கட்டடக்கலையை ஒன்று சேர்த்து சலவைக் கல்லால் இது கட்டப்பட்டிருக்கிறது. இது 10 சதுர மைல் அளவிற்கு பெரியது. கைவிடப்பட்டிருந்த நிலையில் இருந்த இதை யுனெஸ்கோ பொறுப்பெடுத்து ஒரு பகுதியை மட்டும் சுற்றலாத்தளமாக மாற்றி பார்வைக்கு வைத்துள்ளது. இந்த ஆலயங்களைக் காண அன்றாடம் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 20 யு.எஸ். டாலர் கட்டணமும் கார் வாடகை, வழிகாட்டிக்கான செலவு ஆகியவையும் சுற்றுப்பயணி வழங்குகிறார்.
     கி.பி. 17 ஆம் நூற்றாண்டு வரை ஆளுமையில் இருந்த பாரம்பரிய மன்னர்களின் வாரிசுகளின் விபரங்கள் அனைத்தும் ஆண்டு வாரியாக குறிப்பிட்டு சியாம் ரீப் அரும் பொருளகத்தில் வைத்திருக்கிறார்கள். அங்கே இதன் தகவல்களை இன்னும் பெற்றுக் கொள்ளலாம். இது விஸ்ணு ஆலயம் என பலராலும் போற்றிப் பகழப்பட்டாலும் உள்ளே சிவனக்கும் பல ஆலயங்கள் இருக்கிறது என்பதை மறக்கக் கூடாது அது மட்டுமல்ல வாசுகி பாம்பால் அமுத எடுப்பதிலிருந்த மகாபாரத முக்கிய காட்சிகள் வரை அனைத்தும் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கிறது.
       இதன் அழிவு எப்படி ஆரம்பமானது என நோக்கினால் இவர்களது நீர் வடிகால் அமைப்பில் விடப்பட்ட வழுக்கள் தான் காரணமாகும் ஆலயங்களில் செலுத்திய கவனத்தை எதிர்கால நோக்கில் செலுத்தவில்லை அதன் விளைவு தான் இதன் அழிவு என கூறப்படுகிறது. ஆற்றை மறித்து நீர்த்தேக்கமாக்கி விவசாயத்தை மேற்கொண்ட இவர்களால் அதன் அணையை கவனத்திலெடுக்கத் தவறி விட்டார்கள். 

இரண்டாம் சூரியவர்மன்(Surya varman II )

ஆட்சிக்காலம்: கி.பி 1113 - 1150

இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம்:

யசோதபுர (Yashodapura)

ஆலயங்களின் அமைப்பு முறை (Style):

ANGKOR WAT

இவன் ஆட்சியில் அமைத்த ஆலயங்கள்:

Angkor Wat, Thom Manon

கைமர் பேரரசில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பேரரசர்களில் ஒருவனாகக் கொள்ளப்படுகின்றான். மிக நீண்ட, பரந்த நிலப்பிரதேசம் இவன் ஆளுகையில் இருந்தது. வடக்கே சம்பா (Champa), கிழக்குக் கடற்பிரதேசம் மேற்கு பகோன் (Pagon)/பர்மா (Burma) தெற்கு மலாய் தீபகற்பம் ஆகியவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கின்றான். இறந்த பின் பரமவிஷ்ணுலோக (Paramavishnuloka) என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றான். சூரிய வர்மனின் வம்சம் பற்றி மேலும் அறிய இங்கேசெல்லுங்கள்.

இது சம்பந்தமாக மேலும் தெரிந்தவர்கள் பகிருங்கள்.. என்ன சுதா சுருக்கமாக சொல்லி விட்டு ஓடுறானே என தப்புக் கணக்கு போட்டால் நான் பொறுப்பில்லை. காரணம் இதெல்லாம் எம் சாதனையில்லை பொறுப்பற்ற மூடத்தனமான செயற்பாட்டுக்கு உதாரணங்கள். யாரோ ஒரு வெளி நாட்டுக்காரன் காதலியொட கூத்தடிக்க கட்டி விட்டுட்டு நாங்கள் இங்க சிறு நீர் கழிக்கக் கூட சொந்த இடமில்லாமல் முக்கி முனகுகிறோம்... மன்னியுங்க நல்ல நாள் அதுவுமா சூடாகக் கூடாது. பிறிதொரு பதிவில் இதை தொடுகிறேன். அப்படியே படத்துக்கு கிழே வாங்க..

நான் அவரை திட்டிக் கொள்ளும் பயிற்சி நாட்களில் எடுத்த படம்.
         இன்று உலகத்திலேயே நான் அதிகம் மதிப்பும், பாசமும், நம்பிக்கையும் கொண்டுள்ள என் உறவினரல்லாத (அப்படிச் சொல்வது தப்புத் தான் அனால் அந்த ஒரு வட்டத்திற்குள் அவரை உள்ளடக்க விரும்பல) ஒருவரின் பிறந்த தினமாகும். இந்த பதிவுலகத்தில் மட்டுமல்ல என் கல்வி, விளையாட்டு, பழக்கவழக்கம் என பலதை மாற்றித் தந்தவர் அவர். அவருடைய ஆரம்ப எடு கோள்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பல பதிவுகள் இருக்கிறது. வழமையாக நான் ஒரு தனிப் போக்குடையவன் யாரென்ன சொன்னாலும் நான் தான் முடிவெடுப்பேன் அனால் இவரும், அக்காவும் சொன்னால் மீள் பரிசோதனை என்ற கருத்துக்கே இடமிருக்காது.
      அவரை பற்றி அதிகம் சொல்லாம் ஆனால் உங்களுக்கு வாசிக்க பொறுமையிருக்காது.எங்கள் நட்பு எப்போதும் அப்பழுக்கற்றது. எதிர் பார்ப்பற்றது 2000 ம் ஆண்டு முதல் முதல் சந்தித்தோம். இப்போதும் என்ன பேசினோம் என என்னால் சொல்ல முடியும் அவராலும் முடியும்.இத்தனைக்கும் நான் சொல்லாமல் விட்டுச் செல்லும் அவருக்கும் எனக்குமுள்ள பெரிய ஒற்றுமை தான் காரணமாக இருக்கலாமோ தெரியல...

       என்னை எப்படி வழி நடத்தினார் என்பதற்கு சின்ன உதாரணம் ஒரு முறை கிரிக்கேட் விளையாடுகையில் (இவர் தான் எனது பயிற்சியாளரும் கூட) எனது காலில் angle joint ல் உடைவு ஏற்பட்டு விட்டது. இதே ஒரு சர்வதேச வீரருக்கு எற்பட்டிருந்தால் குறைந்தது 3 மாத ஓய்வு ஆனால் 3 வாரத்தில் ஒரு இறுதிப் போட்டிக்கு என்னை தயார்ப்படுத்தி அந்த இறுதிப் போட்டியில் அசைக்க முடியாத சாதனைக்கு சொந்தக்காரர் ஆக்கியவர். இறுதி துடுப்பாட்ட வீரரை வைத்து இறுதி பந்துப்பரிமாற்றம் வரை சென்று போட்டியில் இறுதியில் 6 ஓட்டம் பெற்று (SIXER) வெற்றி அதுமட்டுமல்ல 2 கடினப் பிடிகள் உட்பட 4 பிடிகள் இப்போதும் முகபுத்தக (FACE BOOK) நண்பர்கள் அடிக்கடி நினைவுபடுத்துவார்கள். அவர் இன்னும் சிறப்புற வாழ எனதும் என் குடும்பத்தாரதும் வாழ்த்துக்கள்...

குறிப்பு - அவர் பெயர் ஜீவன் இம்மானுவேல் (மதாத்தால் கூட இருவரும் வேறுபட்டவர்கள்) வயது பெரிதாய் இல்லிங்க 39 தான் அவர் வயது. எனக்கு அடிக்கடி மைதானத்தில் சொல்லும் அறிவுரை “சுதா உமக்கு முடிவெடுக்க முடியாத சூழ் நிலைகளில் குழம்பக் கூடாது உமது மனதுக்கு முதல் எது படுகிறதோ அது சரியாகவே இருக்கும் ஏனேன்றால் நீர் தலைமைத்துவத்தில் ஒரு திறமையானவன் இரண்டாம தடவை சிந்தித்தால் தவறான முடிவு தான் வரும்” நான் பல தடவை பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் பரிசோதித்திருக்கிறேன் அவர் சொல்வது உண்மை தான்..





47 COMMENTS:

வணக்கம் சகோதரம், இந்துசமயக் கட்டடக் கலையின் சிறப்பினைப் பதிவு சொல்லுகிறது, இதே காலப் பகுதியில் அதாவது ஆங்கோர்வாட் பகுதியில் சிவன் கோயில் உருவாகிய காலப் பகுதியில் தான் இந்தோனேசியா, பர்மா, தாய்லாந்து முதலிய இடங்களிலும் இந்துக் கோயில்களை நிறுவினார்கள் எம்மன்னர்கள். இதில் குறிப்பிடப் பட வேண்டிய விடயம் என்னவென்றால் உலகில் என்றுமே அழியாத இலகுவில் உருக்குலைந்து விடாத உறுதி மிக்க கட்டிடக் கலைக்குச் சோழர்களே சொந்தக்காரர்கள்.
வரலாற்றுக் காலங்களில் சோழர்காலக் கட்டிடக் கலைக்கு தனி மகத்துவம் இருந்தாலும், பல்லவ வம்சா வழி மன்னனான சூரியவர்மனால் உருவாக்கப்பட்ட இந்தக் கட்டிடக் கலை இற்றை வரை தஞ்சைப் பெருங் கோயில், போன்ற சோழர் கால கட்டிடங்களுக்கு நிகர்த்ததாக சிறப்புடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற் குறிப்பு: பல்லவர்களின் பின்னர் தான் சோழர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். அவர்கள் எல்லோரும் சோழர் கால கட்டிடக் கலையினை பின்பற்றி பிற்காலத்தில் இன்னும் சிறப்புடன் ஆலயங்களை, ஆயிரங்கால் மண்டபங்களை நிறுவினார்கள்.

இந்தச் சோழர்களின் கட்டிடக் கலையினை விட, இந்தியா முதல் இந்தோனேசியா வரையான பகுதிகளை ஆண்ட பெருமையும் இந்த பல்லவ மன்னர்களையே சாரும்.

இன்றும் தாய்லாந்திலும், கம்போடியாவிலும் இந்து சமய வழிபாட்டு முறை அழிவுறாது பின்பற்றப்படுகின்றமையும் சிறப்பம்சமாகும்.

இன்னொரு விடயம் இந்த ஆலயத்தைச் சூழவுள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களும் புத்த வழிபாட்டுத் தலங்களாக விளங்க, இந்த ஆங்கோர்வார்ட் ஆலயம் மட்டும் விஷ்ணு ஆலயமாக விளங்குகின்றது.

இந்தக் கோயிலை கட்டும் ஆரம்ப பணிகளை இரண்டாம் சூரியவர்மன் தொடக்கி வைத்தாலும், ஏழாம் ஜெயவர்மனே தொடர்சியாக இந்த ஆலய கட்டிட வேலைப்பாடுகளை முன்னெடுத்துச் சென்றவனாவான்.
உங்களின் நண்பருக்கு எங்கள் சார்பிலும், பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரம் ஒரு நாளைக்கு கிறிக்கற் ஆடிப் பார்ப்போமா? நான் நெல்லியடிக்கு எங்கடை SLT அணியை கூட்டிக் கொண்டு வாறன்.

Chitra said...
வரலாற்றையும் நட்பையும் பாசத்தையும் - பதிவு முழுவதும் தூவி - சுவையாக சொல்லி இருக்கிறீர்கள்.
பகிர்வுக்கு நன்றி நண்பா
நல்ல பதிவு....


எனது வலைபூவில் இன்று:
இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ

jee said...
இத்தனைக்கும் நான் சொல்லாமல் விட்டுச் செல்லும் அவருக்கும் எனக்குமுள்ள பெரிய ஒற்றுமை தான் காரணமாக இருக்கலாமோ தெரியல..
என்ன சுதா மற்றவா்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லி தப்பும் எண்ணமா......
முதலில் உங்களுடைய பிறந்த நாளுக்கு எமது இனிய வாழ்த்துக்கள்....
அதென்ன மற்றவர்களுக்கு என்று சொன்னால் வாசிக்கிறவங்களுக்க விளங்காத அந்த மற்றவர் நீங்கள் தான் என்று....

akulan said...
பாஸ் எனக்கும் உந்த முடிவேடுகிறதில பெரிய பிரச்சனை இருக்குது..
இனி நானும் முதல் முடிவையே இறுதி முடிவாக எடுக்க போகிறேன்..
நல்ல பதிவு அண்ணா...

வைகை said...
Angkor Wat,///

இதைப்பற்றி ஏற்க்கனவே தெரியும்.. இருந்தாலும் இன்னும் பல புதிய தகவல்கள்.. நன்றி!
புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.தங்கள் நண்பருக்கு வாழ்த்துகள்
நல்ல தகவல் தொகுப்பு.
உங்கள் அன்பு நிறை நண்பருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
என்னது சுதாவுக்கு பிறந்த நாளா? வாழ்த்துக்கள்
என்னது சுதாவுக்கு பிறந்த நாளா? வாழ்த்துக்கள்

யோவ் சுதாவுக்கா? சரியா பாருங்க?
இரண்டு விஷயங்களுமே அருமை! கிட்டத்தட்ட என்னோட பெயரில் இருக்கும் அவருக்கு வாழ்த்துக்கள்

roshaniee said...
பதிவு அருமை
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Lakshmi said...
முதலில் பிறந்ததின வாழ்த்துக்கள். மிகவும் சுவாரசியமான பதிவுக்கு இன்னொரு வாழ்த்துக்கள்.
present and votted
அப்படியே உங்களின் நண்பருக்கு என் வாழ்த்துக்களை சமர்பித்து விடுங்கள்
தொடவேண்டியதொரு விடயத்தை தொட்டிருக்கிறீர்கள்.அத்தோடு உங்கள் வழிகாட்டிக்கும் எங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நண்பருக்கு வாழ்த்துக்கள் ...தமிழக சின்னம் பற்றிய நினைவூட்டலுக்கு நன்றி

ஆயிஷா said...
நல்ல தகவல்.நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மனதுக்கு முதல் எது படுகிறதோ அது சரியாகவே இருக்கும் ஏனேன்றால் நீர் தலைமைத்துவத்தில் ஒரு திறமையானவன்
First opinion is the Best opinion.
உன் பிறந்தநாளுக்கான வாழ்த்து அட்டைகளில் நல்ல வாசகம் தேடித் தேடி ஏமாந்த சலிப்பில் தொடங்கீற்று உனக்கான என் கவிதை....

அண்ணனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.........
நண்பருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

S.Sudharshan said...
நம்மவர்கள் எங்க போனாலும் இந்த அடையாளங்களை விட்டுட்டு போயிட்டாங்க .. அந்த சிறப்பு பற்றி தெரிந்துகொண்டேன் .. உண்மையில் நீங்க கொடுத்து வைத்தனீர்கள் இப்படி ஒரு பயிற்சியாளர் கிடைக்க ... முக்கியமாக யாழில் இருந்து பதிவுலகில் துணையாக அறிவியலை தொட்ட ,வந்த என் சகோதரன் மதிசுதாவிட்க்கு எனது உள்ளம் கனிந்த பிறந்த நாள் நல் வாழ்த்துகள் :)))
அண்ணனுக்கு தங்கை சொல்லும் சிறு வாழ்த்து மடல்..
""பிறந்த நாள் வாழ்த்துக்கள் """
அருமையான பதிவு ..பதிவருக்கு மீண்டும் வாழ்த்துக்கள் ..
அங்கோர்வாட் கோவில் பற்றிய அருமையான தகவல்கள்.நட்பையும் நேயத்தையும் சேர்த்தே பதிவிட்டிருக்கிறீர்கள் மதி.. நன்று

shanmugavel said...
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
எனக்கும் என் நண்பருக்கும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி....
ஜீவன் இம்மானுவேல் அவர்களுக்கு எம் வந்தனங்களும் வணக்கங்களும்... கோவில் பற்றிய வார்த்தைகளை விட, இவரைப்பற்றிய வார்த்தைகள் கோபுரமளவு உயர்ந்து நிற்கிறது.
அவருக்கும், உங்களுக்கும் சிறப்பான வாழ்த்துக்கள்..
ஜீவன் இம்மானுவேல் பற்றி தனிபதிவாகவே எழுதியிருக்கலாம்...
அங்கோர்வாட் பற்றிய தகவல்கள் எனக்கு புதிது, உங்களுக்கும் உங்களது நண்பருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் நண்பா...
//நாங்கள் இங்க சிறு நீர் கழிக்கக் கூட சொந்த இடமில்லாமல் முக்கி முனகுகிறோம்..//

வலிகளை உணர்கிறேன், நல்ல பதிவு.. இன்னொருநாள் தொடருங்கள்.. நன்றி.
"பிறந்த நாள் வாழ்த்துக்கள்”
அப்படியே நண்பருக்கும் வாழ்த்துக்கள்
மதிசுதா..
தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்று செய்திகள். பகிர்வுக்கு நன்றி.
உங்கள் நண்பர் உங்களுக்கு சொன்ன அறிவுரை எங்களுக்கும் சேர்த்துத்தான்.

kovaikkavi said...
தாய்லாந்திலும் கோயில்களை (டபிள்யூ.ஏ.ரி) வாற் என்று கூறுவார்கள். விரைவில் என் தாய்லாந்துப் பயணக் கட்டுரை அப் லோட் பண்ணுவேன் எனது வலையில். உங்களது நான் முன்பு வாசித்துள்ளேன்.தாய்லாந்து விடயங்கள் தேடும் போது, ஆயினும் நன்றி சுதா.

kovaikkavi said...
தாய்லாந்திலும் கோயில்களை (டபிள்யூ.ஏ.ரி) வாற் என்று கூறுவார்கள். விரைவில் என் தாய்லாந்துப் பயணக் கட்டுரை அப் லோட் பண்ணுவேன் எனது வலையில். உங்களது நான் முன்பு வாசித்துள்ளேன்.தாய்லாந்து விடயங்கள் தேடும் போது, ஆயினும் நன்றி சுதா.

kovaikkavi said...
தாய்லாந்திலும் கோயில்களை (டபிள்யூ.ஏ.ரி) வாற் என்று கூறுவார்கள். விரைவில் என் தாய்லாந்துப் பயணக் கட்டுரை அப் லோட் பண்ணுவேன் எனது வலையில். உங்களது நான் முன்பு வாசித்துள்ளேன்.தாய்லாந்து விடயங்கள் தேடும் போது, ஆயினும் நன்றி சுதா.

Pavi said...
நல்ல பதிவு நண்பா

Ashwin-WIN said...
நல்லதொரு பதிவு சுதா.
உங்கள் பாசம் பிரமிக்க வைக்குது. நேச அலைகள் சுனாமியாய் வீச வாழ்த்துக்கள்.

:அஷ்வின் அரங்கம்:
வழக்குத்தொடுப்பேன் - வடிவேல் குமுறல்.
இது குறித்து பத்திரிக்கை ஒன்றீல் முன்பு படித்திருக்கிறேன், தாங்கள் அதற்கும் மேலதிகமான தகவல்களைக் கொடுத்து அசத்தி விட்டீர்கள் நண்பா... பாராட்டுக்கள்!
வணக்கம் சுதா

இரண்டாம் சூரிய வர்மன் குறித்த தகவல்கள் வரிக்கு வரி அப்படியே என் 2008 ஆம் ஆண்டு பதிவில் இருப்பதும் அதிசயம்

http://ulaathal.blogspot.com/2008/04/khmer-empire_27.html
சூப்பர் பதிவு மக்கா கலக்கல்...

Ramani said...
முழுமையான தகவல்களுடன்
ஒரு நிறைவான பதிவு
ஒரு நல்ல பதிவை வழங்க தாங்கள்
எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு
மனங்கனிந்த பாராட்டுக்கள்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

Anuthinan S said...
//“சுதா உமக்கு முடிவெடுக்க முடியாத சூழ் நிலைகளில் குழம்பக் கூடாது உமது மனதுக்கு முதல் எது படுகிறதோ அது சரியாகவே இருக்கும் ஏனேன்றால் நீர் தலைமைத்துவத்தில் ஒரு திறமையானவன் இரண்டாம தடவை சிந்தித்தால் தவறான முடிவு தான் வரும்”//

உண்மை உண்மை
கூடுதலாக இன்னொரு செய்தி கம்போடிய நாட்டின் அரச சின்னமாகவும் இந்த கோயில் இருக்கிறது.. ஹஜ் பயணம் செய்ய ஹிந்துக்களின் வரிப்பணத்தில் வருடத்திற்கு 6000 கோடிகளை அள்ளி இறைக்கும் இந்த முட்டள் மத்திய அரசு இந்த கோயிலை புனரமைக்க 1000 கோடி கொடுத்திருக்கலாம்.........

No comments:

Post a Comment