சவுதி அரேபியாவில் இஸ்லாமிய மதத்தின் ஷரியத் சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி அங்கு பெண்கள் வாகனம் ஓட்ட, உறவினர்கள் அல்லாத மற்ற ஆண்களுடன் வெளியே செல்ல, சுயமாக மாப்பிள்ளையை தேர்வு செய்து திருமணம் செய்துகொள்வது, உயர் படிப்புகளை மேற்கொள்வது, சில அறுவை சிகிச்சைகள் செய்துகொள்வது போன்றவற்றில் கடுமையான கட்டுப்பாடு பின்பற்றப்படுகிறது.சமீப காலமாக பெண்கள் வாகனம் ஓட்டக்கூடாது என்ற தடைக்கு எதிராக சில பெண்கள் அமைப்பினர் போராட்டங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment