Thursday, 5 March 2015

பாரதியின் ஆன்மீக நாத்திகம்

ஐந்து வருடங்களின் முன்னர் “குமுதம்” வார இதழின் அரசு கேள்வி - பதில் பகுதியில் ஒரு கேள்வி, “ உண்மையில் பாரதி ஒரு நாத்திகரா” என்பதாக கேட்கபட்டிருந்தது. எல்லாம்வல்ல ஒரு இறைவன் இயக்க- தான் தாம் ஒரு கருவியாக செயற்படுவது அல்லாமல், ‘ நான் கிருத யுகம் படைக்க நீ ஆமென் என்று வழிமொழிந்து இரும்’ என்பதுட்பட மக்கள் செயற்பாட்டுக்கான சக்தியாக மட்டுப்படுத்தி கடவுளைக்காட்டும் பாரதி வரிகளை எடுத்துக் காட்டிய பின்னர் - இப்படியெல்லாம் பார்க்கும் போது பாரதியை ஒரு நாத்திகராகவே காண முடிகிறது” என்பதாக அரசின் பதில் அமைந்திருந்தது. தேசிய விடுதலை- சாதியொழிப்பு- பெண்விடுதலை- வறுமைத் தகர்ப்பு – சமத்துவ சமூக படைப்பு என்பவற்றுக்காக மக்களைச் கிளர்ச்சிக் கொள்ள உணர்வூட்டும் படைப்புகளையும் செய்தி வெளிப்பாடுகளையும் எழுதுவதையே தனது தொழில் துறையாகக் கொண்டிருந்தார் பாரதி. கடவுளின் கருவியாக மனிதனை- மனுசியைப் பார்ப்பதை விட்டொழித்து ,
மனித சக்தியின் கருவியாக கடவுள் உணர்வை மடைமாற்றிவிடும் அவரது பண்பு அவரை முழுமையாக ஆன்மீகவாதியாக தரிசிக்க இடம் தரவில்லை என்பதால் அரசு பதிலில் பாரதி நாத்திகவாதியாகக் காட்டப்படுகிறார்.
மாறாகப் பொதுவழக்கில் பாரதி முழு நிறைவான ஆன்மீகவாதியாகவே பார்க்கப்படுகின்றார் என்பதை அறிவோம். “பாரதி கவிதைகள்” தொகுப்புகளை ஆன்மீகப்பாடல்கள்- தேசியப்பாடல்கள் என்பதாகப் பகுத்துப் பல பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன: அவற்றில் ஆன்மீகப் பாடல்களே அதிகமாய் இருக்கும். “பாரதி ஆன்மீக கவிஞரா- தேசியக் கவிஞரா” என்ற பட்டி மன்றங்கள் தொடர்ந்தப்படியுள்ளன. பாரதியின் தேசியப் பாடல்கள் காலங்கடந்தனவாகிவிட்டன, ஆன்மீக கவிதைகள் வாயிலாக இன்னமும் அவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார் எனும் தீர்ப்புகளையும் கேட்டிருக்கின்றோம். பாரதியை ஒரு ஆன்மீகவாதியாகவே தரிசிக்கும் போக்கே மேலோங்கி உள்ளது. இவ்வாறு பாரதியை ஆன்மீகவாதி அல்லது நாத்திகவாதி என எதிர்முனைப்படுத்தி விவாதிக்க உரிய கருத்து மோதல்களுக்கான களங்கள் பாரதியின் எழுத்துக்களில் காணப்படுவனவே. உண்மையில் அவர் இந்த இரு முனைகளில் எதன் பக்கத்திலும் இல்லை; அவர் ஒரு ஆன்மீக நாத்திகர்.
உள்ளிருந்து உணர்த்தும் கடவுள் சித்ததால் இயங்குகின்றேன் என்ற ஆன்மீக வாதியாக காந்தியை அறிவோம். கடவுள் நம்பிக்கையை விட்டொழித்தால் மட்டும் உய்வுண்டு என்று செயற்பட்ட நாத்திகவாதியான பெரியாரை அறிவோம். இரண்டும் இல்லாமல்- அல்லது இரண்டும் கலந்தாக, அதென்ன ஆன்மீக நாத்திகம்?
இது பாரதி உலகுக்கு அளித்த மற்றொரு புதுமை. தனது சுயம் அறியாத சிறு பராயத்தில் தனது பிராமணச் குடும்ப வளர்ப்பு முறைக்கான ஆன்மீகக் குணாம்சம் பாரதியிடம் விதைக்கப்பட்டிருந்தது. தமிழகத்தென்கோடியில் தந்தையின் வற்புறுத்தலுக்காக வேண்டா வெறுப்புடன் ஆங்கிலக் கல்வியைப்பெற்றவர், இளைஞராக முகிழ்க்கும் காலத்தில் இந்திய வடபுலமும் ஆன்மீக கொடிமுடியாக காசியில் கற்பதற்கு அனுப்பபட்டார். திருநெல்வேலியில் கல்வி பயிலும் சிறுவனாக இருந்த போதே எட்டயப்புரம் மன்னர் அவையில் ”பாரதி” பட்டம் பெறும் வகையில் செய்யுள் ஆக்கும் திறனை வெளிப்படுத்தியவர்; காசியில் கவித்துவ தேடலும் வாழ்வியல் தேடலும் ஆன்மீக உலகின் போலித் தனங்களையே வெளிப்படுத்தின.
பின்னாலே பாரதி எனும் கவிஞராக பரிணமிப்பை எட்டும் சமூக நோக்கு முளைவிடும்  காசி வாழ்வில் அவர் கண்ட ஒடுக்கப்பட்ட சாதி பிரிவினர் பாரதி அழைக்கப்பட்டமையே தன்னை அவர் சுப்பிரமணிய பாரதியாக அடையாளப்படுத்த வழிகோலியது. அந்தத் தீண்டாமைக்கொடுமைக்கு ஆட்பட்டவர்களது அடையாளமே, பாரதி என்றும் பூண்டிருந்த கறுப்புக்கோட்டும் முண்டாசும். பிராமணத் தன்னடையாளம் காத்து ஒடுக்கப்பட்டவர் கோலம்பூண்ட பாரதி ஆன்மீகவாதப் போலிதனங்களுக்கு எதிராக தன்னை நாத்திகவாதியாக வெளிப்படுத்திக் கொண்டார். நாத்திகரான ஷெல்லியின் பால் ஈடுபாடு கொண்டு ஷெல்லிதாஸன் எனத் தன்னை வெளிப்படுத்தினார். தமிழ்நாடு திரும்பி, இந்திய சுதந்திரப் போராட்ட போராளியாகத் மக்களைக் கிளந்தெழத் தூண்டும் பணியைக் கையேற்ற போது மக்களின் உணர்வுகள் -நம்பிக்கைகள் ஆகியவற்றிலிருந்து மக்களுக்கான கருத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று ஏற்பட்ட நடைமுறைப் பிரச்சனையிலிருந்தே பாரதி புதிய கருத்தியல் நிலைகு வளர நிர்பந்திக்கப்பட்டார். தொடக்க காலத்தில் சென்னை பிரசிடென்சி கொலஜ்ஜில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது நீங்கள் நம்பும் கடவுள்கள் நன்மைக்காக செயற்பட வழிப்படுத்தியவர்களே என்பதாகப் பேசியிருப்பதைக் காணமுடியும். மற்றவர்கள் நம்பும் கடவுள் எனத் தன்னைப் வேறாக்கிப் பார்க்கும் விடலைப்பருவ உணர்விலிருந்து விரைவிலேயே பாரதி விடுப்பட்டுக் கொண்டார். இந்த வேறுப்பாடு மக்கள் மொழியிலிருந்து அன்னியப்படும் தன்னையை ஏற்படுத்தும். விடுதலைக்காக மக்கள் போராட்டத்திற்கு மக்களை அணித் திரட்ட வேண்டுமாயின் மக்களின் மொழியிலேயே பேச வேண்டும் எனும்போது மக்கள் நம்பும் வரையிலேயே கடவைள முன்னிறுத்திப் பேசுகிற அவசியத்தையுடைய பண்பை அடைந்த போது ஆன்மீக நாத்திகம் எனும் புதிய நிலை சாத்தியமானது.
ஐரோப்பியச் சிந்தனையில் எட்டப்பட்ட நாத்திகவாதம் இந்தியாவில் அறிமுகமானபோது பாரதியும் அதனை ஏற்றார். தத்துவத் தேடலில் ஆர்வம் கொண்ட அவருக்கு நாத்திகம் இலகுவில் ஏற்கத்தக்கதாக இருந்தது. அவர் ஸ்மார்த்த பிராமணாத் பிரிவைச் சேர்ந்தவர். அப்பிரிவினர்சைவம்- வைணவம் போல ஏதாயினும் கடவுளை முன்னிறுத்துவதாயன்றி “ நானே பிரமம்” எனக் கூறும் அத்வைதத்தை நம்புகின்றவர்கள். இந்து சமயத்தின் 6 தத்துவங்களில் 4 பிரிவுகள் கடவுளை ஏற்பனவல்ல. அதிலும் மீமாம்சை முற்றிலும் கிரியைகளையுடையனவே அல்லாமல் கடவுள் பற்றி அலட்டிக்கொள்வதில்லை. ஸ்மார்த்தப் பிரிவினர் இத்தகைய மீமாம்சையில் நாட்டமுள்ளவர். பொதுவாகவே பிராமணர்கள் ஓதும் வேதம் இயற்கை முழுமையையும் கடவுளர்களாய்க் காண்பதே அல்லாமல் இயற்கைக்கு அப்பாலான ஒரு கடவுளை எற்பதில்லை.
வேதாந்தம் அப்பாலைத் தத்துவத்தைத் தேடும் போது பிராமண மேலாண்மை  ஆட்டங்கண்டு சத்திரியர்கள் ஆன்மீகத்தேடலில் முன்னிலை பெற்றார்கள் என்பது கவனிப்புக்குரியது. அவ்வாறு கண்டறியப்பட்ட கடவுளையும் பிராமணர்கள் தமதாக்கினர் என்பது வேறுவிடயம். சத்தியர்களும் ஆன்மீகத் தலைமையை அவர்களிடமே விட்டுவிட்டு ஆட்சித் தொழிலில் முன்னேறினர் என்பதறிவோம். இவ்வகையிலான பிரபஞ்சத்துக்கு அப்பால் உள்ளதாக  நம்பபட்ட கடவுளை மறுத்த பாரதி, இயற்கை- பிரபஞ்சம் முழுமையையும் வழிப்படுவதோடு, மனிதர்கள் தமக்குள் உறையும் பிரமத்தை  உணர்ந்து பூரணத்துவம் ஏய்தவது குறித்தும் பேசுவார். இந்தியச் சமயங்கள் அப்பாலைத் தத்துவத்துக்கான ஒரு முழுமுதற்கடவுளை(பரம் பொருள்) பற்றி பேசிய போதும் இனமரபுகளுக்கான இயற்கை வழிபாடு உட்பட பல கடவுளர்களையும் ஏற்று மதிப்பதை ஒழித்துக்கட்டவில்லை. கிறிஸ்தவ மத போதகர்களுடனான விவாதங்களில் நாவலர் போன்ற சைவப்பிசாரகர்கள் பதி-சிவன் என்பதை ஒரு கடவுட் கோட்பாட்டுக்கு உட்பட்தாகக் காட்ட முனைந்த போதிலும் பல கடவுளர்களில் மேம்பட்ட பரம்பொருளாகவே பதி-சிவன் அமைந்துள்ளமை தெளிவு.
யூத மதம், கிறிதவம், இஸ்லாம், போன்ற செமிட்டி சமயங்கள் முன்னிறுத்தும் ஒரு கடவள் என்பதிலிருந்து இந்து சமயத்தின் பரம் பொருள் ற்றிலும் வேறானதாகும். ஒரு இறைவன் மட்டும் வழிப்படத் தக்கவன் எனக் கூறும் இஸ்லாம் மட்டுமல்ல கி.மு. 1500 இலேயே யெஹோவா எனும் ஒரு கடவுளை முன்னிறுத்திய யூத மதமே பலவகைத் தேவதைகளையும் வழிப்படுவதை நிராகரித்ததிலிருந்தது. பிதா-சுதன்- பரிசுத்த ஆவி எனும் முக்கடவுட் கோட்பாட்டை முன்னிறுத்தும் கிறிதவமும் ஏனைய தேவதைகளை வழிபடக் கூடாது என்றே வலியுறத்தும். இவ்விரு மரபுகளின் தொடர்ச்சியான இஸ்லாம், இன மரபுக் குழுக்கள் பிளவுற்று ஒன்றுடன் ஒன்று மோதிய அரப சமூகத்தில் அவற்றுக்கான இயற்றை வழிபாட்டு கடவுளர்களையும் அவற்றக்கான சிலைகளையும் முற்றாக ஒழித்துக்கட்டி, முஸ்லிம் எனும் ஒரே சமூகமாக ஒன்றுப்படுத்தியிருந்தது. வணிக எழுச்சி ஏற்படுத்தித்தந்த இச்சாத்தியம் பல்வகை வேறுப்பாடுகளைக் களைந்து முஸ்லிம் எனும் முற்பட்ட ஓர் ‘தேசிய உணர்வு’ கொள்ள வழிப்படத்தியிருந்தது என்பது கவனிப்புக்குரியது.
மாறாக, இன மரபுக்குழப் பண்பு தொடரும் இந்தியச் சமூகங்களில் ஏற்றத்தாழ்வு அதிகாரச் சமூக படிமுறை நீடிக்கும் காரணத்தால் ஆதிக்கச் சாதியின் மேலாதிக்கத்தைப் பதி அல்லது சிவன்- விஷ்னு- சக்தி பொன்ற பரம்பொருள் பெற்ற போதிலும் ஏனைய இன மரபுக் குழப் பண்பு நீடிக்கும் சாதிகளது கடவுளர்கள் ஒழித்துக்கட்ட அவசியமற்றதானது. அந்தவகையில் பரம்பொருளும் பல கடவுளர்களும் சமாதான சகவாழ்வு நடாத்தியாக வேண்டிய நிர்பந்தம் உடையதாக இந்துச் சமூகம் அமைந்திருந்ததுஃ அமைந்துள்ளது. ஆதிக்கச் சாதியின் பரம் பொருளுக்கு அனைவரும் கட்டுப்பட்டவர்களாயினம், இடைநிலைச் சாதியினர் கூட தமது கோயில்களில் அப்பரம்பொருளைப் பிரதிஷ்டை செய்ய முடியாது. தத்தமது சாதிக் கடவுளருக்கான கோயில்களைக் அகாண்டிருக்க கூடிய இடைச்சாதியினர் ஆதிக்க சாதியினரது கோயிலுக்குள் செல்ல முடியும். ஒடுக்கப்பட்ட சாதியினர் அவ்வாறு கோயிலினுள் செல்ல முடியாது தவிர்க்கப்பட்டுள்ளனர். இவ்வகையான சாதிச்சமூகத்தில் பல கடவுளர் நம்பிக்கையை எப்படி தகர்த்திருக்க முடியும்.
பிராமணரும் வெள்ளாளரும் எனும் அதிக்கச் சாதிகளது சிவனை நூற்றாண்டுகளின் முன் தீண்டாமைக்குட்பட்டிருந்த நாடார் சமூகத்தினருக்காக நாராயணகுரு பிரதிஷ்டை செய்து வழிப்பட்டபோது ஆதிக்க சாதியினர் கண்டித்தனர். தடுக்க முயன்றனர்; அதனை நிராகரித்து சிவ வழிப்பாட்டை மேற்கொண்ட நாராயணகுரு, “நீங்கள் உங்களது வழிபடுவது போல, நான் எனது சாதிச் சிவனைப் பிரதிஷ்டை செய்துள்ளேன்” எனக் கூறி ஒடுக்கப்பட்டோருக்கான ஒரு சிவனை முன்னிறுத்தினார். தீண்டாமையை ஒழித்து சமூக அசைவியக்கம் பெற்று வர்ண உயர்வை நாடார்கள் பெறுவதில் நாடார்களின் பல்வேறு வடிவப் போராட்டங்களில் நாராயண குருவின் இபபண்பாட்டு புரட்சியும் ஏற்ற பங்களிப்பை நல்கியிருந்தது. இது குறித்து பாரதி எழுதினார். துவிர, பாரதி அதிக்கச் சாதிப் பெருங்கடவுளர்கள் மீது பாடல் எதனையும் புனையவில்லை. போர்குணம் மிக்க உழைக்கும் மக்கள் வழிபாட்டுக்குரிய காளி, திரௌபதி, கண்ணன், கணபதி என்ற கடவுளர்களே அவரது பாடலுக்குரியோராய் இருந்துள்ளனர்.
 பாரதியை ஓர் ஆன்மீகவாதியாக மயங்குவதற்கு காரணமாக அமையும் உச்சமான ஆதாரமாய்த் திகழ்வது ருசியப்புரட்சியை ”மாகாளி கடைக்கண் வைத்தாள்,ஆகாவென்றெழுந்ததுப்பார் கிருதயுகம்” எனப்பாடியதில் காண்பர். கிருதயுகட் உணர்த்தும் சமத்துவம் உருவாமும் சமூக மாற்றம் கடவுள் சித்தம் என பாரதி கருதினாரா? கடவுள் இனி சமத்துவமே சாத்தியம்; என கருதிவிட்டார் என்பதாக பாரதி எழுதியது உண்மைதான். அதேவேளை கடவுளே அதைப்படைத்தருளுவார், அவரைத்தொழுது பக்தி விசுவாசத்துடன் பூசைபுனஸ்காரங்களில் மூழ்கியிருங்கள் என்று அவர் கூறிவிடவில்லை. சமத்துவத்தைப் படைக்கும் காலம் கடவுள் வகுத்த விதி ஆகிவிட்டதால் கொடுங்கோன்மைக்கு எதிராக கிழர்ந்தெழந்தது போராடுவோம் என்றே முழக்கம் செய்தார்.  சென்ற நூற்றாண்டின் ஏழாம் ஆண்டில் சுதந்திரப் போராட்டக் கிளர்ச்சி தொடக்கம் பெற்றபோது விஷ்ணுவின் பத்தாவது அவதாரம் தொற்றம் பெற்றதாக எழுதியவர் பாரதி. சுதேசியமே அவரது மந்திரம் - பஹிஸ்காரம் அவரது ஆயுதமம் எனக் கூறி, அவதாரக் கோட்பாட்டை மக்கள் உணர்வாகக் காட்டி பகிஸ்காரப் போரட்டத்தை முன்னிருத்திய அறவழிப்போராட்டத்தை பிரசாரப்படுதத்தினார். ஒரு தசாப்தத்தின் பின்னர், கிளர்ந்தெழுந்த ருசிய மக்கள்; சமத்துவம் படைக்கும் மற்றபடியை வெற்றிகண்டபோது மாகாளி அங்கே  கடைக்கண் வைத்தாள் எனப் புளகாங்கிதம் அடைந்தார்.
ஒரு வருடத்தின் பெயர் பின்னர் சோவியத்ருஷ்யாவிலும் கவிஞரொருவர் இதேபோன்ற பாடலை வடித்தார். அவர் பாரதியின் கவிதையைப் பார்த்திராதப்போதிலும் ஓரளவு பாரதியின் கருத்தியல் அவரிடம் இருந்ததன் வெளிப்பாடாக அந்த கவிதை அமைந்திருந்தது. அலெக்சாண்டர் பிளாக் என்பவரது கவிiதியை சோ.பத்மநாதன் தமிழாக்கித்தந்துள்ளார்;. ருசியப் புரட்சியை சித்தரிக்கும் அது, படையெழுச்சியின் முன்;னணியில் சிலுவைப் போன்ற ”ஒன்றுடன் யாரோ” ஒருவர் அடையாளம் தெரியாதவர் போய்க்கொண்டிருப்பதாக இடையிடையே கூறியவாறு கவிதை வளர்ந்து செல்லும். கவிதை முடிவில், முன்னால் சென்றவர் ஜேசுகிருஸ்து என அடையாளம் காணப்பட்டிருப்பார்.
அந்த கவிதையை லெனின் ஏற்கவில்லை. மக்கள் பங்கேற்பில் சாத்தியப்பட்ட போராட்ட வெற்றியை இறை அனுகிரகம் எனக்காட்ட முயல்கிறதா கவிதை என சந்தேகம் எழுப்பினார். பிறகென்ன, கட்சி அதை தடைசெய்தது. ஆயினும் அக்கவிஞர் சோசலிச மாற்றியமைத்தலைப் பற்றுதியுடன் ஆதரித்து உழைத்து வந்தார். ஐம்பதுகளில் தென்னமெரிக்காவில் விடுதலை இறையியல் கம்யூனிஷ்ட்டுகளுடன் இணக்கமாகப் போராடத்தொடங்கியபோது சோவியத்ருஷ்யாவில் அந்தக் கவிதை மீதான தடை நீக்கப்பட்டது.
 மாகாளியோ, ஜேசுவோப் ருசியப்புரட்சியின்பால் நாட்டங்கொள்வதாகக் காட்டுவதால் மக்கள் பங்கேற்பு மறுக்கப்படுவதாய் ஆகாது. மறாக, ஏகாதிபதியவாதிகள் முன்னிருத்திய பொய்ப்பிரசாரமான - கம்யூனிஸ்ட்டுகள் கோயில்களை இடித்துத் தள்ளிக் கடவுளுக்கு விரோதம் செய்வர் என்பதை முறியடிப்பதாக இக்கவிதைகள் அமைவன. கடவுளை நம்பும் மக்களிடம், இந்த சமூக மாற்றப் புரட்சி கடவுள் விருப்புக்குரியதெனக் காட்டி அவர்களை ஆர்வத்தோடு பங்கேற்க தூண்டுவதாக அமைவன ருஷ்யாவுக்கு வெளியே ருஷ்யப் புரட்சியை ஆதரித்து எழுதப்பட்ட முதல் கவிதை பாரதியின் ~~புதிய ருஷ்யா|| எனும் இப்பாடல் என்பதை சோவியத் அறிஞர்கள் விதந்த கூறியுள்ளனர். இது எப்படி சாத்தியமானது?
ருஷ்யப் புரட்சிக்கான ஒத்திகையாக ஒரு தசாப்தத்தின் முன்னர் 1906 இல் முதல் புரட்சியெழுச்சி சாத்தியமானபோதே, அது குறித்த விபரங்களை பாரதி தனது பத்திரிக்கை எழுத்துகளில் வடித்துத்துத் தந்துள்ளார். பல மதங்களாக நீடித்த அந்த மக்கள் போராட்டத்தின் ஒவ்வொரு வளர்ச்சிகளையும், இருதியாக அது ஒதுக்கப்படட்டதையுமம் பாரதி எழுதியுள்ளார். அவ்வாறே ஒக்டோபர் புரச்சியின் வளர்திசையையும், சோஷலி;ஸத்தாயகம் எதிர்நோக்கிய நெருக்கடிகளையும், வெற்றிகரமான சாதனைகளையும் பற்றியெல்லாம் அவ்வப்போது அவர் எழுதிவந்துள்ளார்.அந்த வகையில், இடைவிடாத மக்களின் தியாக ”அருவடை அப்புரட்சி என்பதில் வேறெவலையும் விடப் பாரதிக்கு தெளிவிருந்தது. கவியுள்ளம் புரிந்தோருக்கு மாகாளி மக்கள் எழுச்சியின் படிமம் என்பது விளக்கமுறும்;.   உலக விவகாரங்களை உடனுக்குடன் விரிவாக வழங்கும் துக்கியத்துவம் குறித்து முழுமையான உணர்வு பாரதியிடம் இருந்தது.”இங்கிலாந்தின் செய்திகளைப்பற்றி நமது ”மித்திரன்| பத்திரிக்கை படிப்போருக்கு அடிக்கடி  தெளிவான குறிப்புகளெழுதுவதாக எண்ணங்கொண்டிருக்கிறேன். இங்கிலாந்தைப் பற்றிமாத்திரமன்று. பொதுவாகவே அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் முதலிய “நாகரிக| நாடுகளைக் குறித்;தும் விசேஷமாக இங்கிலாந்தைக் குறித்தும் இக்காலத்துத் தமிழ் மக்களுக்கு அதிகப்; பழக்கமேற்படுத்தவேண்டுமென்பது ”என் விருப்பம்” என 1920.12.29 அன்று ”சுதேச மித்திரன்” பத்திரிக்கையில் பாரதி எழுதியிருப்பதைக் காணலாம். உலக நாடுகளின் சமகால வரலாற்றுச் செல்நெறி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் தனது தனித்துவம் பற்றி அவர் தொடரந்து சொல்வார்: ~~இந்த அம்சத்தில் தமிழ்நாட்டிலுள்ள தமிழ்ப் பத்திரிகைகள் மட்டுமன்றி, இந்தியா முழுமையிலுமே தேச பாஷைகளிலும் ஆங்கிலத்திலும் பிரசுரம் செய்யப்படும் பத்திரிகை அனைத்துமே போதிய ஜாhக்ரதை செலுத்தவில்லையென்பது என் அபிப்பிராயம். மற்றப்; பகுதிகளின் நிலைமை எவ்வாறாயினும், தமிழ் நாடு ஸம்பந்தப்பட்டவரை ”இக்குறையை இயன்றமட்டில் நீக்க முயற்சி செய்தேன். இதனால்; பல வகைகளிலே பல துறைகளிலே நலமுண்டாகுமென்று உருதியாக நம்புகிறேன்||(கால வரிசைப்படுத்தப்பட்;ட பாரதி படைப்புகள்-12.ப.195)  இவ்வகையில் உலக விவகாரங்களை வெறும் கடவுள் செயற்பாடாக கருத்துமுதல்வாத நிலைநின்று பார்த்து வெளிப்படுத்த பாரதி முயன்றதில்லை. இயங்கியல்; -பொருன் முதல் வாதிக்குறிய தெளிந்த புரிதலுடன் விளக்கம் பெற்றுவிடுவதனாலேயே துணிவுடன் அவரால் உலகபோக்கை உடனுக்குடன் கண்டு காட்ட இயலுமாயிருந்தது. எந்தவொரு விவகாரத்தையும் அதறிகுறிய அடிமுடிகளைத் தேடிக்கண்டறிந்து வரலாற்றுப் பொருள் முதல்வாத அணுகுமுறையில் விளக்குவதற்கு அலரால் இயலுமாயிற்று. அத்தகைய பாரதியின் பார்வைக்கு எடுத்துக்காட்டாக அமைவது ”விஜயா” (மறுபிரசுரம் ~இந்தியா|) பத்திரிக்கையில் ஒக்டோபர் 1909 இல் அவர் எழுதிய ”மொகலாய ராஜ்சியத்தின் அழிவு” எனும் கட்டுரைஆகும்;.
ஆக, பாரதியின் கடவுள் அவரைக் கருத்து முதல்வாதப் பார்வைக்குறியவரர்க்கிவிடவில்லை. கடவுள் சித்தப்படியே அணுவும் இயங்கும் என்பதாயில்லாமல், எதற்குமான இயங்காற்றலுக்குறிய காரண காரியத்தை கண்டறிந்து, அச்செயல் கடவுளால் சாத்தியப்படுவதாக அமைதி காணாது, தனக்குறிய பணி என கருதித் திடமனதோடு செயற்பட வலியுறுத்தி, கால சக்தியெனும் கடவுள் விருப்பமும் அதுவே எனக் காட்டும் அளவிலேயே பாரதியின் இறை தரிசனம் எல்லைப்படுகிறது.
அத்தவகையில் ஆன்மீக சொல்லாடலில் நாத்திகம் வெளிப்படக் காண்கிறோம்.இந்த ஆன்மீகம் - நாத்திகம் இயங்கியல் - பொருள் முதல்வாத உலக நோக்கை அவரிடம் சாத்தியப்படுத்தியிருந்தது, இவ்வகையில், கடவுள் பற்றியப் பேசுவதனாலேயே ஒருவர் கருத்துமுதல்வாதி ஆகிவிடுவதில்லை என்பதைப் போலவே, கடவுளை மறுக்கும் நாத்திகவாதம் பொருள்முதல் வாதம் ஆகிவிடுவதில்லை என்பதையும் காண்போம். பெரியார் , சமூகமாற்றச் செயற்பாட்டை சாத்தியமாக்குவதற்கு  கடவுள் நம்பிகையை விட்டொழிப்பதே முன்னிபந்தனை என வழியுறுத்துவார் : வறுமைக்கு ஆட்பட்டு கையறு நிலையில் கடவுளிடம் தஞ்சம் புகும் உழைப்பாளியின் உழைப்பு அபகரிக்கப்படுவதைத் தகர்த்து, தனக்கே அதன் பயன்கள் வந்தடைய ஏற்ற சமூக மாற்றத்தை சாத்தியமாக்கியதாலேயே கடவுளை நம்புவதை விட்டொழிக்க வழிப்படுத்த இயலும். மாறாக, கடவுள் என்ற கருத்தை விட்டொழித்தால் சமூக மாற்றம் இலகுவாகிவிட போவதில்லை. இது பெரியாரின் நாத்திகவாத நிலைப்பட்ட கருத்துமுதல்வாதச் சிந்தனை. மார்க்சியர்களிடம் நார்த்திக நிலைபாடு இருந்த போதிலும், கடவுளை ஒழித்துக் கட்டுவதே முதற் பணி எனும் நாத்திகவாதம் இருப்பதில்லை. பாரதியிடம் ஆன்மீகம் இருந்த அதே வேளை கடவுள் சித்தம் அனைத்தும் இல்லாமதைப் போன்னதே மார்க்சியர்களின் நாத்திகம் நாத்திக வாதமாய் இல்லை என்பதும். அதேவேளை பாரதியிடம் ஆன்மீக நார்த்திகம் சாத்தியப்பட்டதைப் போல மார்க்சியர்களிடம் நாத்திக ஆன்மீகம் விருத்தியுற்றிருக்க அவசியம் இருந்தும் அத்தகைய கருத்தியல் வளர்ச்சியை மார்க்சியர்கள் எட்டியிருக்கவில்லை என்பது கவனிப்புக்குரியது. அந்த வகையில் மார்க்சியர் பலரது பொருள் முதல் வாதம் இயங்கியல் தன்மையற்று  வறட்டுத்தனமாய் அமைந்திருந்தது. ஆத்தகைய பல மார்க்சியகளது கருத்தியலை விடவும், பாரதியினது கருத்தியல் கூடுதல் சரியானதாக அமைந்திருந்தது என்பது தெளிவு.
இத்தகைய பாரதியினுடைய உள்ளத்தின் ஒளி இந்தியத் தேசியம் பிராமணத் தேசியமாக அமைவதற்கு எதிராக அவரை வழிநடத்தியது. இந்திய சுதந்திரம் வெள்ளைப் பறங்கியனரை துரை எனச் சொல்லும் அடிமைத்தனத்தைத் தகப்பதாய் மட்டுமன்றி பார்ப்பானை ஐயரென்று கூறும் சமூக – பண்பாட்டு ஏகாதிபத்தியதை ஒழித்துக் கட்டுவதாகவும் அமைய வேண்டும் என வலியுறுத்தினார். பிராமணத் தேசியத்தை நிராகரித்த பெரியார் எதிர்த்தேசியத்தை முன்னுறுத்தி ஏகாதிபத்தியம் முதல் எதிரி என்பதைக் காணத்தவறும் பாதிப்புடையவராக இருந்துள்ளார். அவ்வாறே மார்க்சியர்கள் வர்க்கத்தை மட்டும் நோக்கிய தோற்ற மயக்கத்தில் பிராமணத் தேசியத்தின் சமூக – பண்பாட்டு ஏகாதிபத்திய அம்சத்தைக் காணத்தவறினர்@ இதன் பேறாக இந்திய சுதந்திரம் பிராமணத் தேசியமாக அமைந்தது குறித்த உணர்வற்றவர்களாயிருந்தனர். இது குறித்து இன்றுவரை மார்க்சிய அமைப்புகள் விவாதித்ததில்லை என்பதால் இன்னமும் குறைப்பட்ட நிலைப்பாட்டுகளுடனே உள்ளன. இத்தத்துவத் தேடல்களில் பாரதி இறங்காத போதிலும், அவரது நிலைப்பாடு மார்க்சியர்களை விடவும் சரியாக அமைவதற்கு ஏற்றதாக அவரது நாத்திகம் அவரை வழிப்படுத்தியுள்ளது.
அனுப்பியவர்: லெனின் மதிவானம் leninmathivanam@gmail.com

No comments:

Post a Comment