காதல் என்பது மனிதனின் காலணி போல என நான் சொன்னால் யாரும் மறுக்கமாட்டீர்கள் எனத் தெரியும் காரணம் அது இல்லாமல் போனால் காட்டான் என்கிறார்கள் தலையில் வைத்தக் கொண்டு போனால் பைத்தியம் என்கிறார்கள்.
காதல் என்ற கதையை எடுத்தாலே எல்லோருக்கும் காதல் சின்னமாய் நினைவில் வருவது தாஜ்மகால் தான் இதை ஷாஜகான் மும்தாஜ் ற்காக கட்டப்பட்டதாக எல்லோரும் சொன்னாலும் இதன் பின்னே உள்ள ஒரு காதல் கதை பற்றி இப்போதும் வட நாட்டில் வாய்மொழி மூலம் ஒரு கதை பரிமாறப்படுகிறது. இதை நான் சிறு வயதில் படித்தேன் அதனால் அந்த நாயகனின் பெயர் நினைவில் இல்லை ஆனால் நாயகியின் பெயர் அப்படியே நினைவில் இருக்கிறது திலோத்தமி தான் அவளது பெயர் சரி கதையை சுருக்கமாகப் பகிர்கிறேன்
shajahaan |
மும்தாஜின் பிரிவை தாங்க முடியாத ஷாஜகான் அவள் நினைவாக ஒரு சின்னத்தை கட்ட நினைத்தான். அதற்காக தனது ஆஸ்தான கட்டட வடிவமைப்பாளனை அழைத்து அவனிடம் விருப்பத்தை கூறினான். ஆனால் தயவாக இல்லை மிகவும் கடுமையாக கூறினான். அதாவது உலகத்திலேயே இல்லாத அளவுக்கு அதிசயமாகவும் அழகாகவும் அமைய வேண்டும் இல்லாவிடில் உன்னை கொன்று விடுவேன் என்றானாம். அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை அதைப் பற்றியே சிந்தித்த படி அலைந்தான் சாப்பாடில்லை, தூக்கமில்லை பைத்தியம் போல் அலைந்தான்.
இதை அவனது காதலியான திலோத்தமி கண்ணுற்றாள். தன் காதலன் ஒடிந்து போன காரணத்தை கேட்டாள் அவனும் விசயத்தை கூறினான். அதற்கவள் தானே உதவுவதாக கூறி அவனை ஒரு ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றாள். அவனை தான் செய்யப் போவதை அப்படியே பார்க்குமாறு கூறி விட்டு அருகே உள்ள மலைக் குன்றொன்றில் மீது ஏறினாள். தன் காதலனின் உயிர் மீது தீராத காதல் கொண்ட அவள் கூறினாள். “நீ நல்லாயிருக்கணும் அதற்காக ஒரு சிறந்த கட்டடத்தை வடிவமைக்கணும் அந்த வலியை உனக்காக நான் தருகிறேன்” எனக் கூறிக் கொண்டு மேலே இருந்து கிழே விழுந்தாள். ஷாஜகான் வேற்று ஊரில் இருக்கும் போது இறந்த மும்தாஜ்ஜின் மேல் இந்தளவு துக்கம் கொண்டிருந்தான் என்றால் தன் கண் முன்னே காதலியை இழந்தவனுக்கு எப்படி இருந்திருக்கும்.
அவனது அந்த வலியின் சின்னம் தான் இந்த தாஜ்மகால்..
வரலாற்று ஆய்வாளர்களே இதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துங்கள்... இது எனக்கு சிறுவயதிலேயே தாக்கத்தை எற்படுத்திய கதை ஆனால் இன்னும் இதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை
உறுதி செய்ய வேண்டியதில்லை.
படைக்கச் சொன்னவனைவிட
படைப்பவனுக்கு ஒரு வெறி
இருக்கவேண்டும்.இல்லையேல்
இப்படி ஒரு உருவாக்கம் சாத்தியமேயில்லை
அது உயிர் ஆசையைவிட
காதலியின் இழப்பாய் இருக்கத்தான் சாத்தியம்
காதலர் தினத்திற்கான உங்கள் பதிவு அருமை
வாழ்த்துக்கள்
இந்த கதையை எங்க படிச்சீங்க.ரொம்ப புதுசா இருக்கு. மும்தாஜ் ஆதரவாளர்கள் கோவிச்சுக்க போறாங்க..
உத்வேகம் தேவை உங்கள் கதையில் உண்மை இருக்கும் என் நம்புகிறேன்.பகிர்வுக்கு நன்றி
என்ன அனுபவமோ? எல்லாம் ஜனா அண்ணாவைக் கேட்டால் தான் தெரியும்-:)
அருமை.. அருமை. காதலர் தினத்திற்கேற்ற பதிவு.
நனைவோமா நாற்று மேடைப் பக்கம் வந்து எங்களையும் நனைக்காதோ?
http://missionisi.wordpress.com/2007/11/24/taj-mahal-or-tejo-mahalaya-2/
http://www.stephen-knapp.com/true_story_of_the_taj_mahal.htm
இங்கேயும் வேறோர் கதை சொல்கிறார்கள்.
தேடலின் விளைவு புதிய கருத்து
வாழ்த்துக்கள் தம்பி
ithan nambagaththanmai kuriththu kealvi.....
avarum anth thodargalil moolamm ethu endru kurippidavillai.sumaar 10 aandugalukku thodaraaga vanththu "baakya" vaara ithalil.
mannikanum athu 10 aandugalukku munbu endru kuripittirukka vendum;
அதான் நிறைய பேர் கலட்டி விட்டுடுறாங்களோ ....
முதலாவது தாஜ்மஹாலுக்கு ஷாஜஹான் தான் வடிவமைப்பாளர் . தன் கைப்பட தாஜ்மஹால் வரைந்து இது போல் வரவேண்டும் என்று ஆலோசனை கூறினான் .அதன் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியில் ஷாஜஹானின் பங்களிப்பு நேரடியாக இருந்தது .
ரெண்டாவது மும்தாஜ் பிரசவிக்கும் பொது இறந்தால். அப்போது ஷாஜஹான் அவள் அருகில் இருந்தான் அவள் இறக்கும் போது அவளுக்கு 38 வயது.
வாழ்த்துக்கள்
அப்புறம் சுதா, இந்தக் கதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்! பாடலாசிரியர் பா.விஜய் எழுதிய " உடைந்த நிலாக்கள் " என்கிற அருமையான கவிதைத் தொகுப்பில், இந்தக் கதையை, கவிதையாக வடித்துள்ளார்! படிக்கப் படிக்க உருகும்! அந்த ஓவியனின் பெயர் ஹரீம் என்று நினைக்கிறேன்! மிகவும் அழகான ஒரு காதல் கதையை பொருத்தமான நேரத்தில் போட்டுள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!!
அவரது வலைப்பூ, சுயவிபரம் எதுமே கிடைப்பதில்லையே?
அது உண்மையா
வாழ்மொழிக் கதையா
எதுவானாலும் வலி வலிதான்.
ம்ம்ம்ம்...வர்ணிக்கமுடியாத ஒன்றுதான். அது
புதுசா இருக்கே!உண்மையான்னு
தெரியாது; அதனால் வாக்கிட்டு
விடைபெறுகிறேன்.
தாஜ்மஹால் கட்டிய ஷாஜஹானின் மனைவி மார்களைப் பற்றி சில நாட்களுக்கு முன் ஒரு மின்னஞ்சல் வந்தது. அப்போது தான் தாஜ்மஹாலின் இன்னொரு பரிமாணம் தெரிந்தது...இப்போ ஒருமுறை நெஞ்சில் காதலி வைத்து கேளடியோ...திலோத்தமி என்கிறீர்கள்...
மனைவிமார்கள் என்று போட்டிருக்க வேண்டும்...தமிழும் தமிழனும் பிரிஞ்சாலே குழப்பமாயிடுதுங்க...
உள்ளது.
http://jiyathahamed.blogspot.com/2011/02/dropbox.html
அனாமிகா: உங்கள் கருத்து மிகவும் மாறுபட்டதாக இருக்கிறதே! கலாசாரம், சின்னங்கள், காலம் கடந்து நிற்கும் அடையாளங்கள் எல்லாமே நாட்டின் முன்னேற்றத்துக்கு எதிரானவை / தடைக்கல் போன்றவை என்று கொண்டால், சுவடுகளே இல்லாமல் அனைவரும் செத்து மடிய வேண்டி வருமே! அதுவா உங்கள் விருப்பம்! மூன்று பேர் கொண்ட தன் குடும்பப் பயன்பாட்டுக்காக பத்துக் கார்கள் வைத்திருக்கும் இன்றைய பணக்காரரை விடவும், தாஜ் மகாலுக்குச் செலவு செய்த ஷாஜஹான் சற்றும் தாழ்ந்தவன் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது!
அன்பின் சீலன்
vellisaram.blogspot.com
ஹையா....நானும் வலைச்சரத்தில் வந்துட்டேன்ல......
ஆனா அந்த காதலரோட வலி ரொம்ப கொடுமையானதுதான் ..
அதே மாதிரி அந்த காதிலயும் கண்டிப்பா பாரட்டபடவேண்டியவங்க ..
அது உண்மையில் காதலின் சின்னம்தான் .. ஏன் சொன்னேன் அப்படின்னா இதுவரைக்கும் எனக்கு அது காதலின் சின்னமா பிடிக்கல .. ஏன்ன அந்த கட்டிடம் கட்டின உடனே அத கட்டினவர் கைய வெட்டினதா படிச்சிருக்கேன் .. ஆனா இந்த கதைய படிச்சதுக்கு அப்புறம் ரொம்ப பிடிச்சிருக்கு .
இப்போ என்னுடைய பார்வை..
தன்னுடைய காதலியை நினைத்து உருகியவன், உண்மையான காதலனாக இருந்தால், தன்னுடைய சொந்தச் செலவில் சிறு கல்லை நட்ட வைத்திருந்தால் இறந்தவள் சந்தோஷப் பட்டு இருப்பாள்..
அவன் காசு கொடுத்ததோ அவனுடைய காதலிக்காக.. இவன் கட்டியதோ தன்னுடைய காதலியை நினைத்து.. பணம் கொடுப்பவன் தானே படைப்புக்கு உரிமையாளன்..? தன்னுடைய காதலியை நினைத்து அடுத்தவனுக்கு ஒரு மாளிகையைக் கட்டிக் கொடுப்பது மிகவும் நெருடலான விஷயம்..
உங்கள் காதலிக்காக ஏதேனும் செய்ய நினைத்தால் சொந்தச் செலவில் செய்யுங்கள்..
அய்யயோ.. காதலர் தின வாழ்த்துக்கள் சொல்ல வந்தவன கோத்து விட்டு வேடிக்க பாக்குரான்களே..
http://blogintamil.blogspot.com/2011/02/4-friday-in-valaichcharam-rahim-gazali.html
ஆவல் எழுந்து விட்டது
பகிர்வுக்கு நன்றி
By. surya.com