ரெட்மீட் எனப்படும் மாட்டிறைச்சியை சாப்பிட்டால் இளவயதில் மரணத்தை தழுவ நேரிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.மேலை நாடுகளில் பன்றியின் இறைச்சி பொதுவாக வெள்ளைக் கறியாகக் கருதப்படுகிறது. மாறாக மாட்டிறைச்சி சிவப்புக் கறியாகக் கருதப்படுகிறது. மையோக்ளோபின் என்ற இந்த புரோட்டீனே இதற்கு சிவப்பு வண்ணத்தை அளிக்கிறது.
பன்றியில் கோழியின் இறைச்சியை விட மையோக்ளோபின் (Myoglobin) அதிகமாக இருந்தாலும் மாட்டிறைச்சியைவிட மிகவும் குறைவு. இறைச்சி நன்றாக சமைக்கப்படும்போது இந்தச் சிவப்பு வண்ணம் மறைந்து பழுப்பு வண்ணத்தை அடைகிறது.
இதன் காரணம் மையோக்ளோபின் வேதி மாற்றம் அடைவதே. எந்த அளவுக்கு மையோக்ளோபின் இருக்கிறதோ அந்த அளவுக்கு கறி உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது.
மனிதர்களின் உணவுப்பழக்கம் மற்றும் அவர்களின் ஆயுள் காலம் குறித்தும் ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மாட்டிறைச்சி அதில் சாப்பிடுபவர்களில் 20 சதவிகிதம் பேர் இளம் வயதில் மரணமடைவது கண்டறியப்பட்டது. 1,20,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டதில் இது தெரியவந்துள்ளது.
மாட்டிறைச்சி சாப்பிடுவதன் மூலம் இதயநோய்கள், புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறதாம். அதேசமயம் கோழிக்கறி, மீன் போன்றவை இளம் வயது மரணத்தை தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தினசரி மாட்டிறைச்சி சாப்பிடும் இளைஞர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்கு 22 வயதுடைய 37,698 ஆண்களும், 28 வயதுடைய 89,644 பெண்களும் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர்.
நான்கு ஆண்டுகளாக அவர்களின் உணவுப்பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தினசரி மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் 13 சதவிகிதம் பேர் இளமையிலேயே இதயபாதிப்பு, பல்வேறு உடல் உபாதை போன்ற நோய்களுக்கு ஆளானது தெரியவந்தது.
இதற்குக் காரணம் மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக் போன்றவை ஆகும். இதுவே இதயநோய், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட காரணமாகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அதேபோல ஹாட் டாக் எனப்படும் துரித உணவுகளை சாப்பிடும் 20 சதவிதம் பேர் இளம் வயதில் மரணமடைவடைதும் கண்டறியப்பட்டது. அதேசமயம் மாட்டிறைச்சிக்கு பதிலாக உலர் பருப்பு, மீன் போன்றவைகளை உட்கொண்டவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்யத்துடன் இருந்தது தெரியவந்தது.
எனவே மாட்டிறைச்சியை குறைவாக சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மக்கள் கருத்து
க.சிவராஜ்Sep 10, 2014 - 09:52:15 AM | Posted IP 42.10*****
மனித இனம் தோன்றி பல ஆயிரம் லட்சம் வருடங்கள் ஆனதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தான் மனிதன் தனக்குண்டான உணவை தயாரித்து உண்ண தொடங்கினான். அதற்கு முன்னர் மிருகங்களை வேட்டையாடியே அவற்றை உண்டே வாழ்ந்திருக்கிறான். இதனால் ஓரளவிற்கு உலகில் மனிதன் மிருகம் என சமநிலை இருந்தது. மிருகங்களை வேட்டையாட முடியாத நிலையில் மட்டுமே மனிதன் உயிர் வாழ இயற்கை உணவை தேடி உண்டிருக்கிறான். இந்நிலையே பல லட்சம் வருடங்கள் இருந்துள்ளது. மனிதன் நாகரீகம் அடையும் போது கூடவே நாகரீகம் ஒட்டிவந்த சுக வாழ்க்கை முறை காரணமாகவே பல வாழ்கைமுறை நோய்களும் வந்தனவே தவிர ரெட்மீட் தான் இளவயது மரணங்களுக்கு காரணம் என்பது ஏற்புடையது அல்ல.
அருள் ராஜ்மே 6, 2014 - 02:50:42 PM | Posted IP 59.96*****
மாட்டு இறச்சி சாப்பிடுவது நிருத்தினால் நல்லாக இருக்கும்
priyaAug 6, 2013 - 12:31:57 PM | Posted IP 220.2*****
சத்து குறைவா இருகரவைங்க சாப்டால் தப்பு இல்லை 60 கிலோ அதீகமா இர்ருந்த சாப்ட கூடாது
முகமது kaniJun 16, 2013 - 04:05:18 PM | Posted IP 115.2*****
நல்ல கருத்து
ரமேஷ் GJan 1, 1335 - 11:30:00 AM | Posted IP 122.1*****
நல்ல டிப்ஸ்
No comments:
Post a Comment