நாமெல்லாம் அறிவியல் நூலில் படித்து பரிட்சையில் எழுதியிருப்போம் ஆகாயவிமானத்தை ரைட் சகோதர்கள் கண்டு பிடித்தார்கள் என்று.
ரைட் சகோதரருக்கு 8 வருடம் முன்னால் அதாவது 1895ஆம் வருடம் ஆகாய விமானத்தை உருவாக்கிப் பறக்க விட்டவர் நம் பாரத நாட்டவர் ஒருவர் என்பதை நீங்கள் அறிவீர்களா?
வெள்ளையர் ஆட்சியாலும் நம் நாட்டு அரசுகளின் அக்கறையின்மையாலும் வெளிவராத ஒரு இந்திய விஞ்ஞானியின் கதை இது.
மும்பை மாநகரில் ஷிவ்கர் பாபுஜி தல்பாடே ஷிவ்கர் என்கிற ஒரு மராட்டியர். சம்ஸ்கிருத அறிஞர். மும்பைப் பல்கலையில் சமஸ்கிருதப் பேராசிரியராக பணியாற்றியவர்.
சமஸ்கிருத மொழியில் இருந்த விஞ்ஞானப் புத்தகங்களை ஆராய்ச்சி செய்வதில் தணியாத ஆர்வம் கொண்டவர்.
அவர் தன்னுடன் பணியாற்றிய ஒரு நண்பர் படம் வரைவாளர் ட்ர்யாஃப்ட்ஸ்மந் உதவியுடன் மஹரிஷி பாரத்வாஜ முனிவர் எழுதிய எந்திர சாவாஸ்வம் என்னும் நூலை ஆராய்ச்சி செய்தார்.
அதில் வைமானகி சாஸ்த்திரா எனும் அத்யாயத்தில் விமானங்கள் வடிவமைப்பு, கட்டுமானம், பறக்க வைப்பது, எரிபொருள், விமானங்களின் விசைகளைக் கட்டுப்படுத்துவது போன்ற எல்லா விஷயங்களும் உள்ளன.
அதன் மூலம் விமானம் தயாரிக்க மிகுந்த ஆர்வம் கொண்ட தல்பாடே அதற்கு பரோடா மன்னரின் ஆதரவும் நிதி உதவியும் பெற்றார். பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின் அவர் ஒரு விமானத்தை வடிவமைத்தார்.
1895 ஆம் ஆண்டு தல்பாடே மும்பை சவுபாத்தி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தன் விமானத்தின் சோதனை ஓட்டத்தை நிகழ்த்தினார்.
அது பிரபல சுதந்திர போராட்ட வீரர் கோவிந்த ரானடே, பரோடா அரசர் மற்றும் பல பிரபல மனிதர்களின் முன்னிலையில் நிகழ்ந்தது.
ரைட் சகோதரரில் வில்ப்ரெட் ரைட் அவர்கள் விமானத்தில் ஏறிப் பறந்து காட்டினார்.
ஆனால் தல்படே தன் விமானத்தை ஆளில்லா விமானமாக இயக்கினார்.
அதற்கு ஒரு காரணம் உண்டு.
இப்போது பாருங்கள்.
ரைட் சகோதரின் விமானம் ஆளுடன் 120 அடிகள் உயரத்தில் பத்து செகண்ட்கள் பறந்து பின் கீழே விழுந்து விட்டது.
ஆனால் தான் உருவாக்கிய விமானத்தின் பறக்கும் விசையின் அளவு குறித்து தெளிவடைய முடியாததால் தல்பாடே அதை ஆளில்லா விமானமாகவே இயக்கினார்.
ஆனால் இப்போது கேளுங்கள்,
தல்பாதேவின் விமானம் 1500 அடிகள் உயரத்தில் பதினேழு நிமிடங்கள் பறந்து பின் கீழே விழுந்தது.
இப்போது சொல்லுங்கள் முதல் விமானம் யார் உருவாக்கியது என்று?
இந்தச் செய்தி அன்று மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் திலகரால் நடத்தப்பட்ட 'சாம்னா ' என்ற செய்தித்தாளில் வெளி வந்துள்ளது.
அன்றய பிரபலமான கேசரி எனும் பத்திரிகையிலும் வெளி வந்துள்ளது.
துருத்ரிஷ்டிர வசமாக அவர் எந்த தேதியில் பறக்கவிட்டார்
என்று தெரியவில்லை.
என்று தெரியவில்லை.
இந்தியனின் புகழை விரும்பாத வெள்ளையர் அரசு இந்தக் கண்டுபிடிப்பை இருட்டடிப்பு செய்தது.
இரண்டாவது தல்பாதேவுக்கு உதவினால் சரிவராது என்று பரோடா மன்னரை எச்சரித்தது.
இதனால் தம் விமானத்தை மேல்கொண்டு அபிவிருத்தி செய்து உருவாக்குவது என்பது தல்பாடேவுக்கு கனவாகிப் போனது.
அதனால் அவர் மனம் உடைந்து போய் எதிலும் நாட்டமின்றி இருந்தார்.
அவர் மனைவியும் காலமாகவே அவர் எதிலும் பற்றற்று போய் விட்டார். அப்படியே காலங்கழித்த அவர் 1916 ஆம் ஆண்டு காலமானார்.
அவர் காலத்துக்குப் பின் சிதைந்த அவர் விமான பாகங்கள் அவர் வீட்டின் தோட்டத்தில் கிடந்தன என்றும் அதைப் பின் அவர் சந்ததியினர் ஏலம் விட அந்த சிதைந்த விமானத்தை பிரிட்டனின் ரள்ளிச் நிறுவனம் எலமெடுத்து இங்கிலாந்து கொண்டு சென்றதாகவும் தெரிகிறது.
அப்புறம் அதன் கதை தெரியவில்லை.
அவர் குறித்து எந்தத் தகவலையும் வெளிக்கொணர சுதந்திர இந்தியாவின் அரசுகள் முயலவில்லை.
அப்புறம் பெங்களூருவில் நடந்த ஒரு விமானக் கண்காட்சியில் இந்திய அரசின் ஹிந்துஸ்தான் ஏரொநாடிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் தல்பாடேவின் விமான மாதிரி ப்ரோடடைப் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்ததாகத் தெரிகிறது.
இன்னமும் தல்பாடே விமானம் குறித்த சில ஆவணங்கள் ஹால் உடைய ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த நேரத்தில் நம் இந்தியன் ஒருவனின் விஞ்ஞான சாதனையை உங்கள முன்வைப்பதில் பெருமையடைகிறேன்.
இன்னமும் ஒரு விஷயம். தல்பாடேவின் விமானம் இன்றைய விமானத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது.
அது எப்படிஎன்றால் அது பெட்ரோலால் இயங்குவதல்ல.
ஏனென்றால் தல்பாடே உருவாக்கிய விமானம் என்று மட்டும்தான் சொல்லியிருந்தேன்.
இப்போது அந்த விமானம் பற்றிய சில தொழில் நுட்பத் தகவல்களைத் தருகிறேன்.
தல்பாதேவின் விமானம் மகரிஷி பரத்வாஜர் எழுதிய வைமானிக சாஸ்த்ரா என்னும் நூலின் அடிப்படையில் கட்டப்பட்டது என்று சொல்லியிருந்தேன்.
உண்மையில் வைமானிக சாஸ்த்ரா வில் உள்ள விமானங்கள் இப்போதைய நம் விமானங்களை விட மிக நவீனமானவை.
இன்று உலகில் ஓடும் எந்த விமானமும் White பெட்ரோல் எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலையே எரிபொருளாகக் கொண்டுள்ளன.
ஆனால் தல்பாதேவின் விமானம் இதுபோன்ற பெட்ரோல் இன்ஜினை அடிப்படையாகக் கொண்டது அல்ல.
அது பாதரசத்தை எரிபொருளாகக் கொண்ட MERCURY VORTEX ENGINE என்னும் ஒரு இஞ்சினைக் கொண்டது.
இதில் பாதரசம் எரிபொருளாக நிரப்பப்பட்டு பின் சூடேற்றப்படுகிறது.
அப்போது பாதரசம் விரிந்து அழுத்தத்தைக் கொடுக்கிறது.
அப்போது பாதரசம் விரிந்து அழுத்தத்தைக் கொடுக்கிறது.
( இது உண்மையில் நம் ஜுரமானியை நாக்கில் வைத்தால் உடல் சூடு காரணமாக அதனுள் உள்ள பாதரசம் விரியும் தத்துவம்தான்.) பாதரசம் எரிவதில்லை.
ஆனால் அது மிகுந்த அழுத்தத்தைக் கொடுக்கிறது.
அந்த அழுத்தத்தின் அடிப்படையில் IONIZATION என்னும் அயனிகள் உருவாக்கப்பட்டு மின்னோட்டம் ஏற்படுத்தப்படுகிறது.
அந்த மின்னோட்டம் மூலமே இந்த விமானம் இயக்கப்படுகிறது.
ஆக இது ஒரு பாதரசத்தை எரிபொருளாகக் கொண்ட ஒரு மின்சார விமானம் என்று சொல்லலாம்.
பண்டைக் கால புஷ்பக விமானம் போன்றவை இந்த மாதிரியில்தான் அமைந்தது என்று சொல்கிறார்கள்.
இந்த முறையில் செலவாகும் பாதரசத்தின் அளவு மிகக் குறைவு.
இரண்டாவது நாம்தான் விமானம் என்பதை ஒன்றாகவும் விண்வெளி ஓடம் என்பதை இன்னொன்றாகவும் குறிப்பிடுகிறோம்.
பண்டைக்காலங்களில் இரண்டும் ஒன்றுதான்.
ஆக பண்டைக் கால விண்வெளி ஓடங்களில் இந்த MERCURY VORTEX ENGINE தான் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இன்னொன்று இந்த இன்ஜினை பயன்படுத்திய பண்டைக் கால விமானங்கள் ஒரு குறிப்பிட்ட உயரம் சென்று அதன் பின் புவிஈர்ப்பிலிருந்து விடுபட்டவுடன் தானாக சூரிய சக்தியில் இயங்கும் அடிப்படையில் அமைக்கப் பட்டிருந்தன.
இதனால்தான் பண்டைக் காலத்தில் சர்வ சாதாரணமாக கிரகம் விட்டு கிரகங்களுக்கு சென்றதாக எழுதி உள்ளார்கள்.
அவை கட்டுக் கதைகள் அல்ல என்பதை உணர்ந்திடுங்கள். இன்னொரு விஷயம் என்னவென்றால் தல்பாடேவின் சிதைந்த விமானம் ரள்ளிச் நிறுவனத்தால் ஏலத்தில் எடுக்கப்பட்டு இங்கிலாந்து கொண்டு செல்லப்பட்டது என்று சொல்லியிருந்தேன். அப்புறம் அதைப் பற்றி ஒன்றுமே செய்திகள் இல்லை.
20 வருடங்களாக நாசா விஞ்ஞானிகள் வைமானகி சாஸ்திராவை ஆராய்ச்சி செய்து MERCURY VORTEX ENGINE மூலம் இயங்கும் எஞ்சினை வடிவமைத்து உள்ளனர்.
நன்றாக சமிஸ்க்ருத மொழி புலமை உடய ஒரு Aeronautical Engineer வைமானகி சாஸ்திராவை வெய்த்து புதிதாக ஒன்று, இரண்டு வாகனங்களையாவது கண்டுபிடிக்க முடியும்.
ok
No comments:
Post a Comment