நீண்ட நாட்களுக்கு பின் ஆன்மிகப் பக்கத்தை அறிவியலுடன் தொட்டுப் பார்க்கலாம் என ஒரு சின்ன முயற்சி இதில் சில பழமைவாதிகளுக்கு உடன்பாடில்லாமல் இருக்கலாம்.
ஏன் என்று கேட்பதால் தான் இதுவரை எம்மை மனிதரென்று அழைக்கிறார்கள் இப்போ நான் கேட்கிறேன். தவறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதற்கு சரியான காரணம் இருக்கத் தான் செய்கிறது. மனிதனின் முக்கிய வியாபார ஸ்தாபனமாக கோயில்களும் கடவுள்களும் மாற்றப்பட்டு விட்டாலும் அதன் புனிதம் யாரோ ஒருவரால் காக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது.
பழைய காலங்களில் இப்படி அடிக்கொரு கோயில் வைக்கவில்லை அப்படி வைப்பதற்கு எல்லோருடமும் வசிதியிருக்கவில்லை. வெள்ளப் பெருக்கு ,மழை போன்ற காலங்களில் குடி மக்கள் பெரிதும் துன்பப் பட்டார்கள் அவர்கள் ஒதுங்கவதற்கு ஒரு பொதுவான இடமாக இந்த இடம் அமைக்கப் பெற்றிருந்தது. இங்கு சாதிகளை சம்பந்தப்படுத்த வேண்டாம் கோயில்களும் கடவுள்களும் எல்லோர்க்கும் பொதுவானதே
ஒரு பெரியவர் சொன்னார் கொடித்தம்பம் வைக்கப்பட்டதன் காரணம் மின்னல் தாக்கத்திலிருந்து காப்பதற்குத் தானாம். நானும் சிந்தித்துப் பார்த்தென் அது வைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்குள் யாரும் தேவையற்று நுழைவதில்லை அத்துடன் அதன் நுனி பகுதி OHM'S LAW விற்கு அமைவாக கூராகவே அமைக்கப்பட்டள்ளது. (R=Pl/a) அத்துடன் ஊரிலேயே உயரமான கட்டிடம் ஆலயமாகத் தான் இருக்கும்.
ஆலயங்களில் பாதணிகள் உபயோகிக்க அனுமதிக்கப்படுவதில்லை காரணம் அதன் கீழ்த்தளம்பெரும்பாலும் பொழியப்பட்ட கருங்கற்களாலேயே அமைக்கப்படும். அவை நடக்கும் போது பாதத்திலுள்ள நரம்பு முளைகளை அருட்டுவதால் நல்லதொரு சிகிச்சையாக அது அமைகிறது இது பற்றி அக்குபங்சர் சிகிச்சையில் விளக்கமளிக்கப்படடள்ளது.
அத்துடன் ஆலய நடைமுறைகளும் விஞ்ஞான காரணங்களை சார்ந்தே இருக்கிறது அதில் முக்கியமாக சந்தணம், குங்குமம் வழங்குதல் பற்றி பாருங்கள் இதைப் பற்றி நான் முன்னர் எழுதிய பதிவு ஒன்று பொட்டு வைக்கச் சொல்வதன் விஞ்ஞான காரணம் என்பதை பாருங்கள்
உளவியல் ரீதியாகவும் மக்களிடை நல்ல மன நிலையையும் தோற்ற விக்கிறது. முன்னைய காலத்தில் ஆலயத்திருவிழாவில் வைத்துத் தான் திருமணங்களைப் பேசிமுடிப்பார்கள். ஆலயங்களில் ஆண்களை மேலாடை இன்றி அழைப்பதற்கும் காரணம் இருக்கிறது வெட்கத்திலாவது அவர்களின் கட்டுடலில் கவனம் செலுத்தவார்களே என்று தான்
நம்ம ஊர் கோயிலுக்கு போக இங்கே சொடுக்குங்கள் |
நாம் அறிவியல் வளர்ச்சியை சரியாகப் பயன்படுத்தவில்லை இப்போதும் ஆலயங்களில் காது கிழிய பாடல்கள் போடுவதும் புனிதமான மந்திரம் என ஐயர் படிப்பதை சாக்கடை சந்து பொந்தெல்லாம் கேட்கும் வரை ஒலிக்கவிடுவதுமென நாமே எம்மை தரம் குறைத்துக் கொள்கிறோம். இவை பற்றி பலர் பலதை அறிந்திருப்பிர்கள் பகிருங்கள். இந்தப் பதிவை நான் இன்னும் முடிக்கவில்லை இது ஒரு பெரும் புயலுக்கு முந்திய தென்றல் தான்...
குறிப்பு - எனது கடைசிப் பதிவைப் பார்த்து நானே அதிசயித்துவிட்டேன் இவ்வளவு கருத்தரையாளர்களா நன்றி உறவுகளே.. மீண்டும் சொல்லிக் கொள்கிறேன் சிறிது காலத்திற்கு என்னால் வாரம் ஒரு பதிவு மட்டுமே இடமுடியும அத்துடன் வாரம் இரு தடவை தன் தங்கள் தளவருகையும் முடியும் என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகிறேன்.
கருத்திட்டும் வாக்கிட்டும் சோர்ந்து போன என் விரல்களை புதுப்பிக்கும் என் உறவுகளுக்கு பல கோடி நன்றிகள்
சந்தணம், குங்குமம் வழங்குதல் பற்றி பாருங்கள் இதைப் பற்றி நான் முன்னர் எழுதிய பதிவு ஒன்று பொட்டு வைக்கச் சொல்வதன் விஞ்ஞான காரணம் என்பதை பாருங்கள்//////////
எனக்கும் இதில் உடன்பாடு உண்டு!
எனக்கும் இதில் உடன்பாடு உண்டு!
பாரத்... பாரதி... said...
R= V/I என்பது தானே OHM"S LAW?
நீங்கள் சொல்வதும் சரி தான் சகோதரா அந்தச் சமன்பாடு மின்னழுத்தத்தையும் மின்னோட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டது.. இது அதிலிருந்து நிறுவி எடுக்கப்பட்டது இது பரப்பளவுடன் சம்மந்தப்படுத்தப்பட்டு பெறப்பட்டது... கூர்மையான பொருட்களில் மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதைக்காட்டலாம்...
R= V/I என்பது தானே OHM"S LAW?
நீங்கள் சொல்வதும் சரி தான் சகோதரா அந்தச் சமன்பாடு மின்னழுத்தத்தையும் மின்னோட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டது.. இது அதிலிருந்து நிறுவி எடுக்கப்பட்டது இது பரப்பளவுடன் சம்மந்தப்படுத்தப்பட்டு பெறப்பட்டது... கூர்மையான பொருட்களில் மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதைக்காட்டலாம்...
//ஆண்களை மேலாடை இன்றி அழைப்பதற்கும் காரணம் இருக்கிறது வெட்கத்திலாவது அவர்களின் கட்டுடலில் கவனம் செலுத்தவார்களே என்று தான்//
நான் நல்லூர்க் கோவிலுக்குள் சென்று தரிசிக்காததற்கு இதுதான் காரணமோ?! ;-)
நான் நல்லூர்க் கோவிலுக்குள் சென்று தரிசிக்காததற்கு இதுதான் காரணமோ?! ;-)
//மனிதனின் முக்கிய வியாபார ஸ்தாபனமாக கோயில்களும் கடவுள்களும் மாற்றப்பட்டு விட்டாலும் அதன் புனிதம் யாரோ ஒருவரால் காக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது//
நடைமுறைக்கு மிகவும் பொருத்தமான பதிவு
நடைமுறைக்கு மிகவும் பொருத்தமான பதிவு
ஆண்களையும் ஆடையுடன் செல்ல அனுமதிக்கலாம்...இதனாலேயே நான் பல தரிசனங்களை மிஸ் பண்ணி இருக்கேன் பாஸ்.
என்னைய சங்கத்தில இருந்து தூக்கிட்டாங்க பாஸ்!!
http://kaviyulagam.blogspot.com/2011/02/blog-post_18.html
என்னைய சங்கத்தில இருந்து தூக்கிட்டாங்க பாஸ்!!
http://kaviyulagam.blogspot.com/2011/02/blog-post_18.html