Sunday, 1 March 2015

புரிய வைத்தல் அல்ல, திரும்ப வைத்தலே நமது வேலை


hindu-symbol-aumசமயம் என்பது ஆன்மிகம் சார்ந்ததுசமூகம் என்பது வாழ்வியல் சார்ந்ததுஇரண்டுமே மக்களுக்கு அவசியமானவையாக இருப்பதால் மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ளனசமயம் என்பதில் ஆன்மிகம் தவிர ஏதும் இல்லைசமூகத்தில் முக்கியமாக ஆன்மிகத் தூண்டுதலுக்காகவும் அடுத்தபடியாக ஒற்றுமை உணர்வை நிலைபெறச் செய்யவும் தனி அடையாளத்திற்காகவும் வழிபாடுதிருவிழாவழிபாட்டுத் தலம் சடங்குகள் ஆசாரங்கள் என்பவை சமயத்தின் பெயரால் கடைப்பிடிக்கப் பட்டாலும்கலாசாரம்பொருளியல்சமூக நடைமுறைஅதிகாரம்கட்டமைப்பு போன்றவையே சமூகம் சார்ந்த முன்னுரிமைகளாக உள்ளனசமயமும் சமூகமும் பின்னிப் பிணைந்து கிடப்பதால்தான் இரண்டையும் ஒன்றாகக் காணும் மயக்கம் ஏற்படுகிறதுகாலப் போக்கில் சமுகப் பழக்க வழக்கங்களில்முக்கியமாக மேலாதிக்க விழைவின் காரணமாக வலியுறுத்தப்படும் ஏற்பாடுகளும் எளிதில் அங்கீகாரம் கிட்ட வேண்டும் என்பதற்காக சமயத்தின் பெயரால் கட்டாயப் படுத்தப்பட்டுநடைமுறைக்கு வந்துஅதன் விளைவாகச் சமயம் அந்தப் பழியைச் சுமக்க நேரிடுகிறது (இதுபற்றி நான் ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்).
shivamuruga1சமயம் சமூகத்திற்குச் சில வழிகாட்டுதல்களைச் செய்தாக வேண்டியிருக்கிறதுஏனெனில் ஆன்மிகம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இல்லைஆன்மிகத் தேடலுக்கு ஆன்மா குடிபுகவும் பரிணாமப் படிக்கட்டுகளில் மேலே ஏறிச் செல்லவும் சரீரம் தேவையாயிருக்கிறதுசரீரத்திற்கு சமுகத் தொடர்பும் பொருளியல் தேவைகளும் அவசியப்படுகின்றனஅவ்வளவில் சரீரம் சம்பந்தப்பட்ட சமூக ஏற்பாட்டில் சமயம் சில வழிகாட்டுதல்களைக் கட்டளைகளாக அல்லாமல் கோட்பாடுகளாக அறிவுறுத்துகின்றது.உதாரணமாக குணத்தின் காரணமாகவும் மன நாட்டங்களுக்கு ஏற்பவும் அமையும் வர்ணப் பிரிவுகள்இந்த வர்ணப் பிரிவுகள் சுட்டிக் காட்டப்படுகின்றனவேயன்றி அவற்றுள் இன்னது உயர்ந்ததுஇன்னது தாழ்ந்தது என பேதம் கற்பிப்பதில்லைஆனால் சமூகம் தன் வசதிக்கு ஏற்ப இந்த வர்ணப் பிரிவுகளை வளைத்துச் சில தரப்புகளுக்குச் சாதகமாகவும் சில தரப்புகளுக்கு பாதகமாகவும் நடைமுறைப் படுத்திக்கொண்டது.விளைவுசமூகம் செய்த பிழைக்குச் சமயம் பழி சுமக்க வேண்டியதாயிற்றுஉதாரணத்திற்கு இது ஒன்றைச் சொன்னேன்சொல்வதற்கு இன்னும் நிறையவே உள்ளனஆனால் தேவையில்லை.பேசுவதற்கு வேறு முக்கியமான விஷயங்கள் உள்ளன.
சரிஆன்மிகம் சார்ந்த சமயமும் பொருளியல் சார்ந்த சமூகமும் அடிப்படையில் வெவ்வேறானவையானாலும் இரண்டுமே மனிதக் கூட்டத்திற்கு அவசியமாக இருப்பதோடு இணைந்தும் இருக்க வேண்டியுள்ளதுசரீரமும் ஆன்மாவும் இணைந்து இருக்க வேண்டியிருப்பது போலத்தான்ஆனால் சமயம் ஆன்மாவைப் போலவே பூடகமாக இருப்பதால் சமூகத்தின் தாக்கம் அதன்மீது எளிதாகச் செல்லுபடியாகிவிடுகிறதுஒரு சமூகத்தை முன்வைத்தே அதன் சமயத்தைக் காண்பதான நடைமுறை வந்துவிட்டிருக்கிறதுசமூகம் இவ்வாறாக முதல் மரியாதை பெறக் காரணம்சமூகம் தோன்றிய பின்னரே சமயம் தோன்றியதுஇன்னும் சொல்லப் போனால் சமூகத்திலிருந்துதான் சமயம் தோன்றிதகப்பன் சாமியாகிவிட்டதுதந்தைக்கு உபதேசம் செய்த தனயன் புராணம் இதைத்தான் சொல்கிறதுமனித மனதின் உள்ளுணர்வே இதற்குசமயம் தோன்றுவதற்குகாரணம்தேடலில் உள்ள ஆர்வம்அதில் உள்ள சுகம்அதுவே சமயமாகப் பரிணமித்தது.
இதுவரை நாம் பார்த்த சமயம் என்ற கருதுகோளுக்குப் பொருந்தி வருவது ஹிந்துஸ்தானத்தில் தோன்றிய ஸனாதனதர்மம் என்று சொல்லக் கூடிய ஹிந்து சமயமும் (ஸனாதன தர்மம் என்பதேகூட அடையாளம் காட்டுவதற்காகஅவசியம் கருதிப் பிற்காலத்தில் சூட்டப்பட்ட பெயர்தான்.தர்மம் மட்டுமே உண்டுசமணம் தோன்றியதன் விளைவாகத்தான் ஸனாதன-புராதன என்பது சேர்க்கப்பட்டதுசரித்திரப் புத்தகத்தில் சமணத்தைத் தோற்றுவித்தவர் வர்த்தமான மஹாவீரர் என்று எழுதப் பட்டிருந்தாலும்பரீட்சையில் அவ்வாறு விடை எழுதினால்தான் மதிப்பெண் கிடைக்கும் என்றாலும் சமணம் மஹாவீரருக்கு முன்பிருந்தே இருந்து வருகிறதுசங்கரர் மடங்களை ஸ்தாபித்தார் என்று எழுதினால்தான் மதிப்பெண் கிடைக்கும் எனப்துபோல!). சமணம்பெளத்தம் ஆகியவையுமே.
religion-cartoon-salesman1ஆபிரகாமிய மதங்கள்மதம் என்கிற அடையாளத்தைப் பெற்று விட்ட போதிலும்மதம் அல்லது சமயம் என்பதற்கு உரிய லட்சணங்களைப் பெற்றவை அல்ல.ஆன்மிகத்தின் சுவடுகளை யூத சமயத்திலாவது காணமுடியும்ஏனெனில் அது தொல் நம்பிக்கை சார்ந்ததுஉலகில் உள்ள எல்லா தொல் நம்பிக்கைகளிலும் ஆன்மிகத்தின் சுவடுகளைக் காணலாம்இவற்றைப் பாகனியம் என்ற இழிவான பெயரில் குறிப்பிட நான் விரும்பவில்லை.மெளட்டீகமான கிறிஸ்தவம் ஒரு தொற்று நோய் போலப் பல்வேறு சமுதாயங்கள் மீதும் தாக்குதல் நடத்தியபோது அங்கு நிலவிய நம்பிக்கை சார்ந்த கோட்பாடுகளுக்கு அவ்வாறான இழி பெயரைச் சூட்டியதுபாகன் என்பதற்கும் காஃபிர் என்பதற்கும் பொருள் ஒன்றுதான்.
கிறிஸ்தவம்முகமதியம் இரண்டுமே மேலாதிக்க நோக்கத்துடன்தலைகளின் எண்ணிக்கையைப் பெருக்கும் குறிக்கோளுடன் தோற்றுவிக்கப்பட்டவை.அவற்றில் ஆன்மிகம் பெயரளவிற்குக் கூட இல்லைஆண்டவன்பரம பிதா என்றெல்லாம் பேசப்படுவதாலயே அவற்றில் ஆன்மிகம் இருப்பதுபோல் ஒரு மயக்கம் ஏற்படலாம்ஆனால் ஆன்மிகம் என்பது மனித மனதின் தேடல் ஆகும்கிறிஸ்தவத்திலும் முகமதியத்திலும் தேடலுக்கு இடமில்லைஎல்லாம் தன்னிச்சையாக முடிந்துபோன முடிபுகளே ஆகும்.
கிறிஸ்தவம் என்பது ரோமானியப் பேரரசின் உலகம் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும் என்கிற மேலாதிக்கச் செயல் திட்டமேயன்றி வேறல்லஅதன் ஸ்தாபகரான ரோமானிய ஸால் என்கிற பால் ஆன்மிகவாதியும் அல்ல.
முகமதியத்தை ஸ்தாபித்த முகமதுவை எடுத்துக்கொண்டால் அவருக்கும் ஆன்மிகத்துக்கும் ஒருசிறிதும் தொடர்பு இல்லை.
இறைவனின் தூதன் என்று தன்னை அழைத்துக் கொண்டு இறைவன் பெயரால் கட்டளை பிறப்பித்தல் ஆன்மிகம் அல்ல.
நாட்ஸியம், மார்க்சியம் போல் முகமதியம் ஒரு மேலாதிக்கப் பேராசை கொண்ட எதேச்சாதிகார அரசியல் கோட்பாடே ஆகும்.
குரானை முழுவதும் படித்தால் அதில் ஆன்மிகத்துக்கு எள்ளளவும் இடம் இல்லாதது மட்டுமின்றி,மாற்று நம்பிக்கைகளை ஈவிரக்கமின்றி நசுக்கிச் சாகடிக்குமாறு உத்தரவுகளும் கடவுளின் பெயரால் இடப்பட்டிருப்பது விளங்கும்அதேபோல் கிறிஸ்தவத்தின் ஆணி வேரான புதிய ஏற்பாட்டில் சுவிசேஷங்கள் தவிர்த்து மற்ற பகுதிகளைப் படித்தால் அதில் ஆன்மிகத்துக்கு இடமில்லை என்பதும் அதுவும் கட்டளைகளின் தொகுப்புதான் என்பதும்muslimcartoon1002தெளிவாகும்சுவிசேஷங்களில் ஆன்மிகத் தேடலுக்கு இடமில்லை என்றாலும் ஏசு சொன்னதாகக் கூறப்படும் வாசகங்களில் ஆன்மிக நாட்டத்தின் தெறிப்புகளைக் காண முடியும்காரணம் அவர் யூத தொல் சமுதாயத்தில் தோன்றி அதன் நம்பிக்கை பாதிப்பில் இருந்தவர் (ஏசு என்று ஒருவர் இருந்தாரா என்கிற சர்ச்சை ஒரு தனி சமாசாரம்.இப்போது இங்கு அது தேவையில்லை).
முற்றிலும் ஆன்மிகம் சார்ந்த ஹிந்து சமயத்தைப் புரிய வைக்கிறேன் பேர்வழி என்று எவராவது நல்லெண்ணத்துடன் புறப்பட்டாலும்ஆன்மிகம் என்றாலே ஆண்டவன் என்பதாக ஒரு பெரியண்ணனின் கட்டளைகள்தான் என்கிற புரிதலுடன் காலங் காலமாக இருந்து வருவோருக்குப் புரிய வைக்க முடியாது.
அவர்களுடனான இணக்கத்திற்காக பகவத் கீதையில் அல்லா சொல்வதைப்போல என்று எழுதுவதும் அல்லாஹோ அக்பர் என முழங்குவதும் கேலிக் கூத்தாக முடியும்.
ஹிந்து சமயத்தின் இறைச் சக்தி பற்றிய கருதுகோளும் முகமதிய சமயத்தின் கருதுகோளும் வெவ்வேறாக இருக்கையில் பகவத் கீதையில் அல்லா என்று எழுதுவதும் அல்லாஹோ அக்பர் என முழக்கம் எழுப்புவதும் எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும்?
பகவத் கீதையில் என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ணன் நான் உனக்குச் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டேன், ஆராய்ந்து எடுத்துக் கொள்வதும் வேண்டாம் என விடுவதும் உன்பாடு என்று உற்ற தோழனாய் என்னிடம் கூறுகிறான்குரானில் அல்லா அப்படிக் கூறுவதாகச் சொல்ல முடியுமா?
என்மீது நம்பிக்கையில்லாதோரிடம் இந்த வாசகங்களைக் கூற வேண்டாம் என்றும் என் எஜமானன் ஸ்ரீ க்ருஷ்ணன் சொல்கிறான்.
krishna-arjuna
அல்லாவோ குரானை அனைவர் மீதும் வலுக் கட்டாயமாகத் திணிக்கச் சொல்கிறார்அல்லா என்கிற கருதுகோளே ஹிந்து சமய இறைக் கோபாட்டிற்குப் புறம்பானதாக இருக்கையில் பகவத் கீதையில் அல்லா சொல்வதைப்போல என்று எழுதுவதில் பொருள் ஏதும் இருக்க முடியுமா?
inquistion_islam_christian_jihad_abrahamicஆர்எஸ்எஸ்பேரியக்கம் பேரழிவுவிபத்துஇடர்பாடு போன்ற தருணங்களில் மத வேறுபாடு பாராமல் மனிதாபிமான அடிப்படையில் அனைவருக்கும் தொண்டாற்றுகிறதுஅதற்காக சமயக்கோட்பாட்டில் சமரசம் எதுவும் அது செய்துகொண்டு விடவில்லைகுஜராத்தில் மோதி அரசு முகமதியரும் சமூகத்தில் ஓர் அங்கம் என்பதால் அவர்களுக்கும் உரியதைச் செய்கிறதுமுகமதிய மதத்தை அல்லமுகமதிய சமூகத்தையே அது கருத்தில் கொள்கிறது.அதே போல் ஆர்எஸ்எஸ்இயக்கமும் முகமதியரை மத அடிப்படையில் பாராமல் சமூக நோக்கிலேயே அணுகுகிறது.
ஆனால் ஸ்ரீ களிமிகு கணபதியின் கட்டுரையோ,முகமதியருக்கு ஹிந்து மதத்தைப் புரிய வைப்பதாகப் புறப்பட்டுஇரு வேறு கோட்பாடுகளையும் ஒன்றிணைக்க முற்பட்டு அல்லாஹோ அக்பர் என முழங்குவதில் முற்றுப் பெறுகிறதுஇதில் வேடிக்கைஅல்லாஹோ அக்பர் என்ற முடிந்த முடிபான பிரகடனத்தை முகமதியத்தை மகிழ்விப்பதற்காகச் சொல்லிவிட்டு அனைவருக்கும் பொதுவான ஸத்யமேவ ஜயதேயை அதனுடன் இணைக்கிறது.அல்லாஹோ அக்பர் என்கிற ஸத்யம் ஜயிக்கட்டும் என்று பொருள்படக் கூடிய விதமாக!
எனக்கும் பல முகமதிய நண்பர்கள் உள்ளனர்அவர்களுடன் நான் சமய அடிப்படையில் எவ்வித சமரசமும் செய்துகொண்டதில்லை.
ஹிந்து சமயக் கோட்பாடுகளை அவர்களுக்குப் புரிய வைத்து,மனத்தளவில் ஹிந்துக்களாக வாழ வைத்திருக்கிறேன்சிலர் துணிந்து தாய்மதம் திரும்பவும் உதவியிருக்கிறேன்.மனதளவில் ஹிந்துக்களாக வாழும் என் முகமதிய நண்பர்களின் பெயர்களைக் கேட்டால் திகைப்படைவீர்கள்.ஆனால் நான் அவர்களின் பெயர்களை வெளியிட்டால் அவர்களுடைய ஜமாத்துகளில் பல சங்கடங்களை அவர்கள் அனுபவிக்க நேரிடும்.
jamathமுகமதிய சமுதாயங்களில் ஜமாத் என்ற பெயரில் ஒரு போட்டி அரசாங்கமே கண்டுகொள்ளப்படாமல் கோலோச்சி வருகிறது என்பதைக் காதுள்ளவர்கள் கேட்கக் கடவீர்கள்முகமதியரிடையே ஏதும் சச்சரவு என்றால் உங்க ஜமாத்துலயே பேசி முடிச்சுக்குங்க என்று காவல் துறையே சொல்லும் அளவுக்கு நிலைமை இருக்கிறதுமனதளவில் ஹிந்துக்களாக வாழும் எனது முகமதிய நண்பர்கள் என்னிடம் தெரிவிக்கும் செய்திகள் வேதனை தருபவை.
தமிழ்நாட்டில் ஒரு அரபு சமுதாயத்தை உருவாக்குவதில் வஹாபிகள் வெற்றி பெற்று விட்டார்கள் என்பது இதில் முக்கியமான செய்தி.
நமது மண்ணுக்குப் பொருந்தாத அரபு சம்பிரதாயங்கள் எங்கள் சமுதாயத்தில் திணிக்கப்படுகின்றன.எதிர்த்து நிற்க இயலவில்லை என்கிறார்கள்எங்களுக்கென்று உள்ள சுயம் வேகமாக அழிந்து வருகிறது என்று வருந்துகிறார்கள்.
வேதங்களையும் உபநிடதங்களையும் திரு மந்திரத்தையும் படித்துவிட்டு என்னிடம் விளக்கம் கேட்கும்முகமதிய நண்பர்கள் இருக்கிறார்கள்அவர்களில் எவரும் குரான் வாசகங்களுடன் அவற்றை ஒப்பிட்டுப்பேசவில்லைஉருவ வழிபாடு தவிர்க்க இயலாதது என்று சொல்லும் அளவிற்குச் சிலர் உள்ளனர்.முகமதுவுக்கு உருவம் சமைப்பது சில நூற்றாண்டுகள் முன்புவரை இருந்ததை ஒப்புக்கொள்வது மட்டுமின்றி அதில் தவறு இல்லை என்று சூசகமாக எழுதும் அளவிற்குத் துணிவு பெற்றுள்ளனர்.இத்தகையோரை நாம் அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டுமேயன்றி அல்லா கீதையில் சொன்ன மாதிரி என்றெல்லாம் எழுதிக் கொண்டிருக்கலாகாது.
மத நல்லிணக்கம் என்பது ஹிந்து சமயத்தில் உள்ள ஷண் மதப் பிரிவுகளை முன்னிட்டுச் சொல்லப்பட்டதேயாகும்நமது மண்ணுக்கும் பாரம்பரியமான மனோபாவத்திற்கும் பொருந்தாத அயல் பிரதேசங்களிலிருந்து மதத்தின் பெயராலும் கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டும் வந்த மேலாதிக்கப் பேராசையும் அடிமைப் படுத்தும் நோக்கமும் உள்ள புறக்கோட்பாடுகளையல்ல.thai_maatham1
ஹிந்து மதத்தை நம் நாட்டுக் கிறிஸ்தவர்களுக்கும் முகமதியருக்கும் புரிய வைப்பது அல்லஅவர்களைத் தாய் மதம் திரும்பச் செய்வதே நமது நோக்கமாக இருக்கவேண்டும்அவர்கள் வழியிலேயே புரிய வைப்பதாக நினைத்துக்கொண்டு அசடு வழியக் கூடாதுமுதல் படியாக அவர்கள் கிறிஸ்தவர்களாகவோ முகமதியராகவோ இருப்பதால் அடி பணிய வேண்டியிருக்கிற கட்டாயத்தை சமூக நோக்கில் விவரித்துப் பின்னர் நமது சமூக-சமய மேன்மைகளை உணர்த்த வேண்டும்.
இதனை எனது வழிமுறையாகக் கொண்டிருப்பதால்தான் எனக்கு திராவிட இயக்கம்கிறிஸ்தவ,முகமதிய வட்டாரங்கள் ஆகியவற்றில் இனிக்கும் நஞ்சு என்பதாக ஒரு பெயர் கொடுத்திருக்கிறார்கள்

No comments:

Post a Comment