மெலிவான தோற்றத்தைக் கொண்டவர்கள் உடல் எடையை அதிகரிப்பதில் ஆர்வமாக இருந்தாலும் உடலில் அதிகளவான கொழுப்பு போட்டு விடும் என பயம் கொள்வர். அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி தான் கொழுப்பு சத்து அதிகரிக்காமல்
உடல் எடையை அதிகப்படுத்தலாம் என்பது. கொழுப்பு சத்து அதிகரிக்காமல் உடல் எடையை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் இங்கே தரப்படுகின்றன.
இதற்கான உணவுப் பழக்க வழக்கங்களை குறைந்தபட்சம் 21 நாட்கள் கடைபிடிக்க வேண்டும்.
1. அதிகாலை மிதமான உடற்பயிற்சிக்கு முன்னதாக ஐந்து பாதாம் பருப்புகளை தினமும் உட்கொள்ளுங்கள். தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
2. பாஸ்ட் புட், க்ரீம் வகைகள் கலந்த உணவு மற்றும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
3. வெண்ணெய் தடவிய நான்கு பிரட் டோஸ்ட், ஒருவித கொழுப்புச் சத்துள்ள பாலில் கலக்கப்பட்ட ஒரு கிளாஸ் ஹார்லிக்ஸ் அல்லது காம்ப்ளான் சாப்பிடுவது நல்லது.
4. உலர் பழங்களுடன் ஒரு பெரிய கிண்ணம் நிறைய அவித்த பயறு வகைகள், கொஞ்சம் முந்திரி, சர்க்கரை கலந்த திராட்சைப் பழரசம்.
5. ஒரு கைப்பிடி உலர் பழங்கள், ஒரு கப் தயிர், அவித்த சோளம், கொஞ்சம் சீஸ். இவற்றுள் ஏதேனும் ஒன்றை மதிய உணவுக்கு முன்னர் நண்பகலில் சாப்பிடலாம்.
6. இனிப்பான பிரெட், சர்க்கரை இல்லாத மில்க்ஷேக், பால், முட்டை கலந்த ப்ரூட் சாலட் இவற்றுள் ஏதேனும் ஒன்றினை உட்கொள்ளலாம்.
7. இரவு உணவுக்கு முன்னர் காய்கறி அல்லது சிக்கன் சூப் குடிக்கலாம். அரிசி மற்றும் அசைவ உணவு வகைகளை இரவு நேரத்தில் தவிர்ப்பது நல்லது.
- See more at: http://viyapu.com/news_detail.php?cid=4492#sthash.NflWv1Yp.dpuf
No comments:
Post a Comment