1.தமிழ் மொழி என்றும் இளமை மாறாத மொழி. எம்பெருமான் முருகன் என்றும்
அகலாத இளமையுடயவன்.
2.தமிழ் மொழியில் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு, முருகப் பெருமானின்
தோள்கள் பன்னிரெண்டே.
3.முருகனுக்குத் திருமுகம் ஒவ்வொன்றிலும் மூன்று கண்களாக மொத்தம்
பதினெட்டு நயனங்கள். தமிழில் மெய்யெழுத்துக்கள் பதினெட்டு.
4.முருகவேளின் முகங்கள் ஆறு. வீடுகள் ஆறு.பிரணவ மந்திர எழுத்து
ஆறு(ச,ர,வ,ண,ப,வ) தமிழில் இன எழுத்துக்கள் ஆறு.(வல்லினம், மெல்லினம்,இடையினம் ஆகியவை ஆறு ஆறு எழுக்கள்).
5.முருகனின் ஆயுதம் வேல். இது எந்த தெய்வத்திற்கும் இல்லாத தனிநிலை
ஆயுதமாகும். தமிழில் ஆயுத எழுத்து(ஃ) தனிநிலை. அதுமட்டுமல்ல, ஆயுதஎழுத்தின் மூன்று புள்ளிகளையும் பாருங்கள், வேல் வடிவில் அமைந்து
இருக்கும்.இந்த ஆய்த எழுத்து போல் தனிநிலை எழுத்து வேறெந்த மொழியிலும் இல்லை.
6.முருகன் என்றாலே அழகன். தமிழ் என்றால் அழகு.
எனவே, முருகன் வேறு, தமிழ் வேறு அல்ல.. முருகனே தமிழ், தமிழே முருகன்..!!
ஓம் சரவணபவ...!
II. முருகனும், சிவனும்..
"பரமேஸ்வரனுக்கு ஐந்து முகங்கள், பார்வதிக்கு ஒருமுகம். ஆக,
ஆறுமுகத்திலுள்ள ஆறு நெற்றிக்ககளிலிருந்து அவர் ஆறு பொறிகளைத் தோற்றுவித்து, ஆறுமுகனை உண்டாக்கினார்" எனச் சிலர் கூறுவர். இது தவறு. பரமேசுவரனுக்கே "ஸத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம்" என்று வெளிப்படத் தெரியும் ஐந்து முகங்களோடு பரம ஞானியரின் உள்நோக்குக்கு மட்டும் புலப்படும் உள்முகமாக ஆறாவது திருவதனம்- அதோ முகமாக உள்ளது)
எனவே ஈசனின் ஆறு முகத்தில் இருந்தும், ஈசனின் ஆறுகுணங்கள் அருட்பெரும் ஜோதியாம் தீப்பொறிகலாக மாறி வெளிப்பட்டு ஆருமுகங்களாக மாறியது.
( ஈசனின் ஆறுகுணங்கள் - முற்றறிவு, வரம்பில் இன்பமுடைமை, இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், முடிவில் ஆற்றலுடைமை, பேரருளுடைமை, தம்வயமுடைமை )
ஒருவரை பார்த்து, "இவருக்கு ஞானம் உதித்தது" என்று சொன்னால் அப்போது தான் ஞானம் வந்தது என்று பொருளாகாது. ஞானம் முன்பே இருந்தது. அது மறைந்து இருந்தது. இப்போது வெளிப்பட்டது என்று பொருள்.
ஆக, ஞானம் என்னும் ஆறுகுணங்கள் ஒன்றாகி ஈசனுள் ஒருவன் மறைந்து இருந்தான்.காலம் வந்தவுடன், ஞானம் என்னும் ஒரு முகம் ஆறுமுகமாகி ஞாலத்தில் அவதரித்தான்.
ஆகவே, ஈசனின் ஞான வடிவமே ஆறுமுகமான முருகன்.
சுவாமி என்றால் முருகனை குறிக்கும். நாதன் என்றால் ஈசனை குறிக்கும்.
அதனால்தான், முருகனுக்கு சுவாமிநாதன் என்ற பெயர் உண்டு.
தந்தையும், மகனும் ஒருவனே என்பது பொருள்...!!
அப்பனும் ஒருவனே, ஆண்டி சுப்பனும் ஒருவனே...!!
முருகனே ஈசன், ஈசனே முருகன்...!!!
திருமுருக. கிருபானந்த வாரியார் எழுதிய கந்தவேள் கருணை புத்தகத்தில் இருந்து நான் படித்தது..
ஓம் சரவணபவ....எங்கும் முருகன், எதிலும் முருகன்...!!
வேல் வேல் வெற்றி வேல்.....!!!
ஆறுமுகனுடன், ஒருமுகன்
No comments:
Post a Comment