திகம்பரஅரேபியர்கள்ஸ்வேதம்பரர்களானதுஎவ்வாறு?:
முஸ்லீம்கள் ஹஜ் பயணம் செய்வது இப்பொழுது, ஊடகங்களில் காட்டி வருவதால், ஓரளவிற்கு அவர்களது பழக்க-வழக்கங்கள் தெரிய வருகின்றன. இருப்பினும் பெரும்பான்மையான விவரங்கள் முஸ்லீம்களுக்குத்தான் தெரியும். அத்தகைய கிடைக்கும் விஷயங்களை ஓரளவிற்கு எடுத்துக்கொண்டு இங்கு அலசப்படுகின்றன. ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரை செல்லும் முஸ்லீம்கள் பிராமணர்களைப் போல தலையை மழித்துக் கொண்டு, ஒற்றை வெள்ளாடை அணிந்து, இக்கல்லை ஏழுமுறை சுற்றி வருகின்றனர் (தவஃப்). வித்தியாசம் என்னவென்றால் அப்பிரதக்ஷணமாக (இடப்பக்கமாக வலம் வருதல்) சுற்றுகின்றனர். உண்மையில் அவர்கள் நிர்வாணமாக சுற்றிவரவேண்டும்[1]. அதாவது மனிதர்கள் பிறக்கும் போது, நிர்வாணமாக பிறாப்பதால், ஆண்டவன் முன்பாக செல்லும்போது, அதே கோலத்தில் / நிலையில் இருக்கவேண்டும். அப்பொழுதுதான், ஆண்டவன் வேண்டியதைக் கொடுப்பான் என்ற நம்பிக்கை இருந்தது. பெண்களும் அவ்வாறே இரவு நேரத்தில் சுற்றி வந்தனர்.
முஸ்லீம்கள் ஹஜ் பயணம் செய்வது இப்பொழுது, ஊடகங்களில் காட்டி வருவதால், ஓரளவிற்கு அவர்களது பழக்க-வழக்கங்கள் தெரிய வருகின்றன. இருப்பினும் பெரும்பான்மையான விவரங்கள் முஸ்லீம்களுக்குத்தான் தெரியும். அத்தகைய கிடைக்கும் விஷயங்களை ஓரளவிற்கு எடுத்துக்கொண்டு இங்கு அலசப்படுகின்றன. ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரை செல்லும் முஸ்லீம்கள் பிராமணர்களைப் போல தலையை மழித்துக் கொண்டு, ஒற்றை வெள்ளாடை அணிந்து, இக்கல்லை ஏழுமுறை சுற்றி வருகின்றனர் (தவஃப்). வித்தியாசம் என்னவென்றால் அப்பிரதக்ஷணமாக (இடப்பக்கமாக வலம் வருதல்) சுற்றுகின்றனர். உண்மையில் அவர்கள் நிர்வாணமாக சுற்றிவரவேண்டும்[1]. அதாவது மனிதர்கள் பிறக்கும் போது, நிர்வாணமாக பிறாப்பதால், ஆண்டவன் முன்பாக செல்லும்போது, அதே கோலத்தில் / நிலையில் இருக்கவேண்டும். அப்பொழுதுதான், ஆண்டவன் வேண்டியதைக் கொடுப்பான் என்ற நம்பிக்கை இருந்தது. பெண்களும் அவ்வாறே இரவு நேரத்தில் சுற்றி வந்தனர்.
அரேபியர் காபாவை நிர்வாணமாகச் சுற்ற வேண்டும், கூடாது என்பதற்கான வாத–விவாதங்கள்: அக்காலத்தில் காபா வளாகம் குரேஷி மக்கள் வசம் இருந்து, நிர்வாகிக்கப்பட்டு வந்தது. காபாவில் சென்று சுற்றுவதற்கு அவர்களிடம் துணி வாங்கிக் கொண்டு செல்லவேண்டும், ஆனால், அதற்கு பணம் இல்லாதவர்கள் நிர்வாணமாகச் சென்றார்கள் என்று சில இஸ்லாமிய பண்டிதர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள். இருப்பினும், ஆடை அணிந்து கொண்டும், ஆடையில்லாமலும், ஒரே நேரத்தில் பக்தர்கள் காபாவைச் சுற்றிவர முடியாது. இதனால் ஏற்பட்ட பிரச்சினையைத் தீர்க்க அனைவருமே ஆடையணிந்து வரவேண்டும் என்ற முறை ஏற்படுத்தப் பட்டிருக்கலாம். இதனால், அவர்கள் வெள்ளையுடை அணிந்து கொண்டு சுற்றிவர ஆரம்பித்தனர். இப்பழக்கம் 630-631 (ஹிஜிரி 9) ஆண்டுகளின்று அமூலுக்கு வந்ததாகத் தெரிகிறது[2]. “யயூம்–உன்–நஹ்ர்” (Yeum-un-Nahr) என்ற பெரிய திருவிழாவின் போது, நபிகள் இனிமேல் விக்கிர ஆராதனையாளர்கள் யாரும் அங்கு வரக்கூடாது மற்றும் நிர்வாணமாக சுற்றிவரக்கூடாது, என்று ஆணையிட்டார்[3] (அலி மூலம் பிரகடனப்படுத்தப் பட்டது). முதலில் ஆண்கள்-பெண்கள் எல்லோருமே அங்கு சென்று வழிபட்டு வந்தனர். ஆகவே 630-631 வரை அரேபியர்கள் அத்தகைய நிர்வாண வழிபாட்டை தொடர்ந்து கடைபிடித்து வந்தனர். இதைத்தவிர பற்பல சடங்குமுறைகளை பின்பற்றிவந்தது, இன்றும் வருவது (இவற்றை ஆசார முஸ்லீம்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்[4]) கடந்தகாலத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது எனலாம்.
- சந்திரனைப் பார்ப்பது.
- நாற்பது நாட்கள் நோன்பு காப்பது.
- சூரியன் உதிப்பதிலிருந்து, மறையும் வரை உண்ணாமலிருப்பது.
- ஹஜ் யாத்திரைக்குச் செல்வது.
- ஆண்கள்-பெண்கள் சுத்தமாக இருப்பது. பெண்கள் மாதவிடாய் காலத்தில் இருக்கக்கூடாது.
- அப்ரஹாமைப் போல பலியிடுவதற்குப் பதிலாக, தலையை வெட்டிக் கொள்வதற்கு பதிலாக, மொட்டை அடித்துக் கொள்வது.
- மொட்டையடித்துக் கொள்வது, நீராடுவது, ஒற்றையாடை அணிவது.
- பெண்கள் ஆண்களைப் போன்று ஆடையணியாமல் இருப்பது. பச்சைநிற ஆடைகள் கிடைக்கவில்லையென்றால், மற்ற நிற ஆடைகளை அணிவது.
- பெண்கள் முகத்தை மறைக்காமல் இருப்பது
- ஆண்கள் வலது தோள் தெரியும்படி இஹ்ரம் அணியவேண்டும், ஆனால், பெண்கள் அவ்வாறு செய்யக்கூடாது.
- இஹ்ரம் அணிந்தபிறகு சொரியாமல் இருப்பது.
- காபாவை ஏழுமுறை சுற்றி வருவது (தவாஃப்), ஆனால், பெண்கள் மறுக்கப்படுவது.
- முதல் மூன்று சுற்றுகளில் ஆண்கள் ஓடிவரவேண்டும், பெண்கள் ஓடவேண்டாம்.
- பெண்கள் காபாவிற்கு அருகில் செல்லாமல் இருப்பது, தவாஃப் இரவில் செய்வது.
- கருப்புக்கலை பெண்கள் முத்தமிடாமல், தூரத்திலிருந்து கையை ஆட்டுவது, சைகை செய்வது.
- மிருகத்தைப் பலியிடுவது, ஆனால், வேட்டையாடமல் இருப்பது.
- சஃபா மற்றும் மார்வா என்ற குன்றுகளிக்கிடையே ஓடுவது (ரமால்).
- புனிதமான அராஃபத் மலையை அடைவது.
- ஆண்கள் மொட்டையடித்துக் கொள்வது, பெண்கள் சிறிது முடியை வெட்டிக் கொள்வது.
- ஹஜ் முடியும்வரை தலையை நிமிர்த்தி வைத்துக் கொள்வது
- புனித பள்ளிவாசலுக்குச் சென்று (உம்ரா), ஹஜ்ஜை பூர்த்தி செய்து கொள்வது.
இதைத்தவிர குரானில் இல்லாதவற்றைப் பின்பற்றப்படுவதாக, கீழ்கண்ட சடங்குகள் சொல்லப்படுகின்றன[5]:
- எத்தகைய செருப்பை அணிவது
- இஹ்ரம் (ஒற்றைவெள்ளையாடை) கட்ட பின்னை உபயோகப்படுத்துவது.
- அராஃபத்தில் தொழுகை
- எவ்விதமான கற்களைப் பொறுக்கி எடுத்துக் கொள்வது
- ஹஜ் சென்றுவந்தால் செய்த பாவங்கள் போய்விடும் என்று நம்புவது.
- பிறந்த குழந்தைக்கு மொட்டை அடிப்பது.
- காணிக்கைச் செல்லுத்துவது.
இவற்றைத் தவிர அதிகமான, சர்ச்சைக்குறியவைகள் பல இருப்பதால், அவை கொடுக்கப்படவில்லை.
இச்சடங்குகளை உன்னிப்பாகப் பார்க்கும்போது, மந்த்ர–தந்தர–யந்த்ர வழிபாடுகள், கிரியைகள், சடங்குகள் பின்பற்றப்பட்டு வந்தன, ஆனால், நபிக்குப் பிறகு அவை மாற்றப்பட்டன, மறைக்கப் பட்டன என்று தெரிகிறது. எது எப்படியாகிலும், இப்படி சரித்திரத்தை மறைப்பதனால் உண்மையினை அறியமுடியுமா? மெய்ஞானம், மெய்ஞானியர், சூபிக்கள், சித்தர்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் போது, இவற்றை மறைத்து, மறந்து உண்மையினை புரிந்து கொள்ள முடியுமா?
வெள்ளைக்கருப்பானது, நிர்வாணம்மறைந்தது: ஜைனர்கள் மேற்குப் பக்கமாக சென்று பல பகுதிகளில் குடியேறினர் என்று முன்னமே சுட்டிக் கட்டப்ட்டது. அலெக்சாந்தர் எப்படி நிர்வாண சாமியார்களைக் கண்டு வாதத்தில் ஈடுபட்டு தோற்றானோ, அதேபோல, மற்றவர்களும் நிர்வாண சாமியார்களிடம் தோற்றிருப்பர். அதனால்தான் கிரேக்க சாமியார்கள் நிர்வாணமாக இருந்தனர் என்று எடுத்துக் காட்டப்பட்டது. அதாவது நிர்வாணம் என்பது பழங்கால மதங்களில் புனிதமாகக் கருதப்பட்டது. ஆனால், அது சாதாரண மக்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது. இக்காலத்தைய மொழியில் சொல்லவேண்டுமானால் கொச்சைப்படுத்தப்பட்டது. எதனால் அத்தகைய சடங்குகள் செய்யப்பட்டன என்று சொல்லப்படவில்லை. ஆனால், வெள்ளையுடை அணியலாம், பெண்கள் பங்குக் கொள்ளக் கூடாது என்றெல்லாம் விதிமுறைகள் ஏன்வந்தன என்று விளக்கப்படவில்லை.
முன்னர் அரேபியர் அறியாமையில் இருந்தனர், பின்னர் ஒளி (நூர்) வந்தது என்றால், இரண்டு முறைகளுக்கும் உள்ள வேற்றுமைகளை அடிப்படையில் விளக்க வேண்டும். வெள்ளையாடை அணிந்து கொண்டோ அல்லது நிர்வாணமாகவோ நட்டகல்லை சுற்றி வந்தால் என்ன பலன் ஏற்படும்? இருப்பினும் அரேபியப் பகுதிகளில் அவர்கள் நெடுங்காலமாக தமது நம்பிக்கைகளுடன் தொடர்ந்து வாழ்ந்திருப்பர். பெண்களை நடத்துவதில், அடக்கி வைப்பதில் ஜைனர்கள் மற்றும் அரேபியர்களிடம் ஒற்றுமையைக் காணலாம். பிறகு பௌத்தம் ஆதிக்கத்தில் வந்தபோதும், அதே நிலை தொடர்ந்தது. பௌத்தத்தில் திகம்பரகள் இல்லாவிட்டாலும், மற்ற கொள்கைகள், நம்பிக்கைகள் ஒரேமாதிரியாகத் தான் இருந்தன. ஆகவே இப்படி பல காலக்கட்டத்தில் அரேபியர்கள் மாறியபோது, பழைய பழக்க-வழக்கங்கள், நம்பிக்கைகள் தொடர்ந்தன. அதனால்தான், நபிகள் மெக்காவில் காபாவில் கல்லை விட்டுவைத்தார். வருடம் தோறும் நடைப்பெற்றுவந்த யாத்திரை, சடங்குகள் முதலியவற்றை மாற்றியமைத்தார்.
அரேபியாமுகமதுநபிக்குமுன்னர்மற்றும்பின்னர்: மத்தியாசியைப் போல வளைகுடா (Gulf), செங்கடல் (Red Sea) மற்றும் மத்தியத்தரைக்கடல் (Meditterranean) நாடுகளிலேயும் வேத-ஜைன-பௌத்த மதங்கள் இருந்து, பிறகு அவை கிரேக்க-மணிக்கிய-கிருத்துவ-முகமதிய மதங்களாக அங்கங்கு உருமாறியுள்ளன. அசோகர் காலத்தில் புத்தமதம் எகிப்து வரை பரவியிருந்தது. எகிப்தில் லக்ஷார் (Luxor) என்ற இடத்தில் உள்ள புத்தர்சிலை இதற்கு சான்றாக உள்ளது. அலெக்ஸ்சாண்டிரியா, டமாஸ்கஸ், பாக்தாத், நிஷாபுரி, காந்தாரம், மூல்தான், கங்காபூர், இந்திரபிரஸ்தம் பாதையில் (traditional route) மக்கள் சென்று வந்துள்ளனர். முகமது நபி (570-632 CE) தோன்றுவதற்கு முன்பு அரேபியாவில் இருந்த மதத்தைப் பற்றிய குறிப்புகள் பல இருப்பினும் முகமதியர்கள் அவற்றை ஏற்றுக்கொள்வதில்லை. முஸ்லீம்களைப் பொறுத்தவரையில், முகமது நபிக்கு முந்தைய அரேபிய காலத்தை காஃபிர்கள் (நம்பிக்கையில்லாதர்கள் வாழ்ந்த) இருண்டகாலமாகவே (ஜஹல்லியா) கருதுகின்றனர். இஸ்லாமின் ஒளிபட்டபிறகுதான் அங்கு, நம்பிக்கையுள்ளவர்களின் (மோமின்கள்) வாழ்க்கை மலர்ந்தது. ஆகையால் பழங்காலத்தை– 7ம் நூற்றாண்டிற்கு முந்தையதைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. அவற்றை மறைக்க, மறக்க, மறுக்க முயல்கின்றனர்[6].
அரேபியாவில் ஹிந்துக்கள் / இந்தியர்கள்: அசோகனின் கல்வெட்டுகள் மேற்காசியாவில் இருந்தன என்பது, அவை அங்கிருக்கும் இந்தியர்களுக்குத் தான் என்று தெரிகிறது. அதாவது ஒரு பக்கம் பாரசீகர் மறுபக்கம் கிரேக்கர்கள் ஆதிக்கத்தில் இருந்தாலும் இந்தியர்களின் சமூக ஆதிக்கம் அவற்றைவிட உயர்ந்திருந்தது என்பதனை அது காட்டுகிறது. பாரசீகர் மற்றும் கிரேக்கர்கள் தமது சரித்திரத்தில் இந்தியாவை வென்றது மாதிரி எழுதி வைத்துக் கொண்டாலும், உண்மையில் அவ்வாறில்லை என்பது இக்கல்வெட்டு ஆதாரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இரண்டாம் நூற்றாண்டில் யூப்ரடீஸ் (Euphrates) நதிக்கு மேலே, வான் என்ற ஏரிக்கு மேற்கே டாரோன் (canton of Taron) என்ற பகுதியில் இந்தியர்களின் காலனி இருந்தது என்று ஜெனோப் (Zenob) என்ற சிரிய எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்[7]. இந்துக்கள் அங்கு இரண்டு கோவில்களைக்கட்டி அதில் 16 மற்றும் 22 அடி உயரமுள்ள விக்கிரங்களைப் பிரதிஸ்டை செய்து வழிபட்டனர்[8]. அரேபிய எழுத்தாளர்கள் அவர்களை ஜுத், மெய்த், சியபஜாப், அஹமிரா, அஸ்விர என்றழைத்தனர். இந்துக்கள் அந்தளவிற்கு பெருபான்மயினராகவும், செல்வாக்குடனும் இல்லாமலிருந்தால் தான், அவர்களால் அங்கு கோவில் கட்டிக் கொள்ள முடிந்தது.
இந்துக்கள் முக்கியமான வேலைகளில் அமர்த்தப்பட்டது எப்படி, ஏன்?: டபிள்யூ. எச். சித்திக்கி என்பவர் இந்த வார்த்தைகளுக்கு என்ன பொருள் என்று விளக்கியுள்ளார்[9]. இங்கு “அஸ்விரா” என்ற சொல்லிற்கான விளக்கம் முக்கியமாக உள்ளது. இந்தியர்கள் ராணுவம், கருவூலம், ஜெயில்-பாதுகாப்பு, சமையல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள், ஏனெனில் அவர்கள் “மிக்க பலசாலிகள் மற்றும் வீரர்கள்”, “சிந்து பகுதிகளிலிருந்து வந்த சிவப்பானவர்கள்” மற்றும் “நம்பிக்கையுள்ள காப்பாளிகள்” என்றெல்லாம் விவரிக்கப்பட்டுள்ளார்கள். அவ்வாறான இந்துக்களை இந்தியாவிலிருந்து வரவழைத்து அங்கு “நம்பிக்கையான—பாதுகாப்பு-கருவூலம்” போன்ற வேலைகளுக்கு அமர்த்தப்பட்டார்கள் என்பதைவிட, அவர்கள் அங்கேயே வாழ்ந்து வந்ததால், அக்காலம் வரை இந்துக்கள் அதிகமாக இருந்தார்கள் என்பதினால், அவர்கள் வேலைக்கு அமர்த்தப் பட்டார்கள் என்று தெரிகிறது. அந்த அளவிற்கு இந்துக்கள் சிறந்திருக்கும் போது, அவர்களது மதம் மற்றும் மதகுருக்கள் முதலியோர் அங்கு சிறந்திருந்தன என்பதில் வியப்பில்லை. அதனால்தான் 16 மற்றும் 22 அடி உயரமுள்ள விக்கிரங்களைப் பிரதிஸ்டை செய்து வழிபட்டனர் என்றுள்ளது.
ஹிந்த்–ஹிந்த்ஸா–ஹிந்தானி: “அஸ்விரா” என்ற வார்த்தை “அஸ்வவரா” என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. இந்தியாவில் செய்யப்பட்ட கத்திகள் மிகவும் சிறந்தவை, மெல்லியவை ஆனால் கெட்டியானவை, வளைக்கக்கூடியதாக உள்ளவை ஆனால் உடையாதவை என்று “சைஃப் அல்ஹிந்த்”, “ஹிந்தி”, “முஹான்னித்”, “ஹிந்தானி”, “ஹந்தவானி” அதாவது “ஹிந்தியாவிலிருந்து / இந்தியாவிலிருந்து” வந்தவை என்று பொருள். இந்தியப்பொருள்கள் எல்லாம் அரேபியமொழியாக்கம் பட்டு வழங்கி வந்தன. கபூர் (கற்பூர்=கற்பூரம்), ஜென்ஜ்பீல் (ஜெஞ்பீர்=இஞ்சி), ஃபுல்ஃபில் (பீபல்=அரசமரம்), சஜ் (சக்வான்), குஸ்த் (குஸ்தா), தாஜி (தரி), கரான்புல் (கரான்ஃபூல்) என்று சமஸ்கிருதச் சொற்கள் மாற்றப்பட்டவை என்று எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இதைத்தவிர அரிசி, தோகை போன்ற தமிழ்சொற்களும் காணப்படுகின்றன. ஆகவே, 1300 வருடங்களுக்கு முந்தைய அரேபிய வரலாற்றை மறந்து, மறுத்து, மறைத்து உண்மை வரலாறு படிப்பதாகாது. மூலங்களை மறைத்து, எந்த நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம் உண்மையினை அறியமுடியாது. அப்படி மறைத்தால் புதியதாக வந்துள்ளது என்று பொருளாகிவிடும்.
இந்திய புத்தகங்கள் அரேபியமொழியில் மொழி பெயர்க்கப்பட்டது, பிறகு இலத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டது, ஐரோப்பிய நாடுகளில் பரவியது: முகமது மறைந்து நூற்றாண்டுகளில் அப்பாஸித் காலத்தில் (8-9 நூற்றாண்டுகள்) பாரதத்திலிருந்து சமஸ்கிருதப் பண்டிதர்கள் வரவழைக்கப் பட்டு, இந்திய மருத்துவ, வானியல் முதலிய நூற்கள் அரேபிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. அப்பாஸித் சுல்தான்கள் 750-1242 வரை பாக்தாத்லிருந்து ஆட்சி செய்து வந்தனர்[10]. பாக்தாத், கெய்ரோ, கர்டோவா முதலிய இடங்களில் ஏற்படுத்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் அவர்கள் பெரும்பாங்காற்றினர். “விஸ்வவித்தியாலயா” என்பவர் அக்காலத்தில் பாரதத்தில் தான் பிரபலமாக இருந்தன. அதனால் தான், உலகம் முழுவதும் அறிஞர்களே அங்குச் சென்று படித்துச் சென்றனர். பைதாகோரஸ், பிளாட்டோ முதலியோர் வந்து சென்றது முன்னமே குறிப்பிடப்பட்டது.
அப்பாஸித் காலத்தில் இந்திய புத்தகங்கள் அரேபிய மொழியில் மொழி பெயர்க்கப் பட்டது: அப்பாஸித் காலத்தில் (8-9 நூற்றாண்டுகள்) பாரதத்திலிருந்து சமஸ்கிருதப் பண்டிதர்கள் அரேபியா சென்றுவரக்கூடிய நிலைமை இருந்தது. காலிப் அரூன் அல்-ரஷீத் (786-809) மற்றும் அல்-மா’மூன் (813-33) காலத்தில் பல நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன[11]. அப்படியென்றால் அவர்களுக்கு சமஸ்கிருதம்-அரபி இரண்டு மொழிகளும் தெரிந்திருந்தது என்றாகிறது. பிறகு அரேபிய எழுத்தாளர்கள் மற்றும் உள்ளூர் மருத்துவர்கள் இந்தியமுறைகளை மாற்றி மற்றும் தங்களது சொற்களைச் சேர்ந்து எழுதினர். அமீர் பஹர் அல்-ஜாஹிஸ்[12] (பாஸ்ராவைச் சேர்ந்தவர், 869ல் இறந்தார்), அல்யாகுபி[13] (900ல் இறந்தார்), அபூ மஷார் அல்-பல்கி[14] (885ல் இறந்தார்), முதலியோர் அரேபிய மருத்துவ முறைகளில் இருக்கும் இந்திய தாக்கத்தைப் பதிவு செய்துள்ளனர். அரேபியர்களுக்கு எல்லாம் தெரிந்திருந்தது என்றால், அவர்கள் இந்திய பண்டிதர்களை அங்கு வரவழைத்திருக்க வேண்டாம். முன்னரிருந்தவர்கள் தங்களது பாரம்பரையத்தை படிப்பிலும் தொடர்ந்திருந்தால், அந்நிலை ஏற்பட்டிருக்காது. ஆனால், அவர்கள் தங்களது பாரம்பரியங்களை மறந்ததினனலும், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆட்சிகளில் மாற்றுமுறைகள் ஏற்படுத்தியதாலும், பழயவை மறக்கடிக்கப்பட்டிருக்கலாம். இதனால் தான், சரித்திரரோதியில் பிரச்சினை வருகிறது.
அரேபியர்மூலம் இந்தியபுத்தகங்கள் ஐரோப்பிய நாடுகளில் பரவியது: 9-11 நூற்றாண்டுகளில் அரேபிய மருத்துவர்கள், இந்தியமருத்துவ முறைகள் பலவற்றை தமது நூல்களில் சேர்த்துக் கொண்டுள்ளனர், தகவமைத்துக் கொண்டுள்ளனர். இவை 13ம் நூற்றாண்டில் இலத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டு, ஐரோப்பிய நாடுகளில் பொதுப் புத்தகங்களாக உலா வந்தன. இந்தவிதமாக இந்திய மருத்துவமுறையைப் பற்றிய ஞானம் இடைக்காலத்தில் ஐரோப்பாவில் தெரியவந்தது. முதலில் அரேபியர்கள் மூலம் அறிந்தததால், அவை அரேபியர்கள் தான் கண்டுபிடித்தனர், உருவாக்கினர் என்று தவறாகப் புரிந்து கொண்டு “அரேபிய மருத்துவம்”, “அரேபிய எண்கள்”, “அரேபியப் பொருட்கள்” என்று ஐரோப்பியர் குறிப்பிட்டனர். ஆனால், பிறகு உண்மையறிந்துதான், இந்தியாவிற்கு வரத்துடித்தனர். யுனானி மருத்துவத்தை கூர்மையாக ஆராய்ந்து பார்த்தால், எதோ இந்தியமுறையில் உள்ளவற்றிற்கு முன் “அல்” என்ற வார்த்தையைச் சேர்ந்தால் யுனானியாகிவிடுகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. மருத்துவமுறைகள், நிச்சயமாக இடத்திற்கு இடம், சுற்றுச்சூழல், மக்களின் நிலை முதலியவற்றிர்கேற்றபடி மாற்றப்பட்டிருக்கும் அல்லது தகவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், அடிப்படை சித்தாந்தங்கள் ஒன்றாக உள்ளது, மருத்துவமுறைகளில் உள்ள சமந்தத்தைக் காட்டுகிறது.
அரேபியாவில் அதர்வண வேதத்தைப் பின்பற்றியவர்கள் இருந்தார்களா?: குரேஷி மக்களுக்கும் முகமது நபியைப் பின்பற்றுபவர்களுக்கும் இருந்த சண்டைகளில் அவர்கள் மிகவும் களைத்து விட்டார்கள். அதாவது குரேஷிகள் அவர்களை எதிர்த்து கொல்லப்பட்டப்வர்களின் பிணங்களைச் சேதப்படுத்துவதில் மிகவும் களைத்து விட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது[15]. ஹிந்த் என்பவள் ஓத்பா என்ற குரேஷியின பெண்ணின் மகள், அபு சுபியாவின் மனைவி. இப்பெண்கள் ஹம்ஜா / ஹம்ஸா என்ற பெண்ணின் இதயத்தைக் கிழித்து, பிணங்களின் காதுகள், மூக்குகள் அறுத்து அவற்றை கழுத்தணியாக செய்துகொண்டு அணிவித்துக் கொண்டனர். அதாவது அப்பெண்கள் அப்படி வஞ்சம் தீர்த்துக் கொண்டனர் என்பதைவிட, அத்தகைய முறைகள் இருந்துள்ளன என்று தெரிகிறது. இவை மறைமுகமாக மந்த்ர-தந்தர-யந்த்ர முறைகள் பின்பற்றியதாகக் கொள்ளலாம். இந்தியாவில் குற்றம் செய்த பெண்களைக் கொல்வதில்லை, மாறாக மூக்கு-காது இவற்றை அறுத்து உயிருடன் விட்டுவிடுவது வழக்கம். பிறகு அவர்கள் அறுவைசிகிச்சை மூலம் சரிசெய்து கொள்ளலாம். இம்முறை மஹாரஷ்ட்ரத்தில் 19ம் நூற்றாண்டு வரை இருந்தது.
முஹம்மது–காலத்திற்கு–முந்தைய / இஸ்லாமிய– காலத்திற்கு–முந்தைய–அரேபியாவில் இருந்த இந்துக்களின் விக்கிரங்கள்: அரேபியாவில் சிவன், சிவசக்தி, மும்மூர்த்தி வழிபாடுகள் இருந்தன என்பதற்கான அகழ்வாய்வு ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன. நபி வீனஸை வழிபட்டுவந்தார் என்றுள்ளது. சந்திரன் அவகளுக்கு விருப்பமான கடவுளாக இருந்தது. குரானிலேயே “அல்லாவின் மூன்று மகள்கள்” என்று அல்-மனத், அல்-லத், அல்-உஜ்ஜா என்று மூன்று பெண்தேவதைகளின் பெயர்கள் காணப்படுகின்றன. இவையெல்லாம் முஹம்மது-காலத்திற்கு-முந்தைய-அரேபியாவில் / இஸ்லாமிய- காலத்திற்கு-முந்தைய-அரேபியாவில் (Pre-Mohammedan Arabia / Pre-Islamic Arabia) இருந்தன என்று எழுதப்படுகிறது. 11ம் நூற்றாண்டின் பாரசீக குறும்சித்திரத்தில் காபா-வளாகத்தில் இருந்த 360 விக்கிரங்கள் எப்படி அழிக்கப்பட்டன என்பதனை விளக்குகிறது அதாவது சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சியை இச்சித்திரம் விவரிக்கிறது. இச்சித்திரம் பைபிளியோதெக் நேஷனல், பாரிஸ். (the Bibliotheque Nationale, Paris) என்ற ஆவணக்காப்பகத்தில் உள்ளது.
காபாவில்இருந்த 360 விக்கிரங்கள்உடைத்தழிக்கப்பட்டது: அச்சித்திரம் இடது பக்கமேல்மூலையைக் காட்டுவதாக உள்ளது. மூலையிலிருது இருபக்கமும் ஆறு விக்கிரங்கள் இருப்பதாக உள்ளது. தலையில் கிரீடம், இரு கைகள் உயர்த்தப்பட்ட நிலையில் அவற்றில் ஆயுதங்கள் இருப்பது போல உள்ளன. பீடத்தின் மேலே பத்மாஷணத்தில் உட்கார்ந்திருக்கின்றன. அவற்றைப் பார்க்கும்போதே அவையெல்லாம் இந்துக்களின் விக்கிரங்கள் என்று பார்ப்பவர் யாராக இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம். அவை எவ்வாறு அழிக்கப்பட்டன என்று படிப்படியாக சித்தரிக்கப்பட்டுள்ளன:
- நுற்றுக் கணக்கான வீரர்கள் கைகளில் தடி, கடப்பாரைப் போன்ற கருவிகளுடன் விக்கிரங்களை நெருங்கி வருகிறார்கள்.
- நபியின் ஆணைப்படி, உடைக்கிறார்கள், நபி ஒரு வெள்ளைக் குதிரையின் மீது உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
- மூலைப்பகுதியில் 13 சந்நிதானங்களில், 13 விக்கிரங்கள் உள்ளன. உடைந்த நான்கு விக்கிரங்கள், தரையில் வீழ்ந்து கிடக்கின்றன.
- பீடத்தில் இருந்த விக்கிரகம் தலைகீழாகப் புரட்டப் பட்டு, தீ வைத்துக் கொளுத்தப்படுகிறது.
- இன்னொன்று பீடத்திலிருந்து தள்ளிவிடப்பட்டு, தலை, கால்கள் முதலியவை துண்டு-துண்டாக உடைக்கப்பட்ட நிலையில் உள்ளது.
- ஒரு விக்கிரகத்தில் உள்ள கடவுள் / தேவதை, அஒயப்பன் போன்றே கால்களை வௌத்துக் கொண்டு உட்கார்ந்த நிலையில் காணப்படுகிறது.
- ஒரு விக்கிரத்தின் முண்டம் கீழே தரையில் காணப்படுகிறது. அருகில் தலையுள்ளது.
- இன்னொரு உடைந்த விக்கிரத்தின் மீது, ஒருவன் நின்றுக் கொண்டிருக்கிறான்.
629ல் நபி மெக்காவிற்கு வந்தபோது, மணிஃப் (Manif) என்ற விக்கிரத்தை உடைத்து தனது கால்களின் கீழ் போட்டு மிதித்தார்[16]. அவர்களைப் பின்பற்றியவர்களும், இப்படி விக்கிரங்களை அழிப்பது, நபியின் வழி என்று பின்பற்றினர். இதனால், உலகில் பல ஆதாரங்கள் அழிந்தன. அரேபியர் ரோம் மற்றும் பாரசீக நாகரிகங்களை அழித்தனர்.
ஹிந்த் உம் சல்மா, ஹிந்த் முதலிய இந்தியப் பெண்மணிகள்: அபு சுபியாவின் மனைவி ஹிந்த் என்பவள் ஓத்பா என்ற குரேஷியின பெண்ணின் மகள், என்று குறிப்பிடப்பட்டது. அதேபோல முகமது நபியின் மனைவிகளில் ஒருத்தியின் பெயர் ஹிந்த் உம் சல்மா என்பதாகும்[17]. இங்கு “ஹிந்த்” என்றால் ஹிந்து மற்றும் இந்தியப் பெண்மணி என்று பொருள்படும். ஹிந்த் = இந்தியாவிலிருந்து; ஹிந்தஸா = இந்திய எண்கள், இந்தியாவிலிருந்து வந்தவை; சிந்த்-ஹிந்த் = சித்தாந்த் = இந்திய வானியல் நூல்களைக் குறிக்கும். எனவே ஹிந்தியாவின் தாக்கம் அதிகமாகவேயுள்ளது. பர்தௌஸ்-உல்-ஹிகமத்[18] என்ற புத்தகம் இந்திய மருத்துவத்தை (ஆயுர்வேதம்) அதிகமாகவே விளக்கியுள்ளது. ஆகவே முகமதுவிற்குப் பிறகு, இஸ்லாம் தோன்றிய பிறகு 11ம் நூற்றாண்டு வரை, பாரதத்துடன் நல்லுறவை அரேபியர்கள் வைத்திருந்தார்கள் என்று தெரிகிறது. இருப்பினும் 712ல் சிந்துவின் மீது அரேபியர் எப்படி படையெடுத்துவந்து நாசப்படுத்தினர் என்று தெரியவில்லை. ஆகவே, தீவிரவாத இஸ்லாம் பிரிவுகள், மிதவாதப் பிரிவுகளை விஞ்சியது என்று தெரிகிறது. பிறகு வந்தவர்கள் மதவெறியுடன் செயல்பட்டபோது, காந்தாரம், சிந்து முதலிய வடமேற்கில் இருந்த பாரதத்தின் பகுதிகள் பாதிக்கப்பட்டன. பௌத்தர்கள் பெரும்பாலும் கொல்லப்பட்டனர், அல்லது மதம் மற்றப்பட்டனர், தப்பித்தவர்கள், சீனா, திபெத் நாடுகளுக்கு ஓடினர். வேதமதத்தினருக்கும் அதேகதிதான் ஏற்பட்டது.
வேதமதம் மாற்றப்பட்டது, மாறியது, திரிந்தது: ஆதிசங்கரர் தனது காலத்தில் இருந்த நூற்றுக்கணக்கான நம்பிக்கையாளர்களை ஒன்றிணைக்கக் கடும்பாடு பட்டாகவேண்டியிருந்தது. வேதங்களை அறிவுபூர்வமாக மட்டுமல்லாது, செயல்படுத்துவதிலும் மக்கள் பல மாற்றுமுறைகளைக் கையாளத்தொடங்கினர். ஜைன-பௌத்தர்களின் மந்திர-தந்திர-யந்திர முறைகள் பலக்குழுக்களால் பின்பற்றப்பட்டு வந்தமையால், முன்னமே எடுத்துக் காட்டியபடி, பற்பல மாற்றங்கள், திரிபுகள், துஷ்பிரயோகங்கள் ஏற்பட்டன. இதனால் வேதமதத்தினரும், போட்டியாக புதியமுறைகளை புகுத்த ஆரம்பித்தனர். யாகங்களை தமது இச்சைகளுக்காக நடத்த ஆரம்பித்தனர். மந்திரப்புருஷர்களை தத்தமது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள, ஏவலிட ஆரம்பித்தனர். அதர்வணவேதம் வெறும் பில்லி, சூன்னியம், ஏவல் போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால்தான் ஆசாரமிக்க வேதமதத்தினர் அவர்களை ஒதுக்கி வைத்தது. அதனால் அக்கால அரேபிய மக்கள், கிரேக்கர்களைப் பொன்றே பிராமணர்களில் தாழ்ந்தவர்களாக (degraded), விலக்கி வைக்கப்பட்டவர்களாக (excommunicated) பிரிந்து போனவர்களாக, இந்தியமுறைகளினின்று மாறுபட்டவர்களாகக் கருதப்பட்டனர். இதனால்தான் அதர்வணவேதம் “சதுர்வேதங்களில்” சேர்க்கப்படாமல் “திரிவேதங்களாக” இருந்தன. “திரிவேத-சதுர்வேத” பிரச்சினைகள் இதனால் தான் வந்தது.
ஆதிசங்கரரின் அரேபிய விஜயம் (509-477 BCE / 788-820 CE): சங்கர திக்விஜயத்தில், ஆதிசங்கரர் பற்பல நாடுகளுக்குச் சென்றபோது, வடமேற்கிலுள்ள பஹ்லிக[19], காந்தாரம், பாரசீகம் மூலமாக அரேபியாவிற்குச் சென்றதாக[20] குறிப்புள்ளது[21]. அக்காலத்தில் காபாலிகர், காலபைரவர், காளாமுகர், பாசுபத, லகுலீஸ போன்றோர் வாமச்சாரியம் என்ற கொடுமையான மந்திர-தந்திர-யந்திர முறைகளை அவர்கள் கடைப்பிடித்து, மக்களைத் துன்புறுத்த உபயோகப்படுத்தி வந்தனர். மேலும் அக்குழுக்கள் தங்களுக்குள் தங்களுடைய தேவதை-கடவுள் தான் பெரியது, சக்திவாய்ந்தது என்று சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதனால், ஆதிசங்கரர் தர்க்கரீதியில் மற்றுமல்லாது (அத்தி.10), மற்றமுறைகளிலும் மற்றவர்களை எதிர்கொள்ளவேண்டியதாயிற்று. இதனால், –
- அவர் உடல் விட்டு உடல் மாறுதல் (அத்தி.9-10),
- மந்திர-தந்திர-யந்திர முறைகளை மூலம் அதர்வண வேதத்தை துஷ்பிரயோகம் செய்தவர்களை அடக்குதல்,
- நரசிம்ஹ மந்திரத்தை ஜெபித்து காபாலிகனைக் கொல்லுதல் (அத்தி.11),
- ஆகாயத்தில் பறந்து அரேபியாவிற்குச் சென்று அங்குள்ளவர்களை அடக்குதல்,
- ஜைன-பௌத்தர்களை வெல்லுதல் (அத்தி.15), போன்ற செயல்களைச் செய்துள்ளதாக திவ் மந்திர-தந்திர-யந்திர முறைகளை திக்விஜயங்கள் கூறுகின்றன.
- தனக்கே கொடிய வியாதியை கொடுத்தபோது, சிவனை ஜெபித்து, அஸ்வினிகுமாரர்கள் அனுபு வைக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை செய்து குணமானதாக விவரங்கள் உள்ளன (அத்தி.16).
பிறகு அவர்களுக்கு வேதாந்தத் தத்துவத்தை போதித்தார். இதனால் அவர்கள் பற்பல தெய்வங்களை வழிபட்டு, பின்பற்றி வந்தவர்கள், சிலவற்றை நம்பி வழிபாடு செய்யும் முறைக்களுக்குள் வந்தனர். இன்றும் அரேபிய தீபகற்பத்தில் இருக்கும் இஸ்லாமிய நாடுகளில் கிடைக்கும் அகழ்வாய்வு பொருட்கள் இந்திய நாகரிகத்தைப் பொன்றேயுள்ளன. இருப்பினும் அவர்கள் உலகமெங்கும் உள்ள மக்கள் அவற்றை அறிந்து கொள்ளாதவாறு அமைதி காக்கின்றனர்.
சங்கர திக்விஜயத்தில் மருத்துவகளைப் பற்றிய குறிப்புகள்: அபிநவகுதன் என்பவன் மந்திரத்தால், ஏவல் செய்து ஆதிசங்கருக்குக் கொடிய நோயை உண்டாக்குகிறான். அந்நிலையில், முதலில் தனது நோயைக் குணப்படுத்த மருத்துவர்களின் சிகிச்சையை மறுத்தாலும், பிறகு ஒப்புக் கொள்கிறார். அப்பொழுது, கீழ்கண்ட விவரங்கள் தரப்படுகின்றன:
- நோய் என்பது முந்தைய ஜென்பங்களில் செய்த காரியங்களின் பலன் (இப்பொழுது ஜீன்கள் தாம் காரணம் என்று கூறுகின்றனர்). ஆகையால் இஜ்ஜென்மத்தில் அனுபவிக்கவேண்டிய நோய்களை தவித்தால், அடுத்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டியிருக்கும் (16-9).
- நோய்முறைகளை அறிந்தவர்கள் கூறுவதாவது, நோய் இரண்டுமுறைகளில் வருகின்றன.
i. பழைய காரியங்கள், ஒருவர் கடந்த காலத்தில் செய்த காரியங்கள்.
ii. எந்திரியங்களின் கட்டுப்பாட்டை மீறி செய்த காரியங்கள்.
முன்னதை கடந்த காரியங்களின் விளைவுகள் அழித்துதான் குணப்படுத்த முடியும், பின்னதை மருந்து மூலம் குணப்படுத்தலாம் (16-10).
- எனக்கு வந்துள்ள நோயை அனுபவித்துதான் தீர்க்கவேண்டும். அதனால் நான் எந்தவிதமான சிகிச்சையும் பெறவிரும்பவில்லை. இதனால் நான் இறந்தாலும் பரவாயில்லை (16-11).
- இந்த நாட்டில் மருத்துவர்கள் அதிகமாக இல்லை. ஆனால் நோயாளிகளோ அதிகமாக உள்ளார்கள். அதனால் நோய்களைப் போக்க அவர்கள் உங்களைத் தேடி அலையும் போது, நீங்கள் அங்குபோக வேண்டும்”, என்று மருத்துவர்களுக்கு அறிவுருத்துகின்றார் (16-24).
- நோயாளிகள் நோய்களை உண்டாக்கிக் கொண்டதற்குக் காரணமாக இருந்தாலும், அவர்களைக் காக்கவேண்டிய பொறுப்பு மருத்தவர்களுக்குள்ளது. அது அவர்களுக்குக் கடமையாகிறது. மருத்துவர்கள் அத்தகையவராக இல்லாவிட்டால், அவர்கள் மருத்துவர்களாக இருப்பதே பிரயோஜனமில்லை, அவர்கள் பிறந்ததும் வீணே. ஏனெனில் மருத்துவர், விஷ்ணுவைப் போலாகிறார், அதாவது அவர் எல்லோரையும் காக்கிறார்” (16-25).
இவையெல்லாம் இக்கால மருத்துவ ஒழுங்குமுறை, வைத்திய-நீதிமுறை, கட்டுப்பாடு, தரநிர்ணயம் போன்ற விதிகளைப் போன்றுள்ளன.
ஆதிசங்கரர் அரேபியாவிற்கு எப்பொழுது சென்றிருப்பார்?: சங்கர விஜயத்தின்படி, ஆதிசங்கரர் அரேபியாவிற்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு போதித்தாக உள்ளது. ஆனால், அவருக்கு இரண்டு தேதிகள் கொடுக்கப்படுகின்றன –
- 509-477 BCE காலம்.
- 788-820 CE காலம்.
இதிலும் 1200 வருடங்கள் வித்தியாசம் வருவதைப் பார்க்கலாம். சரித்திர ஆசிரியர்கள் 788-820 CE தேதியைப் பரவலாக ஒப்புக் கொண்டுள்ளனர். அப்படியென்றால் இக்காலத்தில் அவர் அரேபியாவிற்கு சென்றிருக்கவே முடியாது. ஏனெனில், இஸ்லாம் அப்பொழுதுதான் உச்சக்கட்டத்தில், பலநாடுகளிலும் பரவ ஆரம்பித்தது. முகமதியர்கள் தங்களது படைகளுடன், மற்ற நாகரிகங்கள் மீது படையெடுத்துச் சென்று அழித்து வந்தனர். எனவே அக்காலத்தில் அவர் அங்கு சென்றால் என்பதை நினைத்துக் கூட பார்க்கமுடியாது. எனவே, 509-477 BCE காலத்தை எடுத்துக் கொண்டு ஆராய்ந்தால், அத்தகைய வாய்ப்புள்ளது. ஏனெனில், அப்பொழுது, மற்ற மதத்தலைவர்கள், ஞானிகள், தத்துவஞானிகள் முதலியோர், மற்ற நாடுகளுக்குச் சென்று வந்ததாக உள்ளது. பைதாகோரஸ் போன்றோர் இந்தியாவிற்கு வந்துள்ளபோது, ஆதிசங்கரர் அரேபியாவிற்குச் சென்றதில் ஒன்றும் வியப்பில்லை. மேலும், அங்கிருந்த இந்துக்கள், விக்கிர ஆராதனையாளர்கள், காஃபிர்கள் அவரை வரவேற்று உபசரித்திருப்பர். அப்பாஸித் காலத்தில் சமஸ்கிருத பண்டிதர்கள் வரவழைக்கப்பட்டார்கள் என்பதனை நினைவு கூரத்தக்கது. அதாவது 500 BCEலிருந்து 700 CE வரை – 1200 ஆண்டுகளாக எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால், அதற்குப் பிறகு, முகமதியர் இந்துக்களுக்கு எதிராக கிளம்பியுள்ளனர்.
© வேதபிரகாஷ்
23-09-2012
[1] Syed Ameer Ali, The Spirit of Islam – A History of the Evolution and Ideals of Islam with a life of the Prophet, University Paperpacks, Methuen & Co., London, 1967, p.lxiv.
Hered and sixty idols, were ranged the three hundred idols, one of each day, round the great god Hobal, carved of red agate, two ghazalas, gazelles of gold and silver,and the imageof Abraham nd of his son. Here the tribes came, year after year, “to kiss the black stone which had fallen from heaven in the primeval days of Adam, and to make the seven circuits of the temple naked.”.
[2] 600ல் வெள்ளத்தினால் காபா அழிக்கப்பட்டதால், திரும்பவும் குரேஷி மக்கள் கட்டினர். 605ல் இது புனர்நிர்மாணம் செய்து கட்டப்பட்டது என்றும் உள்ளது.
[3] Syed Ameer Ali, The Spirit of Islam – A History of the Evolution and Ideals of Islam with a life of the Prophet, University Paperpacks, Methuen & Co., London, 1967, p.108.
[4] Muhammad Alshareef, A Woman’s Guide To Hajj, full article can be read or downloaded from here:
http://www.performhajj.com/women_guide_to_hajj.php
http://www.performhajj.com/women_guide_to_hajj.php
[5] Muhammad Alshareef, A Woman’s Guide To Hajj, full article can be read or downloaded from here:
http://www.performhajj.com/women_guide_to_hajj.php
http://www.performhajj.com/women_guide_to_hajj.php
[6] எட்டாவது நூற்றாண்டில் அரேபியர் சிந்துமாகாணத்தை வெற்றிக் கொண்டு, 12ம் நூற்றாண்டில் தில்லி வரை நுழைந்தனர். 16ம் நூற்றாண்டில் வடவிந்தியா முழுவதையும் ஆதிக்கத்தில் கொண்டு வந்து 18ம் நூற்றாண்டுகளில் (1707ல் ஔரங்கசீப்பின் மறைவிற்குப் பிறகு) தென்னகத்தில் அவர்களுடைய பிரதிநிதிகள் என்றமுறையில் நவாப்புகளின் ஆட்சி ஏற்படுத்தப் பட்டது.
[7] Journal of Royal Asiartic Society, 1904, p.209.
[8] R. C. Majumdar, The Age of Imperial Unity, Bharatiya Vidhya Bhawan, Bombay, p.633.
[9] W. H. Siddiqi, India’s Conribution to Arab World, in India’s Contribution to World Thought, Vivekananda Kendra, Madras, 1970, pp.577-588.
[10] Syed Ameer Ali, The Spirit of Islam – A History of the Evolution and Ideals of Islam with a life of the Prophet, University Paperpacks, Methuen & Co., London, 1967, pp.498-497.
[11] சிந்துபாத், ஆயிரத்தோரு இரவுகள் போன்ற கதைகள் எல்லாம் இந்தியக்கதைகளைத் தழுவி, மாற்றி இக்காலத்தில்தான் எழுதப்பட்டன.
[12] M. Z. Siddhiqi, History of Arabic and Pesian Medical literature, Calcutta, 1959, p.32; See also Islamic Culture, Issue.6, p.624, 1932.
O. P. Jaggi, Indian Influence on Arab Medicine, in History of Science, Technology and Medicine in India, Vol.VIII, Atma Ram & Sons, New Delhi, 1981, pp.73.
[13] M. Z. Siddhiqi, History of Arabic and Pesian Medical literature, Calcutta, 1959, p.33; See also Islamic Culture, Issue.6, p.624, 1932.
O. P. Jaggi, Indian Influence on Arab Medicine, in History of Science, Technology and Medicine in India, Vol.VIII, Atma Ram & Sons, New Delhi, 1981, pp.74.
[14] M. Z. Siddhiqi, History of Arabic and Pesian Medical literature, Calcutta, 1959, p.41; See also Islamic Culture, Issue.6, p.624, 1932.
O. P. Jaggi, Indian Influence on Arab Medicine, in History of Science, Technology and Medicine in India, Vol.VIII, Atma Ram & Sons, New Delhi, 1981, pp.75.
[15] Syed Ameer Ali, The Spirit of Islam – A History of the Evolution and Ideals of Islam with a life of the Prophet, University Paperpacks, Methuen & Co., London, 1967, pp.70-71.
[16] H. G. Wells, The Outline of History, Cassel & Co., U.K, 1932, p.603.
[17] Syed Ameer Ali, The Spirit of Islam – A History of the Evolution and Ideals of Islam with a life of the Prophet, University Paperpacks, Methuen & Co., London, 1967, p.235.
[18] Firdaus-ul Hikamat of Ali B. Rabban-al-Tabari, B.D.M.H, 1963, 1, 1, p.26.
[19] K. V. Subbaratnam (Trans.), Madhaviya SrimacCankaradhikviya, Akhila Bharata Sankara Seva Samiti, Vani Vilas Press, Sri Rangam, 1972, Chapter.XV, verses.142-143.
[20] K. V. Subbaratnam, The Date of Sri Sankara, Sri Vani Vilas Press, Sri Rangam, 1987, p.24.
Based on “Vimarsa”, in which it has been mentioned that Sankara visited Arabia through sky and stood poised in the sky for 64 days and taught threefold Vedic Wisdom of Karma, Upasana and Jnana to the yogins who lived there that these instructions were given in the Arabic language and recorded verbatim by the disciples yogins and that these records form the Holy Quran!
[21] ஸ்ரீவித்யாரண்யர், ஸ்ரீமச்சங்கராதிக்விஜயஹ (ஸ்ரீமாத்வீய ஸ்ரீமச்சங்கராதிக்விஜயஹ), அகிலபாரத சங்கர சேவா சமிதி, ஸ்ரீவாணிவிலாச முத்ரரலய, ஸ்ரீரங்கம், 1972.
No comments:
Post a Comment