Saturday 4 April 2015

உனக்கு ஹிந்து மதத்தை மட்டும் பிடிக்க என்ன காரணம்?

கேள்வி : உணக்கு ஹிந்து மதத்தை மட்டும் பிடிக்க என்ன காரணம்? மற்ற மதங்களில் நீ என்ன குறைகண்டாய்? உடனே நபி பெண்பித்தன் கிருஸ்துவர்கள் மதவியாபாரிகள் என்று அவர்களை திட்ட ஆரம்பிக்காதே ஹிந்து மதத்தை உணக்கு கண்மூடிதனமாக பிடிப்பதற்கான ஒரு காரணத்தையாவது கூறு பார்கலாம்

பதில் : ஹிந்து மதத்தில் எனக்குப் பிடித்த கூறு அதன் பன்முகத்தன்மைதான். (ஹிந்து மதம் என்று ஒன்று இல்லவே இல்லை, அது பல “மதங்களின்” இணைப்பு என்று ஆரம்பிக்காதீர்கள். பல நூறு வருஷங்களாக ஹிந்து மதம் என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அதற்கு முன்பும் பல நூறு வருஷங்கள் பல வைணவம், சமணம், சைவம், கௌமாரம், காணாபத்யம், சாக்தம், கபாலிகம், மூத்தார் வழிபாடு, இயற்கை வழிபாடு என்று பல “மதங்கள்” – ஆனால் ஒன்றுகொன்று தொடர்புள்ளவை – இருந்தன.) மதம் என்பது ஒரு பர்சனல் விஷயம், உனக்கு எது சரிப்படுகிறதோ அதை நீ

கடைப்பிடிக்கலாம், உருவ வழிபாடா, சடங்குகளா, கர்ம யோகமா, நாத்திகமா, சங்கீத பஜனையா, நாமாவளியா, கணவனை வழிபடுவதா, அம்மா/அப்பா வழிபாடா, எது உனக்கு ஒத்து வருகிறதோ அதை செய் என்ற ஒரு அடிப்படை இந்த மதத்தில் எப்போதும் இருந்து வருகிறது. இன்றும் கூட ஹிந்து மதக் “கோட்பாடுகள்” அனைத்தும் optional guidelines மட்டுமே. கீதையை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் ஹிந்துவாக இருக்கலாம். கோவிலுக்கு போகாவிட்டாலும் ஹிந்துவாக இருக்கலாம். வேதங்களை நிராகரித்தாலும்ஹிந்துவாக இருக்கலாம். தேவாரத்தை, திவ்யப் பிரபந்தத்தை, விபூதியை, நாமத்தை, குங்குமத்தை, அய்யா வைகுண்டரை, சங்கராச்சாரியாரை, குன்றக்குடி அடிகளாரை, மேல்மருவத்தூர் சாமியாரை யாரை வேண்டுமானாலும் ஏற்கலாம்/நிராகரிக்கலாம், உங்கள் ஹிந்து அடையாளத்துக்கு எந்த பாதிப்பும் வராது.


ஆபிரகாமிய மதங்களில் எனக்கு பிடிக்காத கூறும் அதன் “My way or the highway” அடிப்படைதான். என்னை வழ்படுபவர்களுக்கு சொர்க்கம், வழிபடாதவர்களுக்கு நரகம் என்று ஒரு கடவுள் சொல்வது என்னுடைய கடவுள் கருத்தாக்கத்தில் ஒரு இழிவான செயல். ஒரு ஜட்ஜ் என்னை your honor என்று சொல்பவர்களுக்குவிடுதலை, சொல்லாதவர்களுக்கு தண்டனை என்று சொன்னால் அவரது நீதி பரிபாலனத்தைப் பற்றி என்ன நினைப்போம்? என்னுடைய கடவுள் நீதியை, மனிதனின் ஒழுக்கத்தை, நல்ல செயல்களை ஊக்குவிப்பவர். கருணையே நிறைந்த ஒரு தாயைப் போன்றவர். அவர் சில குற்றவாளிகளை மன்னித்து தண்டனை தராமல் இருக்கலாம். ஆனால் அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்று பாட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தால், மனித குலத்துக்கு தரும் டென் கமான்ட்மென்ட்சில் பாதி என்னை வழிபடு, அடுத்தவனை வழிபடாதே என்றே இருந்தால், அது என் கண்ணில் ஒரு மாற்று குறைவாகத்தான் தெரிகிறது.
இது என் கருத்து; கிருஸ்துவர்கள்,முஸ்லிம்கள், வேறு மாதிரி நினைக்கலாம். அது அவர்கள் உரிமை. அவர்கள் எனக்கு வேறு கருத்து இருக்கும் உரிமையை அங்கீகரித்தால் அது போதும்.

No comments:

Post a Comment