நாத்திகர்களை விட ஆத்திகர்களுக்கு உடல் பருமன் அதிகமாக இருக்குமென கவென்ட்ரி பல்கலைக்கழகம் நடத்திய தற்போதைய ஆய்வில் கண்டறிந்துள்ளது. மதம் மற்றும் உடல்நலம் பற்றிய நாளேடு ஒன்று நடத்திய ஆய்வு ஒன்றில், மதத்தினை நம்பிக்கையாகக் கொண்டுள்ள சுமார் 7400 மக்களின் உடல்பருமனும், உடல் எடை அடர்த்தியும் அதிகமாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
இது கிறிஸ்தவர்களுக்கு மிகவும் அதிகமாக இருப்பதாக கவென்ட்ரி பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த மூத்த ஆசிரியரான டாக்டர். டெப்ராஹ் லைசெட் கூறியுள்ளார். ஒருவேளை அமெரிக்காவினை மையமாகக் கொண்டு இந்த ஆய்வுகள் நடத்தப்படுவதால் இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம். அதிகப்படியான உடல்பருமனுடன் கூடிய இடுப்பு விகிதம் கிறிஸ்தவ மற்றும் சீக்கிய ஆண்களுக்கு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் ஆங்கில மக்களிடம் மதத்திற்கும், உடல் பருமனுக்கும் உள்ள தொடர்பினைத் தெளிவாகக் கண்டறிய முடியவில்லை.
இது அங்குள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் பழக்கவழக்கங்களான புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவற்றினால் கூட மாறியிருக்கலாம். இது குறித்து மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வில் 16 வயதுக்கு மேலுள்ள, சுமார் 7414 மக்கள் கலந்துகொண்டனர். இதில் 2012 ஆம் ஆண்டின் இங்கிலாந்து மக்களின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டன. இவர்களில் மதங்களை நம்புவர்களின் உடலின் சராசரி அளவு, தேவையான உடல் எடை அடர்த்திக்கான அளவினைவிட சதுர மீட்டருக்கு 0.91 கிலோ அதிகமாக இருந்தது. மேலும் உடல் எடை அடர்த்தி சதுர மீட்டருக்கு 18.5 கிலோ முதல் 25 கிலோ இருந்தவர்கள் நல்ல ஆரோக்கியமான உடல்நிலையில் இருப்பதாகவும், உடல் எடை அடர்த்தி சதுர மீட்டருக்கும் 30 கிலோவிற்கு மேல் இருப்பவர்கள் உடல்பருமனுடன் இருப்பதாகவும் கருதப்பட்டது.
இதனடிப்படையில் அமைக்கப்பட்ட பட்டியலில் கிறிஸ்தவர்கள் அதிக பருமனுடன் முதல் இடத்திலும், சீக்கியர்கள் இரண்டாவது இடத்திலும் இருந்தனர். அதேநேரத்தில் புத்த மதத்தினை பின்பற்றுபவர்களின் உடல் எடை அடர்த்தி நாத்திகர்களைக் காட்டிலும் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் இதுபற்றிய உறுதியான ஆய்வுமுடிவுகள் இதுவரை வெளிவரவில்லை. இக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.
No comments:
Post a Comment