Wednesday, 1 April 2015

அவியலை அதிக நாட்கள் காக்க வைத்துக் கொடுப்பதற்கு முதற்கண் எனது மாப்பைக் கேட்ட்டுக் கொண்டு.......


உலகில் வாழும் மக்களை வாழ்விக்க மிகவும் முக்கியமான இரு துறைகள் மிகவும் உதவிசெய்கின்றன.
அவை 1. கலை, 2. தொழில்நுட்பம்.

வாழ்வியலுக்குத் தேவையான அனைத்தையும் தொழில்நுட்பவியலுடன் விஞ்ஞானம் எமக்குப் பெற்றுக் கொடுக்கிறது.
அதே போல வாழ்வை சுவைக்க அதன் ஒவ்வொரு தருணங்களையும் ருசிக்க கலை பெரிதும் விளங்குகின்றது.

இதன் அடிப்படையில் உலகாண்ட பெருமானான நாராயணன் தனது உடலை நீல வண்ணத்தில் கொண்டிருப்பது உலகத்தைக் குறிப்பதாகவும்.
அவன் ஒரு கையில் வைத்திருக்கும் சங்கானது இனிமையான இசையை ஒலிக்கக் கூடியதாக, கலைக்கு ஒரு குறியீடாகவும்,


அவன் மறு கையில் இருக்கும் சக்கரமானது சுழற்சியை ஏற்படுத்தும் பொறிமுறைச் சக்தியில் இயங்குவதால், தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானத்தைக் குறியீடாகக் கொண்டதாகவும்,
கொண்டு ஒரு மாபெரும் தத்துவத்தையே உள்ளடக்கிய உருவமாகக் காட்சியளிக்கிறான்.

இதுவரை உலகில் இப்படி விஞ்ஞானத்தைக் குறியீடாக காட்டிய எந்தக் கடவுளும், எந்த மத்திலும் இல்லை என்பது அரிஸ்ட்டாட்டில் முதல் ஐன்ஸ்டைன் வரை கண்டு வியந்த ஒரு விசயமாகும்.

எனவே நாம் நாராயணனை இனி வனங்கும் போது இந்த இந்துசமய அ(றி)வியல் தத்துவத்தைப் புரிந்து வணங்குவோமாக........ 

No comments:

Post a Comment