துளசி கப்பார்ட் குடும்பத் தினரின் இந்து கலாசாரம் மிகவும் பிரபலமான ஒன்று. ஹவாய் பகுதியைச் சேர்ந்த அமெரிக்க தம்பதி கரோல் மற்றும் மைக் கப்பார்ட். இவர்களுக்கு 5 குழந்தைகள் பிறந்தன. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த கப்பார்ட் தம்பதியினர், அமெரிக்காவில் பிரபலமடைந்த
கிருஷ்ண பக்தி மார்க்கத்தால் ஈர்க்கப்பட்டு அதை ஏற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து சைவத்துக்கு மாறிய இவர்கள் இந்துக்களாகவே வாழ்ந்தனர். தங்களுடைய குழந்தைகளுக்கும் கிருஷ்ண பக்தி மார்க்கத்துக்கு தொடர்புடைய பக்தி, ஜெய், ஆர்யன், துளசி, விருந்தாவன் பெயர்களையே சூட்டினர். இந்துக்களாக மதம் மாறிய இவர்கள் இந்துக்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
இதில் 33 வயதாகும் துளசி, அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றியுள் ளார். அதைத் தவிர தீவிர அரசியலிலும் ஈடுபட்டார். ஹவாய் மாகாணத் தேர்தலில் வென்றார். பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் ஹவாய் மகாணத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவியேற்பின்போது பகவத் கீதை புத்தகத்தின் மீது உறுதி எடுத்துக் கொண்டார். கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது அவரை சந்தித்த துளசி, அந்த பகவத் கீதை புத்தகத்தை பரிசாக அளித் தார். இந்து முறைப்படி நடந்த அவருடைய திருமணத்துக்கு மோடியின் சார்பில் பாஜ பொதுச் செயலர் ராம் மாதவ், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் (பொறுப்பு) தரண்ஜித் சாந்து ஆகியோர் கலந்து கொண்டனர். மோடி அனுப்பிய விசேஷ வாழ்த்து செய்தியையும் பரிசையும் துளசி தம்பதிக்கு அளித்தனர்.
No comments:
Post a Comment