Wednesday 1 April 2015

இன்றைய அ(றி)வியல்.....


எமது அனைத்து இந்துக் கடவுளர்க்கும் இரண்டு மனைவிகள் இருப்பதை நாம் அறிவோம்.
அதை இந்தப் பகுத்தறிவு பேசுவது எனச் சொல்லிக் கொள்ளும் ஒரு கூட்டம், தம்மை அறிவாளிகள் என நகைச்சுவையாக எள்ளி நகையாடிக் கொண்டிருக்கின்றது.
இந்த இரு மனைவித் தத்துவத்தின் அறிவியல் தண்மையை அறியாத இப்பாமர மக்களைக் கண்டு பக்தர்களான நாம் சிரித்துக் கொள்வதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்.

இந்து மதமே ஒரு விஞ்ஞானம் என்று சொன்னால் அது மேம்படுத்தி பில்டப்பாக இட்டுக்க்கட்டிச் சொன்ன கதையாக யாரும் எண்ணிவிட முடியாது.
அறிவீனத்தில் அனைத்து மதங்களும் மனிதர்களும் மூழ்கிக்கொண்டிருக்க அறிவியல் முத்தெடுத்து வெளிவரும் ஒரே மதம் இந்து மதம்.

சரி இருதாரம் இந்துமதக் கடவுளர்க்கு எதற்கு என்னும் விசயத்திற்கு வருவோம்.


இது மிகவும் எளிதான விளங்கக் கூடிய தத்துவமாகும்.
எப்போது ஒரு பொருள் சமநிலையில் இருக்க வேண்டுமாயின் அதன் இரு பக்கமும் சமமான இரண்டு பொருட்கள் இருக்கவேண்டும்.
இது தவிர்ந்து வலப்பக்கம் மட்டும் ஒன்று மட்டும் இருக்குமாயின் அது சாய்ந்து விழுந்து விடும்.
எனவே அதைச் சரியாக்க இடப்பக்கமும் அதே போல இன்னுமொரு பொருள் இருக்க வேண்டும்.

இதையே கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால்.......
பூமியில் வடதுருவம் மட்டும் இல்லை. அதற்கு நேர் எதிராக தென் துருவமும் இருக்கும்.
அதிகம் ஏன் ஒரு மனிதனையே எடுத்துக் கொண்டால் அவனுக்கு வலது புறத்தில் ஒரு கையிருப்பது போல இடபுறத்திலும் உண்டு.
இதில் மிகவும் ஆச்சரியமான ஒன்று..... கால்களும் அப்படியே வலது இடதாக இரண்டு இருப்பதுதான்.
ஒருக்கால் ஒருகால் இருப்பதாக கற்பனை பண்ணிப் பாருங்கள். அதன் கஷ்டம் புரிகிறதல்லவா.....

மேலும் விளக்க வேண்டுமாயின். முத்தமிடுவதற்குக் கூட ஒரு வாய் இருக்கும் போது அதைப் பெற இரண்டு கன்னங்கள் உண்டல்லவா......

இப்போது நான் சொல்ல வந்த அ(றி)வியல் தத்துவம் உங்களுக்கு அளவுக்கு அதிகமாகவே புரிந்திருக்கும்.

இந்த எல்லையில்லா மாபெரும் தத்துவததை குறியீடாக மனிதனுக்கு உணர்த்துவதற்கே இந்து மதக் கடவுளர்கள் இரண்டு மனைவிகளை கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment