Saturday, 12 September 2015

சூரியனில் இருந்து "ஓம்" எனும் சப்தம் வெளிவருகிறது, நாசாவின் ஆராய்ச்சியில் ஆச்சரியம்!!

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து நமது முன்னோர்கள் ஆன்மீகத்தில் பயின்று வந்த, பயன்படுத்தி வந்த "ஓம்" போன்ற ஒலி சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புறத்தில் இருந்து வெளிவருகிறது என்று நாசாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.



ஷெபீல்ட் பல்கலைக்கழகம் 
ஷெபீல்ட் பல்கலைக்கழகதின் வானியல் ஆய்வாளர்கள் சூரியனின் வளிமண்டலத்தில் வெளிவரும் காந்த அலைவரிசையின் மூலம் உருவாகும் அதிர்வுகளை வைத்து ஓர் ஒலியை கண்டறிந்தனர்.

காந்த சுழல்கள்
சூரியனின் வளிமண்டல வெளிப்புறத்தில் இருந்து பெரிய காந்த சுழல்கள் எனப்படும் ஒளிவட்ட சுழல்கள் கண்டறியப்பட்டது. இது ஒலியின் அலைவரிசையை போல பயணிப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இசை சரங்களில் இருந்து அதிர்வுகள் வெளிவருவதை போன்று அது இருந்தது.

நேரடியாக பதிவு செய்ய முடியாது 
விண்வெளி வெற்றிடமாக இருப்பதால் சப்தத்தை பதிவு செய்ய முடியாது. இதனால் சூரியனின் வளிமண்டலத்தில் இருந்து வெளிவரும் சப்தத்தை நேரடியாக பதிவு செய்ய முடியவில்லை

காந்த சுழல்கள் புகைப்படம் எடுக்கப்பட்டது 
இதனால், ஷெபீல்ட் பல்கலைக்கழகதின் வானியல் ஆய்வாளர்கள் செயற்கை கோளின் உதவியோடு, வெண்வெளியில் ஆயிரம் மைல்களுக்கு பரவியிருந்த பெரிய காந்த சூழல்களை புகைப்படம் எடுத்தனர். பின்னர் அந்த அதிர்வுகளின் அளவை கணக்கிட்டு, அதை ஒலியாக மாற்றினர்.

ஏதோ ஒலி என்ற கணிப்பு 
சூரியனின் வளிமண்டலத்தில் இருந்து வெளிவரும் அந்த ஒலியானது ஏதோ இசையை போல இருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதெல்லாம் கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நாசாவின் ஆராய்ச்சி 
"வாயேஜர் 1" என்ற நாசாவின் ஆய்வறிக்கையில், சூரியனின் சப்தத்தை பதிவு செய்யப்பட்டது என அக்டோபர், 2012 மற்றும் ஏப்ரல் 2013- னில் "Interstellar plasma music" என்ற தொகுப்பு வெளியிடப்பட்டது. இதில் சூரியனில் இருந்து "ஓம்" என்ற ஒலி வெளிவருவதாக கூறப்பட்டிருந்தது.

ஓம் - முக்கியத்துவம் 
ஓம் என்பது இந்து மதம் சார்ந்த, பண்டைய காலத்தில் இருந்து ஆன்மீக ஒலியாக கருதப்படும் ஓர் சப்தம் ஆகும். ஹிந்து, ஜெயின், புத்த மதம், சீக்கியர்கள் போன்றவர்கள் "ஓம்" என்ற ஒலி உணர்வை கட்டுப்படுத்த, மேலோங்க வைக்க உதவும் சப்தமாக கருதுகிறார்கள்.

சூரியனில் இருந்து ஓம் எனும் ஒலி 
2010 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் சூரியனில் இருந்து "ஓம்" அல்லது "ஓம்" என்பது போன்ற ஒலி வெளிவருகிறது என்பதை காந்த சூழல்களின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் 
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே "ஓம்" என்ற சொல் அல்லது ஒலியை இந்து மதத்தில் மிக பரவலாக பயன்படுத்தப்பட்டது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில், வேறு எந்த உலக மொழிகளிலும் "ஓம்" என்ற சொல் கிடையாது.

பல்வேறு பதிவுகள் 
நாசா இதுகுறித்து பல பதிவுகளை செய்துள்ளது. இதில் பெரும்பாலும் "ஓம்" என்ற சப்தம் வெளிவந்தாலும் கூட, ஒருசில பதிவுகளில் ஓம் என்ற ஒலி போன்ற இசை அல்லது வேறு இசைகளும் தென்படுவதாய் கூறப்பட்டுள்ளது.

தரவல்லது 
அடிப்படையில் "ஓம்" எனும் ஒலி மனதிற்கு அமைதியையும், மனநிலையை ஒருமுகப்படுத்தவும் உதவுகிறது என ஆன்மீக ரீதியாக மட்டுமின்றி அறிவியல் ரீதியாகவும் கூறப்படுகிறது.

Google லில் "om sound of sun" என்று தேடினால் இன்னும் நிறைய பதிவுகளை பார்க்கலாம்

சூரியனில் இருந்து பதிவு செய்யப்பட்ட ஓம் என்பது போன்ற ஒலி... (வீடியோவை பாருங்கள்)

Read more at: http://tamil.boldsky.com/insync/pulse/2015/nasa-researchers-found-that-sun-sounds-om-009254.html#slide52606

ok

No comments:

Post a Comment