Saturday 12 September 2015

ஏழாம் நூற்றாண்டு அரபியர்கள் ஒரு மாதிரியான ஒரு கடவுள் தத்துவத்தை பின்பற்றி வந்திருக்கிறார்கள்.
அது அங்கிருந்த யூத மதம், கிறிஸ்துவம் ஆகியவற்றின் கலவையாக இருக்கிறது. இந்த புதிய மதத்துக்கு ஆரம்பத்தில் பெயர் ஏதும் இல்லாமல் இருந்திருக்கிறது. அதற்கு ஒரு நிறுவனரும் இல்லாமல் இருந்திருக்கிறது. அதற்கு புனித புத்தகமும் இல்லாமல் இருந்திருக்கிறது.
அதற்கு கடுமையான விதிமுறைகளும் இல்லாமல் இருந்திருக்கிறது. இவை அனைத்தும் பின்னால் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
பின்னால் யோசித்து ஏழாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டதாக கதை விடப்பட்டிருக்கிறது.
அரபிய ஆவணங்களிலும், பழம்பொருள் ஆய்வுகளிலும் எந்த இடத்திலும் குரான் பற்றிய குறிப்பே இல்லை. அது முதன் முதலில் 691இல்தான் அந்த குறிப்பு வருகிறது.
அதாவது முகம்மது குரானை சொல்ல ஆரம்பித்ததாக கூறப்படுவதிலிருந்து 80 வருடங்களுக்கு பிறகு! அரபிய சமூகத்துக்கு மைய நூலாக ஆனதாக சொல்லப்படும் வருடத்திலிருந்து 60 வருடங்கள் கழித்துதான் குரானை பற்றிய குறிப்பே வருகிறது.
இஸ்ரேலின் Dome of the Rock இல் எழுதப்பட்டிருக்கும் குரான் வசனமே 691இல்தான் எழுதப்பட்டிருக்கிறது. அதுவும் குரான் வசனமாக இருக்க வேண்டிய தேவையும் இல்லை. - என்பதை
”முகம்மது வரலாற்றில் இருந்தாரா?” என்ற இந்த புத்தகம் முறையா
க அறிவிக்கிறது.

1 comment:

  1. தன் மதத்தை உயர்த்தியும், மற்ற மதத்தை தாழ்த்தியும்‌.பேசும் எந்தவொரு மதமும் நிச்சயமாக அன்பை போதிக்காது. அந்த மதத்தின் மூலம் வன்முறைகளும், பிளவுகளும் தான் ஏற்படும்..
    ராமர் இருந்ததற்கான சான்றுகளும், இயேசு உலகை படைத்தார் என்பதற்கான சான்றுகளும் கூட தான் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதே கேள்வியை இஸ்லாமியர்கள் கேட்டாள் மற்ற இரு மதத்திற் பதில் கூற முடியுமா

    ReplyDelete