ஆதாரம் 2 : சிலப்பதிகாரம்
---------------------------------------------
---------------------------------------------
சிலப்பதிகாரம் "வாழ்த்துக் காதை" அம்மானை வரிகள் (16-17வது பாடல்கள்)
வீங்குநீர் வேலி உலகு ஆண்டு, விண்ணவர் கோன்
ஓங்கு அரணம் காத்த உரவோன் யார், அம்மானை?
ஓங்கு அரணம் காத்த உரவோன் உயர் விசும்பில்
தூங்கு எயில் மூன்று எறிந்த சோழன்காண், அம்மானை;
சோழன் புகார் நகரம் பாடேலோர், அம்மானை. 16

புறவு நிறை புக்கு, பொன்னுலகம் ஏத்த,
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் யார், அம்மானை?
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் முன் வந்த
கறவை முறை செய்த காவலன் காண், அம்மானை;
காவலன் பூம் புகார் பாடேலோர், அம்மானை. 17
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் யார், அம்மானை?
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் முன் வந்த
கறவை முறை செய்த காவலன் காண், அம்மானை;
காவலன் பூம் புகார் பாடேலோர், அம்மானை. 17
#குறிப்பு அம்மானை என்பது பெண்கள் பாடும் பாடல். அதில் ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பி அம்மானை என்பார். மற்றொருவர் அதற்குப் பதில் தர வேண்டும். அப்படிக் கேட்கப்படும் கேள்வியிலேயே, சோழர்கள் பெருமை சொல்லப்படுகிறது.
முதல் கேள்வி- இந்திரனுடைய உயர்ந்த அரண்களைக் காத்த சோழன் யார்?
பதில் - வானின் கண் அசைகின்ற மூன்று மதில்களை அழித்தவனே அவன்
இரண்டாவது கேள்வி, புறாவுக்காகத் தன் உடம்பை அரிந்தவன் யார்?
பதில் - அரண்மனை வாயிலின் முன் ஆராய்ச்சி மணி அடித்த பசுவிற்காகத் தன் மகன் மீது தேர்க்காலை ஒட்டினவன்
இங்கு நேரடியாக அந்த மன்னர்களை பற்றி கூறாது அந்த கேள்விக்கு மற்றொரு சோழனின் பெருமையை கூறி மற்றைய சோழரை பெருமைபடுத்துகிறார்கள்.
முதல் கேள்வியில் கூறப்படும் அரசன் "அரணம் காத்தவன் முசுகுந்தன்"
முதல் கேள்வியில் கூறப்படும் அரசன் "அரணம் காத்தவன் முசுகுந்தன்"
இரண்டாவது கேள்வியில் கூறப்படும் அரசன் "உடம்பரிந்தவன் சிபி"
முசுகுந்தன் ராமனின் வம்சம் என்று "மணிமேகலையில்" வருகிறது அது பற்றின முழு பதிவை பகுதி #1 ல் பார்த்தோம்.
முசுகுந்தனும், சிபியும் ஒரே வம்சம் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது..
முசுகுந்தன் ராமனின் வம்சம் என்று "மணிமேகலையில்" வருகிறது அது பற்றின முழு பதிவை பகுதி #1 ல் பார்த்தோம்.
முசுகுந்தனும், சிபியும் ஒரே வம்சம் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது..
இரண்டின் ஒப்பீடுகள் மூலம் முசுகுந்தனும், சிபியும், ராமனினதும் வழிவந்தவர்களே சோழர்கள் என்பது நமது இலக்கியங்களே தெரிவிக்கின்னறன.
No comments:
Post a Comment