Tuesday 8 September 2015

‪#‎இராமனின்‬ வழிவந்தவர்களே ‪#‎சோழர்கள்‬


=======================================
இன்று இராவணனின் வாரிசுகள் என்று தமிழர்களை இழிவுப்படுத்திவரும் அறிவிலிகளுக்கும், இராமனுக்கும் தமிழனுக்கும் சம்மந்தமில்லை என்று சொல்லும் முட்டாள்களுக்கும் திரு.வினோத் பாலசந்திரன் எழுதிய பதிவு...
சோழர்கள் வம்சமும் இராமனின் வம்சமும் ஒன்றே என ஐந்து ஆதாரங்களைக்கொண்டு நிறுவுகிறார் ஆசிரியர்..
ஆதாரம் 1: பெளத்த சமய இலக்கியமான மணிமேகலை.
மணிமேகலை விழாவறைந்த கதை (1-5 பாடல்)
உலகம் திரியா ஓங்கு உயர் விழுச் சீர்ப்
பலர் புகழ் மூதூர்ப் பண்பு மேம்படீஇய
ஓங்கு உயர் மலயத்து அருந் தவன் உரைப்ப
தூங்கு எயில் எறிந்த தொடித் தோள் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று
பொருள் - சான்றோர் சென்ற நெறிநின்றொழுகுதலில் ஒரு பொழுதும் பிறழா தொழுகுதல் காரணமாகப் பெரிதும் உயர்ந்துள்ள தனது மாபெரும் சிறப்பினைப் பிறநாட்டிலுள்ள சான்றோர் பலரும் புகழாநிற்றற் கிடமான பழைய ஊராகிய புகார் நகரத்தின் தெய்வத் தன்மை காலந்தோறும் மேம்பட்டு வளர்தற் பொருட்டாக; வானுற உயர்ந்து புகழானும் உயர்ந்த பொதிய மலையின்கண் இறைவன் ஏவலாலே எழுந்தருளியிருக்கும் செய்தற்கரிய தவங்களைச் செய்துயர்ந்த அகத்தியமுனிவன் பணிப்ப: வானத்திலே இயங்குகின்ற மதில்களை அழித்த வீர வலைய மணிந்த சோழ மன்னன் ஒருவன்; தனக்கு நன்றிக் கடன்பட்டுள்ள அமரர்கோமனை வணங்கி அவன் முன்னிலையிலேயே நின்று..
இந்த பாடலில் ""தூங்கு எயில் எறிந்த" என்று வருகிறது. இந்த தூங்கு எயில் என்பதன் பொருள் "தொங்கும் நகரம் அல்லது அரண் ஆகும்..
இதுவரை உள்ள பாரத கதைகளில் தொங்கு அரண் பற்றி இரண்டு இடங்களில் கூறபடுகிறது.
1. தேவர்களது தலைநகரான அமராவதி என்னும் நகரம்
2. இராவண தேசமான திரிகூட நகரம் (இலங்கை )
தேவர்கள் தலைநகரான தூங்கு எயிலை காத்தவன் முசுகுந்தன்' அவனுக்கு துணையாக இந்திரன் "நாளங்காடிப் பூதம்" என்ற பூதத்தை அவனுக்கு கொடுத்தான்
மற்றைய தொங்கும் நகரம் ராவண தேசம். ராவண தேசமானது ஸ்ரீ ராமனால் அழிக்கப்பட்டது என்பதை நன்கு அனைவரும் அறிவார்
"தூங்கு எயில் எறிந்தவன்" வழிவந்தவன் என்று சோழர்கள், இராமனின் வழிவந்தவர்கள் என்று பெருமையுடன் கூறிக்கொள்கிறார்கள்

ஆதாரம் 2 : சிலப்பதிகாரம்
---------------------------------------------
சிலப்பதிகாரம் "வாழ்த்துக் காதை" அம்மானை வரிகள் (16-17வது பாடல்கள்)
வீங்குநீர் வேலி உலகு ஆண்டு, விண்ணவர் கோன்
ஓங்கு அரணம் காத்த உரவோன் யார், அம்மானை?
ஓங்கு அரணம் காத்த உரவோன் உயர் விசும்பில்
தூங்கு எயில் மூன்று எறிந்த சோழன்காண், அம்மானை;
சோழன் புகார் நகரம் பாடேலோர், அம்மானை. 16
புறவு நிறை புக்கு, பொன்னுலகம் ஏத்த,
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் யார், அம்மானை?
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் முன் வந்த
கறவை முறை செய்த காவலன் காண், அம்மானை;
காவலன் பூம் புகார் பாடேலோர், அம்மானை. 17
‪#‎குறிப்பு‬ அம்மானை என்பது பெண்கள் பாடும் பாடல். அதில் ஒருவர் ஒரு கேள்வியை எழுப்பி அம்மானை என்பார். மற்றொருவர் அதற்குப் பதில் தர வேண்டும். அப்படிக் கேட்கப்படும் கேள்வியிலேயே, சோழர்கள் பெருமை சொல்லப்படுகிறது.
முதல் கேள்வி- இந்திரனுடைய உயர்ந்த அரண்களைக் காத்த சோழன் யார்?
பதில் - வானின் கண் அசைகின்ற மூன்று மதில்களை அழித்தவனே அவன்
இரண்டாவது கேள்வி, புறாவுக்காகத் தன் உடம்பை அரிந்தவன் யார்?
பதில் - அரண்மனை வாயிலின் முன் ஆராய்ச்சி மணி அடித்த பசுவிற்காகத் தன் மகன் மீது தேர்க்காலை ஒட்டினவன்
இங்கு நேரடியாக அந்த மன்னர்களை பற்றி கூறாது அந்த கேள்விக்கு மற்றொரு சோழனின் பெருமையை கூறி மற்றைய சோழரை பெருமைபடுத்துகிறார்கள்.
முதல் கேள்வியில் கூறப்படும் அரசன் "அரணம் காத்தவன் முசுகுந்தன்"
இரண்டாவது கேள்வியில் கூறப்படும் அரசன் "உடம்பரிந்தவன் சிபி"
முசுகுந்தன் ராமனின் வம்சம் என்று "மணிமேகலையில்" வருகிறது அது பற்றின முழு பதிவை பகுதி #1 ல் பார்த்தோம்.
முசுகுந்தனும், சிபியும் ஒரே வம்சம் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது..
இரண்டின் ஒப்பீடுகள் மூலம் முசுகுந்தனும், சிபியும், ராமனினதும் வழிவந்தவர்களே சோழர்கள் என்பது நமது இலக்கியங்களே தெரிவிக்கின்னறன.
ஆதாரம் 3: புறநானூறு
----------------------------------------
புறநானூறு 39வது பாடல். 5-10 வரிகள்
ஒன்னா ருட்குந் துன்னருங் கடுந்திறற்
றூங்கெயி லெறிந்தநின் னூங்கணோர் நினைப்பின்
அடுதனின் புகழு மன்றே கெடுவின்று
மறங்கெழு சோழ ருறந்தை யவையத்
தறநின்று நிலையிற் றாகலி னதனால்
‪#‎பொருள்‬: அசுரர்க்குப் பகைவராகிய தேவர்கள் கிட்டுதற்கு வெருவும் அணுகுதற்கரிய மிக்க வலியையுடைய ஆகாயத்துத் தூங்கெயிலை அழித்த நின்னுடைய முன்னுள்ளோரை நினைப்பின், ஈண்டுள்ள பகைவரைக் கொல்லுதல் நினது புகழுமல்லவே; கேடின்றி, மறம்பொருந்திய சோழரது உறையூர்க்கண் அவைக்களத்து அறம்நின்று நிலைபெற்றதாதலால், முறைமை செய்தல் நினக்குப் புகழுமல்லவே
தூங்கெயில் - "தொங்கும் அரண்" இரண்டு தொங்கும் அரண்கள் பற்றியே இதுவரை பாரத கதைகள் சுமந்துவந்துள்ளது. "அமராவதி நகரம்" மற்றது "திரிகூட" நகரம்..
அமராவதி தேவர்களின் தலைநகரம் இது யாராலும் அழிக்கப்படவில்லை மாறாக முசுகுந்தன் என்ற மன்னனால் காக்கப்பட்டது
"திரிகூட" ராவணனின் நகரம். இது ஒன்றே ராமனால் அழகிக்கபட்டது..
தூங்கெயிலை அழித்த ராமன் முன்னுள்ளோர் என்று கூறி சோழர்கள் பெருமையை மேற்கண்ட புறநானூறு 39வது பாடல். 5-10 வரிகள் கூறுகிறது..
தொடரும்

No comments:

Post a Comment