தோழிகளை கடுப்பேற்றி ரசிப்பதன் சுகமே அலாதி. அதிலும் அவர்களின் "பொஸஸிவ்னஸ்"ஐ சீண்டி ரசிப்பதில் ஆனந்தமோ ஆனந்தம் தான். அப்படி என் தோழியை கடுப்பெற்றி ரசித்த ஒரு SMS நிகழ்வுதான் இது.
நான்: ஹாய் டா....
தோழி: சொல்லு டா செல்லம். என்ன பண்ற? எங்கடா இருக்க? உன்னை பார்க்கணும் போல இருக்கு.
நான்: நான் இப்போ பஸ் ஸ்டேண்ட்’ல இருக்கேன் மா. உன்ன பாக்க தான் கிளம்பிட்டேன். இன்னும் அரை மணி நேரத்துல வந்துடுவேன். :)
(இந்த அரை மணி நேரம் எவ்ளோ கடுப்பாக போறான்னு தெரியாமலே..)
தோழி: அய்யோ.. ச்ச்சோ ச்ச்வீட் டா.. சீக்கிரம் வாடா செல்லம்.
நான்: வேய்ட்டீஸ்.. இரு பஸ் ஏறிக்கிறேன். அப்புறம் மெசேஜ் பண்றேன்.